Tuesday, 31 December 2013
இன்று புத்தாண்டு: முதல்வர் வாழ்த்து
இன்று ஆங்கிலப் புத்தாண்டு. இதையொட்டி, முதல்-அமைச்சர் ஜெய லலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்பதாவது:-
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுட னும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில் வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு இந்தி யாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிட வும் எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
மக்களின் நல்வாழ்வுக்காக எனது தலைமையிலான தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத் திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும்மிக்க தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத் தாண்டில் உங்கள் அனை வரையும் கேட்டுக்கொள் கிறேன்.
தமிழக மக்கள் அனை வருக்கும் இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சி யையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட் டும் என்று வாழ்த்தி, அனை வருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித் தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

நீங்களும் பில்டர் ஆகலாம்! - அத்தியாயம் 3
- டாக்டர் ரூபி ஆர்.மனோகரன் -
லண்டன் மாநகரில் உலகப் புகழ்பெற்ற ஓவியக் கண்காட்சி நடந்துகொண்டி ருந்தது. அதை பார்வையிட பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்த னர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஓவியங்களை விமர்சனம் செய்யும் சர்வதேச விமர்சகர்களும் ஏராளமாக வந்து குவிந்திருந்தனர்.
கண்காட்சியில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஓவியர்கள், தங்கள் கைவண்ணத்தில் உருவான விதவிதமான ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். ஆயிரக் கணக்கான ஓவியங்கள் கண் காட்சியில் இடம்பெற்றிருந் தாலும் ஒரேயொரு ஓவியம் மட்டும் எல்லோரது கவனத் தையும் ஈர்த்தது.
அது, மேகக்கூட்டத்தில் இருந்து தேவதை ஒருத்தி வெளிப்படுவதைப் போன்ற ஓவியம். அதைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோரும் விழிகள் விரிய வியப்பில் நின்றிருந்தனர். ஓவிய விமர்ச கர்களும் அந்த ஓவியத்தை ஆஹா... ஓஹோ... என்று புகழ்ந்து தள்ளினர். ‘இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற மிகச்சிறந்த ஓவியம் இது’ என்று ‘சர்டிபிகேட்’ கொடுத் தனர். பொதுமக்களும் அவர் கள் கூறிய ஓவியத்தை மிகச் சிறந்த ஓவியமாக ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், கண்காட்சியை பார்வையிட வந்த பொது மக்களில் ஒரேயொருத்தர் மட்டும் அந்த ஓவியத்தை பார்த்ததோடு, பலமான சிந்த னையில் மூழ்கியிருந்தார். பிறகு அவர் என்ன நினைத்தாரோ, கண்காட்சி பொறுப் பாளரை அழைத்து, ‘இந்த ஓவியத்தை எல்லோரும் பார்த்து வியக்கிறார்கள். ஆனால், எனக்கு என்னவோ இந்த ஓவியம் தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது. எது உண்மை என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்’ என்றார் அவர்.
கண்காட்சி பொறுப்பா ளரோ, அந்த நபர் பொய் சொல்வதாக நினைத்தார். ‘சர்வதேச ஓவிய விமர்சகர்கள் எல்லோரும் அந்த ஓவியத்தை பார்த்து, வியந்து பாராட்டு கிறார்கள். ஆனால், சாதாரண குடியானவனான இவர், அந்த ஓவியமே தலைகீழாக இருக் கிறது என்று சொல்கிறாரே’ என்று கோபம் கொண்டார். ஆனால், அந்த நபரோ, எல்லோரையும் கவர்ந்த அந்த ஓவியம் தலைகீழாகவே மாட் டப்பட்டு இருக்கிறது என்று திரும்பத் திரும்ப சொன்னார்.
உடனே, கண்காட்சி பொறுப்பாளர், அந்த ஓவி யத்தை அனுப்பிவைத்த ஓவி யரின் குறிப்புகளை வைத்து பார்த்தபோது, ஓவியம் தலை கீழாக மாட்டப்பட்டு இருப் பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில், ஓவியத் தின் அழகை வியந்து புகழ்ந்த சர்வதேச ஓவிய விமர்சகர் களுக்கே, அந்த ஓவியம் தலைகீழாக இருக்கும் விஷயம் தெரியவில்லை. அந்த விவரம் கூட தெரியாமல், புகழ்பெற்ற விமர்சகர்களே சொல்லி விட்டார்கள் என்பதற்காக, அந்த ஓவியத்தை மிகச்சிறந்த ஓவியமாக நினைத்தார்கள் மக்கள். ஆனால், உண்மையோ வேறு மாதிரியாக இருந்தது.
அடுத்தவர்கள் சொன்னார் கள் என்பதற்காக, ஒன்றை உண்மை என்று ஏற்றுக் கொள்வது தவறு என்பது இந்த உண்மைச் சம்பவத்தில் இருந்து தெரியவருகிறது. சுய சிந்தனை இல்லாதவர்கள் உண்மையை காண முடியாது என்கிற உண்மையும் இதன் மூலம் தெரியவருகிறது.
இது, புரமோட்டர்கள் நிலம் தேர்வு செய்யும் லொகேஷனுக் கும் பொருந்தும். விரைவில் இந்த பகுதி வளர்ச்சிபெற்று விடும் என்று யாரோ சொன் னார்கள் என்பதற்காக எக் காரணத்தைக் கொண்டும் நிலத்தை தேர்வு செய்துவிடக் கூடாது.
சினிமாவையே எடுத்துக் கொள்ளுங்கள். படப் பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக, சரியான லொகே ஷனை தேர்வு செய்வதற் காகவே லட்சங்கள் தொடங்கி சில கோடிகள் வரை செலவு செய்கிறார்கள். சரியான லொகேஷன் அமையவில்லை என்றால், ஒரு சினிமாவை தரமான சினிமாவாக உரு வாக்க முடியாது. இது, சினிமாவை உருவாக்கும் டைரக்டருக்கு மட்டுமல்ல, நிலத்தை தேர்வு செய்து, அதில் வீடுகள் கட்டும் பில்டருக்கும் பொருந்தும்.
சில பில்டர்கள் இருக்கிறார் கள்; நிலம் மலிவாக கிடைக் கிறது என்றும், உறவினர்கள், நண்பர்கள்தானே விற்கிறார் கள் என்றும் நினைத்து, பயன் படுத்தாத நிலத்தை வாங்கி விடுவார்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு வீடு களோ, ஆள் நடமாட்டமோ இருக்காது. அப்படிப்பட்ட நிலத்தில் உடனடியாக வீடுகள் கட்ட முடியாது. பயன்படுத்த முடியாத நிலத்தில் நாம் போட்ட முதலீடு அப்படியே கிடக்கும். அதனால், புராஜெக்டை உடனடியாக தொடங்கக்கூடிய நிலத்தையே தேர்வு செய்து வாங்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ‘கோட்டை’விடாமல் இருந்தால்தான் கோட்டை போன்ற வீடுகளைக் கட்டி விற்க முடியும்.
சரியான நிலத்தை தேர்வு செய்வதற்கு முன்பு சில விஷ யங்களில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவை:
* நீங்கள் செய்ய இருக்கும் புராஜெக்டின் மதிப்பு எவ் வளவு?
* உங்கள் புராஜெக்டில் எந்த மாதிரியான வசதிகளை கொண்டுவரப் போகிறீர்கள்?
* உங்களது புராஜெக்ட் எப்படிப்பட்ட வாடிக்கையா ளர்களுக்கு ஏற்றது?
* வாடிக்கையாளர்கள் அந்த இடத்தை எதற்காக விரும்புவார்கள்?
