Tuesday, 31 December 2013

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


இன்று புத்தாண்டு: முதல்வர் வாழ்த்து

ன்று ஆங்கிலப் புத்தாண்டு. இதையொட்டி, முதல்-அமைச்சர் ஜெய லலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது:-

புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுட னும்  கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில்  வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு  இந்தி யாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிட வும் எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

மக்களின் நல்வாழ்வுக்காக எனது தலைமையிலான தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற  நலத் திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும்மிக்க  தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத் தாண்டில் உங்கள் அனை வரையும் கேட்டுக்கொள் கிறேன். 

தமிழக மக்கள் அனை வருக்கும்  இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சி யையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட் டும் என்று வாழ்த்தி,  அனை வருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு  முறை உரித் தாக்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

நீங்களும் பில்டர் ஆகலாம்! - அத்தியாயம் 3

 - டாக்டர் ரூபி ஆர்.மனோகரன் - 
 
ண்டன் மாநகரில் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கண்காட்சி நடந்துகொண்டி ருந்தது. அதை பார்வையிட பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்த னர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஓவியங்களை விமர்சனம் செய்யும் சர்வதேச விமர்சகர்களும் ஏராளமாக வந்து குவிந்திருந்தனர்.

கண்காட்சியில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓவியர்கள், தங்கள் கைவண்ணத்தில் உருவான விதவிதமான ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். ஆயிரக் கணக்கான ஓவியங்கள் கண் காட்சியில் இடம்பெற்றிருந் தாலும் ஒரேயொரு ஓவியம் மட்டும் எல்லோரது கவனத் தையும் ஈர்த்தது.

அது, மேகக்கூட்டத்தில் இருந்து தேவதை ஒருத்தி வெளிப்படுவதைப் போன்ற ஓவியம். அதைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோரும் விழிகள் விரிய வியப்பில் நின்றிருந்தனர். ஓவிய விமர்ச கர்களும் அந்த ஓவியத்தை ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளினர். ‘இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற மிகச்சிறந்த ஓவியம் இது’ என்று ‘சர்டிபிகேட்’ கொடுத் தனர். பொதுமக்களும் அவர் கள் கூறிய ஓவியத்தை மிகச் சிறந்த ஓவியமாக ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், கண்காட்சியை பார்வையிட வந்த பொது மக்களில் ஒரேயொருத்தர் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்ததோடு, பலமான சிந்த னையில் மூழ்கியிருந்தார். பிறகு அவர் என்ன நினைத்தாரோ, கண்காட்சி பொறுப் பாளரை அழைத்து, ‘இந்த ஓவியத்தை எல்லோரும் பார்த்து வியக்கிறார்கள். ஆனால், எனக்கு என்னவோ இந்த ஓவியம் தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது. எது உண்மை என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்’ என்றார் அவர்.

கண்காட்சி பொறுப்பா ளரோ, அந்த நபர் பொய் சொல்வதாக நினைத்தார். ‘சர்வதேச ஓவிய விமர்சகர்கள் எல்லோரும் அந்த ஓவியத்தை பார்த்து, வியந்து பாராட்டு கிறார்கள். ஆனால், சாதாரண குடியானவனான இவர், அந்த ஓவியமே தலைகீழாக இருக் கிறது என்று சொல்கிறாரே’ என்று கோபம் கொண்டார். ஆனால், அந்த நபரோ, எல்லோரையும் கவர்ந்த அந்த ஓவியம் தலைகீழாகவே மாட் டப்பட்டு இருக்கிறது என்று திரும்பத் திரும்ப சொன்னார்.

உடனே, கண்காட்சி பொறுப்பாளர், அந்த ஓவி யத்தை அனுப்பிவைத்த ஓவி யரின் குறிப்புகளை வைத்து பார்த்தபோது, ஓவியம் தலை கீழாக மாட்டப்பட்டு இருப் பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில், ஓவியத் தின் அழகை வியந்து புகழ்ந்த சர்வதேச ஓவிய விமர்சகர் களுக்கே, அந்த ஓவியம் தலைகீழாக இருக்கும் விஷயம் தெரியவில்லை. அந்த விவரம் கூட தெரியாமல், புகழ்பெற்ற விமர்சகர்களே சொல்லி விட்டார்கள் என்பதற்காக, அந்த ஓவியத்தை மிகச்சிறந்த ஓவியமாக நினைத்தார்கள் மக்கள். ஆனால், உண்மையோ வேறு மாதிரியாக இருந்தது.

அடுத்தவர்கள் சொன்னார் கள் என்பதற்காக, ஒன்றை உண்மை என்று ஏற்றுக் கொள்வது தவறு என்பது இந்த உண்மைச் சம்பவத்தில் இருந்து தெரியவருகிறது. சுய சிந்தனை இல்லாதவர்கள் உண்மையை காண முடியாது என்கிற உண்மையும் இதன் மூலம் தெரியவருகிறது.

இது, புரமோட்டர்கள் நிலம் தேர்வு செய்யும் லொகேஷனுக் கும் பொருந்தும். விரைவில் இந்த பகுதி வளர்ச்சிபெற்று விடும் என்று யாரோ சொன் னார்கள் என்பதற்காக எக் காரணத்தைக் கொண்டும் நிலத்தை தேர்வு செய்துவிடக் கூடாது.

சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்கள். படப் பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக, சரியான லொகே ஷனை தேர்வு செய்வதற் காகவே லட்சங்கள் தொடங்கி சில கோடிகள் வரை செலவு செய்கிறார்கள். சரியான லொகேஷன் அமையவில்லை என்றால், ஒரு சினிமாவை தரமான சினிமாவாக உரு வாக்க முடியாது. இது, சினிமாவை உருவாக்கும் டைரக்டருக்கு மட்டுமல்ல, நிலத்தை தேர்வு செய்து, அதில் வீடுகள் கட்டும் பில்டருக்கும் பொருந்தும்.

சில பில்டர்கள் இருக்கிறார் கள்; நிலம் மலிவாக கிடைக் கிறது என்றும், உறவினர்கள், நண்பர்கள்தானே விற்கிறார் கள் என்றும் நினைத்து, பயன் படுத்தாத நிலத்தை வாங்கி விடுவார்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு வீடு களோ, ஆள் நடமாட்டமோ இருக்காது. அப்படிப்பட்ட நிலத்தில் உடனடியாக வீடுகள் கட்ட முடியாது. பயன்படுத்த முடியாத நிலத்தில் நாம் போட்ட முதலீடு அப்படியே கிடக்கும். அதனால், புராஜெக்டை உடனடியாக தொடங்கக்கூடிய நிலத்தையே தேர்வு செய்து வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ‘கோட்டை’விடாமல் இருந்தால்தான் கோட்டை போன்ற வீடுகளைக் கட்டி விற்க முடியும்.

சரியான நிலத்தை தேர்வு செய்வதற்கு முன்பு சில விஷ யங்களில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவை:

* நீங்கள் செய்ய இருக்கும் புராஜெக்டின் மதிப்பு எவ் வளவு?
* உங்கள் புராஜெக்டில் எந்த மாதிரியான வசதிகளை கொண்டுவரப் போகிறீர்கள்?
* உங்களது புராஜெக்ட் எப்படிப்பட்ட வாடிக்கையா ளர்களுக்கு ஏற்றது?
* வாடிக்கையாளர்கள் அந்த இடத்தை எதற்காக விரும்புவார்கள்?

- இந்த விஷயங்களோடு, தேர்வு செய்த இடம் ஒரு காலத்தில் குளமாகவோ அல்லது குட்டையாகவோ இல்லாமல் இருந்ததையும் உறுதிசெய்வது அவசியம். ஏனென்றால், அப்படிப்பட்ட நிலத்தை தெரியாமல் தேர்வு செய்துவிட்டால்... அந்த நில த்தை சரிசெய்யும் முதற்கட்ட பணிகளுக்கே நிறைய செலவு செய்ய வேண்டிவரும். அதோடு, மண்பரிசோதனை யிலும் சிக்கல் வந்துவிடும். அதனால், நிலத்தை தேர்வு செய்யும் முன்பு, அதன் ஏ டூ இசட் விவரங்களை அலசி ஆராய்வது அவசியம்.

முக்கியமாக, எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் அரசுத்துறை நிறுவனங்கள் அமையும் வாய்ப்பு இருக்கிறதா, நிலத் தின் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சாலைவிரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் படுமா, பாலங்கள் ஏதேனும் அமைக்கும் திட்டம் இருக் கிறதா என்பதையெல்லாம் ஆராய்வது நல்லது.

இதையெல்லாம் ஆராயா மல் நிலத்தை வாங்கிவிட்டு, சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு செல்லும்போது, Ôநீங்கள் வாங்கியுள்ள இடம் இந்த வளர்ச்சி மண்டலத்தில் வருகிறது, விமான நிலைய எல்லைக்கு அருகே வருகிறது, பக்கத்திலேயே சுடுகாடு இருக்கிறது, அதனால் அங்கே குடியிருப்பு பகுதிகளை கட்ட முடியாதுÕ என்பது போன்ற பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதனால், நிலத்தை வாங்குவதற்கு முன்பே, சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் அந்த நிலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டறிவது நல்லது. இப்போ தெல்லாம், இன்டர்நெட் வழியாகவே இந்தத் தகவல் களை தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது.

லொகேஷன் தேர்வில், புராஜெக்டுக்காக நாம் தேர்வுசெய்யும் நிலத்தின் அரு கில் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மார்கெட், மருத்துவ மனைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகியவை எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்த வசதிகள் அனைத்தையுமே  நாம் அங்கே கொண்டுவர முடியாது என் றாலும், இவற்றில் 60 சதவீத வசதிகளாவது பூர்த்தியாகி இருப்பது நல்லது. மேலே சொன்ன வசதிகளுக்காக 2 கி.மீ., 3 கி.மீ., செல்லும் நிலை இருந்தால், வாடிக்கையாளர் கள் அந்த இடத்தை விரும்ப மாட்டார்கள்.

அதேபோல், தொழிற்சாலை கள், அதிக சத்தம், புகை ஏற்படுத்தக்கூடிய தொழிற் சாலைகள் இருக்கும் பகுதி யையும் வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. நாம் குடியிருப்பு அமைக்க உள்ள இடத்தின் எதிர்ப்பக்கத்திலோ அல்லது அதற்கு அருகிலோ திறந்தவெளி கழிவுநீர் கால் வாய்கள், குப்பைக்கூடங்கள், கழிவறைகள், குட்டைகள், பெரிய அளவிலான முட்புதர் கள் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அத னால், சுகாதார வசதிகள் உள்ள லொகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இவற்றோடு, நாம் தேர்வு செய்யும் நிலத்தில் கட்டு மானங்களை மேற்கொள்ள அப்ரூவல் கிடைக்குமா, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி முதலானவற்றை மேற் கொள்ள முடியுமா என்பதை யும் பார்க்க வேண்டும். இதன்பிறகு, அனுபவமுள்ள இன்ஜினீயரை அழைத்து வந்து, அந்த நிலத்தின் வாங்கும் திறனை கணக்கிட வேண்டும். வாடிக்கையாளர்கள், விருப் பத்துடன் வாங்கும் இடமாக அது இருக்க வேண்டும்.

ரத்தினச்சுருக்கமாக சொல் வது என்றால், ஒரு நிலத்தை தேர்வு செய்து, அதில் வீடுகள் கட்டிய பிறகுதான் அவை விற்பனை ஆகும் என்பதை விட, வீடு கட்டிக்கொண்டிருக் கும் போதே வீடுகள் விற்பனை யாகிவிட வேண்டும். அது தான் சரியான லொகேஷன்.

இந்த லொகேஷன் தேர்வின் போது, சிலர் தெரியாத்தனமாக நில மோசடிகளில் சிக்கிக் கொள்வர். அது எப்படி நிகழ் கிறது தெரியுமா?

- தொடரும்...

அழகான பற்கள் எல்லோருக்கும் சாத்தியம்தான்..! - டாக்டர் ஜி.திருப்பதி

ம் முகத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பவை பற்கள். அந்த பற்கள் துருத்திக்கொண்டோ அல்லது முன்னுக்குப்பின் முரணாக வரிசையின்றியோ இருந்தால் முகஅழகு குறைந்து போய்விடும். இப்படி, பற்களால் ஒருவரது அழகு குறைந்துபோக என்னக் காரணம், அதைத் தடுக்க முடியுமா?

இதோ... நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னை சேலையூர் ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவமனையின் தலைவரும், பிரபல பல் மருத்துவருமான டாக்டர் ஜி.திருப்பதி.

ஒருவருக்கு பற்களின் அமைப்பு நிலைமாறியிருக்க என்னக் காரணம்?

