Thursday, 31 October 2013


சென்னை மெயிலில் இருந்து 
விரைவில் உதயம்... 
'பிஸ்னஸ் மெயில்'
தொழிலின் சக்ஸஸ் சூட்சுமத்தை தெளிவுப்படுத்தும் புதிய இதழ்...
 விரைவில்...

தீபாவளி நல்வாழ்த்துகள்..!


சென்னை மெயில் 
வாசகர்கள், விளம்பரதாரர்கள் 
அனைவருக்கும் 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
- ஆசிரியர்

Wednesday, 16 October 2013

அப்செட்டில் எமி


நீச்சல் உடையில் தன்னு டைய கவர்ச்சி படங்களை ஆல்பமாக வெளியிட்ட பிறகும் சரியாக பட வாய்ப்பு வராததால் அப்செட்டில் இருக்கிறாராம் எமி ஜாக்சன்.

மதராசப்பட்டினம் படத் தின் மூலம் தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எமி ஜாக்சன்.தற்போது ஷங்கரின் ஐ படத் தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் இதுவரை அதிக அளவில் கவர்ச்சி காட்டாத எமி, பரபல போட்டோகிராபர் ஒருவருக்கு நீச்சல் உடையில் விதவித மாக போஸ் கொடுத்துள்ளார்.

ஏன் இந்த ஆல்பம் என்று எமியின் நலம் விரும்பி ஒருவர் அவரிடம் கேட்க, ‘ஹாலிவுட் படங்களில் நான் அறிமுக மாகுவதற்கு முன்பு இப்படித்தான் ஆல்பம் தயாரித்து இயக்குநர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், தமிழில் அப்படியொரு ஆல்பம் இது வரை தயாரிக்கவில்லை. என்னிடமும் கவர்ச்சி இருக்கிறது, என்னால் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட் டவே இப்படிச் செய்திருக் கிறேன்’ என்று மனம் திறந்தாராம்.

எமி போட்ட திட்டத் தின்படி அவரது கவர்ச்சி நீச்சல் உடை படங்கள் கொண்ட ஆல்பம் தமிழின் முன்னணி டைரக்டர்களின் அலுவலக கதவுகளைத் தட்டி, அங்குள்ள அத்தனைபேரின் கண்களுக்கு விருந்து படைத்தாலும், புதுப் பட வாய்ப்பு என்னவோ எமிக்கு வந்தபாடில்லையாம். அதனால், அந்த ஆல்பத்தை பாலிவுட்டுக்கு அனுப்பி இருக்கிறாராம் எமி.

Saturday, 12 October 2013

IDF Prize Distribution at KV2


Indian Development  Foundation  (IDF ) is a Non Governmental Organisation  committed  to health, education and development for the past three decades. The vision of IDF is a better India tomorrow. It plays a vital role in promoting enthusiasm, empathy, commitment and sensitivity among the younger generation for building a better society. Kendriya Vidyalaya No.2,AFS,Tambaram stands second to none in  serving the society through several  various activities for noble causes. The students of the Vidyalaya  donated Rs 3,00,671 ( Rupees three Lakhs ,six  hundred and seventy one only ) as their voluntary contribution to IDF.

 On 8th Oct, the prize distribution event was organized at the vidyalaya by IDF. Mr.Sreeram , Manager ,IDF Chennai and Mr.Sathyamurthy, Executive were present during the function. Mrs.R.Rajammal, Guide Captain and Chief Coordinator for charity  programme welcomed the gathering. Mr.Sreeram  appreciated  the students for their excellent support for the underprivileged in the society.

Three students from the Primary section and three from secondary section were given certificates, medals and prizes for their highest  contribution. K.S. Sameerc,III A,  S.Madhulika IIIA  and  A kilesh  Kuber, IV B  of the Primary section bagged the prizes. S.Preethika,VIII B,  M.Maheshwar IX D and M. Haripriya VI D of the Secondary section  bagged the prizes.