- இந்த விஷயங்களோடு, தேர்வு செய்த இடம் ஒரு காலத்தில் குளமாகவோ அல்லது குட்டையாகவோ இல்லாமல் இருந்ததையும் உறுதிசெய்வது அவசியம். ஏனென்றால், அப்படிப்பட்ட நிலத்தை தெரியாமல் தேர்வு செய்துவிட்டால்... அந்த நில த்தை சரிசெய்யும் முதற்கட்ட பணிகளுக்கே நிறைய செலவு செய்ய வேண்டிவரும். அதோடு, மண்பரிசோதனை யிலும் சிக்கல் வந்துவிடும். அதனால், நிலத்தை தேர்வு செய்யும் முன்பு, அதன் ஏ டூ இசட் விவரங்களை அலசி ஆராய்வது அவசியம்.
முக்கியமாக, எதிர்காலத்தில் அந்தப் பகுதியில் அரசுத்துறை நிறுவனங்கள் அமையும் வாய்ப்பு இருக்கிறதா, நிலத் தின் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சாலைவிரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப் படுமா, பாலங்கள் ஏதேனும் அமைக்கும் திட்டம் இருக் கிறதா என்பதையெல்லாம் ஆராய்வது நல்லது.
இதையெல்லாம் ஆராயா மல் நிலத்தை வாங்கிவிட்டு, சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு செல்லும்போது, Ôநீங்கள் வாங்கியுள்ள இடம் இந்த வளர்ச்சி மண்டலத்தில் வருகிறது, விமான நிலைய எல்லைக்கு அருகே வருகிறது, பக்கத்திலேயே சுடுகாடு இருக்கிறது, அதனால் அங்கே குடியிருப்பு பகுதிகளை கட்ட முடியாதுÕ என்பது போன்ற பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதனால், நிலத்தை வாங்குவதற்கு முன்பே, சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் அந்த நிலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டறிவது நல்லது. இப்போ தெல்லாம், இன்டர்நெட் வழியாகவே இந்தத் தகவல் களை தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது.
லொகேஷன் தேர்வில், புராஜெக்டுக்காக நாம் தேர்வுசெய்யும் நிலத்தின் அரு கில் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மார்கெட், மருத்துவ மனைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகியவை எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்த வசதிகள் அனைத்தையுமே நாம் அங்கே கொண்டுவர முடியாது என் றாலும், இவற்றில் 60 சதவீத வசதிகளாவது பூர்த்தியாகி இருப்பது நல்லது. மேலே சொன்ன வசதிகளுக்காக 2 கி.மீ., 3 கி.மீ., செல்லும் நிலை இருந்தால், வாடிக்கையாளர் கள் அந்த இடத்தை விரும்ப மாட்டார்கள்.
அதேபோல், தொழிற்சாலை கள், அதிக சத்தம், புகை ஏற்படுத்தக்கூடிய தொழிற் சாலைகள் இருக்கும் பகுதி யையும் வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. நாம் குடியிருப்பு அமைக்க உள்ள இடத்தின் எதிர்ப்பக்கத்திலோ அல்லது அதற்கு அருகிலோ திறந்தவெளி கழிவுநீர் கால் வாய்கள், குப்பைக்கூடங்கள், கழிவறைகள், குட்டைகள், பெரிய அளவிலான முட்புதர் கள் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அத னால், சுகாதார வசதிகள் உள்ள லொகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இவற்றோடு, நாம் தேர்வு செய்யும் நிலத்தில் கட்டு மானங்களை மேற்கொள்ள அப்ரூவல் கிடைக்குமா, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி முதலானவற்றை மேற் கொள்ள முடியுமா என்பதை யும் பார்க்க வேண்டும். இதன்பிறகு, அனுபவமுள்ள இன்ஜினீயரை அழைத்து வந்து, அந்த நிலத்தின் வாங்கும் திறனை கணக்கிட வேண்டும். வாடிக்கையாளர்கள், விருப் பத்துடன் வாங்கும் இடமாக அது இருக்க வேண்டும்.
ரத்தினச்சுருக்கமாக சொல் வது என்றால், ஒரு நிலத்தை தேர்வு செய்து, அதில் வீடுகள் கட்டிய பிறகுதான் அவை விற்பனை ஆகும் என்பதை விட, வீடு கட்டிக்கொண்டிருக் கும் போதே வீடுகள் விற்பனை யாகிவிட வேண்டும். அது தான் சரியான லொகேஷன்.
இந்த லொகேஷன் தேர்வின் போது, சிலர் தெரியாத்தனமாக நில மோசடிகளில் சிக்கிக் கொள்வர். அது எப்படி நிகழ் கிறது தெரியுமா?
- தொடரும்...

அழகான பற்கள் எல்லோருக்கும் சாத்தியம்தான்..! - டாக்டர் ஜி.திருப்பதி
நம் முகத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பவை பற்கள். அந்த பற்கள் துருத்திக்கொண்டோ அல்லது முன்னுக்குப்பின் முரணாக வரிசையின்றியோ இருந்தால் முகஅழகு குறைந்து போய்விடும். இப்படி, பற்களால் ஒருவரது அழகு குறைந்துபோக என்னக் காரணம், அதைத் தடுக்க முடியுமா?
இதோ... நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னை சேலையூர் ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவமனையின் தலைவரும், பிரபல பல் மருத்துவருமான டாக்டர் ஜி.திருப்பதி.
ஒருவருக்கு பற்களின் அமைப்பு நிலைமாறியிருக்க என்னக் காரணம்?
ஒருவரது பற்கள் துருத்திக்கொண்டோ அல்லது சீரான வரிசையின்றியோ இருந்தால், அதற்கு அவரது பழக்கவழக்கம் அல்லது குடும்ப பாரம்பரியம் என்கிற ஜெனிடிக் காரணமாக இருக்கும். பழக்கவழக்கம் என்றால்... சிறு குழந்தையாக இருந்தபோது கைசூப்புதல், தூங்கும்போது வாயைத் திறந்துகொண்டே மூச்சுவிடுதல், அடிக்கடி நகம் கடித்தல், உதடு கடித்தல், அடிக்கடி நாக்கை வெளிப்புறமாக தள்ளிக்கொண்டிருத்தல் ஆகிய காரணங்களால் ஒருவருக்கு பல் துருத்திக்கொண்டோ அல்லது சீரான வரிசையின்றியோ போகலாம். ஜெனிடிக் காரணம் என்றால், சம்பந்தப்பட்டவரின் அப்பா அல்லது அம்மாவுக்கோ அல்லது அவர்களது அப்பா, அம்மாவுக்கோ அந்த பாதிப்புகள் இருந்திருந்தால், அந்தப் பாதிப்பு அடுத்தத் தலைமுறைக்கும் தொடரும்.
இந்த 2 காரணங்கள் தவிர வேறு காரணங்கள் கிடையாதா?
இருக்கிறது. முகத்தின் மேல் தாடை மற்றும் கீழ்த் தாடையில் வளர்ச்சி குறைபாடு இருந்தாலும், எலும்பு, மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், ஹார்மோன் குறைபாடு இருந்தாலும் அந்தப் பாதிப்புகள் ஏற்படும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு தொண்டை சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். அவர் தூங்கும்போது வாயை திறந்துகொண்டுதான் தூங்குவார். இந்த பாதிப்பு இருந்தால் காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. ஒருவருக்கு மேல் தாடை, கீழ்த்தாடையில் வளர்ச்சி குறைபாடு இருந்தால் சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி, சொத்தைப் பல் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்திவிடும்.
கை சூப்புதல் உள்ளிட்ட சில பழக்கவழக்கங்களை சில குழந்தைகள் வெகுநாட்களுக்குத் தொடர்கிறார்களே... அவர்களை நம் வழிக்கு எப்படிக் கொண்டுவருவது?
