Saturday, 12 April 2014

24-ந் தேதி வாக்குப்பதிவு : எல்லா ஏற்பாடுகளும் தயார்


மிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் ஓட்டு களை அள்ள தீவிர முயற்சி களை மேற்கொண்டு வரு கிறார்கள். இதனால், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் வலம் வருகின்ற னர், அரசியல் கட்சியினர்.

பாராளுமன்ற தேர்தல்

நாடு முழுவதற்குமான லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 லோக் சபா தொகுதிகளுக்கும், புதுச் சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ கத்தைப் பொறுத்தவரை, மார்ச் 29-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 7-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப் பட்டன. அப்போது, 58 பெண்கள் உள்பட 350 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. ஏப்ரல் 9-ந் தேதி வரை  வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 61 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் கள் பட்டியல் இறுதி செய்யப் பட்டது. அதன்படி, 55 பெண்கள், 789 ஆண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம்  845 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். புதுச்சேரி லோக் சபா தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.

தீவிர பிரசாரம்

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிர சாரம் மேற்கொண்டு வருகின் றனர். தமிழகத்தில் பலமுனை போட்டி நிலவினாலும், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க.வின் புறக் கணிப்பால், தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங் கிரஸ் கட்சியால் ஓரளவுக்கு ஓட்டுகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அலை

இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின் றன. அதே மோடி அலை தமிழகத்தில் வீசினாலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க. அலையே இன்னும் முழுமை யான பலத்தோடு வீசுகிறது. அதனால், மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளில் மெஜாரிட்டியான தொகுதி களில் அ.தி.மு.க. வேட்பாளர் கள் வெற்றிபெறும் வாய்ப்பு தற்போது உள்ளது. இரண்டா வது இடத்தில் தி.மு.க.வும், இதற்கு அடுத்த இடத்திலேயே பாரதீய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியும் உள்ளது.

ஏப்ரல் 22-ந் தேதி மாலை 6 மணியுடன் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதுவரை எடுக்கப் பட்ட கருத்துக்கணிப்புகள் ஒருவிதமான முடிவை சொன் னாலும், தேர்தல் நடைபெறும் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், அனைத்துக் கட்சிகளும் பிர சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. கோடை வெயிலின் உக்கிரத்தையும் பொருட் படுத்தாமல் அனைத்துக் கட்சி யினரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 24&ந் தேதி, ஒவ்வொரு Ôபூத்Õகளிலும் கணிசமான ஓட்டுகளை தங்களது கட்சிக்கு விழச் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க., பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் விரும்பும் மாற்றம்

ஆனாலும், தேர்தல் களத் தில் உள்ள வேட் பாளர்களின் தலையெழுத்து என்னவோ மக்களின் கைகளில்தான் உள் ளது. வாக்குப்பதிவு இயந்திரங் களில் உள்ள பட்டன்களில் அவர்களது கை எந்தக் கட்சி யின் சின்னத்தை அழுத்தப் போகிறதோ, அப்போதுதான் வெற்றிபெறப் போவது யார் என்பது உறுதியாகும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆதரவு அலை அதிகம் இருப்பது போல, இந்தியா முழுவதிலும் மோடி அலையே வீசுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதிகப்படியான ஊழல்களையும், விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றத்தை யும் சந்தித்து நொந்துபோய் இருக்கும் மக்கள், இந்த தேர்த லில் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில், மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி பெற்ற எதிர் பாராத அமோக ஆதரவே இதற்கு சாட்சி.

மாநில கட்சிகள் ஆதிக்கம்

தேசிய அளவில் பாரதீய ஜனதா அணிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படும் அதேநேரத்தில், தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள் ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகள் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாரதீய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில், அதிகாரம் பொருந்திய மாநில கட்சி களின் ஆதரவு இந்த இரு கட்சிகளில் எந்தக் கட்சிக்கு கிடைக்கிறதோ, அந்தக் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு பலவிதங்களில் இருந்தாலும், அதற்கான விடை என்ன என்பது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ந் தேதி தெரிந்துவிடும்.

சிந்தித்து வாக்களியுங்கள்..!


தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 'வேட்பாளர்கள் தரும் பிரியாணிக்கும், பணத்துக்கும் உங்கள் வாக்கை விற்று விடாதீர்கள்; சிந்தித்து வாக்களியுங்கள்' என்று தேர்தல் கமிஷன் வாக்காளர்களை அறிவுறுத்தி உள்ளது. அதனால் மக்களே... நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள். வாக்களிப்பது என்பது உங்களது ஜனநாயக உரிமை - கடமை. அந்தக் கடமையை கண்ணியத்தோடு நிறைவேற்றுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரால், உங்கள் தொகுதியும், நாடும் எந்த அளவுக்கு வளர்ச்சிபெறும் என்பதை கவனத்தில் கொண்டு வாக்களியுங்கள். உங்களின் வாக்கு, நம் தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடட்டும்.

நீங்கள் வாத தேகம் கொண்டவரா?


கேள்வி: வாதம், பித்தம், கப தேகம் என்று சொல்கிறார்களே... அப்படியென்றால் என்ன? விரிவாக விளக்குங்களேன். (எஸ்.சந்தியா, சோமங்கலம்)

பதில் : மனிதனுடைய உடல் வாகு, வாத தேகம், பித்த தேகம், கப தேகம் ஆகியவற் றால் ஆனது. இந்த ஒவ்வொரு தேகத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. மனிதர்களில் பெரும்பாலானோர் இருவித உடல்வாகு கொண்டவர் களாக இருப்பர். உதாரணம்: வாத-பித்த தேகம், பித்த-கப தேகம் அல்லது வாத-கப தேகம்.

வாத தேகம் கொண்டவர் களின் உடல் அமைப்பு எப்படி இருக்கும் என்று முதலில் சொல்கிறேன். இவர்களின் உடல் இலகுவான தன்மை கொண்டிருக்கும். மெலிந்த உருவத்தோடு காணப்படுவர். பேச்சில் வறட்சி, தளர்ச்சி தெரியும். கண்கள் சிறியது. ஆழ்ந்த உறக்கம் வரும். தூங்கும்போது வாய், கண்கள் சற்றே திறந்திருக்கும். தூங்கும் போது பற்களை அடிக்கடி கடித்துக்கொள்வர். உடலில் வறட்சித் தன்மை, காலில் வெடிப்பு அதிகம் இருக்கும்.

இவர்களின் -குரல், கீச்சென்று அழுகுரல் மாதிரி இருக்கும். அதிகம் வியர்க்காது. தலைமுடி சுருண்டு, சொர சொரப்பாக காணப்படும். நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இவர்களின் உணவு பழக்க வழக்கம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நண்பர்கள் குறைவு. அப் படியே நண்பர்கள் இருந்தா லும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பர். பேச்சில் தடுமாற்றம், கடுமை இருக்கும். நடக்கும்போது சத்தத்துடன் நடப்பர். நாட்டியம், இசை ஆகியவற்றை ரசிப்பர். பொறாமை குணம், பிறருக்கு இம்சை அளித்தல் ஆகிய குணங்களை கொண்டிருப்பர்.காபி, சாக்லெட், சர்க்கரை பண்டங்கள் மீது பிரியம் உண்டு.

வாத தேகம் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சற்றே வலி அதிகமாக இருக்கும். செயல் களில் திறன் இல் லாத தன்மை கொண்டிருப்பர். வாயுவின் வேகத் தன்மையால் இந்த உடல்வாகு கொண்டவர்கள் எந்தக் காரியத்தையும் சீக்கி ரமாக தொடங்கிவிடுவார்கள். மனதில் மாறிமாறி ஒருவித விருப்பு&வெறுப்பு, தளர்ச்சி, பொறாமை தோன்றிக் கொண்டே இருக்கும்.  வார்த் தைகளை விரைவாக கிரகித் துக்கொள்வர். ஆனால், சீக்கிரம் மறந்துவிடுவர்.

கடவுள் பக்தி இவர்களிடம் குறைவு. நல்லவை நடக்கும் போது கடவுளை புகழ்வர். கெட்டவை நடந்தால் திட்டு வர். எந்த வழியிலும் சந்தோ ஷம் தேடுபவராக இருப்பர். சூதாட்டத்தில் விருப்பம் உண்டு. ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் திறன் இருக் காது.

