Wednesday, 19 March 2014

ஜாதகம் மூடநம்பிக்கையா?

கேள்வி : ஆன்மிகம் என்பது நம்பிக்கை, ஜாதகம் என்பது மூடநம்பிக்கை என்று என் நண்பன் சொல்கிறான். இதில், எது உண்மை? (என்.ரமேஷ், செம்பாக்கம்)

பதில் : ஆன்மிகம், ஜோதிடம் மட்டுமின்றி எல்லா சாஸ்திரங்களுக்கும் ஓர் அறிவியல் சார்ந்த விஷயங் களும் பலன்களும் இருக்கின் றன.  அவைகளை சரியாக புரிந்துகொண்டு சரியாகப் பயன்படுத்தினால் எதுவும் மூடநம்பிக்கை அல்ல.

ஆன்மிகம் என்பது, ஒருவரது ஆன்மா சம்பந்தப் பட்ட விஷயம்.  ஜோதிட சாஸ்திரமும் ஒருவருடைய ஆன்மாவை மையப்படுத்தி, அவரது முன் ஜென்மம், பிறப்பு, வாழ்வு, இறப்பு, அடுத்த ஜென்மம் போன்றவை களை அறிவதற்கு, நல்ல ஞான திருஷ்டி பெற்ற ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி கிரகங்களின் பாதிப்பு பூமியை தாக்கு கிறதோ, அப்படியே பூமியில் உள்ள எல்லா ஜீவராசி களையும், பொருட் களையும் பாதிக் கின்றது. அமா வாசை, பௌர்ணமி நாட்களில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் இருக்கும்போது தீயினால் பாதிப்பு ஏற்படு கின்றது.  சூரியனின் வெப்பம் தாக்குகின்றது. சனி கிரகத்தின் சுழற்சி பல கோணங்களில் பூமியை தாக்குகிறது.  இந்த அனைத்து விஷயங்களும் மனிதனின் உடல்  நிலையிலும், மனதளவிலும் பெரும் மாற்றங் களை நிகழ்த்துவது அசைக்க முடியாத உண்மை.

கடவுள் வழிபாட்டைக்கூட சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். மொத்தத்தில் ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போதுதான் இறைவனையும், ஆன்மிகத்தையும், ஜோதிடத் தையும் நாடிச் செல்கிறான். அவன் நினைப்பதெல்லாம் நடந்து வசதியாக இருக்கும் போது, ஏதோ... தானே இந்த உலகையெல்லாம் படைத்தது போலவும், அவன் என்றும்

இதுதான் உண்மை!
அழியமாட்டான் என்ற கர்வம் போர்த்திய மூட நம்பிக்கையுடன் கடவுளையும், ஆன்மிகத்தையும், ஜோதிட சாஸ்திரத்தையும், தனக் குள்ளே உள்ள பயத்தை வெளிக்காட்டாமல், மற்ற வர்களை ஏளனம் செய்து கொண்டிருப்பான்.

மேற்கண்ட கேள்விக்கு பதில் அளித்தவர் :
'ஜோதிட நிர்மதி' கோபாலகிருஷ்ணன், செல் : 9176347274


-  மார்ச் 2 - 15, 2014, சென்னை மெயில் செய்தித்தாளில் இருந்து...

Saturday, 15 March 2014

மார்ச் 16-29, 2014 தேதிய, சென்னை மெயில் செய்தித்தாளின் முதல் பக்கம்...

நண்பர்கள் நற்பணி மன்ற வெள்ளி விழா

 

சேலையூர் நண்பர்கள் விளையாட்டு மற்றும் நற்பணி மன்றத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சேலையூரில் நடைபெற்றது.

வெள்ளி விழா


சேலையூரில் இயங்கிவரும் நண்பர்கள் விளையாட்டு மற்றும் நற்பணி மன்றத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சேலையூர் ஸ்ரீதேவி மஹாலில் நடைபெற்றது. மன்றத் தலைவர் எஸ்.ரமேஷ் விழாவுக்கு தலைமை தாங்கினார். செய லாளர் எம்.சீனிவாசகுமார் வரவேற்று பேசினார். மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

விழாவை, ஸ்ரீராம் நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் என்.தங்கம் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வித்யா மந்திர் நாட்டிய கலா கேந்ரா மாணவிகளின் பரதம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து, 'வெற்றிக்கான வழிகள்' எனும் தலைப்பில் மெய்யுணர்வு மையத்தின் நிறுவனர் க.மு.சிவசுவாமி சிறப்புரை ஆற்றினார். விழா மலரை நீதிபதி க.ஞானப் பிரகாசம் வெளியிட, சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜேம்ஸ் சகாரியா பெற்றுக் கொண்டார்.

பங்கேற்றவர்கள்

சிறப்பு விருந்தினர்களாக கேம்ப்ரோடு வட்டார வியா பாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ் பி.செல்லையா, சந்தோஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சந்தோஷ் சி.சந்தான குமார், தொழிலதிபர்கள் ஜெ.ஜெயமோகன், வி.பி. ஆனந்த், வி.தர்மராஜா, பாக்கியம் பிரஸ் டி.ஆபிரகாம், கிரைஸ்ட் கிருபா ஆங்கிலப் பள்ளி முதல்வர் ஆரோக்கிய ராணி உள்ளிட்ட பலர் விழா வில் கலந்துகொண்டனர்.

