Saturday, 31 August 2013

டாக்ஸி டிரைவராக மாறிய பிரதமர் - மக்கள் இன்ப அதிர்ச்சி


'மக்களோடு மக்களாக பழகும் நல்ல அரசியல் தலை வர்கள் இப்போது இல்லை; அதெல்லாம், காமராஜர் காலத்தோடு போய்விட்டது' என்று நினைப்பவரா நீங்கள்?

உங்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் டாக்ஸி டிரை வராக மாறி, ஒருநாள் முழுக்க சேவை செய்துள்ளார் ஒரு பிரதமர். நிச்சயமாக, இவர் நம் நாட்டின் பிரதமர் இல்லை. அவர், நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க்.

பாராளுமன்ற தேர்தல்

நார்வேயில் வரும் செப்டம் பர் மாதம் பாராளுமன்றத்து க்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் மன நிலை எந்தநிலையில் உள்ளது என்பதை அறிய அவர் டாக்ஸி டிரைவராக சேவை செய்தார் என்று நார்வே மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

நார்வே தலைநகர் ஓஸ்லோ வில் ஒருநாள் பகல் முழுக்க டாக்ஸியை இயக்கிய பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், அந்தப் பணியின்போது சாதாரண டாக்ஸி டிரைவர் அணியும் ஆடையையே அணிந்திருந்தார். அவரது காரில் பயணித்த பெரும் பாலான பயணிகள், கார் ஓட்டுவது பிரதமர் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி ஆனார்கள். சிலர், அவசரகதியில் அவரை உன்னிப்பாகக் கவனிக்காமல் கட்டணத்தை மட்டும் தந்துவிட்டு சென்றுவிட்டனர்.

தான் பிரதமர் என்று தெரிந்து இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றவர்களிடம் பேசிய ஜென்ஸ் ஸ்டோல் டென்பர்க், அவர்களின் குறை களையும் தேவைகளையும் கனிவுடன் கேட்டறிந்தார்.

கேமராவில் பதிவு

ஜென்ஸ் ஸ்டோல்டென் பர்க் கார் ஓட்டியதை அவருக்கு முன்பாக வைக்கப் பட்டு இருந்த கேமரா பதிவு செய்தது. இந்த வீடியோவை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தலாம் என்பது ஜென்ஸ் ஸ்டோல்டென் பர்கின்   திட்டம்.

கார் இயக்கி முடித்ததும் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

காரின் பின்சீட்டில் நான் அமர்ந்து செல்வதைத்தான் மக்கள் பார்த்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு நானே என் நாட்டு மக்களுக்காக காரை ஓட்டிச் சென்றது புதிய அனுபவமாக இருந்தது. பல பிரச்னைகள் தொடர்பாக மக்கள் தங்களின் எண்ணங் களை வெளிப்படையாக தெரிவிக்கும் இடம் ஒன்று உண்டு என்றால், அது டாக்ஸி பயணத்தின் போதுதான் என்பது என்னுடைய எண்ணம். அந்த வகையில், மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவே நான் இந்த முடிவை தேர்வு செய்தேன் என்றார்.

தோற்றுவிட்டால்...

ஒருவேளை நடைபெற உள்ள தேர்தலில் தோற்று விட்டால் முழுநேர டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவீர்களா என்று ஒரு நிருபர் கிண்டலாக கேட்க, 'இந்த நாட்டுக்கும் டாக்ஸி பயணிகளுக்கும் ஒரு டாக்ஸி டிரைவராக இருப்பதைவிட, நாட்டின் பிரதமர் என்ற முறையில் சிறந்த சேவையாற்ற முடியும் என நான் நம்புகிறேன்' என்று சிரித்தபடியே பதிலளித்தார் ஜென்ஸ் ஸ்டோல்டென் பர்க்.