It was a source of inspiration for the students. Certificates and medals were given to all the students for their good gesture.

 Mrs.N.Prsanna Kumari, Principal was  honoured with SOCIAL ACTION  AWARD-2013. Mrs.R. Rajammal and Mrs. Padma Balakumar, Guide Captains were honoured with SOCIAL AMBASSADOR AWARDS for their continuous support to IDF in organizing  AIDS Aawareness Programme and Tuberculosis Awareness Programme involving scouts and Guides at Chennai central station and Marina beech.

Mrs.Prasanna Kumari stressed  on the significant role to be played by student community for a better tomorrow. She said  EMPATHY is the essential quality one has to develop to become a good human being.

The school received a beautiful shield for its highest contribution among the kendriya Vidyalas in Chennai Region.

Mrs.Padma Balakumar proposed vote of thanks. It was indeed a wonderful event which would spread goodness everywhere.

- MAIL TEAM

இனி, பல் வலிக்காது; வந்தாச்சு லேசர் சிகிச்சை! டாக்டர் ஜி.திருப்பதி பேட்டி

ல் வலி பிரச்னைக்கு, வலியே இல்லாத லேசர் சிகிச்சை மிகுந்த பயனளிக் கும் என்று, பிரபல பல் டாக் டர் ஜி.திருப்பதி கூறினார்.
இதுபற்றி சேலையூர் ஸ்ரீ ராக வேந்திரர் பல் மருத்துவமனை டாக்டர் ஜி.திருப்பதி நமது நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

பல் வலி ஏற்பட என்ன காரணம்?

பொதுவாக 2 காரணங் களால் பல் வலி ஏற்படுகிறது. ஒன்று, பல் சொத்தை. இரண்டு, பல் ஈறுகளில் ஏற் படும் பாதிப்பு. ஒருவரது பற்களில் சொத்தை ஏற்படப் போகிறது என்றால், அதற்கு அறிகுறியாக, சம்பந்தப்பட்ட பற்களில் கருப்பு நிறத்தில் புள்ளி போன்று காணப்படும். ஆரம்பத்தில் இதனால் பல் வலியோ, கூச்சமோ ஏற் படாது. போகப்போகத்தான் அந்த பாதிப்பை உணர முடி யும். ஆரம்பத்திலேயே பற் களில் ஏற்படும் கருப்பு நிற மாற்றத்தை அறிந்து, பல் மருத்துவரை அணுகினால், பல் சொத்தை ஏற்படுவதை தவிர்த்துவிடலாம். ஆனால், இன்றோ, பெரும்பாலானபேர் ஆரம்ப சிகிச்சைக்கு வராமல், பல் வலி அல்லது கூச்சம் வந்த பிறகுதான் பல் மருத்துவரை அணுகுகிறார்கள். இது தவறு.

பற்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எப்படி?

பல் வலி அல்லது கூச்சம், இருக்கிறதோ இல்லையோ, வருடத்துக்கு ஒருமுறை அனைவரும் தங்களது பற் களை, தகுந்த பல் மருத்துவரை அணுகி சுத்தம் செய்து கொள்வது அவசியம். பலர், இப்படி வருடத்துக்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்தால், பற்களின் எனாமல் தேய்ந்து போய்விடும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. நம் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என் றால், வருடத்துக்கு ஒருமுறை அதை சுத்தம் செய்தே ஆக வேண்டும். முக்கியமாக, சர்க் கரை நோய் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை பற் களை சுத்தம் செய்ய வேண் டும். இப்படிச் செய்வதால் பற் களில் படியும் அழுக்குகள் நீக்கப்பட்டு, பற்கள் ஆரோக் கியத்துடன் இருக்கும்.

பல் வலிக்கு உணவு பழக்க வழக்கம் எந்த வகையில் காரணமாக அமைகிறது?