மூன்றரை வயது வரை ஒரு குழந்தைக்கு அந்தப் பழக்கங்கள் இருப்பதில் தவறில்லை. அந்தப் பழக்கம், அதற்கு மேலும் தொடர்ந்தால்தான் பிரச்னை. இந்தப் பழக்கங்களால் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வரிசையில் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கிளிப் போட்டுக்கொள்ள வேண்டும்.
சரி, எந்த வயதில் இருந்து கிளிப் போடலாம்?
தாடைகளின் ஒழுங்கற்ற வளர்ச்சியால் ஒருவருக்கு பல் துருத்திக்கொண்டு இருந்தால், அதை சரிசெய்யும் பொருட்டு கிளிப் போட்டுக்கொள்ள சரியான வயது 7. பல் மட்டும்தான் பிரச்னை என்றால், 12 வயதில் கிளிப் போட்டுக்கொள்ளலாம். தற்போது, அட்வான்ஸ் டெக்னாலஜி வசதிகளால் பல் துருத்திக்கொண்டுள்ள எவரும், எந்த வயதிலும் அதை சரிசெய்யும்பொருட்டு கிளிப் மாட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் துருத்திக்கொண்டிருக்கும் பற்களை மட்டுமே சரிசெய்ய முடியும். தாடையில் பிரச்னை இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு வேறுமாதிரியான சிகிச்சை தேவைப்படும். பல் மட்டும்தான் பிரச்னை என்றால், இப்போது 50 வயதில்கூட கிளிப் போட்டுக்கொள்ளலாம்.
கிளிப் போட்டுக்கொண்டால் எவ்வளவு நாட்களில் பலன் கிடைக்கும்?
பல் மட்டும்தான் பிரச்னை என்றால் 12-18 மாதங்களில் சரியாகிவிடும். பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் 2 முதல் இரண்டரை ஆண்டுகளில் சரியாகும்.
வெளியே தெரியாதபடி பற்களில் கிளிப் போட்டுக்கொள்ள முடியுமா?
கண்டிப்பாக முடியும். நிரந்தர கிளிப் அதற்கு உதவும். பற்களுக்கு உள்ளே மாட்டப்படும் இந்த கிளிப், சிரிக்கும்போது வெளியே தெரியாது. அதேநேரம், அதை சம்பந்தப்பட்டவர் கழற்றி எடுக்கவும் முடியாது. இப்போது பிக்ஸ்டு மெட்டல் கிளிப், சிராமிக் கிளிப், செல்ஃப் லிகேஷனல் சிராமிக் கிளிப், கேஸுவல் கிளிப் என்று பல்வேறு வகை கிளிப்கள் வந்துவிட்டன. இவற்றின் உதவியால், இடைவெளிவிட்டு பற்கள் அமைந்துள்ள பிரச்னையை 5 மாதத்தில் சரிசெய்துவிடலாம். குழந்தைகளுக்கு வலியில்லாமல் மாட்டிக்கொள்ளும் கிளிப்களும் உள்ளன. இந்த கிளிப்பை குழந்தைகளுக்கு, அவர்கள் இரவில் தூங்கும்நேரத்தில் மட்டும் மாட்டிக்கொள்ளலாம். நாங்கள் கடந்த 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பேருக்கு கிளிப் மூலம் பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை போக்கி இருக்கிறோம்.

சற்குரு சரித்திரம் அத்தியாயம் 1 - நெல்லை விவேகநந்தா
1945-ம் ஆண்டு.
தஞ்சை தரணி நெற்பயிர் களால் பசுமைக் கோலம் பூண்டிருந்தது. சோழர்களின் பக்தியால் விளைந்த கோயில் கள் நகரங்கள், கிராமங்கள் தோறும் நிறைந்திருந்தன. அந்த வகையில், ஆன்மிகத் தாலும் விவசாயத்தாலும் செழித்திருந்த ஊர்தான் இன்றைய தஞ்சை மாவட்டத் தில் அமைந்துள்ள மாத்தூர் தொட்டி.
இந்த அழகான ஊர், அந்த மகானின் வருகையால் இன் னும் கூடுதலாக புத்துணர்வு பெற்றது. 'நம்ம ஊருக்கு புதுசா சாமியார் ஒருத்தர் வந்திருக்காராம். அவர், அதி கம் பேச மாட்டாராம். ஆனா, அவர் என்ன சொன்னாலும் நடக்குதாம்...' - இப்படி அந்த ஊர் முழுக்க பேசினார்கள்.
மகானின் புகழ் மாத்தூர் தொட்டி மட்டுமல்ல, பல் வேறு இடங்களிலும் பரவி யிருந்த நேரம் அது. மகானின் அருமை பெருமைகளை பிறர் சொல்லி கேள்விப்பட்டு, அவரைக் காணும் ஆவலில் மாத்தூர் தொட்டிக்கு வந்து விட்டார் வேதாரண்யத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர்.
'சுவாமி... உங்களைப் பார்க்க வேதாரண்யத்தில் இருந்து ஒருத்தர்தனது நண்ப ருடன் வந்திருக்கார். உங்களை எப்படியும் பார்த்து பேசியே ஆகவேண்டும் என்று பிடி வாதம் செய்கிறார். உங் களைப் பார்க்காமல் இங்கி ருந்து போகமாட்டாராம்'
- சீடர் ஒருவர் இப்படிச் சொல்லவும், அதுவரை தியா னத்தில் அமர்ந்திருந்த அந்த மகான் கண்கள் திறந்து பார்த்தார்.
'சரி, அவரை வரச் சொல்' - மகானின் திருவாயில் இருந்து உத்தரவு பிறந்தது.
அடுத்த நிமிடமே வேதாரண் யத்தில் இருந்து வந்திருந்த அன்பர் மகான் அருகே வந்து நின்றார். மகானை பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் என்ன தோன்றியதோ தெரிய வில்லை, பொலபொல வென்று கண்ணீர்த் துளிகளை உதிர்க்க ஆரம்பித்துவிட்டார். மகானின் மகிமைகள் பற்றி சொல்லி அவரை அங்கே அழைத்துவந்திருந்த அவரது நண்பருக்கு ஒன்றும் ஓட வில்லை.
'உங்களுக்கு என்ன ஆயிற்று? சாமியாரைப் பார்த் ததும் நீங்கள் ஏன் அழுகிறீர் கள்? என்று கேட்டார்' அன்பரின் நண்பர்.
பதிலுக்கு, அன்பரின் கண் களில் மறுபடியும் கண்ணீர் தான்! அவரது நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில அடிகள் தூரத்தில் மகான் அமர்ந் திருக்க... அவரைப் பார்த்து இவர் திரும்பத் திரும்ப அழுது கொண்டிருக்கிறாரே... என்று குழம்பினார் அன்பரின் நண்பர்.
தன்னைக் காணவந்த பக்தன் ஏன் அழுகிறான் என்று மகானுக்குத் தெரிந்து விட்டது. ஆனாலும், அமைதி காத்தார்.
சில நொடி அழுகைக்குப் பிறகு வேதாரண்யம் அன்பர், மெள்ள வாய் திறந்தார்.
'நண்பரே..! நான் எதிரே காணும் மகான், சாதாரண மகான் கிடையாது. நம்மோடு வாழும் தெய்வம்!'
'உமக்கு என்ன ஆயிற்று? ஏன், சம்பந்தம் இல்லாமல் உளறுகிறீர்?' - அன்பரின் நண்பர் கேட்டார்.
