Tuesday, 24 September 2013
Saturday, 21 September 2013
என் மகள் நடிக்க மாட்டாள்: ஸ்ரீதேவி
தன்னுடைய மகள் ஜான்விக்கு சினிமா ஆசை இல்லை. அதனால், அவள் யார் படத்திலும் நடிக்க மாட்டாள் என்று ஆவே சமாக கருத்து தெரிவித்து உள்ளார் நடிகை ஸ்ரீதேவி.
2 மகள்கள்
50 வயதை தாண்டிவிட்டா லும், இன்னும் அழகாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருக்கு இரு மகள்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயம். வெளியுலகின் பார்வை படாமல் மகள்களை வளர்த்து வந்த ஸ்ரீதேவி, தான் ரீ என்ட்ரி கொடுத்த ‘இங்கிலீஷ் விங்கி லீஷ்’ பட விழாவுக்கு இரு மகள்களையும் அழைத்து வந்திருந்தார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கு 16 வயதாகிறது. ஸ்ரீதேவியை போலவே அழகு கொண்ட ஜான்வியை எப்படி யாவது கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என்று துடிக் கின்றனர் தெலுங்கு பட உலகினர். தெலுங்கு நடிகர் களான ராம்சரண், நாக சைதன்யா, அல்லு அர்ஜூன் என பல நடிகர்களின் படங் களில் ஜான்வியை கதாநாயகி யாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீதேவிக்கு இது பிடிக்க வில்லை. ‘ஜான்விக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. அதோடு, அவளை நடிகை ஆக்கும் எண் ணமே என்னிடம் இல்லை. அதனால், என் மகளை தேடி வருவதற்குப் பதிலாக வேறு நடிகையை தேடிச் செல்லுங் கள்’ என்று கறாராக கூறி விட்டாராம் ஸ்ரீதேவி.
அதேநேரம், ஜான்வியின் படிப்பு முடிந்ததும் அவருக்கு நல்ல மாப்பிள்ளையாக பார் த்து திருமணம் செய்து வைத்து விட ஸ்ரீதேவியும், அவரது கண வர் போனிகபூரும் கணக்குப் போடுவதாக சொல்கிறது பாலிவுட் வட்டாரம்.
இந்திய சினிமாவுக்கு வயது 100
இந்திய சினிமாவுக்கு 100 வயதாகிவிட்டது. இதன் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க சிறப்பாக நடைபெற்று வருகின் றன. இந்த நேரத்தில், நம் இந்திய சினிமா கடந்து வந்த கடினமான பாதையை நாம் இங்கே சற்று புரட்டிப் பார்ப் போம்.
இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம்: 'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படும் தாதா சாஹேப் பால்கே எடுத்த ராஜா ஹரிச்சந்திரா இந்தி யாவின் முதல் முழு நீள சினிமா என்கிற சிறப்பை பெற் றது. 1913 மே 3-ம் தேதி வெளி யான இந்தப் படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள். அந்தக் காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு பெண்கள் முன் வரவில்லை. அதனால் பால்கே, ஆண் நடிகர்களை பெண் வேடமிடச் செய்து நடிக்க வைத்தார்.
முதல் பெண் நடிகைகள்: 1914-ல் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான 'மோகினி பஸ்மசூர்' வெளியானது. இதில் பெண் களான துர்காபாயும், அவரது மகள் கமலாபாய் கோகலேயும் நடித்தனர். இந்திய சினிமாவில் முதன் முதலாக நடித்த பெண் கலைஞர்கள் இவர்களே!
முதல் வெற்றி சினிமா: தாதா சாஹேப் பால்கே இயக்கிய லங்கா தகன் 1921&ல் வெளியானது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முதலில் வசூலில் வெற்றி கண்ட படம் இது. அன்றைய பாம்பேயின் கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா அரங் கில் வெளியிடப்பட்ட இந்தப் படம் 23 வாரங்கள் ஓடியது.
முதல் சரித்திரப் படம்: 1923-ல் வெளியான சிங்கா காத் எனும் திரைப்படம்தான் இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இந்தப் படம் சக்ரவர்த்தி வீர சிவாஜியின் போர்ப்படை பற்றிய ஒரு சம்பவத்தை அடிப் படையாகக் கொண்டு எடுக் கப்பட்டிருந்தது.
முதல் பேசும்படம்: இந்தி யாவில் வெளியான முதல் பேசும் படம் ஆலம் ஆரா. 1931 மார்ச் 14-ம் தேதி வெளி யான இந்தப் படம் 124 நிமிடங்கள் ஓடக்கூடியது.
முதல் தமிழ் பேசும் படம்: தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ். இதை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. 1931 அக்டோபர் 31-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் வசனங்கள் தமிழி லும், பாடல்கள் தெலுங்கிலும் அமைந்திருந்தன. ரூ.8 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ.75 ஆயிரம் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத் துக்கான படச்சுருள் கொண்ட படப்பெட்டி சென்னைக்கு கொண்டுவரப்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து படச் சுருளுக்கு பூஜை செய்தனர்.
முதல் வண்ணப்படம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் கிசான் கன்யா. இது 1936-ல் வெளியானது. 1933&ல் மராட்டிய மொழியில் வெளி யான சைரந்த்ரி என்ற படத் தில் சில வண்ணக் காட்சிகளை ஜெர்மனிக்கு கொண்டு சென்று சேர்த்தார்கள் என் றாலும், கிசான் கன்யா படத் தில் இடம்பெற்ற வண்ணக் காட்சிகள் அனைத்தும் இந்தி யாவிலேயே சேர்க்கப் பட்டவை. அதனாலேயே அந்தப் படம் இந்தியாவின் முதல் வண்ணப் படம் என்ற பெருமையைத் தட்டிச்சென் றது.
முதல் முத்த காட்சி: இந்திய சினிமா வரலாற்றில் முதல் முத்தக்காட்சி பதிவானது 'எ த்ரோ ஆப் டைஸ்' என்ற படத்தில்தான். இதில் நடித்த சாருராயும் சீதாதேவியும் முதன்முதலாக வெள்ளித் திரையில் முத்தமிட்டுக் கொண்டனர்.
1933-ல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷு ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து 4 நிமிடங்களுக்கு முத்தமிட்டுக்கொண்டனர்.
முதல் கவர்ச்சி நடிகை: பதிபக்தி என்ற சினிமா 1922-ல் வெளியானது. இதில் சினோரின்னா மனெல்லி என்ற இத்தாலி நடிகை நடித் தார். இவர் உடலை ஒட்டிய மெல்லிய ஆடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடன மாடினார். விமர்சனங்கள் எழுந்ததால் இந்தக் காட்சி உடனடியாக மறுதணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டது.
- இப்படி கடின பாதையில் பயணித்து, பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ள இந்திய சினிமாவில், அதிர்ஷ்டம் இருந்தால் யார் வேண்டு மானாலும் கதாநாயகன், கதாநாயகி ஆகலாம்.
தமிழகத்தில் பா.ஜனதா யாருடன் கூட்டணி?
