'மக்களோடு மக்களாக பழகும் நல்ல அரசியல் தலை வர்கள் இப்போது இல்லை; அதெல்லாம், காமராஜர் காலத்தோடு போய்விட்டது' என்று நினைப்பவரா நீங்கள்?
உங்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் டாக்ஸி டிரை வராக மாறி, ஒருநாள் முழுக்க சேவை செய்துள்ளார் ஒரு பிரதமர். நிச்சயமாக, இவர் நம் நாட்டின் பிரதமர் இல்லை. அவர், நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க்.
பாராளுமன்ற தேர்தல்
நார்வேயில் வரும் செப்டம் பர் மாதம் பாராளுமன்றத்து க்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் மன நிலை எந்தநிலையில் உள்ளது என்பதை அறிய அவர் டாக்ஸி டிரைவராக சேவை செய்தார் என்று நார்வே மீடியாக்கள் தெரிவித்துள்ளன.
நார்வே தலைநகர் ஓஸ்லோ வில் ஒருநாள் பகல் முழுக்க டாக்ஸியை இயக்கிய பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், அந்தப் பணியின்போது சாதாரண டாக்ஸி டிரைவர் அணியும் ஆடையையே அணிந்திருந்தார். அவரது காரில் பயணித்த பெரும் பாலான பயணிகள், கார் ஓட்டுவது பிரதமர் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி ஆனார்கள். சிலர், அவசரகதியில் அவரை உன்னிப்பாகக் கவனிக்காமல் கட்டணத்தை மட்டும் தந்துவிட்டு சென்றுவிட்டனர்.
தான் பிரதமர் என்று தெரிந்து இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றவர்களிடம் பேசிய ஜென்ஸ் ஸ்டோல் டென்பர்க், அவர்களின் குறை களையும் தேவைகளையும் கனிவுடன் கேட்டறிந்தார்.
கேமராவில் பதிவு
ஜென்ஸ் ஸ்டோல்டென் பர்க் கார் ஓட்டியதை அவருக்கு முன்பாக வைக்கப் பட்டு இருந்த கேமரா பதிவு செய்தது. இந்த வீடியோவை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தலாம் என்பது ஜென்ஸ் ஸ்டோல்டென் பர்கின் திட்டம்.
கார் இயக்கி முடித்ததும் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
காரின் பின்சீட்டில் நான் அமர்ந்து செல்வதைத்தான் மக்கள் பார்த்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு நானே என் நாட்டு மக்களுக்காக காரை ஓட்டிச் சென்றது புதிய அனுபவமாக இருந்தது. பல பிரச்னைகள் தொடர்பாக மக்கள் தங்களின் எண்ணங் களை வெளிப்படையாக தெரிவிக்கும் இடம் ஒன்று உண்டு என்றால், அது டாக்ஸி பயணத்தின் போதுதான் என்பது என்னுடைய எண்ணம். அந்த வகையில், மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவே நான் இந்த முடிவை தேர்வு செய்தேன் என்றார்.
தோற்றுவிட்டால்...
ஒருவேளை நடைபெற உள்ள தேர்தலில் தோற்று விட்டால் முழுநேர டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவீர்களா என்று ஒரு நிருபர் கிண்டலாக கேட்க, 'இந்த நாட்டுக்கும் டாக்ஸி பயணிகளுக்கும் ஒரு டாக்ஸி டிரைவராக இருப்பதைவிட, நாட்டின் பிரதமர் என்ற முறையில் சிறந்த சேவையாற்ற முடியும் என நான் நம்புகிறேன்' என்று சிரித்தபடியே பதிலளித்தார் ஜென்ஸ் ஸ்டோல்டென் பர்க்.


0 comments:
Post a Comment