ஒருவரது பற்கள் துருத்திக்கொண்டோ அல்லது சீரான வரிசையின்றியோ இருந்தால், அதற்கு அவரது பழக்கவழக்கம் அல்லது குடும்ப பாரம்பரியம் என்கிற ஜெனிடிக் காரணமாக இருக்கும். பழக்கவழக்கம் என்றால்... சிறு குழந்தையாக இருந்தபோது கைசூப்புதல், தூங்கும்போது வாயைத் திறந்துகொண்டே மூச்சுவிடுதல், அடிக்கடி நகம் கடித்தல், உதடு கடித்தல், அடிக்கடி நாக்கை வெளிப்புறமாக தள்ளிக்கொண்டிருத்தல் ஆகிய காரணங்களால் ஒருவருக்கு பல் துருத்திக்கொண்டோ அல்லது சீரான வரிசையின்றியோ போகலாம். ஜெனிடிக் காரணம் என்றால், சம்பந்தப்பட்டவரின் அப்பா அல்லது அம்மாவுக்கோ அல்லது அவர்களது அப்பா, அம்மாவுக்கோ அந்த பாதிப்புகள் இருந்திருந்தால், அந்தப் பாதிப்பு அடுத்தத் தலைமுறைக்கும் தொடரும்.

இந்த 2 காரணங்கள் தவிர வேறு காரணங்கள் கிடையாதா?


இருக்கிறது. முகத்தின் மேல் தாடை மற்றும் கீழ்த் தாடையில் வளர்ச்சி குறைபாடு இருந்தாலும், எலும்பு, மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், ஹார்மோன் குறைபாடு இருந்தாலும் அந்தப் பாதிப்புகள் ஏற்படும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு தொண்டை சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். அவர் தூங்கும்போது வாயை திறந்துகொண்டுதான் தூங்குவார். இந்த பாதிப்பு இருந்தால் காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. ஒருவருக்கு மேல் தாடை, கீழ்த்தாடையில் வளர்ச்சி குறைபாடு இருந்தால் சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி, சொத்தைப் பல் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்திவிடும்.

கை சூப்புதல் உள்ளிட்ட சில பழக்கவழக்கங்களை சில குழந்தைகள் வெகுநாட்களுக்குத் தொடர்கிறார்களே...  அவர்களை நம் வழிக்கு எப்படிக் கொண்டுவருவது?

மூன்றரை வயது வரை ஒரு குழந்தைக்கு அந்தப் பழக்கங்கள் இருப்பதில் தவறில்லை. அந்தப் பழக்கம், அதற்கு மேலும் தொடர்ந்தால்தான் பிரச்னை. இந்தப் பழக்கங்களால் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வரிசையில் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கிளிப் போட்டுக்கொள்ள வேண்டும்.

சரி, எந்த வயதில் இருந்து கிளிப் போடலாம்?

தாடைகளின் ஒழுங்கற்ற வளர்ச்சியால் ஒருவருக்கு பல் துருத்திக்கொண்டு இருந்தால், அதை சரிசெய்யும் பொருட்டு கிளிப் போட்டுக்கொள்ள சரியான வயது 7. பல் மட்டும்தான் பிரச்னை என்றால், 12 வயதில் கிளிப் போட்டுக்கொள்ளலாம். தற்போது, அட்வான்ஸ் டெக்னாலஜி வசதிகளால் பல் துருத்திக்கொண்டுள்ள எவரும், எந்த வயதிலும் அதை சரிசெய்யும்பொருட்டு கிளிப் மாட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் துருத்திக்கொண்டிருக்கும் பற்களை மட்டுமே சரிசெய்ய முடியும். தாடையில் பிரச்னை இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு வேறுமாதிரியான சிகிச்சை தேவைப்படும். பல் மட்டும்தான் பிரச்னை என்றால், இப்போது 50 வயதில்கூட கிளிப் போட்டுக்கொள்ளலாம்.

கிளிப் போட்டுக்கொண்டால் எவ்வளவு நாட்களில் பலன் கிடைக்கும்?

பல் மட்டும்தான் பிரச்னை என்றால் 12-18 மாதங்களில் சரியாகிவிடும். பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் 2 முதல் இரண்டரை ஆண்டுகளில் சரியாகும்.

வெளியே தெரியாதபடி பற்களில் கிளிப் போட்டுக்கொள்ள முடியுமா?


கண்டிப்பாக முடியும். நிரந்தர கிளிப் அதற்கு உதவும். பற்களுக்கு உள்ளே மாட்டப்படும் இந்த கிளிப், சிரிக்கும்போது வெளியே தெரியாது. அதேநேரம், அதை சம்பந்தப்பட்டவர் கழற்றி எடுக்கவும் முடியாது. இப்போது பிக்ஸ்டு மெட்டல் கிளிப், சிராமிக் கிளிப், செல்ஃப் லிகேஷனல் சிராமிக் கிளிப், கேஸுவல் கிளிப் என்று பல்வேறு வகை கிளிப்கள் வந்துவிட்டன. இவற்றின் உதவியால், இடைவெளிவிட்டு பற்கள் அமைந்துள்ள பிரச்னையை 5 மாதத்தில் சரிசெய்துவிடலாம். குழந்தைகளுக்கு வலியில்லாமல் மாட்டிக்கொள்ளும் கிளிப்களும் உள்ளன. இந்த கிளிப்பை குழந்தைகளுக்கு, அவர்கள் இரவில் தூங்கும்நேரத்தில் மட்டும் மாட்டிக்கொள்ளலாம். நாங்கள் கடந்த 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பேருக்கு கிளிப் மூலம் பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை போக்கி இருக்கிறோம்.

சற்குரு சரித்திரம் அத்தியாயம் 1 - நெல்லை விவேகநந்தா

1945-ம் ஆண்டு.

தஞ்சை தரணி நெற்பயிர் களால் பசுமைக் கோலம் பூண்டிருந்தது. சோழர்களின் பக்தியால் விளைந்த கோயில் கள் நகரங்கள், கிராமங்கள் தோறும் நிறைந்திருந்தன. அந்த வகையில், ஆன்மிகத் தாலும் விவசாயத்தாலும் செழித்திருந்த ஊர்தான் இன்றைய தஞ்சை மாவட்டத் தில் அமைந்துள்ள மாத்தூர் தொட்டி.

இந்த அழகான ஊர், அந்த மகானின் வருகையால் இன் னும் கூடுதலாக புத்துணர்வு பெற்றது. 'நம்ம ஊருக்கு புதுசா சாமியார் ஒருத்தர் வந்திருக்காராம். அவர், அதி கம் பேச மாட்டாராம். ஆனா, அவர் என்ன சொன்னாலும் நடக்குதாம்...' - இப்படி அந்த ஊர் முழுக்க பேசினார்கள்.

மகானின் புகழ் மாத்தூர் தொட்டி மட்டுமல்ல, பல் வேறு இடங்களிலும் பரவி யிருந்த நேரம் அது. மகானின் அருமை பெருமைகளை பிறர் சொல்லி கேள்விப்பட்டு, அவரைக் காணும் ஆவலில் மாத்தூர் தொட்டிக்கு வந்து விட்டார் வேதாரண்யத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர்.

'சுவாமி... உங்களைப் பார்க்க வேதாரண்யத்தில் இருந்து ஒருத்தர்தனது நண்ப ருடன் வந்திருக்கார். உங்களை எப்படியும் பார்த்து பேசியே ஆகவேண்டும் என்று பிடி வாதம் செய்கிறார். உங் களைப் பார்க்காமல் இங்கி ருந்து போகமாட்டாராம்'

- சீடர் ஒருவர் இப்படிச் சொல்லவும், அதுவரை தியா னத்தில் அமர்ந்திருந்த அந்த மகான் கண்கள் திறந்து பார்த்தார்.

'சரி, அவரை வரச் சொல்' - மகானின் திருவாயில் இருந்து உத்தரவு பிறந்தது.

அடுத்த நிமிடமே வேதாரண் யத்தில் இருந்து வந்திருந்த அன்பர் மகான் அருகே வந்து நின்றார். மகானை பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் என்ன தோன்றியதோ தெரிய வில்லை, பொலபொல வென்று கண்ணீர்த் துளிகளை உதிர்க்க ஆரம்பித்துவிட்டார். மகானின் மகிமைகள் பற்றி சொல்லி அவரை அங்கே அழைத்துவந்திருந்த அவரது நண்பருக்கு ஒன்றும் ஓட வில்லை.

'உங்களுக்கு என்ன ஆயிற்று? சாமியாரைப் பார்த் ததும் நீங்கள் ஏன் அழுகிறீர் கள்? என்று கேட்டார்' அன்பரின் நண்பர்.

பதிலுக்கு, அன்பரின் கண் களில் மறுபடியும் கண்ணீர் தான்! அவரது நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில அடிகள் தூரத்தில் மகான் அமர்ந் திருக்க... அவரைப் பார்த்து இவர் திரும்பத் திரும்ப அழுது கொண்டிருக்கிறாரே... என்று குழம்பினார் அன்பரின் நண்பர்.

தன்னைக் காணவந்த பக்தன் ஏன் அழுகிறான் என்று மகானுக்குத் தெரிந்து விட்டது. ஆனாலும், அமைதி காத்தார்.

சில நொடி அழுகைக்குப் பிறகு வேதாரண்யம் அன்பர், மெள்ள வாய் திறந்தார்.

'நண்பரே..! நான் எதிரே காணும் மகான், சாதாரண மகான் கிடையாது. நம்மோடு வாழும் தெய்வம்!'

'உமக்கு என்ன ஆயிற்று? ஏன், சம்பந்தம் இல்லாமல் உளறுகிறீர்?' - அன்பரின் நண்பர் கேட்டார்.

'அப்படிச் சொல்லாதீர். இதோ... நம் எதிரே அமர்ந் திருக்கிறாரே மகான், இவரது திருவுருவப் படத்தை என் தந்தையார் தன்னுடைய 105 வயது வரை பூஜையறையில் வைத்து வழிபட்டு இருக்கிறார். 105 வயதுவரை வாழ்ந்த என் தந்தைக்கு தெய்வமாக இருந்து வழிகாட்டியவர், இப்போது... அதே தேகப் பொலிவோடு நம் எதிரே நிற்கிறார்..!'

வேதாரண்யம் அன்பர் இப்படிச் சொன்னதும், அவரை அங்கு அழைத்துவந்த நண்பர் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

பக்தர்களின் நிலையை புரிந்துகொண்ட மகான், அவர்களை, தன் அருகில் வருமாறு சைகையால் அழைத் தார்.

பக்தர்கள் இருவரும் மகான் முன்பு கைகட்டி அமைதியாக நின்றிருந்தனர்.

'குழந்தைகளே! என்னு டைய ஆசி வேண்டிதானே இவ்வளவு தொலைவு கடந்து, என்னைக் காண வந்திருக் கிறீர்கள்? பிறகு ஏன் மவுனம்?'

'சுவாமி... தங்களின் திருவுருவப் படத்தை எங்கள் வீட்டு பூஜையறையில் என் தந்தையார் வழிபட்டு வந்திருக் கிறார். இப்போது அவர் இல்லை. நான், அவரது வழியில் உங்களின் திருவுருவப் படத்தை வழிபட்டு வருகி றேன். இப்போது உங்களை நேரில் பார்த்ததும் பரவச மாகிப் போனேன். எங்கள் தந்தையாரே தங்களை வழி பட்டு இருக்கிறார் என்றால், அவரின் தந்தையும் நிச்சயம் உங்களை வழிபட்டு இருப் பார். இப்போது, நானும் தங் களின் பக்தன் ஆகிவிட்டேன். அப்படியானால், தங்களின் வயது என்ன? உண்மையி லேயே தாங்கள் யார்?'

அதுவரை யாரும் கேட்காத அப்படியொரு கேள்வியை முதன்முறையாக கேட்டுவிட் டார் வேதாரண்யம் அன்பர்.

முதன்முறையாக தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு புன்னகையோடு பதில் சொன்னார் மகான்.

'மகனே! நீ சொல்வது சரிதான். நீ பார்க்கும் இந்த சாமிக்கு வயதே கிடையாது. இந்த நிமிடம் நினைத்தாலும் சரீரத்தை உதிர்த்துவிட்டு போய்விடும்.'
'சுவாமி தங்களுக்கு வய தாகவில்லை. ஆனால், எங் களுக்கு வயதாகிவருகிறதே..!'

'காலத்தை வென்றவர் களுக்கு வயதே கிடையாது...' என்று ரத்தினச்சுருக்கமாகச் சொன்ன மகான், பக்தர்கள் இருவருக்கும் ஆசிகூறி அனுப்பிவைத்தார்.

இப்படி, எங்கே, எந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார், அவரது வயது உண்மையிலேயே என்ன என்று யாரும் அறிய முடியாத வகையில், மக்களோடு மக் களாக வாழ்ந்து, நாளும் அற்புதங்கள் நிகழ்த்தி, அந்த அற்புதங்களை இன்றும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் அந்த மகான். அவர்தான்...சற்குரு சச்சிதானந்த சுவாமி கள்! இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சி தானந்த சற்குரு சுவாமிகள்.

மக்களை நல்வழிப்படுத் தவும், இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தவும் இவர் மேற்கொண்ட முயற்சி களையும், அதையொட்டி அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களையும் இந்தத் தொடரில் விரிவாகக் காண்போம்...

- தொடரும்...