நிறைவில், நற்பணி மன்ற பொருளாளர் வி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.

அதிக செக்ஸ் : எலும்பு பலகீனமாகும்!


திக பாலுறவு கொண்டால் எலும்பு பலகீனமாகி, எலும்பு தேய் மானம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார், அகில இந்திய ஆயுர்வேத அமைப்பின் தேசிய செயலாளரும், பிரபல மருத்துவருமான கே.ஏ.ராஜேந்திரன்.

அவர் நமது நிருபரிடம் மேலும் கூறியதாவது:

இன்று, எலும்பு தேய்மான பிரச்னையால் நிறையபேர் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு மஜ்ஜைதான். நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து 7 வித மான தாதுக்கள் உருவாகின் றன. இவைதான், நம் உடலின் அடிப்படை.

முதல் தாது என்பது இரைப் பையின் ரசம். இது, ரத்தமாக மாறுவது இரண்டாவது தாது. ரத்தம், தசையாக மாறுவது மூன்றாவது தாது. தசை, கொழுப்பாக மாறுவது நான்காவது தாது. கொழுப்பு, எலும்பாக மாறுவது ஐந்தா வது தாது. எலும்பு, மஜ்ஜை யாக மாறுவது ஆறாவது தாது. இந்த மஜ்ஜையில் இருந்துதான், ஏழாவது தாதுவாக ஓர் ஆணின் விந்து உருவாகிறது.

இந்த ஏழு விதமான தாதுக்களும் ஓர் உப தாதுவை உற்பத்தி செய்யும். அதன்படி, இரைப்பையின் ரசம் கபத்தை யும், ரத்தம் பித்தத்தையும், தசை இடைவெளிகளையும், கொழுப்பு வியர்வையையும், எலும்பு நகம், மயிர் உள்ளிட் டவைகளையும், மஜ்ஜை க்ளேஸ்மா எனும் பசையையும் உற்பத்தி செய்கின்றன. இவற்றில், மஜ்ஜை உற்பத்தி செய்யும் க்ளேஸ்மா எனும் பசையே, நம்முடைய உடல் எலும்புகளின் விளிம்புகளை பசைத் தன்மையோடு வைத் திருக்க உதவுகின்றன. நம் முடைய கண்கள் ஈரத் தன்மையுடன் இருப்பதற்கு காரணமும் இதே க்ளேஸ்மாதான்!

மஜ்ஜை உற்பத்தி செய்யும் க்ளேஸ்மா பசையின் அளவு குறையும்போது, நம் உடலின் எலும்பு களில் உராய்வுகள் ஏற்பட்டு, எலும்பு தேய்மானம் ஆகிறது. பொது வாக, ஒருவர் 50 வயதை கடக்கும்போது, 7 விதமான தாதுக்களின் பலமும் குறையும். அதனால், எலும்பு பலகீனமாகும். எலும்பு பலகீனம் ஆனால், மஜ்ஜை உற்பத்தி செய்யும் க்ளேஸ்மாவும் குறைந்து, எலும்பு தேய்மானம் அதிகமாகும். இது, இயற் கையாக நிகழக்கூடிய ஒன்று. மருத்துவ சிகிச்சைகள் மூலம் இதை ஓரளவுக்கு கட்டுப் படுத்த முடியும்.

ஆனால், சிலர் இளம் வயதிலேயே எலும்பு தேய் மானத்தால் அவதிப்படுகின்ற னர். சரியான உணவு வகைகள் எடுத்துக் கொள்ளாதது, அதிகப்படியான உடலியக்க செயல்பாடுகள், இளம் வயதில் காச நோய் ஏற்படுதல், பெண்கள் உட னான அதிகப் படியான பாலுறவு ஆகிய வையே அதற்கு காரணம்.

சரி, என்ன மாதிரியான செயல்பாடுகள், இளம் வயது எலும்பு தேய் மானத்தை தடுக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்?

அது பற்றி, அடுத்த இதழில் சொல்கிறேன்.

- தொடரும்...

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 9


ன்று பலரும் செய்தித் தாள் வாசிக்கிறோம், புத்தகம் படிக்கிறோம். இந்த நல்ல பழக்கம், பல்வேறு நேரங்களில் நமக்கு உதவுகிறது. இந்தப் பழக்கம், நம் அறிவை இன்னும் பட்டை தீட்டுவதுடன், உலக அளவில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

1825-களில், அமெரிக்கா வில் வாழ்ந்த அந்த சிறுவனு க்கும் புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அவனோ மிகவும் ஏழை. தச்சு வேலை செய்து வந்த அவனது தந்தையால், அவனுக்கு எப்படி பணம் தந்து புத்தகம் வாங்கிக் கொடுக்க முடியும்? ஆனாலும், அந்தச் சிறுவனிடம் அறிவு தாகம் நிரம்பி வழிந்தது. அதனால், பக்கத்து நகரத்துக்கு அடிக்கடி நடந்து சென்று, அங்குள்ள, வசதி படைத்தவர் களின் வீடுகளில், புத்தகங் களை படிக்கத் தருமாறு கெஞ்சிக் கேட்பான். பலர், சிறுவனை விரட்டிவிடுவார் கள். சிலர், இரக்கப்பட்டு அவனுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை கொடுப்பார்கள். புத்தகத்துடன் வீடு திரும்பும் சிறுவன், ஒன்று அல்லது இரண்டு நாளில் புத்தகம் முழு வதையும் படித்து முடித்து, ஏற்கனவே சொன்னபடி, புத்த கத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிடுவான்.