'இந்தியர்கள் பாசத்தால் வியக்கிறேன்' -சன்னி லியோன்


ன்னி லியோன்- இந்தப் பெயரை அறியாத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது. ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா என்றால், இவர்... இந்தியாவை மட்டுமின்றி, அகில உலக இளைஞர்களையும் தனது ÔதாராளமயமானÕ கவர்ச்சி யால் ஈர்த்து வருபவர்.

கூகுள் உள்ளிட்ட இணைய தளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோ னுக்கு முதலிடம் கிடைத்தது சன்னி லியோனுக்கு சமீபத்தில் கிடைத்த பெருமை.

சரி, யார் இந்த சன்னி லியோன்?

கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்தான் சன்னி லியோன். சினிமா நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு களம் இறங்கிய இவருக்கு உடனடியாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கவர்ச்சியான வேடங்களே கிடைத்தன. அதில் நடிக்க ஆரம்பித்தவர், ஒருகட்டத்தில் Ôஎல்லைதாண்டியÕ கவர்ச்சி யில் இறங்கினார்.

இன்னும் சொல்லப் போனால், நீலப்பட நடிகை யாகவே மாறிப்போனார். அவரது கவர்ச்சியான புகைப் படங்கள் இன்டர்நெட்டில் விதவிதமாக வலம்வர, யார் இந்த சன்னி லியோன் என்று இன்னும் விரிவாக தேட ஆரம்பித்தது,  இளைஞர் உலகம். அவரது புகழும் வெகுவிரைவாக பரவியது.
இந்நிலையில், இந்தி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது. ஜிஸ்ம் 2 என்ற இந்தி சினிமாவின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்துவைத்த இவர் மீது எல்லோரின் பார்வையும் விழுந்தது. அதனால், அடுத் தடுத்த படங்கள் இவருக்கு புக் ஆகின. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் சன்னி லியோன்.

வெட்கப்படவில்லை

இதுபற்றி அவர் நிருபர் களிடம் கூறியதாவது:

ஆபாச படங்களில் நடித்தவள்தான் நான். அதற் காக நான் வெட்கப்பட வில்லை. இப்போதுதான் நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங் கள் தேடிவர ஆரம்பித் துள்ளன. கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பேனே தவிர ஆபாசத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை அடுத்து, என் நடிப்பாற்றலை வெளிப் படுத்தும் படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறேன். பிடித்த கதைகளை தேர்வு செய்கிறேன். என்னால் நல்ல நடிப்பையும் வெளிக்காட்ட முடியும். 2014-ம் ஆண்டு வரை எனது கால்ஷீட் புக் ஆகிவிட்டது. இனிவரும் படங்களை அதற்குப் பிறகு தான் நடித்துக் கொடுக்க முடியும்.

இப்போது இந்தி நடிகையாகிவிட்ட என்மீது இந்திய மக்கள் நிறைய அன்பு செலுத்துகிறார்கள். அவர்கள் காட்டும் அன்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பாலிவுட்டிலேயே நடிக்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.' இவ்வாறு அவர் கூறினார்.

பாலிவுட்டில் பரபரப்பாக ஓடிய 'தி டர்ட்டி பிக்ஸர்' படத்தை தயாரித்த ஏக்தா கபூரின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி லியோன். நசிருதீன் ஷாவுடன் 'ஜாக்பாட்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழுக்கு வருகிறார்...

இந்தி சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து சன்னி லியோனின் வீட்டுக்கதவை தட்டுவதால், மும்பையில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். விரைவில் அவரை தமிழிலும் எதிர்பார்க்கலாம். கோலிவுட்டும் அவரை வரவேற்க இருகரம் கூப்பி காத்திருக்கிறது.

தங்கம் ரூ.30 ஆயிரத்தை தொடும்?