எல்லோரும் எதிர்பார்த்தது போலவே பாரதீய ஜனதா கட்சியின் வரும் நாடாளுமன்ற தேர்தலுக் கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார், நரேந்திர மோடி. இந்த அறிவிப்பு, பாரதீய ஜனதா கட்சியினரை மேலும் உற்சாகம் அடையவைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
இந்தியாவின் 19-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த 7 மாதங்களில் நடை பெற உள்ளது. ஆளும் கட்சி யான காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரக்குழு தலை வரான குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். காங்கிரஸின் பிரதமர் வேட் பாளராக ராகுல்காந்திதான் அறிவிக்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங்கும் இதை உறுதிப்படுத்துவதுபோல் அவ்வப்போது பேசி வரு கிறார். ராகுலின் தலைமைமை காங்கிரஸ் மட்டுமின்றி தானும் விரும்புவதாக கூறி வருகிறார் அவர்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு விட்டதால், அக்கட்சியினர் இன்னும் உற்சாகமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள் ளனர். இதுவரை குஜராத் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நரேந்திர மோடி, தற்போது தேசிய அளவிலான பிரச்னைகள் பற்றி விமர்சித்து வருகிறார். பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்ட பிறகு, அரி யானா மாநிலம் ரிவாரியில் நடந்த முதல் பொதுக்கூட் டத்தில் பேசிய மோடியின் பேச்சு உணர்ச்சிகரமாக இருந் தது. 'இந்தியாவை ஒரு பக்கம் பாகிஸ்தான் அச்சுறுத்துகிறது. இன்னொரு பக்கம் சீனா மிரட்டுகிறது.
இதற்கெல்லாம் காரணம், பலவீனமான மத்திய அரசுதான்' என்று குற்றம்சாட்டியவர், 'இது மாற்றத்தை காணவேண்டிய நேரம். அந்த மாற்றத்தை இளைஞர்கள்தான் ஏற்படுத்த வேண்டும். பலமான தலை மைக்கு வழிவகுக்க வேண்டும். அதற்கு உங்கள் வாக்கு முக்கியம். அதனால், வாக் காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிசெய்து கொள் ளுங்கள்' என்று, இளைஞர் களுக்கு அழைப்புவிடுத்தார்.
திருச்சி மாநாடு
மோடியின் தேர்தல் பிர சாரம் வடமாநிலங்களில் தற்போது மையம் கொண் டுள்ள நிலையில், திருச்சியில் வருகிற26&ம் தேதி நடைபெற உள்ள பா.ஜனதாவின் Ôஇளம் தாமரைÕ மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழ கத்தைப் பொறுத்தவரையில், கூட்டணி அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதா தயாராகவே இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் ஆதர வான வாய்ஸைகூட அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
'நடிகர் ரஜினிகாந்த், நடிகர் என்பதை விட, தேசியத்தின் மீதும் ஆன் மிகத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதால், அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர், மோடி தலைமையிலான எங்கள் அணியை ஆதரவிக்க வேண்டும்' என்று, தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் திறந்த மன தோடு சொல்லிவிட்டார். அதனால், திருச்சி மாநாட்டில் மோடி பேசும்போது, கூட் டணி பற்றிய முக்கிய அறிவிப்பு அல்லது வேண்டுகோளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்வானி வருவாரா?
திருச்சியில் நடைபெறும் இளம் தாமரை மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள இருப்பதால், மாநாட்டை பிரம்மாண்ட அளவில் நடத்த தமிழக பார தீய ஜனதா எல்லா ஏற்பாடு களையும் செய்து வருகிறது.
திருச்சி மாநாட்டில் அத்வானி கலந்துகொள்வாரா, மாட்டாரா என்கிற கேள்வி எழுந்தாலும், அவர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவே அக்கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. பிரதமர் வேட்பா ளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவதை அத்வா னியும் அவரது ஆதரவாளர் களும் ஆரம்பத்தில் ஆதரிக்க வில்லை என்றாலும், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களின் தொடர் பேச்சுவார்த்தை களால் அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்தார் அத்வானி. 'பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி வரவேண்டும் என்ப தற்காகத் தான் நாங்கள் அவரை பிரத மர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். நாட்டின் நலனை கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள் ளோம்' என்று நிருபர்களிடம் கூறினார் அத்வானி.
சுறுசுறுப்பு
பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் தேர்வு சுமுகமாக முடிந்துவிட்டதால், அந்தக் கட்சியினர் உற்சாகம் அடைந் துள்ளனர். அதே உற்சாகத் தோடு தேர்தல் களத்திலும் சுறுசுறுப்பாக இறங்கியுள்ள னர்.
அம்மா மினரல் வாட்டர் திட்டத்துக்கு அமோக வரவேற்பு
அம்மா மலிவு விலை உணவகம் மக்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்றுள்ள நிலையில், 10 ரூபாய்க்கு 1 லிட்டர் மினரல் வாட்டர் தரும் Ôஅம்மா மினரல் வாட் டர்Õ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பொது மக்களுக்கு குறைந்த விலை யில் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டு உள்ள இந்தத் திட்டம், இந்தி யாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக விலை
பஸ்களில் வெகுதொலைவு பயணிக்கும்போது, கையோடு குடிநீர் அடங்கிய பாட்டிலை எடுத்துச் செல்வது அவசிய மாகிறது. சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான மக்கள் மினரல் வாட்டரையே பயன்படுத்துவதால், பஸ் பயணத்தின்போது கடை களில் விற்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங் கிச் செல்கின்றனர். ஒரு லிட் டர் மினரல் வாட்டர் கொண்ட பாட்டில் 20 ரூபாய் க்கு விற்கப்பட்டாலும், வேறு வழியில்லாததால் அதை வாங்கிவந்தனர் பயணிகள்.
இந்நிலையில், நீண்ட தொலைவு பயணிக்கும் மக்களின் வசதிக்காக, தமிழக அரசு போக்குவரத்துக்கழகங் களின் சார்பில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையங்கள் திறக்கப் பட்டு, மலிவான விலையில் மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படும் என்று முதல்& அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். முதல் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்துக்கழக நிறுவன வளாகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக த்தின் சார்பில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்டது.
அமோக வரவேற்பு
இங்கு, 1 லிட்டர் கொள் ளளவு கொண்ட மினரல் வாட்டர் பாட்டில்கள் தயா ரிக்கப்பட்டன. இதன் சேவையை கடந்த 15-ம் தேதி முதல்&அமைச்சர் ஜெய லலிதா தொடங்கிவைத்தார்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கோயம் பேடு புறநகர் பஸ் நிலை யத்துக்கு கொண்டுவரப்படும் மலிவு விலை மினரல் வாட்டர் பாட்டில்கள், இங்கிருந்து அனைத்து பஸ் நிலையங்களு க்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் மினரல் வாட்டர் 10 ரூபாய்தான் என்பதால், மக் கள் தேடி வந்து வாங்கிச் செல் கின்றனர். இதனால், பல கடைகளில் வாட்டர் பாட்டி ல்கள் வந்துசேர்ந்த சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
மகிழ்ச்சியாக இருக்கிறது
இதுபற்றி தாம்பரம் வந்த பயணிகளிடம் கேட்டோம்.
ஆர்.ராமநாதன், காரைக்குடி: தமிழக அரசு கொண்டு வந்துள்ள மிகச்சிறந்த திட்டங் களுள் மலிவு விலை மினரல் வாட்டர் திட்டமும் ஒன்று. தனியார் நிறுவனங்களின் மினரல் வாட்டர் பாட்டில் களை, அதன் எம்.ஆர்.பி. விலையில் இருந்து கூடுதல் பணம் கொடுத்துதான் இது வரை வாங்கிவந்தோம். இப் போது, 10 ரூபாயில் 1 லிட்டர் மினரல் வாட்டர் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஏ.சந்திரா, திருநெல்வேலி: சென்னையில் இருக்கிற என் மகளை பார்ப்பதற்காக அவ்வப்போது வந்து செல் வேன். ஊருக்கு புறப்பட்டுச் செல்லும்போது என் மகளே ஒரு பாட்டிலில் மினரல் வாட் டரை ஊற்றித் தந்துவிடுவாள். இப்போது, அம்மா அறிவித் துள்ள மலிவு விலை மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கித் தந்தாள். குடிநீரின் சுவை நன்றாகவே இருக்கிறது. வெளியூர்களில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்தத் திட்டத் தால் நல்ல பலன் கிடைக்கும்.