ஒருநாள், 'ஜனாதிபதி வாஷிங்டன்' என்ற புத்தக த்தை ஒருவரிடமிருந்து வாங்கி வந்தான். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித் தந்தவரும், ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியுமான ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ் க்கை வரலாற்றுப் புத்தகம் அது. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் அன்று இரவு வெகுநேரம் புத்தகத்தை படித்தான் சிறுவன்.  ஒரு கட்டத்தில் விளக்கில் இருந்த எண்ணெய் தீர்ந்து, விளக்கு அணையும் நிலைக்கு வர... தனது மிகச்சிறிய வீட்டின் ஜன்னல் ஓரத்தில் புத்தகத்தை வைத்துவிட்டு தூங்கி விட்டான்.

காலையில் சிறுவன் கண் விழித்தபோது, புத்தகத்தின் நிலையைக் கண்டு திடுக் கிட்டான். இரவு பெய்த மழை யில் அந்தப் புத்தகம் நன்றாக நனைந்துபோய் இருந்தது. புத்தகத்தை இரவல் தந்தவர் திட்டுவாரே என்று பயந்த சிறுவன், வெயிலில் அதை காயவைத்தான். ஆனாலும், பழைய நிலைக்கு வராத புத்தகத்தை, உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றான். நடந்ததைக் கூறி புத்தகத்தை ஒப்படைத்த தோடு, மன்னிப்பும் கேட் டான். ஆனால், புத்தகம் கொடுத்தவரோ, 'புத்தகத்துக் கான தொகையை கொடுத்து விட்டு, புத்தகத்தை எடுத்துக் கொண்டு போ. இல்லை யென்றால், என்னுடைய வயலில் நீ 3 நாட்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்' என்று ஒரே யடியாக சொல்லிவிட்டார்.

ஏழைச் சிறுவனுக்கு வேறு வழி தெரியவில்லை. புத்த கத்தை தந்தவர் சொன்னபடி, அவரது வயலில் 3 நாட்கள் தொடர்ந்து வேலை பார்த் தான். அதற்கு கூலியாக, 'ஜனாதிபதி வாஷிங்டன்' புத்தகத்தை அவனுக்குத் தந்தார், அதற்கு சொந்தக்காரர்.

முதன் முதலாக ஒரு புத்தகம் தனக்கு சொந்தமானபோது, அந்த சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தக் கூத்தாடியவன், அடிக்கடி அந்தப் புத்தகத்தை படித்தான். அதனால்தான் என்னவோ, அவன் பிற்காலத் தில் அமெரிக்க ஜனாதிபதி யாகவே ஆனான். அவர்தான், தோல்விகளைக் கண்டு துவளாத, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன்.

புத்தகங்கள், செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் ஒருவரிடம் இருந்தால், அவரால் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே மிகச் சிறந்த உதாரணம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பில்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டு நடப்புகளையும், அன்றைய சந்தை நிலவரங் களையும் உடனுக்குடன் அறிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம்.

இப்போதெல்லாம், விலை வாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று எல்லாத் தரப்பில் இருந்தும் குரல் எதிரொலிக் கிறது. கட்டுமானத் துறை யிலும் அதே விலையேற்றம் தான்! எப்போதெல்லாம், எப்படியெல்லாம் கட்டு மானப் பொருட்கள் விலை உயர்கிறது என்பதை ஒரு பில்டர் நன்கு அறிந்து வைத்திருந்தால்தான், அவர் இந்தத் துறையில் தொடர்ந்து சிறப்பாக இயங்க முடியும். ஒரு சிறந்த பில்டர், அடுத்த 10 மாதங்களில் கட்டுமானப் பொருட்களின் விலையில் எந்தமாதிரியான மாறுதல்கள் ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருப்பது அவசியம். இதை அறிய வேண்டும் என்றால், தினமும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் களை தவறாமல் படிக்க வேண்டும்.

'அடுத்த ஆண்டு, வெளி நாட்டுக்கு 6 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது' என்று, ஒரு நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மற்ற வர்களுக்கு, இது பத்தோடு பதினொன்றான செய்தியாக இருக்கலாம். ஆனால், பில்டர் களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு, இதுதான் எட்டுக்காலம், அதாவது... தலைப்புச் செய்தி!

கட்டுமானத் துறையில் சிமெண்ட் இல்லாமல் எதை யும் செய்ய முடியாது. அத னால்தான், சிமெண்ட் நிறுவ னங்கள் அதன் விலையை உயர்த்திக் கொண்டே போகின்றன.  சிலநேரங்களில், சிமெண்டே கிடைக்காதது போன்ற செயற்கை தட்டுப் பாடுகளும் உருவாக்கப்பட்டு, சிமெண்ட் விலை உயர்த்தப் படுகிறது.