குளிர்ந்த காற்று, குளிர்ச் சியான பிரதேசம் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதிக குளிர்ச்சியால் உடல்வலி, விரைப்பு, கை&கால்களில் வெடிப்பு ஆகிய பிரச்னை களுக்கு ஆளாகுவர். மலச் சிக் கல் இருக்கும். மற்றவர்களை போன்று வலி தாங்கும் சக்தி இவர்களிடம் இருக்காது.

விருப்பமானவை : வெப்ப மான காலநிலையை வாத தேகத்தினர் மிகவும் விரும்பு வர். தாம்பத்திய உறவைப் பற்றி பலவித எண்ணம், கற்பனைகள் கொண்டிருப்பர். நிலையற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற கனவுகளைக் காண்பர். சீரான வாழ்க்கை மேற்கொள்ள முடியாததால், இவர்களின் தினசரி நடவடிக் கைகள் ஒழுங்காக அமையாது.  தங்களை சுற்றி உள்ளோரை அலைக்கழித்து விடுவர். ஒவ் வொன்றையும் மாற்றிக் கொண்டிருக்கும் இயல்பு கொண்ட இவர்கள், சத்வம், ரஜஷ், தமஸ் ஆகிய மூன்று வகை குணங்களில், தங்களது நிலையற்றத் தன்மையால் ரஜோ குணத்தை பிரதானமாக கொண்டிருப்பர். நாய், ஒட்ட கம், கழுகு, எலி, நரி ஆகியவை வாதத் தன்மை கொண்ட விலங்குகள்.

வாத தேகத்தினர் எந்த மாதிரியான உணவு வகை களை உட்கொள்ள வேண் டும்? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? இவர் களுக்கு வரும் நோய்களை முன்கூட்டியே எப்படி தடுப்பது?

அடுத்த இதழில் பார்க்கலாம்...

நீங்களும் பில்டர் ஆகலாம்..! - 11

 
வெற்றி தரும் 'அம்பானி பாணி'

ம்பானியை தெரியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. ரூ.15 ஆயிரம் முத லீட்டில் தொழிலை துவங்கி, அவர் கோடிகளை குவித்ததன் பின்னணியில் இருந்தவை, அவர் எடுத்த உறுதியான& தெளிவான முடிவுகளே! குழப்பமான சூழ்நிலையில் அவர் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். சில நேரங் களில் அதிரடியான முடிவு களையும் எடுப்பார்.

ஒருமுறை குஜராத்தின் நரோடாவில் உள்ள அம்பானி யின் ஆடை உற்பத்தி ஆலை யில் அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட்டன. அந்த இயந் திரங்களுக்கு துணை பாகங் கள் அவசரமாகத் தேவைப் பட்டன. ஜெர்மனியில் அவற்றை Ôஆர்டர்Õ செய்தார் அம்பானி. அவை அகமதா பாத் வந்து சேர்ந்தன. அவற்றை நரோடா கொண்டு வர, வாடகை லாரிகளுக்கு முயற்சி செய்தனர். ஆனால், வாடகை லாரிகள் கிடைத்த பாடில்லை.

அதுபற்றி அம்பானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. 'வாடகை க்குத்தானே லாரிகள் கிடைக்க வில்லை. சொந்தமாக விலை க்கு வாங்கலாம் இல்லையா' என்று கேட்டவர், அன்றே 2 லாரிகளை விலைக்கு வாங்கி, அவற்றில் இயந்திர பாகங் களை ஏற்றி, நரோடா வரச் செய்தார். இயந்திர பாகங்கள் நரோடா வந்து சேர்ந்ததும், வாங்கிய இரு லாரிகளையும் விற்றுவிட்டார் அம்பானி. லாரிகள் வாங்கிய செலவை யும், அவற்றை விற்ற செலவை யும், அதேபோல்... வாடகை லாரிகளில் இயந்திரங்களை கொண்டு வந்திருந்தால் ஆகியிருக்கும் வாடகை செலவையும் கூட்டிக்கழித்துப் பார்த்ததில், அம்பானிக்கு லாபமே கிடைத்திருந்தது.