'அப்படிச் சொல்லாதீர். இதோ... நம் எதிரே அமர்ந் திருக்கிறாரே மகான், இவரது திருவுருவப் படத்தை என் தந்தையார் தன்னுடைய 105 வயது வரை பூஜையறையில் வைத்து வழிபட்டு இருக்கிறார். 105 வயதுவரை வாழ்ந்த என் தந்தைக்கு தெய்வமாக இருந்து வழிகாட்டியவர், இப்போது... அதே தேகப் பொலிவோடு நம் எதிரே நிற்கிறார்..!'
வேதாரண்யம் அன்பர் இப்படிச் சொன்னதும், அவரை அங்கு அழைத்துவந்த நண்பர் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.
பக்தர்களின் நிலையை புரிந்துகொண்ட மகான், அவர்களை, தன் அருகில் வருமாறு சைகையால் அழைத் தார்.
பக்தர்கள் இருவரும் மகான் முன்பு கைகட்டி அமைதியாக நின்றிருந்தனர்.
'குழந்தைகளே! என்னு டைய ஆசி வேண்டிதானே இவ்வளவு தொலைவு கடந்து, என்னைக் காண வந்திருக் கிறீர்கள்? பிறகு ஏன் மவுனம்?'
'சுவாமி... தங்களின் திருவுருவப் படத்தை எங்கள் வீட்டு பூஜையறையில் என் தந்தையார் வழிபட்டு வந்திருக் கிறார். இப்போது அவர் இல்லை. நான், அவரது வழியில் உங்களின் திருவுருவப் படத்தை வழிபட்டு வருகி றேன். இப்போது உங்களை நேரில் பார்த்ததும் பரவச மாகிப் போனேன். எங்கள் தந்தையாரே தங்களை வழி பட்டு இருக்கிறார் என்றால், அவரின் தந்தையும் நிச்சயம் உங்களை வழிபட்டு இருப் பார். இப்போது, நானும் தங் களின் பக்தன் ஆகிவிட்டேன். அப்படியானால், தங்களின் வயது என்ன? உண்மையி லேயே தாங்கள் யார்?'
அதுவரை யாரும் கேட்காத அப்படியொரு கேள்வியை முதன்முறையாக கேட்டுவிட் டார் வேதாரண்யம் அன்பர்.
முதன்முறையாக தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு புன்னகையோடு பதில் சொன்னார் மகான்.
'மகனே! நீ சொல்வது சரிதான். நீ பார்க்கும் இந்த சாமிக்கு வயதே கிடையாது. இந்த நிமிடம் நினைத்தாலும் சரீரத்தை உதிர்த்துவிட்டு போய்விடும்.'
'சுவாமி தங்களுக்கு வய தாகவில்லை. ஆனால், எங் களுக்கு வயதாகிவருகிறதே..!'
'காலத்தை வென்றவர் களுக்கு வயதே கிடையாது...' என்று ரத்தினச்சுருக்கமாகச் சொன்ன மகான், பக்தர்கள் இருவருக்கும் ஆசிகூறி அனுப்பிவைத்தார்.
இப்படி, எங்கே, எந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார், அவரது வயது உண்மையிலேயே என்ன என்று யாரும் அறிய முடியாத வகையில், மக்களோடு மக் களாக வாழ்ந்து, நாளும் அற்புதங்கள் நிகழ்த்தி, அந்த அற்புதங்களை இன்றும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் அந்த மகான். அவர்தான்...சற்குரு சச்சிதானந்த சுவாமி கள்! இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சி தானந்த சற்குரு சுவாமிகள்.
மக்களை நல்வழிப்படுத் தவும், இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தவும் இவர் மேற்கொண்ட முயற்சி களையும், அதையொட்டி அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களையும் இந்தத் தொடரில் விரிவாகக் காண்போம்...

Saturday, 21 December 2013
நீங்களும் பில்டர் ஆகலாம்! - அத்தியாயம் 2
ரூபி ஆர்.மனோகரன்
நாமெல்லாம் மாவீரன் என்று கொண்டாடக்கூடிய அலெக்ஸாண்டருக்கு அப் போது 13 வயது இருக்கும். ஒருநாள் அவரது தந்தையும், மாசிடோனியா நாட்டின் மன்னனுமான பிலிப் முன்பு அரேபிய குதிரை வியாபாரி ஒருவன் முரட்டுக் -குதிரை ஒன்றை கொண்டுவந்து நிறுத்தினான். பார்ப்பதற்கு அழகாக மட்டுமின்றி, துடிப் பாகவும் காணப்பட்டதால் உடனே அந்தக் குதிரையை வாங்கிவிட்டான் மன்னன் பிலிப்.
குதிரையை வாங்கியா யிற்று! அதை சவாரிக்கு பழக்கப்படுத்த வேண்டும் அல்லவா? உடனே பிலிப்பின் படைத் தளபதிகள் அதன்மீது சவாரி செய்ய முயற்சி செய்து, தோற்றுப் போனதுதான் மிச்சம். தளபதிகள் எல்லோ ரையும் மிரட்டிய அந்த முரட்டுக் குதிரை, இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை. எதையோ கண்டு பலமாக மிரண்டது.
மன்னன் பிலிப் மற்றும் அவனது தளபதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குதிரையை, பெரிய கம்பால் அடித்தும் பார்த்தார்கள். முன் னிரு கால்களையும் உயரே தூக்கி மிரண்ட குதிரை, தளபதிகள் யாரையும் தன்மீது சவாரி செய்ய அனுமதிக்கவில்லை.
நடந்ததை எல்லாம் தந்தை க்கு அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் அலெக்ஸாண்டர். தந்தை அருகில் வந்தவன், 'அப்பா... அந்தக் குதிரையை நான் அடக்கிக் காட்டுகிறேன்' என்றான். தன்னுடைய மகன் சிறுவன் ஆயிற்றே என்று எண்ணிய பிலிப், 'மகனே... நீ சிறுவன். இது, முரட்டுக் குதிரை. யுத்த களம் பல கண்ட தளபதிகளாலேயே அடக்க முடியாத குதிரையை நீ எப்படி அடக்குவாய்? அத னால், ஓரமாக போய் நில். உன் மீது குதிரை பாய்ந்துவிடக் கூடாது...' என்று பயமுறுத்தினான்.
ஆனால், சிறுவன் அலெக் ஸாண்டர் விடவில்லை. 'அப்பா... நான் அந்தக் குதி ரையை இந்த நிமிடமே அடக் கிக் காட்டுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு த்துப் பாருங்கள்' என்றான்.
'எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்...' என்று அலெக் ஸாண்டர் சொன்னது மன்னன் பிலிப்பை யோசிக்க வைத்தது. 'சரி... குதிரையை அடக்கிக்காட்டு, பார்ப் போம்...' என்றான்.
உடனே, குதிரை அருகில் வந்த சிறுவன் அலெக் ஸாண்டர், அதன் கடிவாள த்தை வேகமாகப் பற்றி, அதே வேகத்தில் குதிரையை ஒரு திருப்பு திருப்பி வேறு பக்கமாக நிறுத்தியதோடு, அக்கணமே குதிரை மீது ஏறி, குதிரையை சிறிது தொலைவுக்கு ஓட்டிச் சென்று திரும்பிவந்தான்.
தன் எதிரே நடப்பது கனவா, நிஜமா என்ற குழப் பத்தில் இருந்தான் மன்னன் பிலிப். குதிரையில் இருந்து இறங்கிய மகனிடம், 'எப்படி குதிரையை உன் வசம் கொண்டு வந்தாய்' என்று ஆர்வம் பொங்கக் கேட்டான்.