Saturday, 21 December 2013

நீங்களும் பில்டர் ஆகலாம்! - அத்தியாயம் 2

 ரூபி ஆர்.மனோகரன்

நாமெல்லாம் மாவீரன் என்று கொண்டாடக்கூடிய அலெக்ஸாண்டருக்கு அப் போது 13 வயது இருக்கும். ஒருநாள் அவரது தந்தையும், மாசிடோனியா நாட்டின் மன்னனுமான பிலிப் முன்பு அரேபிய குதிரை வியாபாரி ஒருவன் முரட்டுக் -குதிரை ஒன்றை கொண்டுவந்து நிறுத்தினான். பார்ப்பதற்கு அழகாக மட்டுமின்றி, துடிப் பாகவும் காணப்பட்டதால் உடனே அந்தக் குதிரையை வாங்கிவிட்டான் மன்னன் பிலிப்.

குதிரையை வாங்கியா யிற்று! அதை சவாரிக்கு பழக்கப்படுத்த வேண்டும் அல்லவா? உடனே பிலிப்பின் படைத் தளபதிகள் அதன்மீது சவாரி செய்ய முயற்சி செய்து, தோற்றுப் போனதுதான் மிச்சம். தளபதிகள் எல்லோ ரையும் மிரட்டிய அந்த முரட்டுக் குதிரை, இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. எதையோ கண்டு பலமாக மிரண்டது.

மன்னன் பிலிப் மற்றும் அவனது தளபதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குதிரையை, பெரிய கம்பால் அடித்தும் பார்த்தார்கள். முன் னிரு கால்களையும் உயரே தூக்கி மிரண்ட குதிரை, தளபதிகள் யாரையும் தன்மீது சவாரி செய்ய அனுமதிக்கவில்லை.

நடந்ததை எல்லாம் தந்தை க்கு அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் அலெக்ஸாண்டர். தந்தை அருகில் வந்தவன், 'அப்பா... அந்தக் குதிரையை நான் அடக்கிக் காட்டுகிறேன்' என்றான். தன்னுடைய மகன் சிறுவன் ஆயிற்றே என்று எண்ணிய பிலிப், 'மகனே... நீ சிறுவன். இது, முரட்டுக் குதிரை. யுத்த களம் பல கண்ட தளபதிகளாலேயே அடக்க முடியாத குதிரையை நீ எப்படி அடக்குவாய்? அத னால், ஓரமாக போய் நில். உன் மீது குதிரை பாய்ந்துவிடக் கூடாது...' என்று பயமுறுத்தினான்.

ஆனால், சிறுவன் அலெக் ஸாண்டர் விடவில்லை. 'அப்பா... நான் அந்தக் குதி ரையை இந்த நிமிடமே அடக் கிக் காட்டுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு த்துப் பாருங்கள்' என்றான்.

'எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்...' என்று அலெக் ஸாண்டர் சொன்னது மன்னன் பிலிப்பை யோசிக்க வைத்தது. 'சரி... குதிரையை அடக்கிக்காட்டு, பார்ப் போம்...' என்றான்.

உடனே, குதிரை அருகில் வந்த சிறுவன் அலெக் ஸாண்டர், அதன் கடிவாள த்தை வேகமாகப் பற்றி, அதே வேகத்தில் குதிரையை ஒரு திருப்பு திருப்பி வேறு பக்கமாக நிறுத்தியதோடு, அக்கணமே குதிரை மீது ஏறி, குதிரையை சிறிது தொலைவுக்கு ஓட்டிச் சென்று திரும்பிவந்தான்.

தன் எதிரே நடப்பது கனவா, நிஜமா என்ற குழப் பத்தில் இருந்தான் மன்னன் பிலிப். குதிரையில் இருந்து இறங்கிய மகனிடம், 'எப்படி குதிரையை உன் வசம் கொண்டு வந்தாய்' என்று ஆர்வம் பொங்கக் கேட்டான்.

'அப்பா... நீங்கள் குதிரையை மட்டும்தான் பார்த்தீர்கள். சுற்றியுள்ள சூழ் நிலையைப் பார்க்கவில்லை. நம் தளபதிகள் குதிரையை அடக்குவதற்கு முயற்சித்த போது, குதிரையின் நிழல் அதன் முன்பு விழுந்தது. அது, தன்னுடைய நிழல்தான் என்று தெரியாமல் மிரண்டு போய்  நின்றிருந்தது குதிரை. அதனால்தான், தளபதிகளால் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நான் குதிரையை வேறு பக்கமாக திருப்பியதால், எளிதில் என்வசம் கொண்டுவர முடிந் தது'' என்றான் சிறுவன் அலெக்ஸாண்டர்.

- இப்படித்தான், பில்டராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் அனுபவ அறிவோடு, சூழ்நிலைகளை புரிந்து செயல்பட வேண்டும். எந்தவொரு கடினமான செயலாக இருந்தாலும், அதை சுலபமாக செய்து முடிக்கும் வழி ஒன்று நிச்சயமாக இருக் கும். அந்த வழி என்ன என்பதை கண்டறிவதில்தான் நம்முடைய சாமர்த்தியம் இருக்கிறது. பில்டராக நினைக் கும் ஒவ்வொருவருக் கும் அந்த சாமர்த்தியம் அவசியம் இருக்க வேண்டும்.

நீங்கள், 4 வீடுகள் கட்டக் கூடிய ஒரு இடத்தை வாங்கி விட்டீர்கள். அந்த இடத்தில் 4 வீடுகளையும் கட்டுவதற்குத் தேவையான பணம் கைவசம் இருக்கிறது. அதில், 4 வீடுகளை யும் கட்டி விற்றுவிட்டால், முதலீடு செய்த பணமும், லாபமும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.

இந்த இடத்தில் சில புதிய பில்டர்கள் பெரிய தவறு ஒன்றை செய்துவிடுவார்கள். ஒரு இடத்தில் வீடு கட்டு வதற்காக வாடிக்கையாளர் களிடம் வாங்கிய பணத்தை, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்து வதற்குப் பதிலாக, வேறு இடத்தில் இரட்டிப்பாக நிலம் வாங்கிவிடுவார்கள். இப்படி, வீடு கட்டும் புராஜெக்டுக்காக வாங்கப்பட்ட பணம், இன் னொரு இடத்தில் முடங்கி விட்டால், வீடு கட்டும் பணி தாமதமாகிவிடும். உறுதிய ளித்த கால அளவுக்குள் வாடிக்கையாளருக்கு வீட்டைக் கட்டிக் கொடுக்க முடியாது.

இப்படிப்பட்ட நேரங்களில், சம்பந்தப்பட்ட பில்டருக்கு அவப்பெயர் ஏற்படுவதுதான் மிச்சம். கொஞ்சம் முன்னெச் சரிக்கையாக செயல்பட்டால் இதுபோன்ற தவறுகள் நேரா மல் தவிர்க்கலாம். புதிதாக வரும் பில்டர்கள் ஒவ்வொரு வரும், அடுத்தவர்களின் இந்த அனுபவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள் விரும்பும் பில்டராக உயர முடியும்.

கட்டுமானத் துறையை லாப நோக்கு கண்ணாடி அணிந்து பார்ப்பவர்களும் உண்டு. இது தவறு. இவர்கள், சேவை மனப்பான்மை எனும் கண்ணாடி அணிந்துகொள் வது அவசியம். அப்போது தான், லாபம் எது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வரும்.

ஒரேயொருமுறை ஒரு பொருளை வாடிக்கையாளரி டம் விற்றுவிட்டு, பிறகு... அவர் யாரோ, நாம் யாரோ... என்று போகும் தொழில் அல்ல கட்டுமானத்துறை. இந்த பந்தம், பல தலைமுறை கள் தாண்டியும் தொடக் கூடியது. அதனால் இங்கே, பண வரவைவிட, மனஉறவு மிக முக்கியம் என்பதை பில்டர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

முதலாளியாக இருந்தாலும் களத்தில் இறங்கி அவசியம் வேலை பார்க்க வேண்டிய தொழில் இந்த கட்டுமானத் துறை. இங்கே வேலை செய்வதற்கு, முதலாளியாக இருந்தாலும் வெட்கப்படக் கூடாது. கடினமாக உழைக்க வும் தயங்கக்கூடாது.

சிலர் ஒயிட் அண்ட் ஒயிட்டில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப் பார்கள். கட்டுமானத்துறை யில் இதற்கு சாத்தியமே இல்லை. விவசாய வேலையைப் போன்றதுதான் கட்டுமானத் தொழிலும்! கட்டிட வேலைகளை நேரில் சென்று பார்க்கும்போது, நம் ஆடையில் அழுக்கு படியா மல் வெளியே வரமுடியாது. என்னைப் பொருத்தவரையில், காலையில் வேலைக்கு வருவதுதான் தெரியும்; இரவு எப்போது வீட்டுக்குச் செல் வோம் என்பதே தெரியாது. அந்த அளவுக்கு சின்ஸியராக உழைக்க வேண்டும்.

சிலர், அடுத்தவர்களை நம்பி கட்டுமானத் தொழிலில் இறங்கிவிடுவது உண்டு. அப்படியே வந்துவிட்டாலும், இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுவது எப்படி என்று யோசிக்க வேண்டும். தன்னிடம் போதிய திறமை இல்லையென்றால், அதை அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனப் பக்குவமாவது இருக்க வேண்டும். 'கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்பது இந்தத் தொழிலுக்கும் பொருந்தும்.

சிலர், தாங்கள் பில்டர் ஆகிவிட்டோம் என்பதற்காக, சக பில்டர்களிடம்கூட விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயங்குகிறார்கள். இந்த எண்ணம் வேண்டவே வேண்டாம். ஒரு இடத்தை நீங்கள் வாங்கும்போது, அதற்கு சரியான விலையைத் தான் கொடுக்கிறோமா என்பதை உறுதி செய்ய இந்த சக பில்டர் உறவு மிகவும் உதவும்.

இப்படி, அனுபவத்தில் இருந்து பில்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அது, நிலம் வாங்குவதற்குரிய லொகேஷனுக்கும் பொருந் தும். நிறைய பில்டர்கள் கோட்டைவிடுவது, நிலத்தை தேர்ந்தெடுத்து வாங்கும் விஷயத்தில்தான். எப்படிப் பட்ட லொகேஷன் நமக்கு லாபத்தை அள்ளித் தரும்?

- அடுத்த இதழில் சந்திப்போம்...

ஐஸ்வரியம் அள்ளித்தரும் ஸ்ரீ சக்ர யந்திரம்

சேலையூரில் உள்ள நெல்லூர் அம்மன் கோவில் விழாவில் இன்று பக்தர் களுக்கு, ஐஸ்வரியம் அள்ளித் தரும் ஸ்ரீ சக்ர யந்திரம் தரப் பட உள்ளது.

மஹோத்ஸவ விழா

சென்னை சேலையூர் பாரதி நகர் பகுதியில் உள்ள நியூ பாலாஜி நகரில் நெல்லூர் அம்மன் மற்றும் சக்தி செல்வ விநாயகர் கோயில் அமைந்துள் ளது. இக்கோவிலில் மஹோத் ஸவ விழா கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி நடை பெற்று வருகிறது.

விழாவின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நெல்லூர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன் றைய தினம் இரவு பக்தர் களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.

விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஐயப்பனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, லட் சார்ச்சனை நடைபெற்றது. மாலையில், விக்னேஸ்வர பூஜையும், கலச பிரதிஷ்டையும், ஸ்ரீ சண்டி பாராயணமும் நடைபெற்றது. இரவில், தெப்போற்ஸவம் நடை பெற்றது. அப்போது, நெல்லூர் அம்மன் பரிவார மூர்த்தி களுடன் கோவில் திருக்குளத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

ஸ்ரீ சக்ர யந்திரம்

விழாவின் மூன்றாம் நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு மகா சண்டி ஹோமமும், பிற்பகல் 12.30 மணிக்கு சண்டி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. இந்த சண்டி ஹோமத்தில், தங்கமுலாம் பூசப்பட்ட செம்பினால் ஆன, அஷ்ட ஐஸ்வரியம் தரும் 108 ஸ்ரீ சக்ர யந்திரங்கள் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்ரீ சக்ர யந்திரம் வேண்டுவோர், கோவிலில் ரூ.251 செலுத்தி முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து, பகல் 1 மணிக்கு சிறப்பு மகா அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்ன தானத்தை தொடர்ந்து இரவு 7 மணிக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உஷா பாலாஜியின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற இருக்கிறது.

விழா ஏற்பாடுகளை நெல் லூர் அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் கோயில் சமூல நல சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ரத்னமங்கலம் கோயில் கும்பாபிஷேகம்


 ரத்னமங்கலத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரன் கோவிலில் கும்பாபிஷேகம் மிகச் சிறப் பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று தனிக் கோவில் அமைந்துள் ளது. இங்கே ஸ்ரீ மகா லட்சு மியும் ஸ்ரீ குபேர பக வானும் இணைந்து  அருள் பாலிக்கின்ற னர். உலகில் முதன் முதலாக ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று அமைந்த முதல் தனிக் கோவில் இது. திருப்பதி ஏழு மலையானை தரிசிக்கச் செல் லும் முன்பு இங்கு வந்து வழி படுவது நல்லது.