இன்னொரு முறை, அரேபிய நாட்டில் இருந்து அம்பானிக்கு அழைப்பு வந்தது. 'எங்களது ரோஜா தோட்டத்தில் பரப்புவதற்கு மண் தேவை. அதை, இந்தியா வில் இருந்து அனுப்பிவைக்க முடியுமாÕ என்று கேட்டார் கள். Ôஇதெல்லாம் ஒரு தொழிலா' என்று அம்பானி யோசிக்கவில்லை.

'இன்னும் சில தினங்களில் இந்திய மண் உங்கள் ரோஜா தோட்டத்தில் இருக்கும்' என்று உறுதியாக சொல்லிவிட்டார். சொன் னது போலவே, கப்பலில் அரேபியாவுக்கு இந்தியாவில் இருந்து மண்ணை அனுப்பி வைத்து, மண்ணையும் பொன் ஆக்கிக் காட்டினார்.

அம்பானியின் இமாலய வளர்ச்சியின் பின்னணியில் இப்படி அவர் எடுத்த உறுதி யான, அதிரடி முடிவுகள் நிறைய உண்டு. அந்த முடிவு களை அவர் அவசர கோலத் தில் எடுக்கவில்லை. அந்த முடிவுகளை தெளிவாக எடுத் தார். அதேநேரம், மிகமிக விரைவில்! இதுதான், அம்பா னியின் வெற்றி ரகசியம்.

பில்டர்களும் முடிவெடுக் கும் விஷயத்தில் அம்பானி போன்றவர்களை முன்னு தாரணமாகக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தெளிவான முடிவை உறுதியாக எடுக்க வேண்டும். கட்டுமானத் துறை யில் ஒரு பில்டரின் லாபத்தை நிர்ணயிப்பவை, கட்டுமானப் பொருட்களின் விலையே ற்றமே என்பதால், 'அம்பானி பாணி'யில் எப்படி திட்ட மிட்டு செயலாற்ற வேண்டும் என்பதை, பில்டராக நினைக்கும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.

இன்று, காய்கறிகளில் துவங்கி கட்டுமானப் பொருட்கள் வரையில், திடீர் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. காய்கறிகளின் விலையைக்கூட யூகித்து விடலாம். ஆனால், கட்டு மானப் பொருட்கள் அப்படி அல்ல. அவற்றின் விலைப் பட்டியலைப் பார்த்தால், எப்போதுமே ஏறுமுகம்தான்!

கட்டுமானத் துறையில் அதிகப்படியான விலை யேற்றம் காண்பது சிமெண்ட் மட்டும் அல்ல. செங்கல், ஜல்லி, இரும்புக் கம்பிகள், எலக்ட்ரிக் கேபிள்கள், டைல்ஸ், மார்பிள், பெயிண்ட் முதலான அனைத்துமே திடீர் திடீரென்று விலை ஏறக் கூடியது. பில்டர்கள், தங்கள் புராஜெக்டின் லாப சதவீத த்தை கணக்கிடும்போது, இந்த விலையேற்றத்தை முக்கிய மாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பில்டர்கள் ஒவ்வொருவரும், தங்களின் புராஜெக்ட்களுக்கு குறைந்தது 20 சதவீதம் லாபம் வைத்து, விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சிலநேரங் களில், கட்டுமானப் பொருட் கள் அதிகமாக விலையேறும் போது, நாம் தீர்மானித்த 20 சதவீத லாபம் அடிபட்டுவிடும். அதனால், விலையேற்றத்தை கருத்தில் கொண்டு, புராஜெக்ட்டுகளை வேகமாக முடிக்க வேண்டும். ஒரு பில்டர், குறித்த காலத்துக்குள் புராஜெக்ட்டுகளை முடித் தால் மட்டுமே அவரால் விலையேற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மேலும் அவர், நஷ்டமும் அடையமாட்டார்.

அதேநேரம், குறித்த கால அளவுக்குள் அவரால் புராஜெக்டுகளை முடிக்க முடியவில்லை என்றாலும், சரியாகத் திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டா லும், அவரால் விலையேற்ற வில்லனிடம் இருந்து தப்பிக்க முடியாது. அவர் நஷ்டமே அடைவார். குறைந்த லாப வரம்பை வைத்துக்கொண்டு, குறித்த காலத்துக்குள் கட்டு மானப் பணிகளை முடிக்காத எல்லா பில்டர்களுமே நிச்சயம் இந்த பிரச்னைகளை சந்திப்பார்கள்.