மக்களின் நலன் கருதி தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு நல்லத் திட்டங்களுள் ஒன்றுதான், இந்த அம்மா மினரல் வாட்டர் திட்டம். இந்தத் திட்டத்தால் எழை, நடுத்தர மக்கள் பெரிய அள வில் பலனடைவார்கள்.
அதிகக் கட்டணம் தந்து தனியார் சொகுசுப் பேருந்து களில் பயணிப்போருக்கு மினரல் வாட்டர் தரப்படுவது உண்டு. இப்போது, அம்மா மினரல் வாட்டர் திட்டத்தின் மூலம், அரசு பஸ்களில் பய ணிக்கும் பயணிகளுக்கு மலி வான விலையில் மினரல் வாட்டர் தரப்படுவது, பொதுமக்கள் மீதான தமிழக அரசின் கனிவான அக்கறை யையே காட்டுகிறது. அத னால், இந்தத் திட்டத்துக்கு மக்களின் ஆதரவு அமோ கமாக கிடைத்துள்ளது.
மழைநீர் சேகரிப்பு
அதேநேரம், அம்மா மினரல் வாட்டர் பாட்டிலில் இடம் பெற்றுள்ள பச்சை நிற லேபி ளில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களும் இடம்பெற்றுள் ளன. இந்த விழிப்புணர்வு விளம்பரம் நல்ல பலன் தரும் என்று அரசு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அழகி ஆனார் இந்தியாவின் நீனா
இந்திய வம்சாவளிப் பெண்ணான நீனா, மிஸ் அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அழகிப் போட்டி
2014&ம் ஆண்டுக்கான மிஸ் அமெரிக்கா அழகியை தேர்வு செய்யும் போட்டி அமெரிக் காவின் நியூஜெர்சி மாகாணத் தில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. அமெரிக் காவின் பல்வேறு மாகாணங் களைச் சேர்ந்த 53 அழகிகள் போட்டியில் கலந்துகொண்ட னர். நீச்சல் உடை அணி வகுப்பு, நடனம், பாடல், அறிவுத்திறன்... என்று நடத் தப்பட்ட இந்தப் போட்டியின் நிறைவில், நியூயார்க்கில் வசித்து வரும் நீனா தவுலூரி, 2014-ம் ஆண்டுக்கான மிஸ் அமெரிக்கா அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
24 வயதான நீனா, இந்திய வம்சாவளிப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென் றதன் மூலம் 50 ஆயிரம் டாலர் மதிப்பிலான பரிசுத் தொகை யும் நீனாவுக்கு கிடைத்தது.
முன்னதாக நடந்த இறுதிப் போட்டியில் அழகாக நடன மாடி பார்வையாளர்களை கவர்ந்தார் நீனா. அதோடு, இறுதிச்சுற்றில் நடுவர்கள் கேட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக பதில் அளித்தார். 'உங்களின் கண்களைப் பார்க்கும்போது, அது நீங்கள் ஓர் ஆசியப் பெண் என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறது. அதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றச்சொன்னால் என்ன செய்வீர்கள்' என்று நடுவர்கள் கேட்டபோது, 'நீங் கள் எப்படி இயல்பாக இருக் கிறீர்களோ, அதில் நம்பிக்கை வையுங்கள். அது போதும். என்னைப் பொருத்தவரை, பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் எனக்குத் தேவையில்லை' என்றார் நீனா.
டாக்டர் நீனா
நீனாவின் தந்தை அமெரிக்காவில் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். தந்தையைப் போலவே நீனாவும் மூளை சார் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று டாக்டராக இருக்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது.
எந்த அணியில் விஜயகாந்த்?
சுப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து சொன் னதுதான் சென்ற மாதத்தில் அரசியல் ஹாட் டாபிக். ராகுல்காந்தியிடம் வாழ்த் துப் பெற்றுவிட்டோம் என்று விஜயகாந்த் அசட் டையாக இருந்துவிட வில்லை. இதைத் தொடர்ந்து நடந்த தே.மு.தி.க. தலைமை செயற்குழுக்கூட்டத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இனிய அதிர்ச்சி
எந்தக் கட்சியோடு கூட் டணி வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை விஜய காந்திடம் அளிக்கும் தீர்மான மும் அன்று நிறைவேற்றப் பட்டது. விஜயகாந்தின் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய அதிர்ச்சி கொடுப்பது முதல் தடவை யல்ல. மூன்று வருடங்களுக்கு முன்பே இது நடந்துவிட்டது.
பிறந்த நாளன்று விஜயகாந்த் வீட்டிற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். பாசத்தோடு விஜயகாந்துக்கு ஸ்வீட்டை ஊட்டிவிட்டார். அவர் பண்ருட்டி ராமச் சந்திரனிடம் பாதி ஸ்வீட் கொடுத்தவுடன் ‘எல்லாத்தி லேயும் இதேபோல பாதிப் பாதி கொடுப்பீங்களா” என்று கேட்டார் பண்ருட்டியார். அவர் கேட்டது சட்டமன்றத் தொகுதிகளை.
சமீபத்தில் விஜயகாந்த் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்துப் பேசி விட்டார் என்று சில செய்தி கள் உலவுகின்றன. தி.மு.க. தலைமையோடு தொடர்பு இருக்கிறது என்று சில செய்தி கள். இப்படி பலவிதமான ஊகங் களுக்கு இடம் கொடுத்திருக் கும் விஜயகாந்த் யாரோடு கூட்டணி சேரப் போகிறார் என்பதுதான் சமீபத்திய சஸ்பென்ஸ்.
ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ள நிலையில், விஜயகாந்த் சவுகரியமாக இருக்கிறார் என்பதுபோல ஒரு தோற்றம் மீடியாவில் உலவுகிறது. ஆனால் அது உண்மைத் தோற்றம் அல்ல. அவரைப் பொறுத்தவரை எந்தப் பக்கம் போனாலும் இடிக்கிறது என்பதுதான் உண்மை.
கிராமப்புறங்களில் சொல்லப்படும் ஒரு விடுகதையைப் போல இருக்கிறது அவருடைய நிலைமை. புலி, ஆடு, புல்லுக் கட்டு என்பதுதான் அந்த விடுகதை.
ஒரு விவசாயி ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போக வேண்டும். அவரோடு ஒரு புலியும், ஒரு ஆடும், ஒரு புல்லுக்கட்டும் இருக்கிறது. மூன்றையும் அவர் அக்கரை க்குப் படகில் அழைத்துப் போக வேண்டும். படகு அவரைத் தாங்கும். இன் னொன்றை ஏற்றலாம். அவ் வளவுதான். அதற்குமேல் ஏற் றினால் படகு கவிழ்ந்துவிடும்.
புல்லுக்கட்டை எடுத்துக் கொண்டு படகில் போனால் போய் வருவதற்குள் ஆடு, புலியின் வயிற்றில் அடக்க மாகிவிடும். புலியை அழைத் துக்கொண்டு போனால் அதற்குள் ஆடு புல்லுக்கட்டை ஜீரணம் செய்துவிடும். ஆட்டை அழைத்துக் கொண்டு அந்தக்கரையில் விட்டுவிட்டு வந்தால், அடுத்த பயணத்தில் பிரச்னை உண்டாகும். இப்ப டிப்போகும் அந்த விடுகதை.
அதே நிலைதான் தே.மு. தி.க. தலைவர் விஜய காந்திற்கு! தேர்தலில் கரன்சி தான் முக்கியம் என்று நினைத்து காங்கிரசோடு கூட்டணி வைத்தால், ஈழப் படுகொலை என்ற பாவ மூட்டையை இவரும் சுமக்க வேண்டும். வலுவான அமைப்புகள் கொண்ட கட்சி என்ற முறையில் தி.மு.க.வோடு உடன்பாடு செய்துகொண் டால் ஏற்கனவே பேசிய பேச் சுக்கள் அவரை வழிமறிக்கும்.