'அப்பா... நீங்கள் குதிரையை மட்டும்தான் பார்த்தீர்கள். சுற்றியுள்ள சூழ் நிலையைப் பார்க்கவில்லை. நம் தளபதிகள் குதிரையை அடக்குவதற்கு முயற்சித்த போது, குதிரையின் நிழல் அதன் முன்பு விழுந்தது. அது, தன்னுடைய நிழல்தான் என்று தெரியாமல் மிரண்டு போய் நின்றிருந்தது குதிரை. அதனால்தான், தளபதிகளால் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நான் குதிரையை வேறு பக்கமாக திருப்பியதால், எளிதில் என்வசம் கொண்டுவர முடிந் தது'' என்றான் சிறுவன் அலெக்ஸாண்டர்.
- இப்படித்தான், பில்டராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் அனுபவ அறிவோடு, சூழ்நிலைகளை புரிந்து செயல்பட வேண்டும். எந்தவொரு கடினமான செயலாக இருந்தாலும், அதை சுலபமாக செய்து முடிக்கும் வழி ஒன்று நிச்சயமாக இருக் கும். அந்த வழி என்ன என்பதை கண்டறிவதில்தான் நம்முடைய சாமர்த்தியம் இருக்கிறது. பில்டராக நினைக் கும் ஒவ்வொருவருக் கும் அந்த சாமர்த்தியம் அவசியம் இருக்க வேண்டும்.
நீங்கள், 4 வீடுகள் கட்டக் கூடிய ஒரு இடத்தை வாங்கி விட்டீர்கள். அந்த இடத்தில் 4 வீடுகளையும் கட்டுவதற்குத் தேவையான பணம் கைவசம் இருக்கிறது. அதில், 4 வீடுகளை யும் கட்டி விற்றுவிட்டால், முதலீடு செய்த பணமும், லாபமும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.
இந்த இடத்தில் சில புதிய பில்டர்கள் பெரிய தவறு ஒன்றை செய்துவிடுவார்கள். ஒரு இடத்தில் வீடு கட்டு வதற்காக வாடிக்கையாளர் களிடம் வாங்கிய பணத்தை, அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பயன்படுத்து வதற்குப் பதிலாக, வேறு இடத்தில் இரட்டிப்பாக நிலம் வாங்கிவிடுவார்கள். இப்படி, வீடு கட்டும் புராஜெக்டுக்காக வாங்கப்பட்ட பணம், இன் னொரு இடத்தில் முடங்கி விட்டால், வீடு கட்டும் பணி தாமதமாகிவிடும். உறுதிய ளித்த கால அளவுக்குள் வாடிக்கையாளருக்கு வீட்டைக் கட்டிக் கொடுக்க முடியாது.
இப்படிப்பட்ட நேரங்களில், சம்பந்தப்பட்ட பில்டருக்கு அவப்பெயர் ஏற்படுவதுதான் மிச்சம். கொஞ்சம் முன்னெச் சரிக்கையாக செயல்பட்டால் இதுபோன்ற தவறுகள் நேரா மல் தவிர்க்கலாம். புதிதாக வரும் பில்டர்கள் ஒவ்வொரு வரும், அடுத்தவர்களின் இந்த அனுபவத்தில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், மக்கள் விரும்பும் பில்டராக உயர முடியும்.
கட்டுமானத் துறையை லாப நோக்கு கண்ணாடி அணிந்து பார்ப்பவர்களும் உண்டு. இது தவறு. இவர்கள், சேவை மனப்பான்மை எனும் கண்ணாடி அணிந்துகொள் வது அவசியம். அப்போது தான், லாபம் எது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வரும்.
ஒரேயொருமுறை ஒரு பொருளை வாடிக்கையாளரி டம் விற்றுவிட்டு, பிறகு... அவர் யாரோ, நாம் யாரோ... என்று போகும் தொழில் அல்ல கட்டுமானத்துறை. இந்த பந்தம், பல தலைமுறை கள் தாண்டியும் தொடக் கூடியது. அதனால் இங்கே, பண வரவைவிட, மனஉறவு மிக முக்கியம் என்பதை பில்டர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
முதலாளியாக இருந்தாலும் களத்தில் இறங்கி அவசியம் வேலை பார்க்க வேண்டிய தொழில் இந்த கட்டுமானத் துறை. இங்கே வேலை செய்வதற்கு, முதலாளியாக இருந்தாலும் வெட்கப்படக் கூடாது. கடினமாக உழைக்க வும் தயங்கக்கூடாது.
சிலர் ஒயிட் அண்ட் ஒயிட்டில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப் பார்கள். கட்டுமானத்துறை யில் இதற்கு சாத்தியமே இல்லை. விவசாய வேலையைப் போன்றதுதான் கட்டுமானத் தொழிலும்! கட்டிட வேலைகளை நேரில் சென்று பார்க்கும்போது, நம் ஆடையில் அழுக்கு படியா மல் வெளியே வரமுடியாது. என்னைப் பொருத்தவரையில், காலையில் வேலைக்கு வருவதுதான் தெரியும்; இரவு எப்போது வீட்டுக்குச் செல் வோம் என்பதே தெரியாது. அந்த அளவுக்கு சின்ஸியராக உழைக்க வேண்டும்.
சிலர், அடுத்தவர்களை நம்பி கட்டுமானத் தொழிலில் இறங்கிவிடுவது உண்டு. அப்படியே வந்துவிட்டாலும், இந்த தொழிலில் ஜெயித்துக் காட்டுவது எப்படி என்று யோசிக்க வேண்டும். தன்னிடம் போதிய திறமை இல்லையென்றால், அதை அடுத்தவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் மனப் பக்குவமாவது இருக்க வேண்டும். 'கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்பது இந்தத் தொழிலுக்கும் பொருந்தும்.
சிலர், தாங்கள் பில்டர் ஆகிவிட்டோம் என்பதற்காக, சக பில்டர்களிடம்கூட விஷயங்களை பகிர்ந்து கொள்ள தயங்குகிறார்கள். இந்த எண்ணம் வேண்டவே வேண்டாம். ஒரு இடத்தை நீங்கள் வாங்கும்போது, அதற்கு சரியான விலையைத் தான் கொடுக்கிறோமா என்பதை உறுதி செய்ய இந்த சக பில்டர் உறவு மிகவும் உதவும்.
இப்படி, அனுபவத்தில் இருந்து பில்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அது, நிலம் வாங்குவதற்குரிய லொகேஷனுக்கும் பொருந் தும். நிறைய பில்டர்கள் கோட்டைவிடுவது, நிலத்தை தேர்ந்தெடுத்து வாங்கும் விஷயத்தில்தான். எப்படிப் பட்ட லொகேஷன் நமக்கு லாபத்தை அள்ளித் தரும்?
- அடுத்த இதழில் சந்திப்போம்...

ஐஸ்வரியம் அள்ளித்தரும் ஸ்ரீ சக்ர யந்திரம்
சேலையூரில் உள்ள நெல்லூர் அம்மன் கோவில் விழாவில் இன்று பக்தர் களுக்கு, ஐஸ்வரியம் அள்ளித் தரும் ஸ்ரீ சக்ர யந்திரம் தரப் பட உள்ளது.
மஹோத்ஸவ விழா
சென்னை சேலையூர் பாரதி நகர் பகுதியில் உள்ள நியூ பாலாஜி நகரில் நெல்லூர் அம்மன் மற்றும் சக்தி செல்வ விநாயகர் கோயில் அமைந்துள் ளது. இக்கோவிலில் மஹோத் ஸவ விழா கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி நடை பெற்று வருகிறது.
விழாவின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நெல்லூர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன் றைய தினம் இரவு பக்தர் களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.
விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஐயப்பனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, லட் சார்ச்சனை நடைபெற்றது. மாலையில், விக்னேஸ்வர பூஜையும், கலச பிரதிஷ்டையும், ஸ்ரீ சண்டி பாராயணமும் நடைபெற்றது. இரவில், தெப்போற்ஸவம் நடை பெற்றது. அப்போது, நெல்லூர் அம்மன் பரிவார மூர்த்தி களுடன் கோவில் திருக்குளத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
ஸ்ரீ சக்ர யந்திரம்
விழாவின் மூன்றாம் நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு மகா சண்டி ஹோமமும், பிற்பகல் 12.30 மணிக்கு சண்டி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. இந்த சண்டி ஹோமத்தில், தங்கமுலாம் பூசப்பட்ட செம்பினால் ஆன, அஷ்ட ஐஸ்வரியம் தரும் 108 ஸ்ரீ சக்ர யந்திரங்கள் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்ரீ சக்ர யந்திரம் வேண்டுவோர், கோவிலில் ரூ.251 செலுத்தி முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து, பகல் 1 மணிக்கு சிறப்பு மகா அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்ன தானத்தை தொடர்ந்து இரவு 7 மணிக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உஷா பாலாஜியின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற இருக்கிறது.
விழா ஏற்பாடுகளை நெல் லூர் அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் கோயில் சமூல நல சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ரத்னமங்கலம் கோயில் கும்பாபிஷேகம்
ரத்னமங்கலத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரன் கோவிலில் கும்பாபிஷேகம் மிகச் சிறப் பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று தனிக் கோவில் அமைந்துள் ளது. இங்கே ஸ்ரீ மகா லட்சு மியும் ஸ்ரீ குபேர பக வானும் இணைந்து அருள் பாலிக்கின்ற னர். உலகில் முதன் முதலாக ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று அமைந்த முதல் தனிக் கோவில் இது. திருப்பதி ஏழு மலையானை தரிசிக்கச் செல் லும் முன்பு இங்கு வந்து வழி படுவது நல்லது.
சிறப்புமிக்க ரத்னமங்கலம் குபேரர் கோவிலில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி, ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமா னங்களுக்கும், அந்த தெய்வ விக்ரகங்களுக்கும் மகா கும்பா பிஷேகமும், மகா அபிஷேகம், மகா தீபஆராதனையும் நடை பெற்றன.
விழாவில், சென்னை மட்டு மின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தி ருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீ குபேர பகவானின் அருளை பெற்றுச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ராஜ லெட்சுமி குபேரா டிரஸ்ட்டி யினர் செய்திருந்தனர்.
கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்...
* கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.
* கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.
* கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வருகிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
* கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரர் ஆவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.
* கிறிஸ்துமஸ் அன்று மாலை வேளையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
* கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக, அங்குள்ள மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.
* உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால், அதை அதிர்ஷ்டகரமானதாகக் கருதுகிறார்கள்.
கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ்!
கிறிஸ்துமஸ் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை : 1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவ ரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப் பட்டது. 1846&-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். இந்த வாழ்த்து அட்டைகளின் வடிவமைப்பு, நேர்த்தி, தொழில்நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டனர் மக்கள்.
இதனால், கோடிக் கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டை கள் செய்கின்றன.
கிறிஸ்துமஸ் குடில் : கி.பி. 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மரம் : மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங் கினான். ஸ்காண்டி நேவியர் கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்தவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங் களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மானியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம் பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட், தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்து மஸ் மரத்தை அறிமுகப்படுத் தினார்.
கிறிஸ்துமஸ் கேக் : மேற்க த்திய கலாச் சாரத்தின்படி கேக், கிறிஸ்துமஸ் விழாவின் சிறப் பான உணவு பொருளாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் பூ : மெக் சிகோவில் 'போய்ன்செட் டியா' என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் 'புனித இரவின் பூ' என்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் ஆடு : ஸ்வீட னில் கிறிஸ்துமஸ் அலங் காரங்களில் ஒன்றாக 'ஜுல்பக்' என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.

22 வாடகை ரயில்! : இன்று பிரம்மாண்ட கூட்டத்தில் பேசுகிறார் மோடி
மும்பையில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக் காக 22 வாடகை ரயில்கள் அமர்த்தப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம்
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நரேந்திர மோடி. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளுவதால் இன்னும் உற் சாகத்தில் இருக்கிறார். சமீபத் தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்கள் பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக இருப்பதால் கூடுதல் சுறுசுறுப்போடு தேர் தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஞாயிறு) மும்பையில் நடை பெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சைக் கேட்க மாநிலம் முழுவதிலும் இருந்து தொண் டர்கள் வருவார்கள் என்ப தால், அவர்களின் வசதிக்காக 22 வாடகை ரயில்கள் அமர்த் தப்பட்டுள்ளன. தவிர, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங் களிலும் அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, 4 December 2013
டிசம்பர் 6-ம் தேதி உலகின் முதல் குபேரன் கோவில் கும்பாபிஷேகம்
ரத்னமங்கலத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரன் கோவிலில் டிசம்பர் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
முதல் குபேரன் கோவில்
சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று தனிக் கோவில் அமைந்து உள்ளது. இங்கே ஸ்ரீ மகா லட்சுமியும் ஸ்ரீ குபேர பக வானும் இணைந்து அருள் பாலிக்கின்றனர். உலகில் முதன் முதலாக ஸ்ரீ குபேர பகவானுக்கு என்று அமைந்த முதல் தனிக் கோவில் இது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் முன்பு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
இவ்வளவு சிறப்புமிக்க ரத்ன மங்கலம் குபேரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு, வருகிற 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, டிசம்பர் 4&ம் தேதி (புதன் கிழமை) காலை 9.5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் மற்றும் புதிய விக்ரகங்களுக்கு கண் திறக்கும் வைபவங்களும், அன்று மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை யந்திர பிரதிஷ்டை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட வைபவங் களும் நடைபெற உள்ளன.
டிசம்பர் 5-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் வைபவங்களும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறு கின்றன.
கும்பாபிஷேகம்
டிசம்பர் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதி காலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெறும். காலை 7.45 மணிக்கு யாத்ரா தானம், கல சங்கள் புறப்பாடு நடை பெறும். 8.15 மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங்களின் விமா னங்களுக்கு மகா கும்பாபி ஷேகம் நடைபெறும். 8.30 மணிக்கு ஸ்ரீ லட்சுமி குபேரர் மற்றும் பரிவார தெய்வங் களுக்கு மகா கும்பாபிஷே கமும், மகா அபிஷேகம், மகா தீப ஆராதனையும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ராஜலெட்சுமி குபேரா டிரஸ்ட்டின் டிரஸ்டி மற்றும் கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

நீங்களும் பில்டர் ஆகலாம்!- புதிய தொடர்
ரூபி ஆர்.மனோகரன்
=====================
அனைவருக்கும் ஆச்ச ரியம் அளிக்கும் தொழிலாக உயர்ந்து நிற்கும் கட்டிடத் துறையில் நாள்தோறும் கோடிக்கணக்கில் பணம் புரள்வது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பில்டராக இருப் போரை பார்க்கும் மற்றவர் களுக்கும், 'நாமும் பில்டர் ஆகக்கூடாதா என்ன' என்கிற ஆசையும் அவ்வப்போது துளிர்விட்டு, அந்த ஆர்வத்தில் இந்தக் கட்டுமானத் துறைக் குள் அடியெடுத்துவைத்து ஜெயித்தவர்களும் உண்டு; வந்தவேகத்தில் பின்வாங்கி ஓடியவர்களும் உண்டு. வெற்றி யும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.
அர்ப்பணிப்பு அவசியம்
கட்டிடத் துறை மட்டுமல்ல; எந்தத் துறையாக இருந்தாலும், அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால்தான் வெற்றி கிடை க்கும். அதேநேரம், அந்தத் துறையில் அனுபவ அறிவும் அவசியம் இருக்க வேண்டும்.