பற்களின் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமே நம் உணவு பழக்கவழக்கம்தான். ஒட்டும் தன்மை உள்ள சாக்லெட், சுவிங்கம், பிஸ்கட், சாப்ட் கேக், அல்வா, பீட்சா, பர்கர் மற்றும் நொறுக்குத்தீனி வகை கள், நம் பற்களுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இவற்றை சாப் பிட்ட 10 நிமிடத்துக்குள் பல் துலக்குவது அல்லது மவுத் வாஸ் செய்வது நல்லது. இது, முடியாதபட்சத்தில் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும்.

பற்களுக்கு பாதுகாப்பான உணவு என்றால், எதை சொல் வீர்கள்?


அனைத்து வகை காய் கறிகள், பழங்கள் நம் பற் களுக்கு பாதுகாப்பானவை. தினமும் ஒரு ஆப்பிள் அல்லது ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது. இவற்றில் காணப்படும் வைட் டமின் சி, நம் பற்களுக்கு நல்லது. நெல்லிக்காயிலும் வைட்டமின் சி நிறைய உள்ளது. மீன், முட்டை ஆகிய வற்றில் காணப்படும் வைட் டமின் ஏ மற்றும் டி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். தவிர, கேரட், எலு மிச்சை, பால், தயிர், மோர் ஆகியவையும் பற்களுக்கு நண்பர்களே!

அசைவ உணவுகள் பற் களுக்கு தீங்கு விளைவிக்குமா?


அசைவ உணவுகளால் பற்களுக்கு நிச்சயம் பாதிப்பு இல்லை. இவற்றில் ஒட்டும் தன்மை இருக்காது. அதனால், சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தாராள மாக சாப்பிடலாம். அதே நேரத்தில், அளவோடு அவ ற்றை சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடும்போது, அந்த உணவுகளின் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும். அவற்றை சுத்தம் செய்ய சிறு குச்சி, பின் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இப்படிச் செய்தால், பற்களுக்கு பாதிப்புதான் ஏற் படும். மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் இன்டெல் டென் டல் பிரஸ், டென்டல் ப்ளோஸ் ஆகியவற்றைக் கொண்டு அசைவ துகள்களை நீக்குவது நல்லது.

பல் சிகிச்சையில் பயன் படுத்தப்படும் லேசர் சிகிச்சை பற்றி...


பற்களுக்கான லேசர் சிகிச்சை முறை இந்தியாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட் டாலும், சமீப காலத்தில்தான் பிரபலமடைந்துள்ளது. இந்த முறையில், பாதிக்கப்பட்ட பற்களில் ஊசி போடாமல் சிகிச்சை செய்ய முடியும். இத னால், வலி இருக்காது. பயப் படவும் அவசியம் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை, யார் வேண்டுமா னாலும் இந்த சிகிச்சை பெற முடியும். சிகிச்சைக்குப் பிறகும் வலி இருக்காது. சிகிச்சைக்குப் பிறகு எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் அள வும் குறைவாகவே இருக்கும். லேசர் சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமோ என்று யாரும் பயப்பட தேவையில்லை. எங்கள் மருத்துவமனையில், சாதாரண மக்களும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் அளவுக்கே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் மருத்துவமனையின் சாதனையாக எதை கருது கிறீர்கள்?


ரூட் கேனல் என்கிற பற்களின் வேர் சிகிச்சையில் எங்கள் மருத்துவமனை சிறப்புப்பெற்று விளங்குகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரூட் கேனல் சிகிச்சையை வெற்றிக்கரமாக செய்து முடித் திருக்கிறோம். பல் துருத்தி இருத்தல் மற்றும் பல் ஒரே வரி சையில் சீராக இல்லாமல் இருத்தல் ஆகிய பிரச்னை களுக்கு அதிநவீன முறையில் 'கிளிப்' போடுகிறோம். குறை ந்த கட்டணத்தில் அளிக்கப் படும் இந்த சிகிச்சைகூட எங்களின் சாதனையே! லேசர் சிகிச்சையும் எங்கள் மருத்துவ மனையில் பிரபலம்.