சிமெண்டின் தேவை இப்படி இருக்க... திடீரென்று, 6 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றுமதி செய்யத் திட்டம் இருக்கிறது என்றால், பில்டர் கள் உஷாராகிவிட வேண்டும். விரைவில், எப்படியும் சிமெண்ட் தட்டுப்பாடு வரும் என்பதை அறிந்து, அப்படி யொரு நிலை ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை தேவை யான அளவு கொள்முதல் செய்து வைத்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

சிமெண்ட் மட்டுமல்ல, வேறுசில விலையேற்றங்களும் ஒரு பில்டரை பெரிய அளவில் பாதிப்படையச் செய்கிறது. அவை என்ன?

- வீடு கட்டுவோம்...

3 செல்போன்களே பிரதமரின் சொத்து

 ன்னுடைய சொத்துக்கள் 3 செல்போன்கள் மட்டுமே என்று கணக்கு காட்டி இருக்கிறார் பிரதமர் ஒருவர். இந்த அதிசயம் நடந்திருப்பது, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில்!

பிரதமர்

இந்து நாடான நேபாள நாட்டின் 37-வது பிரதமராக சுஷில் கொய்லாரா சமீபத்தில் பதவியேற்றார். இவருக்கு வயது 74.

நேபாள நாட்டின் சட்டப்படி பிரதமர் பதவி வகிப்பவர்களும், அவர்களது உறவினர்களும் சொத்து மதிப்பை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு. அதன்படி, பிரதமர் சுஷில் கொய்லாரா தனது சொத்து மதிப்பை வெளியிட்டார்.

3 செல்போன்கள் மட்டுமே என்னுடைய சொத்து. மற்றபடி வேறு எதுவும் என் னிடம் இல்லை என்று அவர் அறிவித்து இருப்பது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுபற்றி பிரதமரின் செய்தி ஒருங்கிணைப்பாளரான பிரகாஷ் அதிகாரி நிருபர் களிடம் கூறியதாவது:

பிரதமர் சுஷில் கொய் லாராவுக்கு சொந்தமான வீடு, நிலம், வங்கியில் பணம், சொத்து... என்று எதுவுமே இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி ஆப ரணங்களும் கிடையாது. காரணம், இவர் ஒரு பிரம்மச் சாரி. அதனால், இவர் தனக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனது தந்தை மறைந்த பிறகு, தனக் கான குடும்ப சொத்துக்களை உடன் பிறந்த சகோதரர்களுக்கு வழங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏழை பிரதமர்

இதன் மூலம், உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் ஏழை யானவர் என்ற பெயரை சுஷில் கொய்லாரா பெற்றுள் ளார்.

'ஓட்டு போட பணம் வாங்காதீர்கள்!' - கமலஹாசன் விழிப்புணர்வு பிரசாரம்

க்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகை யில், நடிகர் கமலஹாசன் பேசும் வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட இருப்பதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விழிப்புணர்வு பிரசாரம்

தேர்தலில் பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக் களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை பல வழிகளில் மேற்கொள்ள இருக்கிறோம். நடிகர், நடிகைகளின் பேட்டி கள் மூலமாகவும் மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.

நடிகர் கமலஹாசன் மக்களிடையே விழிப்புண ர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் வீடியோ காட்சியை, அரசு கேபிள் டி.வி. மற்றும் தொலைக்காட்சிகள், சினிமா தியேட்டர்களில் வெளியிட இருக்கி றாம்.

அந்த வீடியோ காட்சியில், 'வாக்காளர்களே... சுய சிந்தனையோடு யோசித்து வாக்களியுங்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து வாக்க ளியுங்கள். ஓட்டு போட யாரிடமும் பணம் வாங்காதீர் கள்' என்று விளக்கி கூறுகிறார் கமலஹாசன். இதை, பொது மக்கள் அனைவரும் ஒருவருக் கொருவர் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் எடுத்து சொல்லலாம்.

விஜயகாந்த் பிரசாரம்

மறைந்த தலைவர்களின் சிலைகளை சாக்கு பை போட்டு மூடிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், தனது பிரசாரத்தில் ‘‘பணம் தந்தால் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள் என்று பேசியதாக கூறுகிறீர் கள். இதுபற்றி புகார் எதுவும் வந்தால் அவரது பேச்சுக்கள் ஆய்வு செய்யப்படும்.

ஆனால், லஞ்சத்தை ஒழிக்க முடியாத சூழ்நிலையில் பணம் தந்தால் வாங்கி கொள்ளுங்கள் என்றுதான் அவரது பேச்சு இருப்பதாக தெரிகிறது. அதை, அரசியல் உள்நோக்கத்தோடு பேசியதாக கருதவில்லை. நான் பணம் தருகிறேன், எனக்கு ஓட்டு போடுங்கள் என்று விஜயகாந்த் பேச வில்லை. எனவே இது குற்றமாக தெரியவில்லை. இருந்தாலும், புகாராக வந் தால் அவர் பேசிய பேச்சின் முழு விவரமும் ஆராயப்படும்.

வியாபாரிகளிடம் சோதனை


வியாபாரிகளிடம் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. வாகன சோதனையின்போது, அந்தக் காட்சி வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப் படுகிறது.

எனவே அங்கு லஞ்சம் பெறுவது போன்ற முறைகேடு நடந்தால், அந்த ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லும் போது, அதற்கு கணக்கு காட்டுவது கட்டாயம்தான். தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப் படுகிறது.

அரசியல்வாதிகள் வங்கிகள் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

யாரும் தேடி வராத பணம்!