ல்லோரும் விரும்பும் தங்கம் கடந்த சில ஆண்டுகளாக  விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துவருகிறது. இந்த மாதம் ரூ. 24 ஆயிரத்தைத் தாண்டி நடுத்தர மக்களையும் ஏழைகளையும் ஆட்டம் காணவைத்த தங்கம், இன்னும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தங்கத்தில் முதலீடு செய்வதை தவிருங்கள்' என்று நம் அரசாங்கமே கேட்டுக்கொண்டாலும், தங்கம் மீதான மோகம் யாரிடமும் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, உயர் நடுத்தர வர்க்கத்தினரும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். இவர்களில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், 'அய்யய்யோ... அடுத்த மாதம் கிராமுக்கு 500 ரூபாய் கூடிவிடப் போகிறது' என்று பயந்து, தங்கம் வாங்குவோரும்தான் அதிகம்.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி காரணமாக ரூ.23 ஆயிரத்தை சுலபமாக தாண்டிய தங்கம், அடுத்துவரும் நாட்களில் இன்னும் வேகமாக விலையேற்றம் காணும் என்கிறார்கள் நகை வியாபாரிகள். இந்த ஆண்டின் நிறைவுக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை இப்படியே போனால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தைத் தாண்டி விற்கப்படலாம்.

உத்தரவாதமுள்ள மிகச்சிறந்த சேமிப்புக்கும், பெண்களின் அத்தியாவசிய தேவைக்கும் தங்கம் அவசியமாக இருக்கும் வரையில், தங்கத்தின் விலையேற்றம் ஒரு தொடர்கதைதான். தங்கத்தின் மீதான மக்களின் மோகம் குறைய வேண்டும். தங்கம் தவிர்த்த, பிற வழிகளிலான மக்களின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தங்கத்தின் விலையேற்றத்துக்கு நாம் கடிவாளம் போடமுடியும்.

ரூபி பில்டர்ஸ் சுதந்திர தின விழா



ளைஞர்கள் வரலாற்றை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம். அதை அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மறந்துவிடக்கூடாது என்று ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன் பேசினார்.

சுதந்திர தின விழா

தாம்பரம் சேலையூரில் உள்ள ரூபி பில்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் நாட்டின் 67-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன் தேசிய கொடியேற்றி வாழ்த் துரை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

இந்த சுதந்திரம் சும்மா கிடைத்துவிடவில்லை. அதைப் பெற நம் தலைவர்கள் செய்த தியாகங்கள் நிறைய. அனுபவித்த கஷ்டங்கள் பல. இதற்காக சிறைத் தண்ட னையை எல்லாம் தாங்கிக் கொண்டார்கள்.

மகாத்மா காந்தி, நேதாஜி, ஜவஹர்லால் நேரு, பெருந் தலைவர் காமராஜர் முதலான வர்கள் நமக்கு சுதந்திரம் கிடைக்க அரும் பாடுபட்ட முக்கியமானவர்களில் சிலர். அவர்களுக்கு இந்த நாளில் மரியாதை செய்வதும், அவர் களை நினைவுகூர்வதும் நம் தலையாய கடமை.

மாறிவரும் இன்றைய உலகில், இளைஞர்கள் வரலாற்றை மறந்துவிடக் கூடாது. புதிய தலைமுறை யினர் ஒவ்வொருவருக்கும் நம் தேசத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் நாம்தான் எடுத்துச்சொல்ல வேண்டும். இந்த மாதிரியான விழாக்களில் கலந்து கொண்டால்தான், வரலாறு நம் மனதில் நீங்காமல் பதிந்திருக்கும்.

இவ்வாறு ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன் பேசினார்.

பங்கேற்றவர்கள்

விழாவில் ரூபி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரூபி மனோகரன், இணை நிர்வாக இயக்குநர் அசோக், பொது மேலாளர்  பாலசுப்ரமணியம், தலைமை பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர், பொது மேலாளர் (டெக்னிகல்) வெங்கடேசன்,  துணை பொதுமேலாளர் (டெக்னிகல்) முத்தையா, உதவி பொதுமேலாளர் (நிர்வாகம்) மோகன், சீனியர் மார்கெட்டிங் மேலாளர் அஸ்வினி குணசேகர் மற்றும் ரூபி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

சென்னை மெயில் வாழ்த்துப்பா

நம்ம வீட்டு பேப்பர்
சென்னை மெயிலை வரவேற்று
சினிமா பாடலாசிரியர்
கவிஞர் இளந்துறவி எழுதிய வாழ்த்துப் பாடல்...