இவ்வாறு பல் டாக்டர் ஜி.திருப்பதி கூறினார்.

சச்சின் இடத்தை நிரப்பப்போவது யார்?

 

எஸ்.எம்.ஆனந்த்

ர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ள இந்தியாவின் மாஸ் டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் முடிவு, இந்திய கிரிக்கெட் ரசிகர் களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேநேரம், அடுத்த சச்சினாக உருவாகக் கூடிய மிகச்சிறந்த பேட்ஸ் மேனை அவர்கள் ஆவ லோடு எதிர்பார்க்கிறார்கள்.

1989&ம் ஆண்டு நவம்பர் 15&ம் தேதி, கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் சச்சின் அறிமுகம் ஆனார். இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளிலும், 463 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று அதிரடி ஆட்டம் ஆடியுள் ளார் சச்சின். இதுவரையிலான டெஸ்ட் போட்டிகளில் 15,837 ரன்களும், ஒருநாள் போட்டி களில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். பெற்றுள்ள சதங்கள், டெஸ்ட் போட்டி களில் 51; ஒருநாள் போட்டி களில் 49.

சச்சினின் இந்த சாதனைகள் மேலும் தொடரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப் பட்ட நிலையில்தான் அவர் தனது ஓய்வுபெறும் முடிவை அறிவித்துள்ளார்.

'இந்தியாவுக்காக என்னு டைய வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண் டும் என்பதுதான் என் கனவு.கடந்த 24 ஆண்டுகளாக இந்த கனவுகளுடன்தான் வாழ்ந் தேன். என்ன இருந்தாலும், ஒருநாள், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுதானே ஆக வேண்டும்? அப்படி ஓய்வுபெற சரியான தருணம் இதுதான் என்று என் மனம் கூறியது. அதன்படி, 200-வது டெஸ்ட் போட்டியில் விளை யாடி முடித்ததும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறேன்' என்று கூறியுள்ளார் சச்சின்.

அவரது இந்த முடிவு இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சச்சின் இல் லாத இந்திய அணியை அவர் களால் நினைத்துக்கூட பார் க்க முடியவில்லை. ஆனாலும், சச்சினாக இருந்தாலும் அல் லது வேறு எந்த வீரராக இருந் தாலும், ஒருகட்டத்தில் ஓய்வு பெற்றுதான் ஆக வேண்டும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டாலும், அவர்களது மனம் சமாதானம் ஆக வில்லை. சச்சின் இல்லாத இந் திய அணியின் வெற்றி வாய் ப்பு எப்படி இருக்கும் என்று அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

இந்திய அணியின் முன் னாள் கேப்டன் கவாஸ்கர் இதுபற்றி கூறுகையில், 'சச்சினின் ஓய்வு அறிவிப்பால், இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய ஓட்டையே விழுந்துவிட்டது. இதை உடனடியாக சரிசெய் வது சிரமம். கங்குலி, லட்சு மண், டிராவிட் ஓய்வுபெறும் போது என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடந் துள்ளது. சச்சின் இடத்தை நிரப்ப சிறிது காலம் பிடிக்கும்' என்று தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன் னாள் சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் கூறுகையில், 'சச்சின் ஓய்வுபெறும் நாள், உலக மற்றும் இந்திய கிரிக் கெட் அணிக்கு மோசமான நாள்' என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சச்சினை போன்ற இன் னொரு வீரர் இந்திய அணிக்கு அவசியம் தேவை. ஆனால், அந்த இடத்தை நிரப்ப, கவாஸ்கர் சொன்னது போலவே சிறிது காலம் ஆகும் என்பதுதான் உண்மை. அது வரை, இன்னொரு சச்சி னுக்காக ரசிகர்கள் பிரார்த் தனை செய்வதும் நல்லது தான். அதேநேரம், 200-வது டெஸ்ட் போட்டி வரையிலும் சச்சினின் சாதனை பயணம் தொடரும் என்று நம்புவோம்.