விமர்சனம்
‘அரசியல்வாதியாக நான் மாறியபிறகு தெரிந்துகொண்ட முதல் விஷயம் ஜனநாயக நாட்டின் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூட முடிய வில்லை என்பதே! அரசியல் நாகரிகம் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும் அடிக்கொரு தரம் பேசும் கருணாநிதியின் ஆட்சியில், மாற்றுக் கட்சியினர் பேனர் வைப்பதற்குகூட பிரச்னைகள் தரப்படுகின்றன என்றால், எந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கருணாநிதி மீது குற்றம் சாட்டினார் விஜயகாந்த்.
5 மாதங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ்ப் புத்தா ண்டு தை மாதம் துவங்கும் என்று அறிவித்த கரு ணாநிதி அரசின் ஆணையை விஜயகாந்த் கண்டித்துப் பேசி னார். கருணாநிதியின் பேச்சால் தான் சேது சமுத்திரத் திட்டம் குளறுபடியானது என்றும் குற்றம் சாட்டினார்.
பின்னர், அ.தி.மு.க.வோடு தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்டு கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டி யிட்ட தே.மு.தி.க. சட்ட மன்றத்தில் பிரதான எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தை பெற் றது. வெற்றிபெற்ற தொகுதிகள் 29.
தனித் தொகுதி செல்வாக்கு
தனித் தொகுதிகளைப் பொறுத்தவரை 46 தொகுதி களில் அ.தி.மு.க. 28 இடங் களிலும், தே.மு.தி.க. 5 இடங் களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 8 இடங்களிலும், புதிய தமி ழகம் 2 இடங்களிலும், இந் தியக் குடியரசுக் கட்சி 1 தொகுதியிலும் வெற்றிபெற்றன. தி.மு.க.வுக்குக் கிடைத்த தனித் தொகுதிகள் 2 தான். அந்த அணியில் இருந்த விடு தலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தே.மு.தி.க.வுக்கு தாழ்த்தப் பட்ட மக்களிடம் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இருந்தாலும், நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். டில்லியில் யார் பிரதமராகப் போகிறார் என்றுதான் மக்களின் வாக்கு முடிவு செய்யும். தனியாக நின்று தே.மு.தி.க. இதில் சாதிக்கப் போவது எதுவும் இல்லை.
புலியா, ஆடா, புல்லுக் கட்டா என்று தேர்வு செய் வதில்தான் விஜயகாந்தின் சாமர்த்தியம் வெளிப்படப் போகிறது. சில மாதங்களில் அது தெரிந்துவிடும். ஆனா லும், கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே கட்சித் தொண்டர்களின் விருப்பப் படி கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tuesday, 17 September 2013
சிகாகோ மாநாடு: நம் சிந்தையில் மாற்றம் தரட்டும்!
நெல்லை விவேகநந்தா
1893 செப்டம்பர் 11-ம் தேதி.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டால், அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சமய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து குவிந்தனர். அங்குள்ள கலைக்கழகத்தின் கொலம்பஸ் ஹாலில் (இந்த ஹாலில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், 4-ஆம் நாள் முதல், மாநாட்டின் பிற நிகழ்ச்சிகள் அங்குள்ள வாஷிங்டன் ஹாலுக்கு மாற்றம் செய்யப்பட்டன.) மாநாடு துவங்கியது.
அதில் பங்கேற்க வந்த பிரதிநிதிகள் அனைவரும் தங்களுக் கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைக்குச் சென்று அமர்ந்தனர். சுவாமி 31-ம் இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து முடித்ததும் அந்த ஹால் முழுவதும் ஒரே நிசப்தமாக இருந்தது. அனைவரும் கட்டுக்கோப்பாக அமைதியாக இருந்தனர். அந்த அமைதிக்கு மத்தியில் பியானோ இசைக்கருவி இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 'கடவுளை துதியுங்கள்...' என்ற கிறிஸ்தவ துதிப்பாடல் பாடப்பட்டது.
அதன்பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. முதல் நாள் வரவேற்புரைகளும், அதற்கு பிரதிநிதிகள் அளித்த பதில் களும் இடம்பெற்றன. கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப்பாக இருந்த ஜாந்தே முதன் முதலில் பேசினார். அதைத்தொடர்ந்து பிற நாட்டு பிரதிநிதிகள் பேச ஆரம்பித்தனர்.
பிரதிநிதிகள் ஆரவாரம்
ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளின் பேச்சையும் பார்வை யாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். பிரதிநிதிகள் கம்பீரமாக உணர்ச்சிபொங்கப் பேசும் போது அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தாங்கள் வைத்திருந்த தொப்பி, கைக்குட்டை போன்றவற்றைக் கையில் எடுத்து அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப் படுத்தினர்.
4 பிரதிநிதிகள் பேசியதும் காலை நிகழ்ச்சிகள் நிறைவ டைந்தன. உணவு இடைவேளை முடிந்ததும் பிற்பகல் நிகழ்ச் சிகள் ஆரம்பமாகின. ஒருவர்பின் ஒருவராகப் பேச ஆரம்பித் தனர். சுவாமிஜி பேசுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந் தது. அவருக்கான நேரம் வந்தபோது, நிகழ்ச்சியை நடத்துபவர் அவரை பேச வருமாறு அழைத்தார். சுவாமிஜி என்ன நினைத் தாரோ, 'அடுத்த முறை பேசுகிறேன்' என்றார். அடுத்தமுறையும் வந்தது. அப்போதும் 'பிறகு பேசுகிறேன்' என்றார்.
சுவாமிஜியின் இந்த பதிலால், அவர் பேசுவாரோ பேச மாட்டாரோ என்ற சந்தேகம்கூட அங்கிருந்தவர்களுக்கு வந்தது. நேரமும் நண்பகலை கடந்து, மாலைநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, பேச வருமாறு மீண்டும் சுவாமிஜி க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புலி பதுங்குவது பாயத்தான் என்பதுபோல், அதுவரை அமைதிக்காத்த நம் சுவாமிஜி, மிடுக் கோடு எழுந்தார். அந்த மகாசபையில் கூடியிருந்தோரைத் தனது பார்வையால் ஒருமுறை பார்த்துவிட்டு தனது எழுச்சி மிக்க உரையை ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.
'என் அமெரிக்க சகோதர சகோதரிகளே...'
- இப்படி சுவாமி சொன்னதும்தான் தாமதம், மகா சபையில் இருந்த அத்தனை பேரது பார்வையும் அவர் மீது வேகமாக வந்து பதிந்தன. அதற்கு முன்பு பேசியவர்களின் பேச்சை ஏனோதானோவென்று கேட்டவர்கள்கூட சட்டென்று அமைதியாகி, நம் வீரத்துறவியைப் பார்த்தனர். அடுத்த நொடியே பலத்த கரகோஷங்கள் எழுந்தன. பலர் எழுந்துநின்று கைதட்டினர். அந்த பலத்த ஓசையில் அந்த அரங்கமே அதிர்ந்தது.
சிகாகோ உலக சமய மாநாட்டில் கம்பீரமாகப் பேச ஆரம்பித் தார் சுவாமி விவேகானந்தர்.
'இன்பமும், இதயமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தை கள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும், பிரிவு களையும் சேர்ந்த கோடிக்கணக்கான இந்துக் களின் பெயரால் நன்றி கூறுகிறேன்...' என்று, தனது வீர உரையின் முழக்கத்துக்கு முன்னதாக நன்றிகள் பல சொன்னவர், அடுத்ததாக...
'பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி - இவை, இந்த அழகிய உலகத்தை நெடு நாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை, இந்த பூமியை நிரப்பி யுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ் கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலை குலையவும் செய்துவிட்டன. அந்தக் கொடிய-அரக்கத் தனமான செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால், மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயர்நிலையை அடைந்திருக்கும்' என்று கர்ஜித்தார்.
ஒரே நாளில் பிரபலம்!
உரையாற்றி முடித்ததும் மேடையில் இருந்து கீழே இறங்கினார் சுவாமிஜி. பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஆண் களும், பெண்களும் முண்டியடித்துக்கொண்டு சுவாமிஜியை நெருங்க முயற்சித்தனர். சிலர், அவர் அணிந்திருந்த ஆடையைத் தொட்டுப்பார்க்கக்கூட ஆசைப்பட்டனர்.
மறுநாள் சிகாகோ நகர் வீதிகளில் விவேகானந்தரின் படம் இப்போதைய பேனர்கள் போன்று வைக்கப்பட்டன. அந்தப் படத்தின் அடியில் 'இந்து துறவி விவேகானந்தர்' என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த படத்தில் சுவாமிஜியின் காவிநிற ஆடையிலான வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்த பலர், ஒருசில நொடிகள் அங்கே நின்று, அந்தப் படத்தை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு நகர்ந்தனர். சிலர் அந்த படத்தில் இருந்த சுவாமிஜியை கைகூப்பி வணங்கவும் செய்தனர்.
இப்படியாக ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் அவர் புகழ் பரவியது. சிகாகோ உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைகளில் 6 உரைகள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றில், முதல் மற்றும் மூன்றாம்நாள் உரைகள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன.
இதுதான் இந்துமதம்!
செப்டம்பர் 15-ம் தேதி இரண்டாவது உரை நிகழ்த்தினார். அன்று, நாம் எல்லோரும் தெரிந்த 'கிணற்றுத் தவளை' கதையைக் கூறி விளக்கம் அளித்தார். செப்டம்பர் 19-ம் தேதி 'இந்து மதம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, துன்பத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? என்பதற்கு அழகான உதாரணம் ஒன்றை குறிப்பிட்டார். அதை சுவாமிஜி வாயாலேயே நாம் கேட்போம்...
'ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், இந்தியாவின் அன்றைய சக்கரவர்த்தியாக இருந்த யுதிஷ்டிரர். அவர் பகை வர்களால் நாட்டில் இருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் சிறந்து விளங்கும் உங்களுக்கு ஏன் துன்பம் வரவேண்டும்?' என்று கேட்டாள்.
அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி! இதோ... இந்த இமயமலையைப் பார்; எவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது? நான் இதனை நேசிக்கிறேன். ஆனால், இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும், கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால்தான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும், கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே! அவரை நேசிப்பது என் இயல்பு. அதனால், நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்குவேண்டு மானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே நான் அவரிடம் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது' என்றார்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும், வனப்போடும், வலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப்பெற்று வாழ்கிறார்கள். இன்னும் சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும், நொண்டி யாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள்.
பிறவி இன்பம்
இவர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும், கருணையும் கொண்ட அந்த இறைவன், ஒருவரை இன்பத்தில் திளைப் பவராகவும், இன்னொருவரை துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறு பாடு காட்ட வேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப் படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட இறைவனின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயரடைய வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய இறைவன் ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக்கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவுப் படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படி யென்றால், ஒருவன் மகிழ்வதற்கோ, துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள் அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே, அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம் பரையாக வருகிறது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
அதுபோன்றது அது!'
- இப்படி மிக நீண்ட உரை நிகழ்த்தினார் விவேகானந்தர்.
செப்டம்பர் 20&ந் தேதி, 'மதம், இந்தியாவின் அவசரத் தேவை யன்றுÕ என்ற தலைப்பிலும், செப்டம்பர் 26&ந் தேதி Ôபுத்த மதம் இந்து மதத்தின் நிறைவு' என்ற தலைப்பிலும் பேசினார்.
நிறைவு உரை
17 நாட்கள் நடைபெற்ற உலக சமய மாநாடு செப்டம்பர் 27-ம் தேதி நிறைவுபெற்றது. அன்று சுவாமிஜி பேசுகையில், 'விதையானது தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும், காற்றும், நீரும் அதைச் சுற்றிப் போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை! அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும், மண்ணையும், நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒரு செடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே! கிறிஸ்தவர் இந்துவாகவோ, பவுத்தராகவோ மாற வேண்டியது இல்லை. அல்லது இந்து பவுத்தராகவோ, கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, தன் வளர்ச்சி விதியின்படி வளர வேண்டும்'என்று குறிப்பிட்டார்.
சிகாகோவில் கர்ஜித்த சுவாமி விவேகானந்தரின் விருப்பங்கள், நம் சிந்தையில் உட்புகுந்து நல்ல மாற்றங்கள் பல கொண்டு வரட்டும்.
- 11.9.2013 சென்னை மெயிலின், சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா சிறப்பு மலரில் இருந்து...
முடிவுக்கு வராத இலங்கை தமிழர் பிரச்னை: தேசிய எழுச்சியே தீர்வு
சுப்பு
இலங்கை தமிழர்களின் வாழ்வு மலர வேண்டும் என்றால், இந்தியாவில் தேசிய அளவிலான எழுச்சி ஏற்பட வேண்டும். இந்திய மக்களிடையே, அனைத்து மொழிகளிலும் ஈழத் தமிழர் படும் பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டும் அப்போதுதான் இலங்கை தமிழர் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்படும். இதுதொடர் பான சிந்தனை மாற்றம் காலத்தின் கட்டாயமாகி உள்ளது.
காமன்வெல்த் மாநாடு
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது. அங்கே நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்நிலையில், இலங்கை தமிழர்களின் வாழ்வு மலர எந்தமாதிரியான நடவடிக்கை கள் தேவை என்பதை நாம் ஆராய்வது அவசியமாகிறது.
பகவான் புத்தர் வாழ்ந்த காலத்தில், கர்மவினை பற்றி அவரிடம் பலமுறை கேட்கப் பட்டது. மனிதர்களின் துன் பங்களுக்கு, அவர்களுடைய முற்பிறவிச் செயல்தானே காரணம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. பலமுறை இதற்கு பதில் சொல்வதை தவிர்த்த புத்தர், முடிவாக ஒருநாள், 'நீங்கள், எய்தப்பட்ட அம்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறீர்கள். நான் அடிப்பட்ட பறவை க்கு நிவாரணமும் நிம்மதியும் கொடுத்துக்கொண்டிருக் கிறேன்' என்றார்.
அதிர்ச்சி தகவல்!
ஈழத் தமிழர் பிரச்னையும் கிட்டத்தட்ட இதே நிலைமை யில்தான் இருக்கிறது. இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சேவை இனப் படுகொலை க்காகவும், மனித உரிமை மீறலுக்காகவும் தண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தின் சில அரசியல் கட்சி தலைவர் கள் முனைப்பாக இருக்கிறார் கள். இவர்களிடம், அம்பைப் பற்றிய ஆராய்ச்சி மட்டும்தான் இருக்கிறது. இவர்களுடைய நடவடிக்கைகளால் இலங்கைத் தீவில் வாழும், எஞ்சியுள்ள தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
இலங்கையில் நடந்த போரைத் தடுப்பதற்காக பாடுபட்டவர் நார்வேயைச் சேர்ந்த முன்னாள் அமைதி தூதர் எரிக் கோல்ஷீம். இவர், 'ஆஃப்டன் போஸ்டன்' என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், 'விடுதலைப் புலிகளின் தோல் விக்குப் பிறகும் தமிழர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு நியாயமான முறையில் உரிமைகள் வழங்கப் பட வேண்டும். இலங்கை அரசு அதற்கான நடவடிக்கை களை எடுக்காவிட்டால் அங்கே இன மோதல் மீண்டும் வெடிக்கும்' என்று கூறி இருக்கிறார்.