சிறப்புமிக்க ரத்னமங்கலம் குபேரர் கோவிலில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி, ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமா னங்களுக்கும், அந்த தெய்வ விக்ரகங்களுக்கும் மகா கும்பா பிஷேகமும், மகா அபிஷேகம், மகா தீபஆராதனையும் நடை பெற்றன.

விழாவில், சென்னை மட்டு மின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தி ருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீ குபேர பகவானின் அருளை பெற்றுச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ராஜ லெட்சுமி குபேரா டிரஸ்ட்டி யினர் செய்திருந்தனர்.

கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்...


* கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.
* கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.
* கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வருகிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
* கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரர் ஆவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.
* கிறிஸ்துமஸ் அன்று மாலை வேளையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
* கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக, அங்குள்ள மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.
* உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால், அதை அதிர்ஷ்டகரமானதாகக் கருதுகிறார்கள்.

கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ்!

 கிறிஸ்துமஸ் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை : 1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவ ரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப் பட்டது. 1846&-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். இந்த வாழ்த்து அட்டைகளின் வடிவமைப்பு, நேர்த்தி, தொழில்நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டனர் மக்கள்.
இதனால், கோடிக் கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டை கள் செய்கின்றன.

கிறிஸ்துமஸ் குடில் : கி.பி. 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரம் : மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங் கினான். ஸ்காண்டி நேவியர் கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்தவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங் களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மானியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம் பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட், தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்து மஸ் மரத்தை அறிமுகப்படுத் தினார்.

கிறிஸ்துமஸ் கேக் :  மேற்க த்திய கலாச் சாரத்தின்படி  கேக், கிறிஸ்துமஸ் விழாவின் சிறப் பான உணவு பொருளாக இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பூ : மெக் சிகோவில் 'போய்ன்செட் டியா' என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் 'புனித இரவின் பூ' என்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் ஆடு : ஸ்வீட னில் கிறிஸ்துமஸ் அலங் காரங்களில் ஒன்றாக 'ஜுல்பக்' என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.

22 வாடகை ரயில்! : இன்று பிரம்மாண்ட கூட்டத்தில் பேசுகிறார் மோடி


மும்பையில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக் காக 22 வாடகை ரயில்கள் அமர்த்தப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நரேந்திர மோடி. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளுவதால் இன்னும் உற் சாகத்தில் இருக்கிறார். சமீபத் தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்கள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக இருப்பதால் கூடுதல் சுறுசுறுப்போடு தேர் தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஞாயிறு) மும்பையில் நடை பெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சைக் கேட்க மாநிலம் முழுவதிலும் இருந்து தொண் டர்கள் வருவார்கள் என்ப தால், அவர்களின் வசதிக்காக 22 வாடகை ரயில்கள் அமர்த் தப்பட்டுள்ளன. தவிர, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங் களிலும் அவர்கள் வருவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 4 December 2013

டிசம்பர் 6-ம் தேதி உலகின் முதல் குபேரன் கோவில் கும்பாபிஷேகம்

த்னமங்கலத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரன் கோவிலில் டிசம்பர் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

முதல் குபேரன் கோவில்

சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று தனிக் கோவில் அமைந்து உள்ளது. இங்கே ஸ்ரீ மகா லட்சுமியும் ஸ்ரீ குபேர பக வானும் இணைந்து  அருள் பாலிக்கின்றனர். உலகில் முதன் முதலாக ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று அமைந்த முதல் தனிக் கோவில் இது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் முன்பு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

இவ்வளவு சிறப்புமிக்க ரத்ன மங்கலம் குபேரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு, வருகிற 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, டிசம்பர் 4&ம் தேதி (புதன் கிழமை) காலை 9.5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் மற்றும் புதிய விக்ரகங்களுக்கு கண் திறக்கும் வைபவங்களும், அன்று மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை யந்திர பிரதிஷ்டை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட வைபவங் களும் நடைபெற உள்ளன.

டிசம்பர் 5-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் வைபவங்களும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறு கின்றன.

கும்பாபிஷேகம்

டிசம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதி காலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெறும். காலை 7.45 மணிக்கு யாத்ரா தானம், கல சங்கள் புறப்பாடு நடை பெறும். 8.15 மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமா னங்களுக்கு மகா கும்பாபி ஷேகம் நடைபெறும். 8.30 மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங் களுக்கு மகா கும்பாபிஷே கமும், மகா அபிஷேகம், மகா தீப ஆராதனையும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ராஜலெட்சுமி குபேரா டிரஸ்ட்டின் டிரஸ்டி மற்றும் கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

நீங்களும் பில்டர் ஆகலாம்!- புதிய தொடர்


ரூபி ஆர்.மனோகரன்
=====================
னைவருக்கும் ஆச்ச ரியம் அளிக்கும் தொழிலாக உயர்ந்து நிற்கும் கட்டிடத் துறையில் நாள்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்வது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பில்டராக இருப் போரை பார்க்கும் மற்றவர் களுக்கும், 'நாமும் பில்டர் ஆகக்கூடாதா என்ன' என்கிற ஆசையும் அவ்வப்போது துளிர்விட்டு, அந்த ஆர்வத்தில் இந்தக் கட்டுமானத் துறைக் குள் அடியெடுத்துவைத்து ஜெயித்தவர்களும் உண்டு; வந்தவேகத்தில் பின்வாங்கி ஓடியவர்களும் உண்டு. வெற்றி யும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.

அர்ப்பணிப்பு அவசியம்

கட்டிடத் துறை மட்டுமல்ல; எந்தத் துறையாக இருந்தாலும், அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால்தான் வெற்றி கிடை க்கும். அதேநேரம், அந்தத் துறையில் அனுபவ அறிவும் அவசியம் இருக்க வேண்டும்.

சிலர், பணம் இருந்தால் போதும்; மக்கள் மெச்சும் பில்டர் ஆகிவிடலாம்; கூட வே, லாபத்தையும் பல மடங்கு அள்ளிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார் கள். ஒரேயொரு புராஜெக்ட் மட்டும் போட்டு, வீடுகள் அத்தனையையும் விற்றுவிட் டால், அக்கணமே கோடீஸ் வரன் ஆகிவிடலாம் என்று, பில்டர் ஆகும் ஆசையில் உள் ளோரை உசுப்பிவிடவும் இங்கே நிறையபேர் இருக் கிறார்கள். இப்படி, அடுத்தவர் கள் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக பில்டர் ஆனால், இந்தத் துறையில் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் முடியாது; எதிர்பார்த்த அளவுக்கு லாபம் பெற முடியாது.

'டெடிகேஷன்' என்கிற அர்ப்பணிப்பு உணர்வு ஒவ் வொரு பில்டருக்கும் முக்கியம் என்று சொன்னேன் இல் லையா? அதற்கு என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இந்தத் தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன். அந்த சிந்தனைதான் நாள டைவில் இன்னும் இன்னும் மெருகேறி, பெஸ்ட் பில்டராக என்னை உயரிய இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தி இருக் கிறது. என்னுடைய இந்த வெற்றியின் பின்னணியில் பலமான தூண்களாக இருப்ப வர்கள், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள்தான்.

வாடிக்கையாளர்கள் சேவையில் நாங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரு கிறோம் என்பதற்கு உதார ணமாக ஒரு சம்பவத்தை உங்க ளுடன் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சேவைதான் முக்கியம்

அது நள்ளிரவு நேரம். நான் நன்றாக தூங்கிக் கொண்டி ருந்தேன். என் தூக்கத்தை கலைக்கும்விதமாக அலறியது தொலைபேசி. லைட்டை போட்டு பார்த்தால், மணி 12-ஐ தாண்டி இருந்தது. இந்த நேரத்தில் யார் பேசுவார்கள் என்ற சிந்தனையோடு பேசி னேன். எதிர்முனையில் பேசி யவர் கொஞ்சம் பதற்றமாகவே பேசினார். 'எங்கள் ஏரியாவில் கரன்ட் போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. இன்னமும் கரன்ட் வந்தபாடில்லை. உடனே கரன்ட் வர ஏற்பாடு செய்யுங்கள்' என்றார்.

நான் ஒரு மின்வாரிய ஊழியர் என்று நினைத்துக் கொண்டு அவர் பேசியது, அவரது பேச்சில் இருந்து தெரிந்தது. எனக்கும், என்னு டைய வீட்டு தொலைபேசி எண் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரிந்து போனது. அதாவது, போனில் பேசியவர் என்னுடைய வாடிக்கையாளர்தான். நாங் கள் மின்வாரியத்துக்கு மின் சார அளவீடு அட்டை வழங்கும்போது, எங்களது பிசினஸ் புரமோஷனுக்காக, எங்கள் நிறுவனத்தின் லோகோ, முகவரி, தொலை பேசி எண் ஆகிய விவரங்களை அதில் அச்சடித்துத் தருவது வழக்கம். கரன்ட் வெகுநேர மாக இல்லை என்பதால், மேற்படி வாடிக்கையாளர், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க நினைத்து, தவறு தலாக மின்சார அளவீடு அட்டையில் நாங்கள் அச்சடித்து கொடுத்திருந்த எங்கள் நிறுவன தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து விட்டார்.

எங்களுக்கு வாடிக்கையா ளர் சேவை மிகமிக முக்கியம் என்பதால், 'இன்னும் கொஞ்சநேரத்தில் அங்குவந்து உங் களை பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தேன். அந்த நிமிடமே, போன் செய்த வாடிக்கையாளரின் ஏரியாவு க்குச் சென்றேன். வாடிக்கை யாளர் சொன்னது போலவே அந்த ஏரியா முழுவதும் கரன்ட் இல்லை.

எனக்கு போன் செய்த வாடிக்கையாளரின் வீட்டை தேடிப் பிடித்துச் சென்ற நான், அந்த ஏரியா முழுவதுமே கரன்ட் இல்லாத விஷயத்தை கூறினேன். திடீரென்று என்னை எதிர்பார்க்காத அந்த வாடிக்கையாளர், 'ஸார்... நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? இந்த ஏரியாவில் கரன்ட் இல்லாத விஷயத்தை நீங்கள் ஏன் என்னிடம்வந்து சொல்கிறீர்கள்?' என்று குழப்பத்தோடு கேட்டார்.

'நீங்கள்தானே சற்று நேரத் துக்கு முன்பு எனக்கு போன் செய்தீர்கள். அதனால்தான், இங்கே வந்தேன்' என்று நான் சொல்லவும், தான் தவறு தலாக போன் செய்து விட்டதை உணர்ந்துகொண்ட தோடு, ஸாரியும் கேட்டார் வாடிக்கையாளர். உடனே நான், 'இந்த விஷயத்தில் ஸாரி கேட்க ஒன்றுமே இல்லை. எங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிப்படுத்து வதற்கான ஒரு வாய்ப்பைதான் நீங்கள் எங்களுக்குத் தந்து இருக்கிறீர்கள். அதற்கு, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறிவிட்டு வந்தேன்.

பில்டர் ஆக ஆசைப் படுபவர்கள், வாடிக்கை யாளர் விஷயத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு நாம் பார்த்து பார்த்து சேவை செய்தால், அவர்கள் நமது நிரந்தர வாடிக்கையாளர் ஆகி விடுவார்கள். அவர்கள் மூலம் இன்னும் பல நல்ல வாடிக்கையாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள். அதை விட்டு விட்டு, வாடிக்கையாளர்கள் மனம் கோணும்படி நடந்து கொண்டால், இழப்பு பில்ட ருக்குத்தான்!

அனுபவம் கற்றுத்தரும்

பில்டருக்கு அனுபவ அறிவு அவசியம் என்று சொன்னேன் அல்லவா? அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

ஆரம்பத்தில் சின்னச் சின் னதாக கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கத் துவங்கி, இன்று பெரிய பில்டராக இருப்பவர் களும் உண்டு. இவர்கள், தங் கள் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய.

இன்று, கட்டிடக்கலை மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்துவிட்டது. அந்தக் கலையை ஏ டூ இசட் அறிந்து கொள்ள பல பாடப் பிரிவு களும் வந்துவிட்டன. இவ ற்றை முறையாகக் கற்றுக் கொண்டால், பின்னாளில் நிச்சயம் பெஸ்ட் பில்டர் ஆகலாம்.

கல்வி தவிர, ஒரு பில்டர், தனது அனுபவத்தில் இருந்து பெறும் அறிவுக்கும் மகத்தான சக்தி உண்டு. அது எப்படி?

(தொடரும்...)

இவர்தான் ரூபி மனோகரன்...

தென்னிந்திய கட்டிடத்துறையில் ஜாம்பவானாக உயர்ந்து நிற்பவர் ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் எனும் கிராமத்தில், திரு.ராமசாமி-திருமதி. செல்வி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், பள்ளிப்படிப்பு முடித்த உடனேயே இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 15 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சேவை செய்தார். 1994&ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதன்பிறகே கட்டுமானத் துறையில் கவனம் செலுத்தினார். 1997-ல் 'ரூபி பில்டர்ஸ் புரமோட்டர்ஸ்' எனும் நிறுவனத்தை துவக்கிய இவருக்கு அதன்பிறகு ஏற்றம்தான். இன்று, ரூபி மனோகரான எல்லோராலும் அறியப்படுகிறார். இவர், 'சேவா ரத்னா' உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரும்கூட!