ரஜினி ஆடிய ருத்ர தாண்டவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை எதிர் பார்த்து அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருந்து கொண்டி ருக்க... கோச்சடையான் படத்தை வெளியிடும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எந்திரனுக்குப் பிறகு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், கொஞ்சம் ஒதுங்கியிருந்த ரஜினி, புது தெம்புடன் நடித்திருக் கும் படம் இது. இதில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். ரஜினியின் மகள் சவுந்தர்யா படத்தை இயக்கியுள்ளார்.

பார்ப்பதற்கு அனிமேஷன் படம் போலவே இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளை ஒரிஜினலாகவே ஷூட் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ரஜினியின் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளில் அவரே சிரமப்பட்டு நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

கோச்சடையானில் ரஜினி ஆடியுள்ள பரதநாட்டியம் பெரிதாக பேசப்படும் என்கிறார்கள். அந்த அளவுக்கு, சிவனின் ருத்ர தாண்டவம் போல ஆக்ரோஷமாக ஆடி அசத்தி இருக்கிறாராம் ரஜினி. அவரது இந்த நடனத்தை நேரில் பார்த்த யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் அசந்து போனார்களாம். படம் வெளியான பிறகு, இந்த அசத்தல் நடனத்துக்காகவே ரஜினிக்கு ஸ்பெஷல் பட்டம் கொடுக்கப் படலாம் என்கிறார்கள்.

Friday, 11 October 2013

Vidyarambham History


Be it Hindus or Christians, thousands of children in Kerala will write their first letters on a plate of rice as they are initiated into the world of learning on the auspicious occasion of Vijayadasami on Monday at temples, churches and schools called Vidyaram bham, what started off as a ritual among Hindus has become a popular custom followed by churches as well to initiate children into learning on Vijayadasami day.

The day is considered auspicious for learning and in many places across Kerala, the child’s parents, eminent literatures, teachers and even politicians hold the hands of the tiny tots and help them write Malayalam letters on a plate of rice.  While Hindus write ‘hari sree Ganapathaye namaha” in praise of Lord Ganesha, Christians write ‘Sree Yesu Mishihaye namaha”, hailing Jesus Christ.  Then using a gold ring, a Malayalam word is written on the child’s tongue.

P.G. Jose, parish vicar of the St. George Orthodox Church here, said they would be holding the function at the church on Monday.  “It would be held in the church itself and all those children who wish to enter the world of letters would be initiated through prayers.  It would be done by us and also senior members of the church”, he told IANS.

State Education Minister M.A. Baby, a Communist Party of India - Marxist (CPI - M) leader, said he too would be taking part in the function.  “I have been doing it since I became (education) minister in 2006 and hence I will be glad to initiate tiny tots into the world of learning on Monday, but I am yet to decide where I will be taking part in this ceremony.  There is no ideological barrier in this event”, Mr. Baby said.

Maximum crowds are expected at Thunachan Paramabu near Thrissur, the home of Malayalam litterateur Thunchathu Ezhuhachan.  Over 5,000 children are likely to take part in the ceremony held there.