கடந்த சட்டசபை தேர்தலின்போது திருச்சியில் ரூ.5 கோடி சிக்கியது. இதுபோல், மொத்தம் ரூ.36 கோடி பிடிபட்டது. இந்த பணம் அனைத்தும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக் கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பணத்தை கேட்டு யாரும் வரவில்லை.

அதுபோல, இப்போதும் பணம் பிடிபடுகிறது. இது வரை ரூ.6 கோடி பிடிபட்டுள் ளது. இந்த பணத்துக்கான சரியான ஆவணங்களை காட்டி கேட்க யாரும் முன்வர வில்லை. இதுவும் வருமான வரித்துறையிடம்தான் உள்ளது.

வியாபாரிகள் கூறுவது போல் சிறிய தொகை கொண்டு செல்பவர்கள் பிடி படவில்லை. ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், மியான்மர் நாட்டு பணம் ஆகியவை பிடிபட்டுள் ளது. எனவே வியாபாரிகளோ, விவசாயிகளோ பாதிக்கப் படுவதாக கூற இயலாது. எந்த பணமாக இருந்தாலும், அதற்கு ஒரு கணக்கு இருக்கத் தான் செய்யும். அதற்கான விளக்கம் கூறுங்கள் என்று தான் கேட்கிறோம்.

பாதுகாப்பு

வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் வாக்குப் பதிவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்பு வந்தாலே போது மானது. அவர்கள், இரவி லேயே வந்து தங்க வேண்டிய அவசியம் இல்லை. வாக்குப் பதிவு நடைபெறும் 2 மணி நேரத்துக்கு முன்பாக வந்தால், பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

விருப்பம் இல்லையா?

தேர்தல் பணிகளில் ஈடுபட மாட்டோம் என அரசு ஊழியர்கள் யாரும் கூறினால் அதற்கு சரியான காரணம் வேண்டும். தேர்தல் பாது காப்பு பணியில் தமிழ் நாட்டில் ஒரு லட்சம் போலீ சாருடன் வெளிமாநில போலீ சாரும் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறினார்.

Saturday, 1 March 2014

சென்னை மெயில் - இது நம்ம வீட்டு பேப்பர்!

மார்ச் 2-15, 2014, சென்னை மெயில் செய்தி இதழின் முதல் பக்கம்...

பிரியாணிக்காக வாக்கை விற்காதீர்கள்! - தேர்தல் கமிஷன் வேண்டுகோள்

 'பிரியாணிக்காகவும், பணத்துக்காகவும் ஆசைப் பட்டு, உங்களின் மதிப்புமிக்க வாக்கை விற்றுவிடாதீர்கள்' என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல்


புதிய பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில், கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்படாததால், பெரும்பாலான கட்சிகள் யாரையும் அவசரப்பட்டு விமர்சிக்காமல் அடக்கி வாசித்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை 39 லோக்சபா தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத் தப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறுகையில், 'தமிழகத் தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக் கையை ஏற்று, அவ்வாறே தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந் துரை செய்துள்ளோம். அத னால், தமிழகத்தில் ஒரேகட்ட மாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேர்மையான முறையில் நடைபெறவும் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதியில், வேட் பாளர்களின் எண்ணிக்கை 15&க்கும் மேல் இருந்தால், 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலும் உள்ள கடைசி பட்டன் 'நோட்டோ' பட்டனாக இருக்கும். அதாவது, எந்த வேட்பாளரு க்கும் வாக்களிக்க விருப்ப மில்லாதவர்கள் இந்த நோட்டோ பட்டனை அழுத்தலாம்.

தேர்தல் நேரங்களில் வாக் களர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதும், அதை வாக்காளர்கள் பெற்றுக்கொண்டு வாக்களிப் பதும்  தவறு என்பதை அறி வுறுத்தும் வகையில் விழிப்பு ணர்வு பிரசாரம் மேற்கொள்ள வும் தேர்தல் கமிஷன் முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

ஓட்டை விற்காதீர்கள்

ஓட்டுக்கு பணம் பெறு வதற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். சினிமா, பேனர் போன்ற வற்றின் மூலம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். ஒரு வாக்காளர் தன்னுடைய ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டால், தொகுதிக்கு சாலை வேண்டும், வேறு வசதிகள் வேண்டும் என்று எம்.பி-யிடம் உரிமையோடு கேட்க முடியாது. ஓட்டுக் குத்தான் பணம் கொடுத்து விட்டேனே என்று அவர் மறுத்துவிடுவார்.
அதனால், 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி வளர்ச்சி அடையாமல் போய்விடும் என்று கூறி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். வாக்காளர்கள் யாரும் தயவுசெய்து, ஆயிரம் ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் ஓட்டை விற்க வேண்டாம். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜெயில்!

ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவதை வீடியோ படம் அல்லது புகைப்படம் படம் பிடித்து அனுப்பும் வசதிகளை இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளோம். எனவே, அவற்றை இந்த குற்றத்திற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். முன்பு ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு ஆதாரங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது படங்கள் மூலமாக ஆதாரங்கள் பெறப்படும்.

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 8


டாக்டர் ரூபி ஆர்.மனோகரன்

லகின் முதல் மின்சார பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்று எல்லோருக்கும் தெரி யும். உலகின் முதல் மின்சார பல்பு எரிந்தபோது, ஒட்டு மொத்த உலகமே எடிசனை கொண்டாடியது. அவரது கண்டுபிடிப்பால்தான் இன்று உலகம் ஒளிர்ந்துகொண்டிருக் கிறது.