கவிஞர் இளந்துறவி வாழ்த்துப்பாவில் சொன்ன கனவுகளை சென்னை மெயில் நிச்சயம் நிறைவேற்றும். அவரது அன்பான வாழ்த்துக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

- ஆசிரியர், சென்னை மெயில்

Friday, 23 August 2013

இந்த வார மெயில்

இந்த வார மெயில்...





அடுத்த பிரதமர் யார்?


- சுப்பு -

 மங்கல வாத்தியங்கள் முழங்க, நாட்டியப் பெண்களின் சலங்கை ஒலிக்க, பட்டத்து யானை முன்னே வரும்.  அந்த யானையின் துதிக்கையில் ஒரு மாலை இருக்கும்.  அரியாசனத்தில் ஏறப்போவது யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக மக்களும் கூட்டம் கூட்டமாக கூடவே வருவார்கள். ஊருக்குப் புதிதாக வந்திருக் கும் இளைஞனின் கழுத்தில் யானை போடும் மாலை விழும். அவன் அரசனாகி விடுவான். 

இதெல்லாம் நாம் படித்த கதைகளில் வரும் காட்சிகள்.  இப்போது இதெல்லாம் சாத்தியமில்லை.  இது ஜன நாயக யுகம்.  கடைக்கோடி மனிதனுக்கும் வாக்குரிமை கொடுத்திருக்கும் காந்தி நாடு இது. இதில், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராகப் போகிறவர் யார்?

மோடியா? ராகுலா?

தொலைக்காட்சி விவாதங் களிலும், குடும்பங்களின் சந்திப்புகளிலும், கல்லூரி வளாகங்களிலும், காதலர் களின் அலைபேசியிலும், வயதானவர்களின் வருத்தங் களிலும் அதிகமாக அலசப் படுவது ஒன்றுதான்.  யார் பிரதமர்? நரேந்திரமோடியா, ராகுல்காந்தியா என்பதுதான்.

மோடிக்குதான் 'முடி சூட்டல்' என்று சொல்பவர் கள் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சியையும், சீரான நிர்வாகத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.  குஜராத் தில் மின்வெட்டு என்பதோ, மின்தடை என்பதோ இல்லாத விஷயம்.  குஜராத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் உபரியாக மற்ற மாநிலங்களுக்குத் தரப் படுகிறது. சூரியஒளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் தயாரி க்கும் திட்டம் அங்கே உள்ளது.  இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரமாக காந்திநகர் ஆகப் போகிறது என்று அவர்கள் பெருமை பேசுகிறார்கள்.

ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நேரு குடும்பத்தாரின் தியாகத்தை முன்னிறுத்திப் பேசுகிறார்கள்.  விடுதலைப் போரில் ஜவஹர்லால்நேருவும், அவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்திக்கொண்ட இழப்புகளையும், அனுபவித்த சிறைவாசங்களையும் பற்றிச் சொல்கிறார்கள்.  இந்திராகாந்தி கொல்லப்பட்டதையும், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப் பட்டதையும் அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்புகளால் நடந்த தேர்தல் களை எந்தவித தலையீடும் சிபாரிசும் இல்லாமல் ராகுல் நடத்தினார் என்று அவர்கள் அடித்துப் பேசுகிறார்கள். அதோடு, ராகுல்காந்தி இளைஞர்களின் எழுச்சியை பிரதிபலிக் கிறார்,  ஏழைகளின் குடிசைகளில் பிரவேசிக்கிறார் என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

குற்றச்சாட்டு


 மோடி மீது அடிக்கடி சொல்லப்படும் குற்றச்சாட்டு 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரங்களைப் பற்றியதுதான். அங்கே முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது மோடியின் போலீஸ் வேடிக்கை பார்த்தது என்பது ஒரு குற்றச்சாட்டு.  ஆனால், இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய் வுக்குழு, மோடிமீது குற்றம்சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லிவிட்டது.