- Shanthi, Sembakkam

'இவர்தான் நாங்கள் விரும்பும் பிரதமர்'


எஸ்.எம்.ஆனந்த்

டுத்த பிரதமர் மோடியா? ராகுலா? - இன் றைய தேதியில், பட்டணம் முதல் பட்டிக்காடு வரை பர பரப்பாக விவாதிக்கப்படும் கேள்வி இதுதான். பாரதீய ஜனதா சார்பில், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுவிட்டார். ஆனால், காங்கிரஸ் சார்பில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அத னால், சுறுசுறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

காங்கிரஸின் பிரதமர் வேட் பாளர் ராகுல்காந்திதான் என்று உறுதியாக சொல்லப் பட்டாலும், அதற்கான அறி விப்பு தாமதமாகவே வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய சூழ்நிலை யில், காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவரே இந்திய பிரத மராக வர வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. கடந்த காலங் களில் பெரும்பாலாக நடந்த தும் இதுதான். ஆனாலும், இந்திய பிரதமராக ஒருவரை தேர்வு செய்ய ஓட்டு போடும் மக்கள், தாங்கள் எதிர்பார்க் கும் பிரதமர் எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்படுவார்கள் தானே? இதுபற்றி அறிய நம் பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம்.

எஸ்.பிரகாஷ், இயற்கை மருத்துவர், சிட்லபாக்கம்: என்னைப் பொருத்தவரை தனிமனிதனுடைய சுயமரி யாதையையும் கவுரவத்தையும் தன்னுடைய சுயமரியாதை யாகவும் கவுரவமாகவும் கருதும் நபர்தான் அடுத்த இந்திய பிரதமராக வர வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் தைரியமான- தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். நம் நாட்டின் இறையாண்மைக்கே சோதனை ஏற்படும் எனில், அதிரடி நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவே கூடாது. சமீபத்தில் இந்திய எல்லையில் நமது ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொடூரமாக கொன்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுக் கப்படவில்லை. இந்த மாதிரி யான நேரங்களில் அதிரடி நடவடிக்கை எடுப்பவர்தான் சிறந்த பிரதமராக இருக்க முடி யும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், நம் சுதந் திரத்துக்காக பாடுபட்ட மாவீரர் நேதாஜி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரை குறிப்பிட லாம். இவர்களைப் போன்ற வர்கள்தான் நம் நாட்டுக்குத் தேவை.

ஆர்.அன்பழகன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர், சந்தோஷபுரம்: இந்தியா கூடிய விரைவில் வல்லரசு நாடாக உள்ள இன்றைய சூழ்நிலையில், அடுத்த இந்திய பிரதமராக வரக்கூடியவர் மிகவும் திறமை யானவராக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் விலை வாசி கூடிக்கொண்டே போகிறது. நடுத்தர மக்களும், ஏழைகளும் இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கூடியவராக அவர் இருக்க வேண்டும். அதோடு, மக்கள் எந்தப் பிரச்னையை சந்தித்தாலும், அதை தன்னுடைய பிரச்னை யாக கருதி, தகுந்த நடவடிக் கையை உடனே எடுப்பராக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை, சிறுவயது முதலே மக்களை நேசிக்கத் தெரிந்தவர்தான் சிறந்த பிரத மராக இருக்க முடியும். எந்த வொரு பிரச்னையையும் ஆறிப்போகவிடாமல் செய் யும் 'ஆக்டிவான' பிரதமர் தான் நம் நாட்டுக்குத் தேவை.

சாந்தி சண்முகம், தாளாளர், லிட்டில் ஐன்ஸ்டீன்ஸ் குழந் தைகள் பள்ளி, செம்பாக்கம்: என்னுடைய பார்வையில், தான், தன் குடும்பம் என்று இல்லாது, ஒட்டுமொத்த மக்களையும் தன் குடும்பமாக பார்க்கக்கூடியவர்தான் சிறந்த பிரதமராக இருக்க முடியும். பெருந்தலைவர் காமராஜர் போன்ற, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தன்னை அவர் முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். சுயநலம் கொஞ்சம்கூட இருக்கக்கூடாது.

சமீப நாட்களில், பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் செய்திகள் நாளிதழ் களில் அடிக்கடி தென்படுகின் றன. இது, பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலையையே காட்டுகிறது. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்து வதோடு, குற்றவாளிக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதுவும், Ôஇந்த தப்பை நான் ஏன் பண்ணினேன்Õ என்று அவன் தன் வாழ்நாள் முழுக்க வருந்த வேண்டும். அப்படி யான தண்டனைகளை தைரி யமாக வழங்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் உடனடியாக தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை எடுப்பவர்தான் சிறந்த பிரத மராக இருக்க முடியும்.