கட்சிக்காரர்கள் முன்னிலையில், பொதுக்கூட்ட மேடைகளில், 'என் வாழ்நாளிலேயே தமிழீழத்தைக் காணவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை' என்று கூறினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால், அவரைச் சார்ந்தவர்கள் நடத்திய டெசோ மாநாட்டில் தமிழீழம் குறித்த குரல் எழுப்பப்படவில்லை. மத்திய அரசின் நிர்பந்தமே இந்த மவுனத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்துக்கான ஆணைக்குழு' முன்பு மக்கள் அளித்த சாட்சியங்கள், இலங்கை ராணுவத்துக்கு எதிராக இருக்கின்றன. விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டியும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன என்பதுகூட தமிழ் நாட்டில் முழுமையாக உணரப்படவில்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த செய்தி எட்டவே இல்லை. இது ஏன் என்ற கேள்வி நம்மை வதைக்கிறது.
இந்திய அளவில் ஆதரவு தேவை
கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி, ஐ.நா. மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. சீனா, கியூபா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 8 நாடுகள் வாக்களிக்கவே இல்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகத்தில், ‘in consultation with and with the concurrence of the government of sri lanka’ என்று மாற்றம் செய்யப்பட்ட பிறகே அதை நிறைவேற்ற முடிந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்ற முழக்கங் களோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
தமிழக அரசியல் சக்திகளால் உலக அரங்கில் ஈழத் தமிழர் களுக்கு ஆதரவான கருத்தை உருவாக்க முடியாது. அம்மை யப்பனைச் சுற்றாமல் அகில உலகத்தையும் சுற்றிவருவது வெற்றியைத் தராது. இந்தக் களத்தில் மக்கள்தான் அம்மை யப்பன் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று நம் முன் உள்ள தீர்வு ஒன்றுதான். இலங்கை பிரச்னை தொடர்பான தமிழர் கவலையை இந்தியக் கவலையாக மாற்ற வேண்டும். இந்திய மக்களிடையே அனைத்து மொழிகளிலும் ஈழத் தமிழர் படும் பாட்டை எடுத்துச்சொல்ல வேண்டும். ஓங்கோலிலும், ஒடிஸாவிலும், பரோடாவிலும், பஞ்சாபிலும், அஸ்ஸாமிலும், பீகாரிலும் பொதுக்கூட்டங்களும் கருத்தரங் கங்களும் நடத்தப்பட வேண்டும்.
உண்மையை உணர்வது அவசியம்!
நம்முடைய சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு இந்தியா எங்கும் ஏற்பட்டால், இந்திய அரசு தானாக நடவடிக்கை எடுக்கும். புவிசார் அரசியல் நெறிப்படி இலங்கை அரசுக்கு ஆதரவாக எந்த நாடும் செயல்பட முடியாது. இந்தியாவின் வல்லமையே ஈழத் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும். இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும். இதை, ஈழத் தமிழர்களும் உணர வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில், லண்டன் நகரிலும், ஐரோப்பாவிலும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஆற்றும் வீர உரையால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இது, ஈழத் தமிழர்களால் எவ்வளவு விரைவில் உணரப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
மக்கள் விருப்பமே, கட்சிகள் பக்கம்!
காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் தொடர்பான எந்தக் கோரிக்கையும் வெற்றிபெற இந்திய மக்களின் ஆதரவு முக்கியமாகத் தேவை. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றியோ, அரசியல் கட்சிகளின் தலைப்பாடு பற்றியோ அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
மக்கள் விருப்பம் எந்தப் பக்கம் இருக்கிறது என்பது தெளிவானவுடன், அந்தப் பக்கம் மாறுவது கட்சிகளுக்கு சகஜம். இதுதான், இன்றைய யதார்த்தம். மக்களாகிய நாம்தான் சிந்திக்க வேண்டும்.
பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்? - பொதுமக்கள் கருத்து
டில்லியில் கடந்த ஆண்டு, ஓடும் பஸ்ஸில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான 6 பேரில் ஒருவன் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்துகொண்டுவிட்டான். மைனர் சிறுவன் என்று கருதப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. 'சிறுவனாக கருதப்பட்டவனுக்கு தரப்பட்ட தண்டனை போதாது; குற்றம் புரிந்தவன் சிறுவனா பெரியவனா என்கிற பாகுபாடு பார்க்கக்கூடாது. அவனுக்கு மரண தண்டனையே சரியான தீர்வு' என்று மாணவியின் பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவரும் ஒரு கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆஸ்ரமங் களை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் பிரபல சாமியாரான 72 வயது ஆசாராம் பாபு என்பவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் இந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் மறுபடியும் தொடரக்கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பம். ஆனால், பண பலத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த கொடுமைகளில் இருந்து பெண்கள் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு யார் காரணம்? என்று நமது பகுதி மக்களிடம் கேட்டோம்.
இந்துமதி, ஃபேஷன் டிஸைனர், மேடவாக்கம்: இப்போதெல்லாம் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண்களும் ஒருவகையில் காரணமாகி விடுகின்றனர். குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் இதனால் பாதிப்புக்குள்ளாக மொபைல் போனும் இன்னொரு வகையில் முக்கிய காரணம். சில பெண்கள், தங்களது மொபைலுக்கு ராங்க் கால் வந்தாலும்கூட, சட்டென்று இணைப்பைத் துண்டித்துவிடாமல் 'நீங்க யாரு, உங்களுக்கு யாரு வேணும், நீங்க கேட்கற பொண்ணு நான் இல்லை...' என்று அவர்கள் கேட்காமலேயே பேசிவிடுகிறார்கள். இதை, எதிர்முனையில் பேசும் ஆண் சாதகமாக பயன்படுத்தி, பேச்சை வளர்ப்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பெண் பாலியல் ரீதியான பிரச்னைகளைகூட சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது.
இதேபோன்று, நடுரோட்டில் நடந்து செல்லும்போது யாரேனும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒன்று... அவர்களை கோபமாக கண்டிக்க வேண்டும். அல்லது, திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். இதைச் செய்யாமல், லேசாக திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டால், அந்த கும்பல் அடிக்கடி பின்தொடர ஆரம்பித்துவிடும். பிறகு, பிரச்னை மேல் பிரச்னைதான். முன்னெச்சரிக்கையாக செயல்படுவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பெண்கள் தப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், தவறு செய்யும் ஆண்களுக்கு தக்க தண்டனையும் தரவேண்டும்.
எஸ்.ஈஸ்வரி, குடும்பத் தலைவி, மேடவாக்கம்: மது அருந்திவிட்டு திரும்பும் ஆண்களால்தான் பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். மதுக்கடைகளை மூடினால் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மற்றபடி, பெண்கள் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாக அவர்களும் ஒருவகையில் காரணம்தான். ஆடை கட்டுப்பாடு இல்லாமல், நவநாகரீக ஆடைகளை உடுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பாகிவிடுகிறது. நம்முடைய பாரம்பரிய உடையான சேலை மற்றும் சுடிதார், சல்வார் ஆகிய ஆடைகளை அணிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டார்கள்.