எல்லோரையும் கவர்ந்துவிட்டது 'சென்னை மெயில்' : டைரக்டர் கங்கை அமரன்

இளந்துறவி
============
'சென்னை மெயில்' கண் கவர் வண்ணத்திலும் நிகரற்ற தரத்திலும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது என்கிறார் டைரக்டரும் இசையமைப் பாளருமான கங்கை அமரன்.

இதுகுறித்து அவர் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

டைரக்டர், இசையமைப் பாளர், பாடலாசிரியர், பாடகர், கதை வசனகர்த்தா - இதில் உங்களுக்கு மனநிறை வைத் தந்தது எது?

'கங்கை அமரன்' என்பதில் முழுமையான மனநிறைவை உணர்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த படம்?

'சம்சாரம்'

பிடித்தப் பாடல்?

'சம்சாரம்' படத்தில் வரும், 'அம்மா பசிக்குதே... அப்பா பசிக்குதே...' என்கிற பாடல் தான்.

கங்கை அமரனை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் நானாகவே இருக்க வேண்டும். எல்லோரிடமும் இயல்பாக பழகும் தன்மையை இறைவன் எனக்கு தொடர்ந்து அருள வேண்டும்.

உங்களது ஆன்மிக ஆர்வம் நிறைவாக நிறைவேறியதாக உணர்கிறீர்களா?

முழுமையாக நிறைவேறி விட்டதாக கூற முடியாது. நிறைவேற வேண்டியது இன் னும் நிறைய இருக்கிறது.

நீங்கள் இயக்கிய 'கர காட்டக்காரன்' இன்றுவரை யிலும் மக்களால் ரசிக்கப் படுகிறதே... என்ன காரணம்?

மக்கள்தான் காரணம். அவர்களது ரசனையைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அந்த படத்தை நானே இப்போதும் அடிக்கடி பார்ப்பதுண்டு. அப்போது, இந்தப் படம் நம்மால் எடுக்கப்பட்டதுதானா என்று கூட வியந்துபோய் இருக்கி றேன். நான் எடுத்த படங்களில் நன்றாக வந்த படம் இது.

இன்றைய இளைஞர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

வாழ்க்கையை நேசியுங்கள். உங்களுக்காக நீங்களாகவே வாழுங்கள். உங்களால் முடி யும். உங்களைப் பார்த்து மற்ற வர்கள் வாழும்படியாக வாழுங்கள்.

'சென்னை மெயில்' பத்திரிகை பற்றி?

கண்ணைக்கவரும் வண் ணத்திலும், எல்லோரும் வியக் கும்  தரத்திலும் 'சென்னை மெயில்' வெளிவருவதைப் பார்த்து மகிழ்கிறேன். 'ஜெட் ஏர்வே'யில் சென்னை மெயில் விநியோகிக்கப்படுவது அறிந்து இன்னும் மகிழ்கிறேன். அனைவரையும் கவர்ந்த மெயில், இந்த சென்னை மெயில். வாழ்த்துக்கள்!

வேளச்சேரி-வண்டலூர் இடையே விரைவில் மோனோ ரயில்


சிறப்பு நிருபர்
==============
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மோனோ ரயில்களை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதையொட்டி, மோனோ ரயில் வழித்தட பாதைகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேளச்சேரி&வண்டலூர் இடையே அமைய உள்ள மோனோ ரயில் திட்ட வேலைகள் தொடங்கியுள் ளன.  மோனோ ரயில் வரவால் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மெட்ரோ ரயில்

சென்னை நகரில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்ப தற்காக ரூ.14,600 கோடி மதிப் பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. மெட்ரோ ரயில் பாதைக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 6&ம் தேதி, கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்&அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மெட்ரோ ரயிலை தொடர்ந்து, சென்னை நகரில் மோனோ ரயில்களை இயக் கவும் தமிழக அரசு நடவடி க்கை எடுத்து வருகிறது. ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். 2011-ம் ஆண்டே இதற்க £ன அறிவிப்பு வெளியிடப் பட்டாலும், இப்போதுதான் திட்டத்தை செயல்படுத்து வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலுக்கு முன்பா கவே மோனோ ரயில் கட்டு மானப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோனோ ரயில் திட்டத்தை இரண்டு கட்டங்களாக 111 கி.மீ. தூர அளவில் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, வண்டலூர்  -வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி -வட பழனி இடையே மூன்று வழித் தடங்களில் 57 கி.மீ. தொலைவு க்கு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மோனோ ரயில் கட்டுமானப் பணிகளை மேற் கொள்வதற்கான டெண்டர் நடைமுறைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட தால், ரயில் வழித்தட பாதை களை கையகப்படுத்தும் வேலைகள் தற்போது வேக மாக நடைபெற்று வருகின்றன.

வேளச்சேரி-வண்டலூர் மோனோ ரயில் வழித்தடம் 23 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வழித்தடத்தில் பெருங் களத்தூர், இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

வேளச்சேரி முதல் தாம்பரம் வரை, தற்போதுள்ள மெயின் சாலையை ஒட்டியே மோனோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதை யொட்டி, இந்த வழித்தடத்தில் உள்ள சாலைகளை அகலப் படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வரு கிறது. வேளச்சேரி முதல் ராஜகீழ்பாக்கம் சிக்னல் வரையிலான மெயின் சாலை 150 அடி கொண்டது. ஆனால், பல இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால், ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்கான முன்னறிப்பு நோட்டீஸ்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு, ஆக்கிரமிப்பு களும் அகற்றப்பட்டு வருகின்றன.

ராஜகீழ்பாக்கம் சிக்னல் தொடங்கி தாம்பரம் வரை யிலான மெயின் சாலை தற் போது 100 அடி கொண்டதாக இருக்கிறது. மோனோ ரயில் திட்டப் பாதைக்கு இது போதாது என்பதால், இந்த சாலையும் விரைவில் 150 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அதிகா ரிகள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.

அதேநேரம், ராஜகீழ்பாக்கம் சிக்னல் தொடங்கி தாம்பரம் வரையிலான சாலையோரத் தில் நிறைய பட்டா நிலங்கள் உள்ளன. மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்த நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், அந்த நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பு வேலைகள் வேகமாக நடத்தப் பட்டுள்ளன. எந்தெந்த நிலங்களை கையகப்படுத்து வது என்பது தொடர்பான விவரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

மோனோ ரயில் திட்டத்துக்காக பட்டா நிலங்களை இழக்கும் தனிநபர்களுக்கு, அந்த நிலத்துக்குதொகை யும் மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படும் என்றும் அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விரைவில், சம்பந்தப்பட்டவர் களுக்கு அதுதொடர்பான விவரங்கள் அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

செம்பாக்கம் நகர்மன்ற உறுப்பினர் கோ.சத்திய நாராயணன் கூறுகையில், Òமுறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன்பிறகே செம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன. ஆக்கிரமிக் கப்பட்ட இடங்கள் புறம் போக்கு நிலம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. அதேநேரம், யார் யார் நிலமெல்லாம் அரசால் கையகப்படுத்தப்படுமோ என்கிற அச்சம் இருப்பதால், யாரும் பாதிக்கப்படாத வகை யில் ஆக்கிரமிப்புகள் அகற்ற மும், நிலம் கையகப்படுத்து வதும் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்Ó என்று தெரிவித்தார்.

அடுத்த 2 ஆண்டுகளில் மோனோ ரயில் திட்டப் பணி களை முடிக்க அரசு திட்ட மிட்டுள்ளதால், மெட்ரோ ரயிலைத் தொடர்ந்து மோனோ ரயில்களும் சென் னை நகரில் இயக்கப்படும். இதன் மூலம் நகரின் போக்கு வரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும்.

சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்

அதேபோல், மோனோ ரயில் திட்டப் பணிகளால், அந்தத் திட்டம் செயல்படுத்தப் படும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மோனோ ரயில் இயக்கப்படும்போது அந்த இடங்களில் தற் போதைய ரியல் எஸ்டேட்டின் மதிப்பு இரட்டிப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.


'செம்பாக்கம் அமோக வளர்ச்சி பெறும்'

மோனோ ரயில் திட்டப் பணிகளுக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து செம்பாக்கம் நகர்மன்ற தலைவர் சாந்தகுமார் கூறியதாவது:

மோனோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள தாலும், 150 அடியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள தாலும் தற்போது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோனோ ரயில் சேவை சென்னை நகருக்கு அவசியம் என்பதை உணர்ந்துதான் நமது முதல்&அமைச்சர் அம்மா அவர்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

வேளச்சேரி-வண்டலூர் இடையேயான மோனோ ரயில் திட்டத்தால், சென்னை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள செம்பாக்கம் நகராட்சியும் அமோக வளர்ச்சி பெறும். போக்கு வரத்து நெருக்கடியும் தீரும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 9 November 2013

Hearty Congratulations


"VALUABLES ARE PRICED, VALUES ARE PRICELESS "

At the outset I extend my hearty congratulations to the unique couple Dr.A.Asokan and Dr.Chithralekha Asokan for organising  a unique programme on 27th Oct.13.

THEY HAVE  MADE A DIFFERENCE IN THE LIVES OF MANY UNDERPRIVILEGED CHILDREN OF OUR SOCIETY.

Value  education is the greatest weapon which can change the world. In this electronic era, it can be inculcated only through sincere services to mankind. It is a matter  of great pride that 150 scouts, Guides and NCC of Kendriya Vidyalaya No.2, AFS, Tambaram had extended their services during this wonderful event.

My appreciations to the students and the team of Teachers who had involved in making this grand event glorious.The certificates, the monentoes and the Encyclopedias given to the participants will be a great source of inspiration for the others.

MY SALUTATIONS TO THE  RARE COUPLE FOR THEIR NOBLE DEED.

N.Prasannakumari,
Principal, KV-2,
Tambaram.

A Worthy Human Being


“ANY ACT THAT IS DONE WITH PURITY OF THOUGHT , WORD AND DEED IS DHARMA..”

The world today is under the sway of materialistic onslaught and degradation of moral values. Man is running on his toes not knowing his destination.It is rightly said , an empty pocket and a hungry stomach can teach one thousand lessons. Life is very strange and mysterious too. What is it to be an orphan..? What  does life mean to them ? A lot of things go unquestioned. Several questions go unanswered. 


Many words go unsaid. A number of words go unheard. Some dreams are buried alive..!WE CALL IT LIFE. Can there be a better definition for life for the so called orphans ? They too have the right to live on this Earth . Who will understand them and who will support them ? 


There are good people who have empathy as their greatest quality and by extending help, they see  SMILE  on the faces of these children.  In this mechanical world there are only a very few people who  get satisfaction by  seeing the happiness of the underprivileged.


One such rare personality is DR.A.Asokan, an Industrialist and a Philanthropist who has been silently supporting children of nearly 35 Orphanages in India and Abroad for the past seven years. A  wonderful human being who has reached great heights in life through shear hard work, honesty and determination. He is a man of simplicity and exuberance. He strongly believes in the saying “ SERVICE TO MANKIND IS SERVICE TO GOD.” A dynamic industrialist , an incarnation of virtues and an embodiment of empathy. Behind every successful man , there is a woman. So is Dr.Chithralekha Asokan , an integral part of Dr.Asokan. Simplicity is her armor and goodness is her eternal partner.


 I was fortunate enough to be associated with  their social service activities  since 2008. An amazing personality ,vibrating immense positive energy.I take this opportunity to extend my  heart felt congratulations to this couple. i wish to thank them for giving me an opportunity to be  the Event Manger and Compere of their Unique program on 27th Oct 2013. The event will be a life time memory for me.


‘‘If we can wipe off
a single drop of tear,
from  a single eye ..
 of a single person,
on a single day...
the World will  be Fine’’


- MOTHER TERESA


- R.Rajammal
Guide Captain - ALT(G), President Awardee

'அடுத்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி காணுங்கள்' : டாக்டர் அசோகன் மனம்திறந்த பேட்டி


எஸ்.எம்.ஆனந்த்

'நீங்கள் இதுவரை எவ் வளவு சேவை செய்திருக்கிறீர்கள்' என்று கேட்டால், 'அது என் வேலை இல்லை' என்று சொல்வோர்தான் இன்று அதிகம். இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில், ஆதரவற்றக் குழந்தைகளுக்கு சேவை செய்வதை ஒரு வேலையாக மட்டுமின்றி, தன்னுடைய கடமையாகவே கருதி செய்துவருகிறார் டாக்டர் ஏ.அசோகன்.

தொழிலதிபரும் சமூக ஆர்வலரும் மிகச்சிறந்த கொடையாளியுமான இவர், தன்னுடைய சொந்த சம்பாத்தியத் தில் இந்த உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடல் கடந்து பல வெளிநாடு களிலும் தொடர்கிறது இவரது சேவைப் பயணம்.