ஜே.ரவீந்திரன், சின்னத் திரை நடிகர், சிட்லபாக்கம்:
இப்போதெல்லாம் அரசிய லில் ஊழல் அதிகமாகி விட்டது. முதலில் இதை ஒழிக்க வேண்டும். ஊழலை ஒழித்தால் மட்டுமே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதால், பிரத மராக வரக்கூடியவர் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், உலக அமைதிக்காக பாடுபடக்கூடியவராகவும் இருக்க வேண்டும். வயதான பிரதமர்கள் பலரை பார்த்துவிட்டோம். அதில், மாற்ற வேண்டும். மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட புதிய பிரதமரே நம் நாட்டுக்கு இப்போதைக்குத் தேவை.

மக்கள் ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் பிரதமர் குறித்த எண்ணங்கள், ஏக்க ங்கள் பல இருந்தாலும், நாட்டுக்கு நல்லது செய்பவர் யாராக இருந்தாலும் அவரை தாராள மாக பிரதமராக தேர்வு செய்ய லாம். அவ்வாறு தேர்வாகும் பிரதமர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் அத்தி யாவசிய பிரச்னைகளை உட னடியாக தீர்ப்பது அவசியம்.

பாராளுமன்றத் தேர்தல்: வைகோவின் நிலை என்ன?


சுப்பு
பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.  எந்தக் கட்சி, எந்த அணியில் என்பது பற்றிய ஆரூடங்கள் வேகமாக கணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் கட்சியாக இல்லாவிட்டாலும் முக்கியக் கட்சியாக இருக்கும் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக்கழகம், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, எந்த அளவுக்கு ம.தி.மு.க-வுக்கு உதவும், எந்த அளவுக்கு பா.ஜ.க-வுக்கு உதவும் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். அதற்கு முன், வைகோ-வின் வளர்ச்சி குறித்து பார்க்கலாம்.

இவர்தான் வைகோ

திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் வைகோ.  பிறந்த தேதி 22.05.1944.  பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தார்.  பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்.  மாணவ பருவத்திலேயே தி.மு.க. ஆதரவாளராகச் செயல்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக 1970-&ல் வைகோ தேர்ந்தெடுக்கப்பட் டார்.  திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கியின் தலைவரானது 1972-ல்.  தி.மு.க-வின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கொள்கைப் பரப்புச் செயலாளராக 1977&ல் நியமிக்கப்பட்டார்.  1983-ல் தலைமை நிலைய தேர்தல் குழுவின் செயலாளராக ஆனார்.

தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ மூன்றுமுறை (1978 - 1996) செயல்பட்டார்.  1998-ல் மக்களவை உறுப்பினராக, மறு மலர்ச்சி திராவிடக் கழகப் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.  மீண்டும் ம.தி.மு.க. சார்பில், 1999 தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.

தி.மு.க. என்ற நேர்க்கோட் டில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த வைகோவுக்கு 1989-ல் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அதற்குக் கார ணம், ஈழப் பிரச்னை.  1989, மார்ச் மாதம் வைகோ, கட்சி யின் முன்அனுமதி பெறாமல், இலங்கை சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்றார் அப்போதைய முதல்-அமைச்சர்  கருணாநிதி.