அதையெல்லாம் மீறி, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதற்காக தூக்குத்தண்டனை எல்லாம் தரவேண்டாம். அதேநேரம், கொடுக்கப்படும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். அந்த தண்டனையைப் பார்த்து வேறு எவரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது. அதேநேரம், வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடிக்காமல், உடனடியாக இந்த தண்டனையை வழங்க வேண்டும். இப்படிச் செய்தால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைந்துவிடும்.
ஆர்.திவ்யா, கல்லூரி மாணவி, சேலையூர்: மாடர்ன் ஆடை அணிவதுதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறு. தவறான கண்ணோட்டம் உள்ள ஒருவன், ஒரு பெண் சேலை அணிந்து வந்தாலும் தப்பான பார்வையில்தான் பார்ப்பான். அதனால், அணியும் ஆடைதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் எங்களின் சவுகரியத்துக்காகத்தான் மாடர்ன் ஆடைகளை அணிகிறோம். அது எங்களுக்கு வசதியாக இருக்கிறது. பாரம்பரிய ஆடை என்று சொல்லப்படும் சேலையை அணிந்துகொண்டு வெளியே சென்றால், நிமிடத்துக்கு ஒருமுறை முந்தானையை சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை சுடிதார், சல்வார் ஆடைகள் சவுகரியமானவை. யாருடைய கண்களையும் தவறான பார்வைக்கு திருப்பாது.
இந்நிலையில், மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவரும் ஒரு கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆஸ்ரமங் களை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் பிரபல சாமியாரான 72 வயது ஆசாராம் பாபு என்பவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. அவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் இந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் மறுபடியும் தொடரக்கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பம். ஆனால், பண பலத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மறைமுகமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த கொடுமைகளில் இருந்து பெண்கள் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு யார் காரணம்? என்று நமது பகுதி மக்களிடம் கேட்டோம்.
இந்துமதி, ஃபேஷன் டிஸைனர், மேடவாக்கம்: இப்போதெல்லாம் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட பெண்களும் ஒருவகையில் காரணமாகி விடுகின்றனர். குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் இதனால் பாதிப்புக்குள்ளாக மொபைல் போனும் இன்னொரு வகையில் முக்கிய காரணம். சில பெண்கள், தங்களது மொபைலுக்கு ராங்க் கால் வந்தாலும்கூட, சட்டென்று இணைப்பைத் துண்டித்துவிடாமல் 'நீங்க யாரு, உங்களுக்கு யாரு வேணும், நீங்க கேட்கற பொண்ணு நான் இல்லை...' என்று அவர்கள் கேட்காமலேயே பேசிவிடுகிறார்கள். இதை, எதிர்முனையில் பேசும் ஆண் சாதகமாக பயன்படுத்தி, பேச்சை வளர்ப்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பெண் பாலியல் ரீதியான பிரச்னைகளைகூட சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது.
இதேபோன்று, நடுரோட்டில் நடந்து செல்லும்போது யாரேனும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒன்று... அவர்களை கோபமாக கண்டிக்க வேண்டும். அல்லது, திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். இதைச் செய்யாமல், லேசாக திரும்பிப் பார்த்து சிரித்துவிட்டால், அந்த கும்பல் அடிக்கடி பின்தொடர ஆரம்பித்துவிடும். பிறகு, பிரச்னை மேல் பிரச்னைதான். முன்னெச்சரிக்கையாக செயல்படுவதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பெண்கள் தப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், தவறு செய்யும் ஆண்களுக்கு தக்க தண்டனையும் தரவேண்டும்.
எஸ்.ஈஸ்வரி, குடும்பத் தலைவி, மேடவாக்கம்: மது அருந்திவிட்டு திரும்பும் ஆண்களால்தான் பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். மதுக்கடைகளை மூடினால் அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மற்றபடி, பெண்கள் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாக அவர்களும் ஒருவகையில் காரணம்தான். ஆடை கட்டுப்பாடு இல்லாமல், நவநாகரீக ஆடைகளை உடுத்துவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பாகிவிடுகிறது. நம்முடைய பாரம்பரிய உடையான சேலை மற்றும் சுடிதார், சல்வார் ஆகிய ஆடைகளை அணிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டார்கள்.
அதையெல்லாம் மீறி, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதற்காக தூக்குத்தண்டனை எல்லாம் தரவேண்டாம். அதேநேரம், கொடுக்கப்படும் தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். அந்த தண்டனையைப் பார்த்து வேறு எவரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது. அதேநேரம், வருடக்கணக்கில் வழக்கை இழுத்தடிக்காமல், உடனடியாக இந்த தண்டனையை வழங்க வேண்டும். இப்படிச் செய்தால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைந்துவிடும்.
ஆர்.திவ்யா, கல்லூரி மாணவி, சேலையூர்: மாடர்ன் ஆடை அணிவதுதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறு. தவறான கண்ணோட்டம் உள்ள ஒருவன், ஒரு பெண் சேலை அணிந்து வந்தாலும் தப்பான பார்வையில்தான் பார்ப்பான். அதனால், அணியும் ஆடைதான் பாலியல் குற்றம் நடைபெற காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் எங்களின் சவுகரியத்துக்காகத்தான் மாடர்ன் ஆடைகளை அணிகிறோம். அது எங்களுக்கு வசதியாக இருக்கிறது. பாரம்பரிய ஆடை என்று சொல்லப்படும் சேலையை அணிந்துகொண்டு வெளியே சென்றால், நிமிடத்துக்கு ஒருமுறை முந்தானையை சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை சுடிதார், சல்வார் ஆடைகள் சவுகரியமானவை. யாருடைய கண்களையும் தவறான பார்வைக்கு திருப்பாது.
‘சிங்கிளாக’ ரயில்களில் கைவரிசை காட்டும் மர்ம கும்பல்!
ஆனந்த்
சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தனித் தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டும் மர்ம கும்பலால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். பயணிகள் உஷாராக பயணி ப்பதுதான் முழு பாதுகாப்பு தரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்ம கும்பல் கைவரிசை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் திருவனந்தபுரம், திருநெல் வேலி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுடன் பயணியாக கலந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மர்ம கும்பலால் பயணிகள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
குறிப்பாக, திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ரமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இந்த கும்பல் அதிக அளவில் கைவரிசை காட்டிவருகிறது. இவர்கள் இந்த இரு ரயில்களை தேர்வு செய்ய காரணம் இருக்கிறது.
டிக்கெட் எடுப்பதில்லை!
திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி ரயிலில் திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி செல்லும் பயணிகளுடன் திருவனந்தபுரம் செல்லும் கேரள பயணிகளும் அதிக அளவில் பயணிக்கின்றனர். அதேபோல், ராமேஸ்வரம் செல்லும் ரயிலில், வடமாநிலங் களில் இருந்து சென்னை வந்து, இங்கிருந்து ராமேஸ் வரத்துக்கு செல்லும் பயணிகள் அதிகம். இப்படி, இரு ரயில்களிலும் பலதரப் பட்ட மக்கள் பயணிப் பதால், அவர்கள் கண்ணில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில் லாமல் நடமாடி, எளிதில் திருடிவருகிறது இந்த கும்பல். இவர்கள் தனி ஆளாகத்தான் ரயிலில் ஏறுகிறார்கள். பெரும் பாலும் இவர்கள் டிக்கெட் எடுப்ப தில்லை. ஆனாலும், முன்பதிவு செய்யும் பெட்டி களில், எங்கே இருக்கை காலியாக இருக்கிறதோ, அங்கே சென்று அமர்ந்து கொள்வார்கள். சக பயணிகள் சந்தேகப்படாத வகையில் நடந்துகொள்வார்கள்.