இந்தப் பிரச்னையை சமாளிக்க வேண்டும் என்றால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு லாப வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அடுத்த 6 மாதத் துக்குள் புராஜெக்ட்டை முடித்துவிடுவோம் என்றால் ஒரு லாப வரம்பையும், புராஜெக்ட் முடிய மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்கிற பட்சத்தில், லாப வரம்பை கூடுதலாகவும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

சில பில்டர்கள், வாடிக்கை யாளர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக குறைந்த லாப வரம்பை நிர்ணயித்துக் கொள் வார்கள். அவர்கள், கட்டு மானப் பொருட்கள் விலை யேறும்போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.

விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்கிற சூட்சுமத்தை பில்டராக நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். மரம் போன்ற சில கட்டுமானப் பொருட்களை, அவற்றின் விலை சற்று குறைவாக இருக்கும்போதே முன்பணம் செலுத்தி ஆர்டர் செய்துகொள்வது புத்திசாலித் தனம். அவ்வாறு, நாம் முன் னரே ஆர்டர் செய்திருந்தால், நாம் கேட்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரி, அந்த பொருட்களை நமக்கு சப்ளை செய்து விடுவார்.

மரத்தை சேமித்து வைப் பதில் தவறில்லை. ஆனால், சிமெண்ட் போன்ற பொருட் களை குறிப்பிட்ட காலம் வரைதான் சேமித்துவைக்க முடியும். அதிகபட்சம் 30 நாட் கள்வரை அவற்றை சேமிக்க லாம். அதனால், சிமெண்டில் அதிகம் முதலீடு செய்ய முடியாது. என்னதான் பார்த்து பார்த்து திட்ட மிட்டாலும், சில நேரங்களில் திடீர் செலவுகள் ஏற்பட்டு விடுவது உண்டு. அதை சமாளிப்பது எப்படி?

- வீடு கட்டுவோம்...

பல் மருத்துவத்தில் பிரபலமாகும் 'இம்ப்ளான்ட்' சிகிச்சை :பல் மருத்துவர் ஜி.திருப்பதி


ல் மாற்று சிகிச்சை முறை யில் அதிநவீன வசதியான 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி, அதை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறது, சென்னை சேலையூரில் இயங்கிவரும் ஸ்ரீ ராக வேந்திரர் பல் மருத்துவமனை.

இதுகுறித்து, அந்த மருத்துவ மனையின் தலைவரும், பிரபல பல் மருத்துவருமான டாக்டர் ஜி.திருப்பதி, நமது நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

அது என்ன 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை?

செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை முறையில், 15, 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை எல்லாம் மாறி, தற்போது அதிநவீன வசதிகள் வந்துவிட்டன. அதில் ஒன்று தான் இந்த 'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை. டைட்டா னியம் மெட்டல் ஸ்குருவை, செயற்கை பல் பொருத்த வேண்டிய இடத்தில் பொருத் தி, அந்த ஸ்குரு மேலே பல் பொருத்துவதுதான் இந்த சிகிச்சை. இது செயற்கை பல் லாக இருந்தாலும், சொந்தப் பல் மாதிரிதான் இருக்கும்.

அப்படியென்றால், சொந்தப் பற்களுக்கு உள்ள வலிமை அதற்கும் உண்டா?


கண்டிப்பாக. 'இம்ப் ளான்ட்' சிகிச்சை முறையில் பொருத்தப்பட்ட செயற்கை பற்களால் கடினமான உணவுப் பொருட்களை எளிதாக கடித்து, சுவைத்து சாப்பிடலாம். நாம் உண்ணும் கடினமான உணவு பொருட் களால் இந்தப் பற்களுக்கு எந்த வகையிலும் சேதாரம் ஏற் படாது. அவ்வளவு உறுதி யானது இந்தப் பல்.

'இம்ப்ளான்ட்' சிகிச்சையின் பிளஸ் பாயிண்டாக எதைக்கருதுகிறீர்கள்?