வைகோவால் கருணாநிதி க்கு இன்னொரு சிக்கலும் உருவானது.  கட்சித் தேர்தலில் தணிக்கைக் குழுவுக்கு சிலரை நிற்க வைத்து வெற்றிபெறச் செய்தார் வைகோ.  தணிக்கைக் குழு சார்பில், சில சங்கடமான கேள்விகள் கேட்கப் பட்டன. வெளி உலகத்துக்குத் தெரியாதபடி வளர்ந்த இந்தப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஒரு கடிதம். தமிழக அரசின் தலைமைச் செயலா ளரிடம் இருந்துவந்த அந்தக் கடிதத்தினை கருணாநிதி பத்திரிகையாளர்கள் பார்வை க்கு வைத்தார். இது நடந்தது 31.10.1993-ல். வைகோவின் ஆதாயத்துக்காக, கருணா நிதியைக் கொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிடு வதாக கூறியது அந்தக் கடிதம்.

இதற்குப் பிறகு கருணாநிதி யின் அறிக்கையும், வைகோவின் கண்ணீர் அறிக்கையும் செய்தித்தாள்களில் முன்பக்கத்தைப் பிடித்துக் கொண் டன.  வைகோ தி.மு.க.வை விட்டு நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தி.மு.க. தொண்டர்கள் இடையே உணர்ச்சிமயமான கருத்து மோதலும் பிளவும் உண்டானது.  வைகோவுக்கு ஆதரவாக சிலர் தீக்குளித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

11.11.1993 அன்று வைகோ வை கட்சியில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 6.5.1994 அன்று வைகோ, தனது ஆதரவாளர்களைக் கூட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கினார்.

அடுத்து வந்தது, 1996 தேர்தல். இதில் மார்க்சிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ம.தி. மு.க-வுக்கு சட்டமன்றத் திலோ, பாராளுமன்றத்திலோ ஒரு இடம் கூடக் கிடைக்க வில்லை.

பிறகு, பா.ஜ.க-வை உள் ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது.  இந்த அணிக்கு தலைமை தாங்கியது அ.தி.மு.க. அப்போது, ம.தி. மு.க. சார்பில் 3 பேர் பாரா ளுமன்றத்துக்குத் தேர்வு செய் யப்பட்டனர்.  அடுத்து வந்த தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை (1999) தி.மு.க. எடுத்தது.  இந்த அணியில் போட்டியிட்ட ம.தி.மு.க-&வுக்கு நான்கு இடங்கள் கிடைத்தன.

பிறகு, 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணி யில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு 6 சட்டமன்ற உறுப் பினர்கள் கிடைத்தனர்.  2009-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் மட்டும் வெற்றிபெற்றார்.  2011 சட்ட மன்றத் தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்துவிட்டது.

தொடர்ந்து பல தேர்தல் களில் தனது முத்திரையைப் பதிக்க முடியாமல் போன ம.தி.மு.க., இப்போதும் புத் துணர்ச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருப் பது ஓர் அரசியல் அதிசயம் தான். மக்களிடையே இருக்கும் செல்வாக்கை இதுவரை நிரூபிக்காவிட்டாலும், வைகோ ஓர் அரசியல் சக்தியாகப் பேசப்படுவது உண்மைதான்.

எந்தக் கட்சியிலும் கொள்கையை மக்களிடையே கொண்டு செல்வதற்கான சாதனம் தொண்டர்கள்தான்.  தன்னைச் சுற்றியுள்ள தொண்டர் கூட்டத்தை வணக்கத் திற்குரியதாகக் கருதுவதே தலைமைப் பண்பு.  வைகோ விடம் அது இருக்கிறது. கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர் கள் விரும்புவதும் அவருக்குத் தெரியும். அந்த விருப்பத்தை அவர் நிச்சயம் நிறைவேற்று வார் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில், மோடிக்கு ஆதரவு தெரிவித்து, பாரதீய ஜனதா அணியில் அவர் கூட்டணி சேரலாம் என்று கூறப்படுகிறது.

தொண்டர்கள் செல்வாக்கு உடைய வைகோ, மக்கள் செல்வாக்கும் உடையவர் என்பது மோடி அணியில் சேரும்போது நிரூபிக்கப்படலாம்.