மற்ற பயணிகளைப் போலவே உணவை பார்சல் செய்து கையோடு கொண்டு வந்திருப்பார்கள். கையில், ஏதேனும் ஒரு புத்தகம் இருக் கும். இப்படி, எந்த சந்தேகத் துக்கும் இடமளிக்காத வகையில் பயணம் செய்வார்கள்.
ரயில் டிக்கெட் பரிசோதகர் கண்களில்தான் இவர்கள் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், அவர்கள் வரும் நேரங்களில் இவர்கள் ஓடும் ரயிலில் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அல்லது, பாத்ரூமுக்குள் புகுந்துகொள்வார்கள்.
கைவரிசை!
இவர்கள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே, எந்த ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடம் அதிக அளவில் நகை, பணம் இருக்கும் என்பதை கவனித்து விடுகிறார் கள். அவர்கள் கொண்டுவரும் சூட்கேஸ் எங்கே வைக்கப் பட்டு இருக்கிறது, எளிதில் திருடும் சூழ்நிலையில் அது இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்வார்கள். சம்பந்தப்பட்ட பயணி இரவில் நன்றாக உறங்கும் நேரத்தில், அவரது சூட்கேஸை நைசாக எடுத்துக்கொண்டு, அடுத்ததாக ரயில் நிற்கும் நிலையத்தில் இறங்கி தப்பி விடுவார்கள்.
அப்புறம் என்ன... பொருளை பறிகொடுத்த பயணி, எவ்வளவு கத்தினாலும் திருட்டுப்போன பொருள் திரும்ப கிடைக்காது.
புகார் செய்யலாம்!
இதுபற்றி அனந்தபுரி எக்ஸ் பிரஸ் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:-
இந்த மாதிரியான திருட்டு சம்பவங்களை தடுக்க ரயில்வே போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார் கள். சிலநேரங்களில், அதையும் மீறி திருட்டு நடந்துவிடுகிறது. அதனால், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள்தான் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பயணி தனி ஆளாக இருக்கும்பட்சத்தில், அவர் உண்மையிலேயே முன்பதிவு செய்துதான் பயணம் செய்கிறாரா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அவர் முன்பதிவு செய்துதான் பயணிக்கிறாரா என்பதை அறிய, எங்களைப் போன்ற டிக்கெட் பரிசோதகர் களிடம் அவர் தனது டிக்கெட்டை பரிசோதனை க்குத் தந்தாரா என்பதை கவனிப்பது நல்லது.
அவ்வாறு அவர் டிக்கெட் தராமல் பயணிப்பதாக நீங்கள் சந்தேகித்தால், தாராளமாக எங்களிடம் புகார் தரலாம். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே போலீஸாரிடமும் இதுபற்றி தெரிவிக்கலாம்.
மேலும், நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொண்டுவரும் பயணிகள், அவற்றை தகுந்த பாதுகாப்புடன் வைத்தி ருப்பது அவசியம். அவ்வாறு விலை உயர்ந்த பொருட்களை கொண்டுவந்தால், அவை வைக்கப்பட்டுள்ள சூட் கேஸை ரயிலில் சீட்டுகளுக்கு அடியில் பூட்டி வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்வது, திருட்டு நடை பெறுவதை தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தேவை முன்னெச்சரிக்கை
எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு அளித்திருந்தாலும், பயணி களாகிய நாமும் முன்னெச் சரிக்கையாக பயணிப்பது தானே நல்லது?
2 கப் 'டீ'யும், குழந்தை பாக்கியமும்!
மருத்துவ உலகில் அவ்வப்போது நடத்தப்படும் ஆராய்ச்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்டு. அந்தவகையில், கடந்த வாரம் வெளியான ஆய்வு ஒன்றில், தினமும் 2 கப் டீ குடித்து வந்தால் ஒரு பெண் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை குடிப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு கள் பற்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்படி விவரம் தெரியவந்துள்ளது.
இதுபற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், 'எங்கள் ஆய்வில் இரண்டு விதமான முடிவுகள் கிடைத்துள்ளன. ஒன்று... சர்க்கரை குறைந்த அல்லது உணவு கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் பானங்களை தினமும் 2 கப் வீதம் ஒரு பெண் குடித்து வந்தால், அவர் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். இரண்டு... உடல் நலத்துக்காக நாம் பருகும் டீ, நம் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் 2 கப் சூடான டீ குடித்துவந்தால் பெண்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் ரசாயன பொருள்கள் கலந்த மற்ற பானங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ஒரு கப் டீ குடிப்பது நல்லது' என்று தெரிவித்தார்கள்.
என்ன... நீங்களும் ஒரு கப், ஸாரி... 2 கப் டீக்கு தயாராகிவிட்டீர்களா?
'சென்னை மெயில்' வெளியீட்டு விழா: பிரமுகர்கள் பங்கேற்பு
'சென்னை மெயில்' இதழ் வெளியீட்டு விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வெளியீட்டு விழா
சென்னை மெயில்- இது நம்ம வீட்டு பேப்பர், உள்ளூர் செய்தித்தாள் வெளியீட்டு விழா, கேம்ப் ரோடு ஸ்ரீபவன் ஓட்டலில் நடந்தது. 'சென்னை மெயில்' வெளியீட்டாளரும் ஆசிரியருமான எம்.ஜெயமுரு கானந்தம் தலைமை தாங்கி னார். 'சென்னை மெயில்' பொதுமேலாளர் எஸ்.கலை மணி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவை 'சென்னை மெயில்' இணை ஆசிரியர் ஜே.தேவிகா ஆனந்த், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கேம்ப் ரோடு பாக்கியம் பிரஸ் உரிமையாளர் டி.ஆபிரகாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சென்னை மெயில் முதல் பிரதியை வெளி யிட்டார். அதை, தொழிலதிபர் டி.எம்.கர்ணன் பெற்றுக்கொண்டார்.
இணைய சேவை
தொடர்ந்து, சென்னை மெயிலின் இணையதள சேவைகளை ஆக்னஸ் ஆபிர காம், தாம்பரம் நகராட்சி உறுப்பினர் உஷா ஏழுமலை, ரூபி பில்டர்ஸ் சீனியர் மார்கெட்டிங் மேனேஜர் அஸ்வினி குணசேகர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
விழாவில் மூத்த எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி.சுப்ரமணியம் பேசும்போது, 'புதுமை அம்சங்கள் பலவற்றுடன் சென்னை மெயில் மலர்ந் திருப்பதை முதல் இதழிலேயே பார்க்கமுடிகிறது. நாட்டு நடப்புச் செய்திகளில் மிகமிக அவசியமானவற்றையும் சுருக்கமாகத் தந்து, மற்ற சுற்று வட்டாரச் செய்திகளையும் சுவைபட தரவும் 'சென்னை மெயில்' தயார்நிலையில் உள் ளதை அறிந்து மகிழ்கிறேன். சமூகப்பணி உணர்வே இத்தகைய பத்திரிகைகளின் பலமான அடித்தளம். சென்னை மெயிலுக்கு இந்த அடித்தளம் நன்கு அமைந்துள்ளது. குருவுக்குரிய மூன்றாம் எண்ணில் எடுப்பாகத் தன் பயணத்தைத் தொடங்கியுள்ள சென்னை மெயில், வெகுவேகமாக பரந்த அளவில் பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்றார்.
விழாவில் சிட்லபாக்கம் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.மனோகரன், தாம்பரம் நகராட்சி 19-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் ஏழுமலை, மூத்த எழுத்தாளர், எஸ்.வெங்கடேசன், கவிஞர் இளந்துறவி, சின்னத்திரை நடிகர் ஜே.ரவீந்திரன், தொழிலதிபர்கள் குமார் சூப்பர் மார்கெட் எஸ்.குமார், ராஜசேகரன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)

