கிண்டியில் உள்ள தனது அலுவலகத்தில் டாக்டர் ஏ.அசோகன் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

உங்களைப் பற்றி..?

கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள தக்கலைதான் என் சொந்த ஊர். மனைவி டாக் டர் எஸ்.கே.சித்ரலேகா தேவி.

சேவை எண்ணம் வந்தது எப்படி?

7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா சென்றிருந்தேன். அங்குள்ள தாஜ் வெஸ்ட் பெங்கால் ஓட்டலில் தங்கி யிருந்தேன். காலையில் 'வாக்கிங்' சென்றபோது, அங்குள்ள குடிசைப் பகுதி வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது, அங்கிருந்த சிறுவர் கள் சிலர் ஒருவரையொருவர் அடித்து, சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். ஏன் என்று விசாரித்தபோது, 2, 3 நாட்களாக அவர்கள் சரிவர  சாப்பிடாமல் இருந்ததும், தற்போது யாரோ தந்த ரொட்டித் துண்டுக்காக சண்டைப் போட்டுக்கொண்ட தும் தெரிந்தது. உடனே நான் அவர்களுக்கு 10 பிரெட் பாக்கெட்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு தான் ஆதரவற்றக் குழந்தை களுக்கு உதவிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அன்று தொடங்கி இன்று வரையிலும், மாதம்தோறும் தகுதியான ஆதரவற்றோர் இல்லங்களை கண்டறிந்து, அங்குள்ள குழந்தைகளின் உணவு, ஆடை, கல்வி ஆகிய வற்றக்கு உதவி வருகிறேன்.

நீங்கள் செய்த முதல், உதவி?

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள 'உதவும் உள்ளங்கள்' இல்லத்துக்குத்தான் முதன் முதலாக உதவி செய்தேன். இன்று வரையிலும் அந்த உதவி தொடர்கிறது.

உங்கள் சேவைக்கு துணை நிற்பது?

என் மனைவி டாக்டர் எஸ்.கே.சித்ரலேகாதேவி தான். 'தாராளமா உதவி பண்ணுங்க; அதேநேரம், தகுதியான இல்லங்களைக் கண்டறிந்து உதவி பண்ணுங்க' ன்னு அவங்க சொன்னாங்க. எனக்கு எப்படி அடுத்தவர் களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண் டும் என்கிற மனப்பான்மை இருக்கிறதோ, அதே மனப் பான்மை அவரிடமும் இருக் கிறது. அதனால்தான், என் னால் தொடர்ந்து உதவி களைச் செய்துவர முடிகிறது.

கடல் கடந்தும் உதவுகிறீர்களாமே?

ஆமாம். நான், தொழில் விஷயமாக மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய ஆள். அதனால் என்னுடைய சேவையும் தமிழகத்தைத் தாண்டி வெளிநாடுகளிலும் தொடர்கிறது. இலங்கை, மலே சியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஜாம்பியா உள்பட 26 நாடுகளில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி இருக் கிறேன். இன்னமும் உதவிக் கொண்டு இருக்கிறேன். அண்மையில் ஜாம்பியாவில் நடந்த உதவிகள் வழங்கும் விழாவில் அந்த நாட்டின் அதிபர் மைக்கேல் பங்கேற் றார். 'அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண் ணம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்' என்று அறிவுரை சொன்னதோடு, 'பிறருக்கு நாம் மனப்பூர்வமாக செய்யும் உதவி அந்தக் கடவுளே செய் வது மாதிரி' என்று சொன்னார். அவர் சொன்னது நிஜம்தான். நம்மால் முடிந்த உதவிகளை ஆதரவற்ற பிறரு க்கு நிச்சயம் செய்ய வேண்டும்.

நீங்கள் செய்த மறக்க முடியாத உதவி?

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் உள்ள முஸ்லிம் இல்லம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு தங்கியிருந்த அத்தனை குழந் தைகளுமே முஸ்லிம்கள்தான். அவர்களில் ஒரு சிறுவன், நான் கையில் வைத்திருந்த மொபைல் ஸ்கிரீனில் இருந்த விநாயகர் படத்தை அடிக்கடி கவனிப்பதாக இருந்தான். 'உனக்கு இவர் யார் என்று தெரியுமா' என்று நான் அவனிடம் கேட்க, 'இவர் லார்டு கணேசா' என்றான். அங்கிருந்த பிற குழந்தை களிடம் விநாயகர் படத்தை காண்பித்து கேட்க, அவர் களும் விநாயகர் என்று சொன் னார்கள். அவர்களது பதில் எனக்கு ஆச்சரியமாக இருந் தது. தொடர்ந்து, அங்குள்ள குழந்தைகளுக்கு என்னுடைய வழக்கமான உதவிகளை செய்துவிட்டு திரும்பினேன்.

மேற்படி சம்பவம் கற்றுத் தரும் பாடம் என்ன?

எல்லா மதத்தினரும் ஒன்று தான். ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்றால், இந்து ரத்தமா, முஸ்லிம் ரத்தமா, கிறிஸ்தவன் ரத்தமா என்று யாரும் பார்ப்ப தில்லை. ரத்தத்தின் 'குரூப்' பைதான் பார்ப்பார்கள். அதேபோல, உதவிகளையும் சாதி, மதம் பார்க்காமல் செய்ய வேண்டும்.

உங்கள் உதவியைப் பெற தகுதியானவர்கள் யார்?

அம்மா- அப்பா இல்லாத குழந்தைகள், வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் யாராக இருந் தாலும் அவர்களுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக் கிறேன். ஆதரவற்றோர் இல்ல ங்களுக்கும் உதவுகிறேன். இன்று ஆதரவற்றோர் இல்லங் கள் நிறைய இருக்கின்றன. இவர்கள் என்னுடைய உதவியை நாடினால், முதலில் அவர்கள் நடத்தும் இல்லம் பற்றி அக்கம், பக்கத்தில் விசாரிப்பேன். உண்மையி லேயே அந்த இல்லம் சேவை மனப்பான்மையுடன்தான் நடத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்தபிறகே, அந்த இல்லத்துக்கு பொருள் உதவி செய்வேன். தகுதியான இல்ல ங்களுக்கு உதவி செய்வதை என் கடமையாகவே நினைக்கிறேன்.

இந்த சேவையில் என்ன திருப்தி காண்கிறீர்கள்?

ஆதரவற்றக் குழந்தைகளுக்கு செய்யும் உதவி, அந்தக் கடவுளுக்கே செய்யும் உதவி போன்றது என்பதுதான் என் கருத்து. அந்த வகையில் மன திருப்தி அடைகிறேன். பொது வாக, ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கண்டிப்பாக தேவை. இந்த வாழ்வாதாரங்கள் இல் லாமல் எந்தவொரு மனிதனும் வாழ முடியாது. தவிர, நாம் இந்த உலகத்துக்கு வந்தபோது எதையும் கொண்டுவர வில்லை. போகும்போதும், எதையும் கொண்டுசெல்ல முடியாது. உண்மை அப்படி இருக்கும்போது, நம்மால் முடிந்த உதவிகளை அடுத்த வர்களுக்கு செய்வதே நல்லது.

ஆனால், இன்று அடுத்தவர்களை ஏமாற்றுவோர் அதிகரித்து வருகிறார்களே...

சுயநலம்தான் இதற்குக் காரணம். அதேநேரம், கெட்ட வழிகளில் பணத்தை விரையம் செய்கிறார்கள். ஒருமுறை எனது நண்பரான, சென்னையில் வசிக்கும் பல் மருத்துவரின் கிளினிக்குக்குச் சென்றிருந்தேன். பக்கத்தில் மதுக்கடை ஒன்று இருந்தது. நான் நண்பரின் கிளினிக் சென்றிருந்த சமயம், காந்திஜெயந்திக்கு முந்தையநாள். காந்திஜெயந்தி க்கு அரசு விடுமுறையோடு, மதுக்கடைகளும் திறந்திருக் காது என்பதால்தான், அங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து வேதனைப் பட்டேன். ஒருபுறம் மதுக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருக்க... இன்னொருபுறம், புகைப் பிடிக்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகி றது. குடி குடியைக் கெடுக்கும், புகை உடலுக்குப் பகை என்று அரசாங்கம் விளம்பரம் மட்டும் செய்தால் போதாது; மதுவையும், சிகரெட் உள் ளிட்ட புகையிலை வகை களையும் அடியோடு தடை செய்ய வேண்டும். அப்படி தடை செய்யாதபட்சத்தில், இவற்றை ஒழிக்கவே முடியாது. இந்த கெட்டப் பழக்கங்களில் மக்கள் மூழ்கிக் கிடக்கும் வரையில், ஏமாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை யும் தடுத்து நிறுத்த முடியாது. எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

சரி, உதவும் மனப்பான்மை வளர ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

நமக்கு இறைவன் தந்திருப் பது ஒரு பிறப்புதான் என்கிற எண்ணம் ஒருவரிடம் இருந் தாலே போதும். உதவும் மனப் பான்மை தானாகவே வந்து விடும். நாமெல்லாம் ஒருவரது கணக்குவழக்கை கண் காணிக்க ஃபைல் போட்டு வைத்திருப்பது போன்று, நம் ஒவ்வொருவருக்கும் அந்த இறைவனும் ஒரு ஃபைல் போட்டுவைத்திருக்கிறான். நாம் செய்யக்கூடிய பாவம், புண்ணியம் எல்லாம் அந்த ஃபைலில் வரவு வைக்கப்படும். இன்று, 12 வயது பையனுக்குக் கூட சர்க்கரை நோய் உள்ளது. இதற்கும், இறைவன் நமக்காக போட்டிருக்கும் ஃபைலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால், நமக்கு இந்த ஒரு பிறப்பு மட்டும்தான்; இனி எந்தப் பிறவியும் கிடையாது என்கிற எண்ணத்தை உணர் ந்து, நம்மால் முடிந்த உதவி களைச் செய்ய முன்வர வேண்டும்.

இன்று பிறருக்கு உதவு பவர்கள் மிகவும் குறைவு. இந்த சிறிய உதவியாலேயே, நாட்டில் வறுமை ஒழிந்து விடுமா?


ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். அதுபோல், எல்லோரும் பிறருக்கு முடிந்த வரையிலான உதவிகளைச் செய்ய வேண் டும். இப்படி எல்லோரும் உதவ ஆரம்பித்துவிட்டால் வறுமையும் ஓடிவிடும்.

மக்களுக்கு ஏதேனும் செய்தி?

தயவுசெய்து அடுத்தவர் களுக்கு உதவுங்கள். நீங்கள் உதவினால், உங்களுக்கு இறைவனும் இறங்கிவந்து உதவுவான். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்வித்து, அதனால் இன்பம் காணுங்கள். அந்த இன்பம்தான்- மகிழ்ச்சிதான் உண்மையானது, பரிசுத்தமானது. அது தான், என்றும் நிரந்தரமானது.

ஆதரவற்றோருக்கான புதுமை கலைவிழா: காமராஜர் அரங்கில் கோலாகல கொண்டாட்டம்!


 தொழிலதிபரும் சமூக ஆர் வலருமான டாக்டர் ஏ.அசோகன்& டாக்டர் சித்ர லேகா அசோகன் ஆகியோர் இணைந்து நடத்திய ஆதர வற்றக் குழந்தைகளுக்கான புதுமை கலை விழா சென்னை காமராஜர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆதர வற்றக் குழந்தைகள் இந்த விழாவில் தங்களது திற மையை வெளிப்படுத்தினர்.

கலைநிகழ்ச்சி

ஆதரவற்றக் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங் கில் 'யுனிக் கல்ச்சுரல் பொனான்ஸா' என்ற பெயரில் பிரம்மாண்ட புதுமை கலைவிழா நடை பெற்றது. தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ஏ.அசோகன்& டாக்டர் சித்ர லேகா அசோகன் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த விழாவில் சென்னை, திருவள் ளூர், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லங் கள் மற்றும் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

'அம்மாவும் நீயே... அப்பா வும் நீயே...' எனும், கல் மனதையும் கரைக்கும் பாட லில் தொடங்கி, 'சொயிங்... சொயிங்...' எனும், உற்சாகம் துள்ளவைக்கும் சினிமா பாடல் வரையில், கலக்கலாக ஆடியும் பாடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர் மாணவ-மாணவிகள். மனவளர்ச்சி குன்றிய மற்றும் பெற்றோர் செய்த தவறால் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி கைவிடப்பட்ட மாணவ- மாணவிகளின் நடனம் பார் வையாளர்களின் மனதை உருகவைத்தது.