இப்படி, தன்னுடைய கண்டுபிடிப்பால் உலகப் புகழ் பெற்ற எடிசன், உலகின் முதல் பல்பை ஒளிரவைக்க சந்தித்த சோதனைகள் நூறு அல்ல; ஆயிரக்கணக்கில்! ஆயிரக் கணக்கான முறை பல்பை ஒளிரவைக்க முயற்சி செய்தும் உடனடியாக பலன் கிடைக்க வில்லை. அதனால், இரவு- பகல் பார்க்காமல் உழைத்தார், சாப்பாட்டை மறந்தார், ஆய்வுக்கூட சோதனையே கதியென்று கிடந்தார். அந்த விடாமுயற்சிக்கு கிடைத்த பலனால்தான், உலகின் முதல் மின்சார பல்பை அவரால் ஒளிரவைக்க முடிந்தது.

'ஆயிரக்கணக்கான தோல்விகளுக்குப் பிறகும், மனம்தளராமல் இயங்கி, எப்படி உங்களால் இந்த வெற்றியை நிகழ்த்த முடிந்தது' என்று எடிசனிடம் கேட்ட போது, 'அவையெல்லாம் தோல்விகள் என்று யார் சொன்னது?' என்று திருப்பிக் கேட்டார்.

அதோடு, 'ஒவ்வொரு தோல்வியின்போதும், அந்த சோதனையை எப்படி செய்யக்கூடாது என்று தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு படிப்பினையை எனக்கு கற்றுத் தந்தது. அதனால்தான் என்னால் வெற்றிபெற முடிந் தது...' என்று, தனது வெற்றி யின் ரகசியத்தை மனம்திறந்து சொன்னார் எடிசன்.

தோல்விகளை, நமக்கான நல்ல பாடங்களாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதையே நினைத்துநினைத்து வருந்திக்கொண்டிருந்தால், வெற்றியின் இலக்கு நம்மை விட்டு வெகுதூரம் விலகிக் கொண்டே போகும். தோல்வி யிலும் நல்ல பாடம் கற்றுக் கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

பில்டர்களும், கட்டிட கட்டு மானப் பணிகளில் தாங்கள் தெரியாமல் செய்யும் தவறு களை கண்டறிந்து,  அவை அனைத்தையும் களைந்து விட்டால்... அவர் சக்சஸ் பில்டர்தான்!

நாம் எல்லோரும் உடல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். அதே முக்கியத்துவத்தை, நாம் வாழ்நாள் முழுவதும் வசிக்கக்கூடிய வீட்டுக்கும் தரவேண்டும். இதைத்தான், நம்முடைய வாடிக்கையாளர் களும் எதிர்பார்க்கிறார்கள். வீடு கட்டும்போது, அதை பார்த்துபார்த்து கட்ட வேண்டும் என்பார்கள். சிமெண்ட் கலவையில் தொடங்கி, சுவற்றில் ஆணி அடிப்பது வரையில் எல்லா விஷயங்களையும் அக்கறை யோடு கவனிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல் வார்கள். நாம் பார்த்துபார்த்து வீடு கட்டினால்தான், அந்த வீடு அழகாக இருக்கும்.

அதோடு, நம் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும் இடமாகவும் அது திகழும். அதனால், வாடிக்கையாளர்களின் விருப்பப்படி ஒவ்வொரு பில்டர்களும் கட்டிடங்களை எழுப்ப வேண்டும்.

கட்டிடங்கள் எழுப்பும் போது, கொஞ்சம் அக்கறை யோடு செயல்பட்டால் தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடலாம். இந்த அக்கறையை, கட்டுமான பணிக்கான நிலத்தை தேர்வு செய்யும்போதே செயல்படுத்த ஆரம்பித்துவிட வேண்டும்.

வாங்கிய நிலத்தை முறை யாக பயன்படுத்தாமல் வீணடிப்பதும் நமக்கு செலவு தான். வாங்கிய நிலத்தின் முழு பகுதியும் கட்டுமானத்துக்கு பயன்பட்டால்தான் அது பில்டருக்கு ஆதாயம். அதுதான், வாடிக்கையாளரு க்கும் பயன்தரும். அதனால், நிலத்தை முழுமையான கட்டு மான பணிக்கு பயன்படுத்தும் வகையில் பிளான் போட வேண்டும். இதற்கு ஸ்ட்ரக் சுரல் இன்ஜினீயரிங் சிறப்பாக இருக்க வேண்டும்.

பலருக்கு ஒரு 'காலத்திற்கு'  எத்தனை கம்பிகள் வைக்க வேண்டும் என்பதுகூட தெரிவதில்லை. கம்பி வளைப் பவரை வைத்து காலம் போடுவது தவறான செயல். இதற்கென்றே இருக்கும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்களை கலந்தாலோசித்து, முடிவெடுப்பது நல்லது. இவர்கள், சதுர அடிக்கு ஒரு ரூபாயில் இருந்து 1.50 ரூபாய் வரை வாங்குகிறார்கள். இவர் களைக்கொண்டு காலத்தை சரியாக அமைத்தால், கட்டு மானப் பொருட்களை கணிச மாக சேமிக்கலாம்.