சிலர், பணம் இருந்தால் போதும்; மக்கள் மெச்சும் பில்டர் ஆகிவிடலாம்; கூட வே, லாபத்தையும் பல மடங்கு அள்ளிவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார் கள். ஒரேயொரு புராஜெக்ட் மட்டும் போட்டு, வீடுகள் அத்தனையையும் விற்றுவிட் டால், அக்கணமே கோடீஸ் வரன் ஆகிவிடலாம் என்று, பில்டர் ஆகும் ஆசையில் உள் ளோரை உசுப்பிவிடவும் இங்கே நிறையபேர் இருக் கிறார்கள். இப்படி, அடுத்தவர் கள் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக பில்டர் ஆனால், இந்தத் துறையில் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் முடியாது; எதிர்பார்த்த அளவுக்கு லாபம் பெற முடியாது.
'டெடிகேஷன்' என்கிற அர்ப்பணிப்பு உணர்வு ஒவ் வொரு பில்டருக்கும் முக்கியம் என்று சொன்னேன் இல் லையா? அதற்கு என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இந்தத் தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன். அந்த சிந்தனைதான் நாள டைவில் இன்னும் இன்னும் மெருகேறி, பெஸ்ட் பில்டராக என்னை உயரிய இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தி இருக் கிறது. என்னுடைய இந்த வெற்றியின் பின்னணியில் பலமான தூண்களாக இருப்ப வர்கள், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள்தான்.
வாடிக்கையாளர்கள் சேவையில் நாங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரு கிறோம் என்பதற்கு உதார ணமாக ஒரு சம்பவத்தை உங்க ளுடன் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சேவைதான் முக்கியம்
அது நள்ளிரவு நேரம். நான் நன்றாக தூங்கிக் கொண்டி ருந்தேன். என் தூக்கத்தை கலைக்கும்விதமாக அலறியது தொலைபேசி. லைட்டை போட்டு பார்த்தால், மணி 12-ஐ தாண்டி இருந்தது. இந்த நேரத்தில் யார் பேசுவார்கள் என்ற சிந்தனையோடு பேசி னேன். எதிர்முனையில் பேசி யவர் கொஞ்சம் பதற்றமாகவே பேசினார். 'எங்கள் ஏரியாவில் கரன்ட் போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. இன்னமும் கரன்ட் வந்தபாடில்லை. உடனே கரன்ட் வர ஏற்பாடு செய்யுங்கள்' என்றார்.
நான் ஒரு மின்வாரிய ஊழியர் என்று நினைத்துக் கொண்டு அவர் பேசியது, அவரது பேச்சில் இருந்து தெரிந்தது. எனக்கும், என்னு டைய வீட்டு தொலைபேசி எண் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரிந்து போனது. அதாவது, போனில் பேசியவர் என்னுடைய வாடிக்கையாளர்தான். நாங் கள் மின்வாரியத்துக்கு மின் சார அளவீடு அட்டை வழங்கும்போது, எங்களது பிசினஸ் புரமோஷனுக்காக, எங்கள் நிறுவனத்தின் லோகோ, முகவரி, தொலை பேசி எண் ஆகிய விவரங்களை அதில் அச்சடித்துத் தருவது வழக்கம். கரன்ட் வெகுநேர மாக இல்லை என்பதால், மேற்படி வாடிக்கையாளர், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க நினைத்து, தவறு தலாக மின்சார அளவீடு அட்டையில் நாங்கள் அச்சடித்து கொடுத்திருந்த எங்கள் நிறுவன தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து விட்டார்.
எங்களுக்கு வாடிக்கையா ளர் சேவை மிகமிக முக்கியம் என்பதால், 'இன்னும் கொஞ்சநேரத்தில் அங்குவந்து உங் களை பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தேன். அந்த நிமிடமே, போன் செய்த வாடிக்கையாளரின் ஏரியாவு க்குச் சென்றேன். வாடிக்கை யாளர் சொன்னது போலவே அந்த ஏரியா முழுவதும் கரன்ட் இல்லை.
எனக்கு போன் செய்த வாடிக்கையாளரின் வீட்டை தேடிப் பிடித்துச் சென்ற நான், அந்த ஏரியா முழுவதுமே கரன்ட் இல்லாத விஷயத்தை கூறினேன். திடீரென்று என்னை எதிர்பார்க்காத அந்த வாடிக்கையாளர், 'ஸார்... நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? இந்த ஏரியாவில் கரன்ட் இல்லாத விஷயத்தை நீங்கள் ஏன் என்னிடம்வந்து சொல்கிறீர்கள்?' என்று குழப்பத்தோடு கேட்டார்.
'நீங்கள்தானே சற்று நேரத் துக்கு முன்பு எனக்கு போன் செய்தீர்கள். அதனால்தான், இங்கே வந்தேன்' என்று நான் சொல்லவும், தான் தவறு தலாக போன் செய்து விட்டதை உணர்ந்துகொண்ட தோடு, ஸாரியும் கேட்டார் வாடிக்கையாளர். உடனே நான், 'இந்த விஷயத்தில் ஸாரி கேட்க ஒன்றுமே இல்லை. எங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிப்படுத்து வதற்கான ஒரு வாய்ப்பைதான் நீங்கள் எங்களுக்குத் தந்து இருக்கிறீர்கள். அதற்கு, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறிவிட்டு வந்தேன்.
பில்டர் ஆக ஆசைப் படுபவர்கள், வாடிக்கை யாளர் விஷயத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு நாம் பார்த்து பார்த்து சேவை செய்தால், அவர்கள் நமது நிரந்தர வாடிக்கையாளர் ஆகி விடுவார்கள். அவர்கள் மூலம் இன்னும் பல நல்ல வாடிக்கையாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள். அதை விட்டு விட்டு, வாடிக்கையாளர்கள் மனம் கோணும்படி நடந்து கொண்டால், இழப்பு பில்ட ருக்குத்தான்!
அனுபவம் கற்றுத்தரும்
பில்டருக்கு அனுபவ அறிவு அவசியம் என்று சொன்னேன் அல்லவா? அது ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஆரம்பத்தில் சின்னச் சின் னதாக கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கத் துவங்கி, இன்று பெரிய பில்டராக இருப்பவர் களும் உண்டு. இவர்கள், தங் கள் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய.
இன்று, கட்டிடக்கலை மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்துவிட்டது. அந்தக் கலையை ஏ டூ இசட் அறிந்து கொள்ள பல பாடப் பிரிவு களும் வந்துவிட்டன. இவ ற்றை முறையாகக் கற்றுக் கொண்டால், பின்னாளில் நிச்சயம் பெஸ்ட் பில்டர் ஆகலாம்.
கல்வி தவிர, ஒரு பில்டர், தனது அனுபவத்தில் இருந்து பெறும் அறிவுக்கும் மகத்தான சக்தி உண்டு. அது எப்படி?
(தொடரும்...)
இவர்தான் ரூபி மனோகரன்...
தென்னிந்திய கட்டிடத்துறையில் ஜாம்பவானாக உயர்ந்து நிற்பவர் ரூபி பில்டர்ஸ் சேர்மன் ஆர்.மனோகரன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் எனும் கிராமத்தில், திரு.ராமசாமி-திருமதி. செல்வி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், பள்ளிப்படிப்பு முடித்த உடனேயே இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 15 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் சேவை செய்தார். 1994&ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதன்பிறகே கட்டுமானத் துறையில் கவனம் செலுத்தினார். 1997-ல் 'ரூபி பில்டர்ஸ் புரமோட்டர்ஸ்' எனும் நிறுவனத்தை துவக்கிய இவருக்கு அதன்பிறகு ஏற்றம்தான். இன்று, ரூபி மனோகரான எல்லோராலும் அறியப்படுகிறார். இவர், 'சேவா ரத்னா' உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரும்கூட!