இதுதான் மகிழ்ச்சி

விழாவில் டாக்டர் ஏ.அசோகன் பேசியதாவது:

ஆதரவற்றக் குழந்தைகளை எல்லாம் ஒரே இடத்துக்கு அழைத்துவந்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்கிற என்னுடைய எண் ணத்தின் வெளிப்பாடே இந்த நிகழ்ச்சி. பெற்றோர், உறவினர் இல்லாமல் வளரும் இந்தப் பிள்ளைகளின் வாழ்வில் இப் போது வேண்டுமானால் போதிய சந்தோஷம் இல்லா மல் இருக்கலாம். ஆனால், எப்போதும் அவர்களின் வாழ்வு இப்படியே இருந்து விடாது. நாளை, இவர்களும் பணக்காரர் ஆவார்கள். சந் தோஷம் இவர்களையும் தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, டாக்டர் சித்ர லேகா அசோகன் வரவேற்று பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:

வறுமை இல்லாத இந்தியா

ஒவ்வொருவரது வாழ்க்கை யிலும் ஒரு குறிக்கோள் இருக் கும். எங்களது வாழ்க்கையில் குறிக்கோள் என்பது, வறுமை இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் எங்களது சிறிய பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், வறுமைதான் அனைத்து குற்றங்களுக்கும் மூலக் காரணம். அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்தது, ஆதரவற்றோர் இல்லங்களை! காரணம், வருங்கால சமு தாயம் இன்றைய சிறுவர்கள் கையில்தான் இருக்கிறது.

வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமான ஒன்றா என்கிற கேள்வி இங்கே எழலாம். முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை. முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை. முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை. இந்த தன்ன ம்பிக்கையே எங்கள் மூலதனம். கடந்த பல வருடங்களாக தகுதியான ஆதரவற்றோர் இல்லங்களை தேர்ந்தெடுத்து எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். கடந்த 7 வருடங்களாக, ஆண்டுக்கு ஒருமுறை வறுமை ஒழிப்புக் காக ஆதரவற்றோர் இல்லங்களின் சிறுவர்களை ஒரே இடத்தில் திரட்டி, அவர்களது கலை உணர்வுகளை வெளிக் கொண்டுவந்து, அவர்களுக்கு தேவையான அறிவுரையும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துகிறோம். இதை, அமைதியான முறையில் நடத்திவந்தோம். இந்தமுறை பெரிய அளவில் செய்வதன் நோக்கமே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சமூக சேவகர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். வெளி நாட்டினர் சிலரும் இந்த விழாவில் பங்கேற்று மகிழ்ந்தது கூடுதல் சிறப்பு.

விழாவை கிழக்கு தாம்பரம் கேந்திர வித்யாலயா பள்ளி -2 ஆசிரியையும், ஜனாதிபதி விருது பெற்றவரும், சமூக சேவகருமான ஆர்.ராஜம் மாள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். கேந்திர வித்யா லயா ஆசிரியைகள் காயத்ரி, பத்மா பாலகுமார் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் சேவை

மேலும், தாம்பரம் கேந்திரிய வித்யாலயா-2 பள்ளியின் சாரண&சாரணியர், என்.சி.சி.,  மாணவ - மாணவிகள் 150 பேர் மற்றும் அடையாறு சி.எல்.ஆர்.ஐ. கே.வி. சாரண- சாரணியர் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சேவை செய்தனர்.  மற்றும், நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மெஜிஷியன் பிரவீன், கண்கவர் மேஜிக் ஷோ செய்து காண்பித்து, குழந்தைகளை குதூகலப்படுத்தினார்.

விழாவின் நிறைவில், வந்திருந்த அனைவருக்கும் மாலைநேர சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பசுமை புரட்சியை வலியுறுத்தும் வகையில், அனைவருக்கும் மரக்கன்றுகளும் தரப்பட்டன.

பரிசு

அதோடு, கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ &மாணவிகளுக்கும் சான்றிதழ் களும், என்சைக்ளோபீடியா புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.

Saturday, 2 November 2013

எம்.பி. தேர்தலுக்காக பா.ம.க. புது வியூகம்: ராமதாஸ் கணக்கு சரியாகுமா?

  
சுப்பு

நாம் வாழ்கின்ற இந்த பூமி உருண்டையாக இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வ மாக நிரூபித்தது யார் என்று கேட்டால், சிலர் கொலம்பஸ் என்று சொல்வார்கள்.  இன்னும் சிலரோ, 'இல்லை... அது மெகல்லன் என்ற மாலுமி' என்று சொல்வர்.

இந்த சர்ச்சை எப்படி இருந் தாலும் அரசியல்ரீதியாக இந்தக் கேள்வியைக் கேட் டால் அதற்கு விடை ஒன்று தான். தமிழக அரசியலில் உலகம் உருண்டை என்பதை நடைமுறைப்படுத்தியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராம தாஸ்தான்.  33 வருடங்களுக்கு முன் தொடங்கியதன் அரசியல் பயணத்தில் அவர் அணி பல கண்டு, ஆர்ப்பாட் டம் பல கண்டு, மீண்டும் புறப் பட்ட இடத்திற்கே வந்திருக் கிறார்.

இந்தியாவின் விடுதலைப் போரில் அளப்பரிய தியாகங் கள் புரிந்தவர்கள் வன்னியர் கள். கொடுங்கோலன் நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் கடலூர்  அஞ்சலை அம்மாள் என்ற பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்களு க்கு அலர்ஜியாக இருந்தது.  இருந்தாலும், வன்னியர்களின் பங்களிப்பு, அரசியலில் மதிக்கப்படவில்லை என்ற குறை அவர்களுக்கு இருந்தது.  வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகம் பற்றி எல்லோருக்கும் தெரியும்.  கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?

வன்னியர்களின் உரிமையை நிலைநிறுத்த, 1980, ஜனவரியில் வன்னியர் சங் கத்தை உருவாக்கினார் மருத் துவர் ராமதாஸ். பல்வேறு பரிசோதனைகளுக்குப்பிறகு வன்னியர்களுக்காகக் குரல் கொடுக்கும் விதமாகவும், வன்னியர்களின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இப்போது அரசியல் வியூகம் அமைத்துள்ளார் அவர்.

பா.ம.க&வின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ள அமைப்புகளோடு சேர்ந்து சமூக ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரியில் ஜி.கே. மணி, அரக்கோணத்தில் வேலு, ஆரணியில் ஏ.கே.மூர்த்தி, சேலத்தில் அருள், புதுவையில் அனந்தராமன் என்று வேட் பாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.  அன்புமணி போட்டியிடப்போகும் தொகுதி சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.

‘திராவிடக் கட்சிகளும் வேண்டாம், தேசியக் கட்சி களும் வேண்டாம்' என்று மருத்துவர் சொன்னபோது, அதை மற்ற கட்சியினர் சீரிய ஸாக எடுத்துக்கொள்ள வில்லை.  எப்படியும் பா.ம.க. ஏதாவது ஒரு அணியில் சேர்ந்துவிடும் என்று நினைத் தனர். அதைப் பொய்யாக்கி விட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டது பா.ம.க.  

இன்றைய சூழலில், கருத்துக் கணிப்புகளும், அரசியல் நோக்கர்களும் பா.ம.க-வுக்கு அதிக மார்க் தருவதாக இல்லை. ஆனால், அரசியலும், தேர்தலும் நேர்கோட்டில் பயணிப்பது அல்ல.  மனிதப் போக்குகளை கணிதப் போக் குகளாக மாற்றமுடியாது.  பா.ம.க-வை மதிப்பிடுவதற்கு முன், அதன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ம.க&வின் பலமும், பல வீனமும் ஒரே விஷயம்.  அது சாதிச் சார்பு. ஆட்டத்தில் ருந்து அகற்ற முடியாதபடி பா.ம.க&வைக் காபந்து செய்வது சாதி உணர்வு.  ஆனால், இறுதிச்சுற்றுவரை போகவிடாமல் தடுப்பதும் சாதி உணர்வுதான்.

இந்தச் சாதி உணர்வு இதுவரை சாதித்தது என்ன?

வன்னியர் சங்கத்தின் சார் பில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது (1986), மத்தியில் இரண்டு சதவீத ஒதுக்கீடும், மாநிலத்தில் இருபது சதவீத ஒதுக்கீடும் வேண்டும் என்ற கோரிக்கை யோடு ஒருநாள் சாலை மறியல் நடத்தப்பட்டது.

கடுமையாக நோய்வாய்ப் பட்டு, எம்.ஜி.ஆர். சிகிச்சைக் காக அமெரிக்காவுக்கு அழை த்துச் செல்லப்பட்ட போது (1987), வன்னியர் சங்கத்தின் சார்பில் 7 நாள் தொடர் சாலைமறியல் நடைபெற்றது. வன்னியர் சங்கத்தின் புஜ பலம் அப்போது வேலை செய் தது.  மரங்கள் வெட்டி சாய்க் கப்பட்டு, சாலைப் போக்கு வரத்து தடைபட்டது.  அரசு இயந்திரம் செயலிழந்தது.  போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய எம்.ஜி.ஆர்., அனைத்து சாதிச் சங்கங் களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.  இது, வன்னியர் சங்கத்தின் வெற்றி தான். எம்.ஜி.ஆர். மறைவு க்குப் பிறகு அ.தி.மு.க. இரண் டாக ஆனது.  விளைவு, தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு. கருணாநிதி முதல்- அமைச்சர் ஆனார்.  1989 ஜனவரியில் மு. கருணா நிதியைச் சந்தித்தார் ராம தாஸ். 1989, மார்ச் மாதத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோரு க்கும், சீர்மரபினருக்கும் சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அப்போது வன் னியர் உள்ளிட்ட 39 சமுதா யத்தினர் இருந்தனர்.  அந்த சமூகங்களோடு போட்டி போட்டு முன்னேற முடியாது என்பதற்காகத்தான் வன் னியர்கள் தனி ஒதுக்கீடு கேட்டு போராடினார்கள்.

நிலைமை இப்படி இருக்க, சீர்மரபினர் என்ற 68 சாதிகளை மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது கருணாநிதியின் வஞ்சகச் செயல் என்று பா.ம.க. கருதியது. 1989, ஜுலை மாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி உருவானது.

பாட்டாளி மக்கள் கட்சி யின் அரசியல் பயணத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் தனி புத்தகமே எழுதலாம்.  ஆனால், இட ஒதுக்கீடு என்ற பதாகையைத் தூக்கிப்பிடித்த திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கைக்காகப் போராடி, அரசியலில் தனக்காக ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டது பா.ம.க.  இது பா.ம.க.வின் பிளஸ் பாயின்ட்.

சமீப காலமாக இதில் இன் னொரு பாயின்ட் சேர்ந்து ள்ளது.  குடும்ப கௌரவத் தையும் சமூக ஒற்றுமையையும் குலைக்கும் வகையில் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு எதிராக ஒரு கருத்து வலுப் பெற்று வருகிறது, தமிழ் நாட்டில்! காதலர்களைப் பற்றி நாள் முழுவதும் பேசும் மீடியா, தகப்பன்மார்களின் தற்கொலையைக் கண்டு கொள்வதில்லை.  இதுபற்றிய கசப்புணர்வு, சமூகத்தில் பரவி யுள்ளது. இந்த வகையினரின் ஆதரவு பா.ம.க.வுக்குக் கிடைக்கலாம்.

ஆனால், நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல்.  டில்லி யாருக்கு? மோடிக்கா, ராகுல்காந்திக்கா, முலாயம் சிங், இடதுசாரிகள் இருக்கிற மூன்றாவது அணிக்கா, மம்தா பானர்ஜி தலைமையில் உரு வாகும் நான்காவது அணிக்கா என்ற விவாதம் சூடு பிடிக் கும்போது பா.ம.க&வின்மீது கவனம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் பா.ம.க.-வுக்குத் தன்னைத் தக்கவைக்கும் முயற்சி என் றால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம்.

subbupara@yahoo.co.in



விளம்பரதாரர்கள், வாசகர்கள் அனைவருக்கும் சென்னை மெயிலின் துணை பத்திரிகையான 'பிஸ்னஸ் மெயிலின்' இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
- ஆசிரியர்

World Food Day Rally


Indian Development Foundation organised a  rally at Marina Beach on account of World Food Day.
The scouts and Guides of KV No.2, AFS, Tambaram under the leadership of Guide Captains Mrs. R. Rajammal, ALT(G) and Mrs. Padma Balakumar, HWB(G),Social Ambassadors of IDF  participated in the rally with great enthusiasm and spirit.


The rally was flagged off by Dr. Franklin Executive officer, IDF , Bangalore. A team of IDF members,school students and NGOs participated in the rally. The importance of celebrating World Food Day 2013 - The Theme for 2013 is “Sustainable Food Systems for Food Security and Nutrition”.


The Food Day is about recognising the worldwide problem of hunger.   and this year the theme for the day is “Sustainable Food Systems for Food Security and Nutrition”.  


The theme has been chosen to highlight and raise awareness of the problems worldwide and the solutions to food security and ridding the world of hunger.  The day is also about raising awareness and calling for changes to our agriculture and food supply systems.


As per UN estimates there is sufficient capacity in the world to produce enough food to feed everyone adequately; nevertheless, in spite of progress made over the last two decades, 870 million people still suffer from chronic hunger.

ரயில்வே பென்சனர்கள் சங்க ஆண்டு விழா


கில இந்திய ரயில்வே பென்ஷனர்கள் சங்க 37-ம் ஆண்டு விழா மேற்கு தாம்பரம் பேபி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. சங்கத் தலைவர் நா.கலிவரதன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.புஸ்ப நாதன் வரவேற்று பேசினார்.