கான்கிரீட் போடும் இடத் தில், கான்கிரீட் வீணாகாமல் பார்த்தாலும் கணிசமான அளவுக்கு பணத்தை மிச்சப் படுத்தலாம். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள், தங்கள் இஷ்டத்துக்கு கான்கிரீட்டை கொட்டி வீணாக்குவதை கண் காணித்து தடுப்பதும் அவசியம்.

ஒரு கட்டிடத்தில் தேவைக்கு அதிகமாக கம்பி வைப்பதோ, தேவைக்கு அதிகமாக சிமெண்ட் போடுவதோ எந்த பயனையும் தராது. இப்படி செய்வதால், நம்முடைய கட்டுமானச் செலவுகள்தான் கூடிக்கொண்டே போகும் என்பதை ஒவ்வொரு பில்ட ரும் அறிந்திருப்பது அவசியம்.

இன்னும் சிலர் இருக்கிறார் கள்; கட்டிடத்தை கட்டிய பிறகு, இதை அப்படி மாற்றியிருக்கலாமே என்று, திடீரென்று முடிவெடுத்து, கட்டுமானத்தை இடித்து மாற்றுவார்கள். இதுவும் வீணான செலவுதான். அத னால், ப்ளான் செய்யும்போதே நல்ல ஆர்க்கிடெக்டாக வைத்து ப்ளான் செய்தால், கட்டிடத்தை இடித்து, மறுபடியும் கட்டவேண்டிய நிலைமை வராது.

ஆர்க்கிடெக்ட் என்றதும், நிறைய செலவு ஆகுமோ என்று யாரும் பயப்பட தேவையில்லை. அதிக செலவு வைக்காத சிறிய ஆர்க்கி டெக்டுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை வைத்தும் ப்ளான் செய்யலாம்.
முன்பு, லோடு பியரிங் ஸ்ட்ரக்சர்ஸ் முறை வழக்கத் தில் இருந்தது. இப்போது, காலம் ஸ்ட்ரக்சர்ஸ்தான் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது, கட்டுமானச் செலவை கணிச மாக குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- வீடு கட்டுவோம்...

நீண்ட ஆயுள் வாழ ஆயுர்வேதம் சொல்லும் 'ரகசியங்கள்'

யுர்வேதம், சித்தா என்பது என்ன? மனிதன் நீண்ட ஆயுள் வாழ அவை எப்படி உதவுகின்றன?

இந்தக் கேள்விகளுக்கு பதில ளிக்கிறார் பிரபல டாக்டர் டாக்டர் கே.ஏ.ராஜேந்திரன்...

ஆயுர்வேதமும் சித்தாவும் அடிப்படையில் ஒன்றேதான். அதை, அவரவர் மொழிகளில்-பகுதிகளில் உள்ளதால் அப்படியொரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. சுருக் கமாக, ஸ்ரீவிஷ்ணுவின் அம்ச மான தன்வந்திரி பகவானை முன்னிறுத்தி, வைணவ அடிப் படையில் சம்ஸ்கிருதத்தில் பதியப்பட்டு, வடஇந்தியாவில் இருப்பது ஆயுர்வேதம்.

சிவபெருமானை முன்னி றுத்தி, சைவ சித்தாந்த அடிப் படையில் அகத்தியர் வழி தமிழில் பதியப்பட்டு, தென் இந்தியாவில் இருப்பது சித்த மருத்துவம். மற்றபடி, அடிப்படையில் மொத்த அறிவியலும் இரண்டிலும் பொதுவாகவே இருக்கிறது.

ஆயுர்வேதம்தான் தனி மனித ஒழுக்கத்தையும், தின சரி நடைமுறை பழக்கங்களை யும், நல்ல உணவு விஷயங் களையும் மிக விரிவாக விளக்கி கூறுகிறது. உடல் நலனுக்கு மனநலன் முக்கியம் என்பதை ஆயுர்வேதம் அடிப் படை விஷயமாக முன்னிறுத் துகிறது.

இந்து சதுர்யுகத்தில், இப் போது நடைபெறும் கலியுகம் வரைஉள்ள காலக்கட்டத்தில் திரேதா யுகத்தில் இருந்துதான் மனிதனுக்கு மருத்துவம் தேவைப்பட்டது. கிருதா யுகத்தில் அவனுக்கு மருத்து வம் தேவைப்படவில்லை.

மந்திரங்கள் மூலம் அந்த யுகத்தில் நோயின்றி ஒரு தேவனுடைய ஆற்றலுடன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்டவனாக வாழ்ந்திருந்தான் மனிதன். திரேதா யுகத்தின் மத்திய காலக்கட்டத்தில் இருந்து தான் மருத்துவமும், மணியும், மந்திரமும் கொண்டு, தனக்கு ஏற்பட்ட நோய்களை தீர்த்துக் கொண்டான்.

அதன்படி, ஆயுர்வேதம் நடைமுறைக்கு வந்து தோரா யமாக 15 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை விஷய ஞானம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆயுர் வேதம் என்பது கடல். இதைப் பற்றி துளி அளவு புரிந்து கொண்டதை இதுவரை கூறியுள்ளேன்.

இனி, அன்றாட வாழ்க்கை க்கும், ஆரோக்கிய வாழ்வுக் கும் ஆயுர்வேதம் கூறும் தினசரி கட்டளைகள் சில வற்றை சொல்கிறேன்.