முன்பு, பாதிக்கப்பட்ட பற் களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அதற்குப் பக்கத்தில் உள்ள இரு பற்களை Ôசப்போட்Õடாக எடுத்து, பாதிக்கப்பட்ட பல்லின் மீது 'கேப்' மாட்டிவிடுவோம். இந்த சிகிச்சையில், பாதிக்கப் பட்ட ஒரு பல்லின் சப்போட்டு க்காக, அதன் அருகில் உள்ள இரு நல்ல பற்களை பயன் படுத்த வேண்டியது இருந்தது. ஆனால், இம்ப்ளான்ட் சிகிச்சையில் அந்தப் பிரச்னை இல்லவே இல்லை. அதனால், மக்களும் விரும்பிவந்து, இம்ப் ளான்ட் முறையில் செயற்கை பல் பொருத்திக்கொள்கிறார் கள். மேலும், பழைய கேப் போடும் சிகிச்சையில், கேப் போடப்பட்ட பல்லுக்கு அருகில் உள்ள பற்கள் பல வீனம் ஆனாலோ, சொத்தை விழுந்தாலோ அல்லது பல்ஈறு கெட்டுப்போனாலோ, கேப் போடப்பட்ட பல் மறுபடியும் பாதிப்புக்கு ஆளாகும். ஆனால், Ô'இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையில் அப்படி யொரு நிலைமை வராது.

'இம்ப்ளான்ட்' சிகிச்சைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

20 நிமிடங்கள் போதும். தாடையின் எலும்போடு இந்த முறையில் செயற்கை பற்களை இணைத்து விடுவோம். ஒரு பல், இரண்டு பல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பற்கள் இல்லா தவர்களும் இந்த சிகிச்சை முறையில் பற்களை  பொருத்திக்கொள்ளலாம். நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்கள் மருத்துவமனையில் 'இம்ப்ளான்ட்' சிகிச்சை பெற்று திரும்பி இருக்கிறார் கள்.

'இம்ப்ளான்ட்' சிகிச்சை யால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

முகத்தின் அழகு இன்னும் அதிகமாகும். பற்களின் உறுதித் தன்மை அதிகரிக்கும். எல்லா வகையான உணவு களும் உட்கொள்ளலாம். எந்த வித அசவுகரியமும் ஏற் படாது. அந்நிய பொருளை பொருத்திய உணர்வு நிச்சய மாக ஏற்படாது. காலையிலும், இரவிலும் பல் துலக்குவதை, வழக்கம்போல் செய்யலாம்.  வாழ்நாள் முழுக்க பிரச்னை வராது. யார் வேண்டுமா னாலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவு ஆகுமா ?

அப்படியெல்லாம் யாரும் பயப்படத் தேவையில்லை. எல்லோருக்கும் ஏற்ற குறைந்த கட்டணத்தில் எங்கள் மருத்துவமனையில் யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் ஜி.திருப்பதி கூறினார்.

'இராவணன்' குழும நிறுவனர் பிறந்தநாள் விழா

புகழ்பெற்ற இராவணன் குழுமங்கள் மற்றும் சிம்மப் பேரவையின் நிறுவனரான டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாரின் பிறந்தநாள் விழா சேலையூரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இராவணன் குழுமம்


சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் சமையலிலும் இன் சுவை சேர்க்கும் இராவணன் மசாலா, இராவணன் குழுமங்கள், சிம்மப் பேரவை ஆகியவற்றின் நிறுவனரும், நாடார் சமுதாய பிரமுக ருமான டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாரின் பிறந்த நாள் விழா, சேலையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவில் டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு  ஆளுயர மாலையும், கிரீடமும் அணிவிக்கப்பட்டது. நாடார் சங்கப் பிரமுகர்கள், சிம்மப் பேரவை நிர்வாகிகள் என்று பலரும், டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்திய பிரமுகர்கள்