அமைச்சர் டி.கே.எம்.சின் னையா, தென் சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப் பினர் ச.ராஜேந்திரன், தாம்பரம் நகராட்சித் தலைவர் ம.கரிகாலன், துணைத் தலைவர் கோபிநாத், ஐகோர்ட் வழக்கறிஞர் எம்.ரத்ன சபாபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் பென்சனர்கள் சங்க துணைத் தலைவர்கள் தி.க.தண்டாயுதபாணி, எஸ்.சீனிவாசன், எஸ்.கிருஷ் ணன், எம்.சீனிவாசன், பொரு ளாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட சங்க பிரமுகர்கள் கலந்துகொண்டனர். டி.ஜே. சந்தானம் நன்றி கூறினார்.

'நாட்டிய ரஞ்சனி' மாணவிகளின் சலங்கை பூஜை


சேலையூரில் நடந்த சலங்கை பூஜை விழாவில் 12 மாணவிகள் முதன்முதலாக மேடை ஏறினர்.

சலங்கை பூஜை


சேலையூரில் இயங்கிவரும் 'நாட்டிய ரஞ்சனி' பரத நாட்டிய பள்ளி சார்பில் சங்கை பூஜை விழா நடந்தது. விழாவில் ரோஷ்ணி, அபித் பார்கவி, மாளவிகா, ஆர்த்தி, சரையு, திவ்யா, ஜெயஸ்ரீ, பத்மஸ்ரீ, விஷ்ணுவர்த்னி, கோபிகா, சூர்யப்ரியா, சுலஷ்மி  ஆகிய 12 மாணவிகள் சலங்கை கட்டி முதல்முதலாக மேடை ஏறினர். அவர்களின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது.

விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக பாண்டிச்சேரி யோகா சென்டரின் தலைவர் தினகரன், கிழக்கு தாம்பரம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் தங்கம் நாராயணசுவாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

பரதநாட்டிய குரு எஸ்.பிரபாவதி சதீஸ்குமார் விழாவை தொகுத்து வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது, 'எங்களின் 'நாட்டிய ரஞ்சனி' பரத நாட்டிய பள்ளி சார்பில் கலாக்ஷேத்ரா ஸ்டைலில் பரதநாட்டியம் கற்றுத் தருகி றோம். 5 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் துவங்கி, பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள எந்தவொரு பெண்களும் எங்கள் நாட்டியப் பள்ளியில் பரதம் பயிலலாம்' என்று கூறினார்.

'நாட்டிய ரஞ்சனி'யில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புவோர், 97910 22300 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ஓடியாடி விளையாடினால் பல் பலமாகும்: பிரபல பல் டாக்டர் திருப்பதி பேட்டி


எஸ்.எம்.ஆனந்த்

ற்களின் பாதுகாப்புக்கு சூரியஒளியும் நல்லது. அதனால், குழந்தைகளை ஓடியாடி விளையாட அனு மதிக்க வேண்டும் என்கிறார், சேலையூர் ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவனையின் தலை வரும், பிரபல பல் மருத்து வருமான ஜி.திருப்பதி.

அவர் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

ஒரு குழந்தை முதன்முதலாக எப்போது பல் துலக்க ஆரம் பிக்க வேண்டும்?

ஒரு குழந்தை பிறந்து 8 மாதம் ஆனவுடன் முதன் முதலாக பல் முளைக்க ஆரம்பிக்கும். இந்த முதல் பற்களுக்கு 'பால் பற்கள்' என்று பெயர். பால் பற்கள் உருவாகுவதற்கு முன்பே, அதாவது... குழந்தை பிறந்து 6 மாத காலம் ஆன நிலையி லேயே அந்தக் குழந்தை பல் துலக்குவது அவசியம். 6 மாதக் குழந்தை பல் துலக் குவது முடியாத காரியம் என்பதால் குழந்தையின் பெற்றோர்தான் அதைச் செய்ய வேண்டும். சுத்தமான பஞ்சை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து, குழந்தையின் பல் ஈறுகளில் மசாஜ் செய்துவிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை இப்படிச் செய்வது நல்லது.

'டூத் பேஸ்ட்' கொண்டு ஒரு குழந்தை எப்போது பல் துலக்க வேண்டும்?


ஒன்றரை வயதில் ஒரு குழந்தைக்கு ஓரளவு பற்கள் முளைத்துவிடும். பால் பற்கள் மொத்தம் 20. மேல் தாடையில் பத்து, கீழ்த் தாடையில் பத்து என இந்த பற்கள் வளரும். இவை முழுவதுமாக முளை த்துவிடும் 2 - 21/2 வயதில், குழந்தைகளுக்கு என்று உள்ள பேஸ்ட் கொண்டு ஒரு குழந்தை பல் துலக்க வேண் டும். இந்த சிறு வயதில் குழந்தைகள் நாம் சொல்வதை செய்ய மாட்டார்கள். அத னால், நாமே இப்படித்தான் பல் துலக்க வேண்டும், இப்ப டித்தான் தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும்.

தாய்ப்பால் பற்களின் வளர்ச்சிக்கும் உதவுமா?

கண்டிப்பாக. தாய்ப்பாலில் இல்லாத சத்துக்களே இல்லை. அதனால், அதை கண்டிப்பாக குழந்தைக்குத் தரவேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையின் பற்கள் அதிக ஆரோக்கியத்துடன் திகழும்.

அப்படியானால், புட்டிப் பால் பாதுகாப்பானது இல்லையா?


புட்டிப்பாலோடு ஒப்பிடும் போது மிகமிக ஆரோக்கிய மானது தாய்ப்பால்தான். சில தாய்மார்கள் குழந்தைக்கு புட்டிப்பால் தரும்போது பெரிய தவறு ஒன்றை, தங்களை அறியாமலேயே தொடர்ந்து செய்வார்கள். குழந்தை தூங்கிக்கொண்டிரு க்கும்போதே, அதன் வாயில் பால் உள்ள புட்டியை திணித்து குடிக்கச் செய் வார்கள். குழந்தையும் தூங்கிக் கொண்டே பாலை குடித்து விடும். புட்டிப்பாட்டிலின் ரப்பர் குழந்தை வாயிலேயே வெகுநேரத்துக்கு அப்படியே இருக்கும். இரவு நேரங்களில் நீண்டநேரம் குழந்தைகள் புட்டிப்பாட்டிலின் ரப்பரை வாயில் சூப்பிக்கொண்டு தூங்குவார்கள். இது நல்ல தல்ல. ஒரு குழந்தை இப்ப டியான நிலைக்கு தொடர்ந்து ஆளாகிவந்தால், பாலில் உள்ள சர்க்கரையின் தன்மை யால் குழந்தையின் பல் பாது காப்பு குறைந்துவிடும். குழந்தை பருவத்திலேயே சொத்தைப் பல் உருவாகு வதற்கு வாய்ப்பாகிவிடும்.

புட்டிப்பாலை பாதுகாப் பாகத் தர என்ன செய்ய வேண்டும்?

குழந்தை பால் குடித்து முடித்ததும் சுத்தமான பஞ்சை தண்ணீரில் நனைத்து, குழந் தையின் பற்களிலும் ஈறு களிலும் ஒற்றி, பால் கறையை சுத்தம் செய்துவிட வேண்டும். 2 முதல் 3 வயது வரையிலான காலத்தில் குழந்தையின் பற்கள் விஷயத்தில் நாம் கவன மாக இருந்தால், சொத்தைப் பல் வருவதை எளிதில் தவிர்த்துவிடலாம்.

இப்போதைய குழந்தை களின் பல் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

இன்று குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், சாக்லெட், பிஸ்கட் அதிகம் வாங்கிக்கொடுக்கி றார்கள். மேற்படி பொருட் களில் உள்ள சர்க்கரை, குழந்தையின் பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அவற்றை அள வோடு சாப்பிட வைப்பது நல்லது. மற்றபடி, இன்றைய குழந்தைகளை அதன் பெற் றோர் வீதிகளில் ஓடி விளை யாட விடுவதில்லை. இப்படிச் செய்வது, குழந்தையின் உட லுக்கு மட்டுமின்றி, பற்களு க்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிவிடுகிறது. அதாவது, ஒரு குழந்தை தெருவில் மற்ற பிள்ளை களோடு சேர்ந்து ஓடியாடி விளையாடும்போது, குழந்தை யின் உடலில் சூரியஒளி நன்கு படும். அவ்வாறு சூரியஒளி உடலில் பட்டால், சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி குழந்தைக்கு எளிதாக கிடைத்துவிடும். இந்த வைட்டமின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவக்கூடி யது என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு, குழந்தையை ஓடியாடி விளையாட அனு மதிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஜி.திருப்பதி கூறினார்.

(டாக்டர் ஆலோசனை தொடரும்...)

பிறரை சந்தோஷப்படுத்துவதே உண்மையான மகிழ்ச்சி: டாக்டர் அசோகன் பேச்சு


டுத்தவர்களை மகிழ்ச் சிப்படுத்தி, அதனால் காணும் சந்தோஷமே உண் மையான சந்தோஷம் என்று டாக்டர் ஏ.அசோகன் பேசினார்.

கலைநிகழ்ச்சி

ஆதரவற்றக் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங் கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட கலைநிகழ்ச்சி நடந்தது. சென்னை, திருவள் ளூர், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லங் கள் மற்றும் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ& மாணவிகள் இதில் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

'அம்மாவும் நீயே... அப்பா வும் நீயே...' எனும், கல் மனதையும் கரைக்கும் பாட லில் தொடங்கி, 'சொயிங்... சொயிங்..' எனும், உற்சாகம் துள்ளவைக்கும் சினிமா பாடல் வரையில், கலக்கலாக ஆடியும் பாடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர் மாணவ&மாணவிகள். மனவளர்ச்சி குன்றிய மற்றும் பெற்றோர் செய்த தவறால் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி கைவிடப்பட்ட மாணவ- மாணவிகளின் நடனம் பார் வையாளர்களின் மனதை உருகவைத்தது.

இந்தியா மட்டுமின்றி பல் வேறு வெளிநாடுகளிலும் ஆதரவற்ற ஏழைக் குழந்தை களை கண்டறிந்து, அவர் களுக்கு பல்வேறு வழிகளில் உதவிவரும் டாக்டர் ஏ.அசோ கன், டாக்டர் சித்ரலேகா அசோகன் தம்பதியர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் டாக்டர் ஏ.அசோகன் பேசிய தாவது:

இதுதான் மகிழ்ச்சி

7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த ஓட்ட லுக்குப் பக்கத்தில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி இருந் தது. திடீரென்று அங்குள்ள சிறுவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சண்டையிட்டனர். ஒரு வேளை சாப்பாட்டுக்காகத் தான் இந்தச் சண்டை என் பதை அறிந்தபோது என் மனம் துடித்துப் போனது.

அப்போதுதான், நம்மால் முடிந்த உதவிகளை ஏழைக் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்று முடிவு செய் தேன். அந்த உதவியை இப் போதும் செய்து கொண்டிருக் கிறேன். ஆதரவற்றோர் யார் என்பதை கண்டறிவ தோடு, அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதையும் அறிந்து உதவி வருகிறேன்.

ஆதரவற்றக் குழந்தைகளை எல்லாம் ஒரே இடத்துக்கு அழைத்துவந்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்கிற என்னுடைய எண் ணத்தின் வெளிப்பாடே இந்த நிகழ்ச்சி. பெற்றோர், உறவினர் இல்லாமல் வளரும் இந்தப் பிள்ளைகள் வாழ்வில் இப் போது வேண்டுமானால் போதிய சந்தோஷம் இல்லா மல் இருக்கலாம். ஆனால், எப்போதும் அவர்களின் வாழ்வு இப்படியே இருந்து விடாது. நாளை இவர்களும் பணக்காரர் ஆவார்கள். சந் தோஷம் இவர்களையும் தேடி வரும். நாம் ஒவ்வொருவரும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். இந்த பூமிக்கு வந்தபோது நாம் அதைக் கொண்டுவரவில்லை. போகும்போதும் கொண்டு செல்லப் போவதில்லை. அதனால், நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய் வோம். அவர்களை மகிழ்ச்சிப் படுத்தி, அந்த மகிழ்ச்சியில் நாம் மகிழ்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, டாக்டர் சித்ர லேகா அசோகன் பேசும் போது, 'வறுமையால்தான் பல குற்றங்கள் நடைபெறுகி ன்றன. அதனால், அதை கண்டிப்பாக ஒழித்தே ஆக வேண்டும்' என்றார்.

பங்கேற்றவர்கள்

விழாவில் சிறப்பு விருந்தினர் களாக கண் அறுவை சிகிச்சை நிபுணர் சாய்பாபா கவுடா, ஐ.டி.எப். நிறுவனர் ஏஆர்.கே.பிள்ளை, அருண் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ண வேணி அருணாச்சலம், மாலா மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவை கிழக்கு தாம்பரம் கேந்திர வித்யாலயா பள்ளி -2 ஆசிரியை ஆர்.ராஜம்மா தொகுத்து வழங்கினார்.