காலையில் செய்ய வேண்டியவை :

விழித்தெழ வேண்டிய சரியான காலம் காலை 4 முதல் 6 மணிக்குள் உள்ள பிரம்ம முகூர்த்தமாக சரியான காலம். எழுந்ததும், முகம் கழுவி, குறைந்தது 5 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

தினமும் தலையில் எண் ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. அதேபோல், தினமும் மூக்கில் 2 சொட்டு நல்லெண் ணெய் அல்லது அணு தைலம் உறிஞ்ச வேண்டும். உடலுக்கும் எண்ணெய் தேய்த்து, உடலை பிடித்துவிட்டு, அதன்பிறகு சிறிதுநேரம் தேக பயிற்சி செய்த பின்பே குளிப்பது முறையாகும்.

உடலுக்கு வெந்நீரும் தலை க்கு தண்ணீரும் நல்லது. உடற்பயிற்சி கடினமாக இருக்கக்கூடாது. களைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் ஒரு மணி நேரம் காலார உலாவி வரலாம் (கடின உடற்பயிற்சி பிற்காலத் தில் சில நோய்களைத் தந்து விடும்). இதன்பிறகு பிராண யாமம், சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

சாப்பிட வேண்டிய உணவு வகைகள் :

சத்துமிக்க நெய், எண்ணெய் ஆகியவை அளவுடன் சேர்த்த அறுசுவை கொண்ட உண வாக காலை உணவு இருக்க வேண்டும். அந்த உணவை ஈரக்கால்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். உணவு உண்ணும்போது, கோப- தாபம் இல்லாமல் மன அமைதியுடன் உண்ண வேண்டும்.

முதலில் சிறிது இஞ்சியை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். பிறகு, உணவில் முதலாவதாக இனிப்பும், அடுத்து புளிப்பும், முடிவில் கார்ப்பு, கசப்பு கலந்த உணவை சாப்பிட வேண்டும். அரை வயிற்றுக்கே உண்ண வேண்டும். கால் வயிறு தண்ணீர். மீதமுள்ள கால் வயிறு வாயுக்களுக்காக காலியாக விடவேண்டும்.

இளம்சூடான உணவே நல்லது. குடிக்கும் தண்ணீர் ஒருமுறை கொதிக்கவைக்கப் பட்டதாக இருக்க வேண்டும். ஒருமுறை கொதிக்கவைத்த தண்ணீரை மறுமுறை சூடு படுத்தினால் அதிக கெடுதலைத் தரும்.

சாப்பிட்ட உடனே உட் கார்ந்திருத்தல் அல்லது படுத்தல் ஆகியவை தவறு. சாப்பிட்டு முடித்தவுடன் 5 நிமிடம் காலார உலாவி வரவேண்டும். சாப்பிட்ட 30 நிமிடங்கள் வரை கடினமான வேலைகளை தவிர்த்து விடுங்கள்.

மண் பாத்திரங்களில் சமைப்பது மிகச் சிறந்தது. இரும்பு பாத்திரத்தில் சமைத் தால் கண் நோய், மூலம் போன்ற நோய்க்கு நல்லது. வெண்கலத்தில் சமைப்பது புத்தியை வளர்க்கும்.

தேன் மற்றும் நெய்யை சமஅளவு சேர்த்து சாப்பிடக் கூடாது. தேனை சூட வைத்தோ அல்லது சூடான பண்டங்களுடனோ சேர்த்து சாப்பிடக்கூடாது. சூடான தேகம் கொண்டவர்கள் தேனை தவிர்க்கவும்.

மேலும் தகவல்கள் அறிய...

டாக்டர் கே.ஏ.ராஜேந்திரன்,
போன் : 9344455511

'டேட்டிங்'கில் சிக்கிய காஜல் அகர்வால்

டந்த மாதம் நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய நண் பரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் துபாய் சென்றிருந்தார். அங்கே பல்வேறு இடங்களு க்குச் சென்றவர்கள் ஜோடி யாக புகைப்படங்கள் எடுத்தத் தள்ளினர். இருவரும் நெருக்க மாக இருந்த காட்சிகளைக்கூட படம் எடுத்துள்ளனர்.

அவ்வாறு அவர்கள் எடுத்த புகைப்படங்களில் சில, திடீ ரென்று இணையதளங்களில் வெளியாக அதிர்ச்சியாகி விட்டார் காஜல். இதுகுறித்து அவரிடம் பேச முயன்று தோல்வியுற்ற நிருபர்கள், காஜலின் தங்கையிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டனர்.

'என்னுடைய அக்கா காஜல் அகர்வால், துபாய் சென்றது உண்மைதான். காஜலுக்கு நிறைய ஆண் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அனை வரும் சேர்ந்துதான் டேட்டிங் சென்றனர்' என்று பகிரங்க மாக கூறிவிட்டார்.

காஜல் அகர்வால் டேட்டிங் சென்றார் என்பதை அறிந்த நிருபர்கள், அவரிடம் மறு படியும் பேச முயன்றனர். ஆனால், காஜல் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இதற் கிடையில், காஜலும் அவரது ஆண் நண்பரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவர காரணம், அவரது ஆண் நண்பரே என்று கிசுகிசு க்கிறது கோலிவுட் பட்சி.