விழாவில் சிம்மப் பேரவை மாநில பொதுச் செயலாளர் அழகுவேல் தங்கராஜ், மாநில இளைஞரணி செயலாளர் ராவணன், மாநில துணைச் செயலாளர் பூவை ரஞ்சித் குமார், மாநில அமைப்புச் செயலாளர் நாஞ்சில் சசிகுமார், மாநில வர்த்தக அணி செயலாளர் க.ராதா கிருஷ்ணன், நடிகர் விஜய சிரஞ்ஜீவி, தலைமை நிலையச் செயலாளர் தங்க பெருமாள், 'சென்னை மெயில்' ஆசிரியர் எம்.ஜெயமுருகானந்தம், 'நாடார் குரல்' மாத இதழ் ஆசிரியர் 'மின்னல்' ஸ்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, டாக்டர் ஆ.இர.இராமசாமி நாடாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட டாக்டர் ஆ.இர.இராமசாமி அனைவரு க்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

ரூபி பில்டர்ஸ் வழங்கும் பட்ஜெட் வீடுகள்


டுத்தர மக்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் எனும் நல்ல நோக்கோடு, பட்ஜெட் வீடுகளை பெஸ்ட் பில்ட ரான ரூபி பில்டர்ஸ் நிறு வனத்தினர் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள்.

பட்ஜெட் வீடுகள்

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது, நடுத்தர மக்கள் பலரது கனவு. ஆனா லும், விண்ணை முட்டிக் கொண்டு போகும் விலைவாசி உயர்வால் அவர்களது சொந்த வீட்டுக் கனவு, இன்னும் கன வாகவே இருக்கிறது. இவர் களது கனவை நனவாக்கிட, தமிழகத்தின் பெஸ்ட் பில்டர் களுள் ஒருவரான ரூபி பில்டர்ஸ் நிறுவனம், பட்ஜெட் வீடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
100 சதவீத தரத்தோடும், சேவை மனப்பான்மையோடும் அவர்கள் கட்டித்தரும் இந்த வீடுகள், தாம்பரத்தை அடுத்து ள்ள இரும்புலியூர், மண்ணி வாக்கம் ஆகிய இடங்களில் விற்பனைக்கு உள்ளன.

ரூபி டீலக்ஸ்

மண்ணிவாக்கத்தில் ரூபி பில்டர்ஸ் நிறுவனம் அமைத் துள்ள Ôரூபி டீலக்ஸ்Õ வீடுகள், ரூ.20.35 லட்சம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின் றன. வண்டலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவு, பெருங்களத் தூரில் இருந்து 3 கி.மீ. தொலைவு மற்றும் தாம்பரத் தில் இருந்து 6 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது ரூபி டீலக்ஸ் குடியிருப்பு. இங்கி ருந்து, 11 கி.மீ. தொலைவிலேயே தொழில் நகரமான ஒரகடம் அமைந்துள்ளது.

24 மணி நேர பாதுகாப்பு, கார் பார்கிங், 24 மணிநேர மின்சார வசதி உள் ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது ரூபி டீலக்ஸ்.

ரூபி ரெஸிடென்ஸி

இதேபோல், இரும்புலியூரில் அமைந்துள்ள ரூபி ரெஸி டென்ஸியிலும் பட்ஜெட் விலையில் நடுத்தர மக்கள் தங்களுக்குப் பிடித்த வீட்டை வாங்கலாம். தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலை யத்தில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும், பெருங்களத் தூர் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் சென் னை நகருக்குள் அமைந்து ள்ளது ரூபி ரெஸிடென்ஸி. இங்கு, ரூ.22.6 லட்சத்தில் இருந்து ஒரு வீட்டின் விலை ஆரம்பமாகிறது.

சுவை மிகுந்த குடிநீர், 100 சதவீத சுத்தமான காற்று, சில நிமிடங்களில் தாம்பரம் மற் றும் பெருங்களத்தூர் செல் லும் வசதி ஆகிய வசதிகளுடன் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வங்கிகள், சூப்பர் மார்கெட் டுகள் ஆகியவற்றை கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது, ரூபி ரெஸிடென்ஸி.

நவீன தரம்

கட்டிய வீட்டை ஒப்ப டைத்த பிறகும், வீட்டுக்குத் தேவையான சர்வீஸ்களை இன்முகத்துடன் செய்து தரும் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் இந்த பட்ஜெட் வீடுகள், விலையில் வேண்டுமானால் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கலாம். அதேநேரம், தரத்திலும் வடிவமைப்பிலும் நவீன அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு அழையுங்கள்...
3009 3009