ராகுல்காந்தி மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு எதுவும் இல்லை.  காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், அந்தக் கட்சியும் செய்திருக்கும் ஊழல்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ராகுல்காந்தியின் செயல்பாடு இன்னமும் பொதுத் தளத்தில் சோதிக்கப்படவில்லை. ஆடத் துவங்கி இருக்கும் அவரை, அதிகாரத்தின் உச்சகட்டத்தில் உட்கார வைக்க வேண்டுமா என்பது நியாயமான கேள்விதான்.

கருத்துக்கணிப்பு மோடிக்கு சாதகம்

தி வீக் ஆங்கில வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு மோடி பிரதமராக வேண்டும் என்று 32 சதவீத மக்கள் விரும்புவதாகவும், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று 13 சதவீத மக்களே விரும்புவதாகவும் தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் மோடி யார்? ராகுல்காந்தி யார்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மோடியின் வயது 62.  பிரம்மச்சாரி.  பம்பாய் மாநிலத்தில் மெஹ்பொரு மாவட்டத்தில் இருந்த வத் நகர்தான் மோடியின் சொந்த ஊர்.  தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி.  தாய் ஹீரா சென். உள்ளூர் பஸ் நிலையத்தில் மோடியும், அவருடைய சகோதரரும் ஒரு டீக்கடை நடத்தினார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மோடி, நெருக்கடி நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார்.  மோடி பா.ஜ.க.வில் சேர்ந்தது 1987-ல். குஜராத்தில் 1995-ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றியில் மோடியின் பங்கு கணிசமானது.

அக். 7. 2001, மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.  இப்போது நான்காவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கிறார். மோடியின் பிளஸ் பாயின்ட் வெகுஜன ஆதரவு. குறிப்பாக, படித்த இளைஞர்களின் ஆதரவு இவருக்கு நிறையவே இருக்கிறது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் மோடியை பின்தொடர்பவர்கள் பல லட்சம்பேர். இவரது ஒரே மைனஸ் பாயின்ட் மீடியா.  குறிப்பாக, ஆங்கில மீடியா.

இந்திய ஜனநாயகத்தின் கடந்தகாலத் தேர்தல் முடிவுகளை அறிந்தவர்களுக்கு இது நல்ல செய்தியாகத்தான் ஒலிக்கிறது.  மக்களின் விருப்பம் கிழக்கு முகமாக இருந்தால் ஆங்கில மீடியா மேற்கு முகமாக இருக்க வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம். ஆகவே, மோடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றன.

இவர்தான் ராகுல்

ராகுலின் வயது 43. இவரும் பிரம்மச்சாரிதான். அதாவது, இன்னும் திருமணமாகவில்லை. வெனிசூலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு நட்புறவாக இருக்கிறார். ராகுல் பிறந்தது புது தில்லியில்.  தந்தை ராஜீவ்காந்தி, தாய் சோனியாகாந்தி. லண்டனில் உயர்கல்வி படித்த ராகுல், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் (1991) அரசியலில் நுழைந்தார்.

2004 தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜனவரி 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார்.

சாதாரணமாக, நாம் முடிதிருத்தப்போகும்போதுகூட நம் தலையை புதிதாகத் தொழிலை கற்றுக்கொள்பவரிடம் கொடுக்கத் தயங்குகிறோம். தலைமுடியைக் கொடுப்பதற்கே யோசிக்கும் நாம், நாட்டின் தலைவிதியை எழுதுவது யார் என்ற விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.