எல்லோரையும் கவர்ந்துவிட்டது 'சென்னை மெயில்' : டைரக்டர் கங்கை அமரன்
இளந்துறவி
============
'சென்னை மெயில்' கண் கவர் வண்ணத்திலும் நிகரற்ற தரத்திலும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது என்கிறார் டைரக்டரும் இசையமைப் பாளருமான கங்கை அமரன்.
இதுகுறித்து அவர் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
டைரக்டர், இசையமைப் பாளர், பாடலாசிரியர், பாடகர், கதை வசனகர்த்தா - இதில் உங்களுக்கு மனநிறை வைத் தந்தது எது?
'கங்கை அமரன்' என்பதில் முழுமையான மனநிறைவை உணர்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த படம்?
'சம்சாரம்'
பிடித்தப் பாடல்?
'சம்சாரம்' படத்தில் வரும், 'அம்மா பசிக்குதே... அப்பா பசிக்குதே...' என்கிற பாடல் தான்.
கங்கை அமரனை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் நானாகவே இருக்க வேண்டும். எல்லோரிடமும் இயல்பாக பழகும் தன்மையை இறைவன் எனக்கு தொடர்ந்து அருள வேண்டும்.
உங்களது ஆன்மிக ஆர்வம் நிறைவாக நிறைவேறியதாக உணர்கிறீர்களா?
முழுமையாக நிறைவேறி விட்டதாக கூற முடியாது. நிறைவேற வேண்டியது இன் னும் நிறைய இருக்கிறது.
நீங்கள் இயக்கிய 'கர காட்டக்காரன்' இன்றுவரை யிலும் மக்களால் ரசிக்கப் படுகிறதே... என்ன காரணம்?
மக்கள்தான் காரணம். அவர்களது ரசனையைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அந்த படத்தை நானே இப்போதும் அடிக்கடி பார்ப்பதுண்டு. அப்போது, இந்தப் படம் நம்மால் எடுக்கப்பட்டதுதானா என்று கூட வியந்துபோய் இருக்கி றேன். நான் எடுத்த படங்களில் நன்றாக வந்த படம் இது.
இன்றைய இளைஞர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
வாழ்க்கையை நேசியுங்கள். உங்களுக்காக நீங்களாகவே வாழுங்கள். உங்களால் முடி யும். உங்களைப் பார்த்து மற்ற வர்கள் வாழும்படியாக வாழுங்கள்.
'சென்னை மெயில்' பத்திரிகை பற்றி?
கண்ணைக்கவரும் வண் ணத்திலும், எல்லோரும் வியக் கும் தரத்திலும் 'சென்னை மெயில்' வெளிவருவதைப் பார்த்து மகிழ்கிறேன். 'ஜெட் ஏர்வே'யில் சென்னை மெயில் விநியோகிக்கப்படுவது அறிந்து இன்னும் மகிழ்கிறேன். அனைவரையும் கவர்ந்த மெயில், இந்த சென்னை மெயில். வாழ்த்துக்கள்!

வேளச்சேரி-வண்டலூர் இடையே விரைவில் மோனோ ரயில்
சிறப்பு நிருபர்
==============
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக மோனோ ரயில்களை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதையொட்டி, மோனோ ரயில் வழித்தட பாதைகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேளச்சேரி&வண்டலூர் இடையே அமைய உள்ள மோனோ ரயில் திட்ட வேலைகள் தொடங்கியுள் ளன. மோனோ ரயில் வரவால் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னை நகரில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்ப தற்காக ரூ.14,600 கோடி மதிப் பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. மெட்ரோ ரயில் பாதைக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 6&ம் தேதி, கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்&அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மெட்ரோ ரயிலை தொடர்ந்து, சென்னை நகரில் மோனோ ரயில்களை இயக் கவும் தமிழக அரசு நடவடி க்கை எடுத்து வருகிறது. ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். 2011-ம் ஆண்டே இதற்க £ன அறிவிப்பு வெளியிடப் பட்டாலும், இப்போதுதான் திட்டத்தை செயல்படுத்து வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலுக்கு முன்பா கவே மோனோ ரயில் கட்டு மானப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனோ ரயில் திட்டத்தை இரண்டு கட்டங்களாக 111 கி.மீ. தூர அளவில் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, வண்டலூர் -வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி -வட பழனி இடையே மூன்று வழித் தடங்களில் 57 கி.மீ. தொலைவு க்கு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மோனோ ரயில் கட்டுமானப் பணிகளை மேற் கொள்வதற்கான டெண்டர் நடைமுறைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட தால், ரயில் வழித்தட பாதை களை கையகப்படுத்தும் வேலைகள் தற்போது வேக மாக நடைபெற்று வருகின்றன.
வேளச்சேரி-வண்டலூர் மோனோ ரயில் வழித்தடம் 23 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வழித்தடத்தில் பெருங் களத்தூர், இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வேளச்சேரி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
வேளச்சேரி முதல் தாம்பரம் வரை, தற்போதுள்ள மெயின் சாலையை ஒட்டியே மோனோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதை யொட்டி, இந்த வழித்தடத்தில் உள்ள சாலைகளை அகலப் படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வரு கிறது. வேளச்சேரி முதல் ராஜகீழ்பாக்கம் சிக்னல் வரையிலான மெயின் சாலை 150 அடி கொண்டது. ஆனால், பல இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால், ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்கான முன்னறிப்பு நோட்டீஸ்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு, ஆக்கிரமிப்பு களும் அகற்றப்பட்டு வருகின்றன.
ராஜகீழ்பாக்கம் சிக்னல் தொடங்கி தாம்பரம் வரை யிலான மெயின் சாலை தற் போது 100 அடி கொண்டதாக இருக்கிறது. மோனோ ரயில் திட்டப் பாதைக்கு இது போதாது என்பதால், இந்த சாலையும் விரைவில் 150 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அதிகா ரிகள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.
அதேநேரம், ராஜகீழ்பாக்கம் சிக்னல் தொடங்கி தாம்பரம் வரையிலான சாலையோரத் தில் நிறைய பட்டா நிலங்கள் உள்ளன. மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்த நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், அந்த நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பு வேலைகள் வேகமாக நடத்தப் பட்டுள்ளன. எந்தெந்த நிலங்களை கையகப்படுத்து வது என்பது தொடர்பான விவரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
மோனோ ரயில் திட்டத்துக்காக பட்டா நிலங்களை இழக்கும் தனிநபர்களுக்கு, அந்த நிலத்துக்குதொகை யும் மதிப்பீடு செய்யப்பட்டு தரப்படும் என்றும் அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விரைவில், சம்பந்தப்பட்டவர் களுக்கு அதுதொடர்பான விவரங்கள் அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
செம்பாக்கம் நகர்மன்ற உறுப்பினர் கோ.சத்திய நாராயணன் கூறுகையில், Òமுறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன்பிறகே செம்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன. ஆக்கிரமிக் கப்பட்ட இடங்கள் புறம் போக்கு நிலம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. அதேநேரம், யார் யார் நிலமெல்லாம் அரசால் கையகப்படுத்தப்படுமோ என்கிற அச்சம் இருப்பதால், யாரும் பாதிக்கப்படாத வகை யில் ஆக்கிரமிப்புகள் அகற்ற மும், நிலம் கையகப்படுத்து வதும் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்Ó என்று தெரிவித்தார்.
அடுத்த 2 ஆண்டுகளில் மோனோ ரயில் திட்டப் பணி களை முடிக்க அரசு திட்ட மிட்டுள்ளதால், மெட்ரோ ரயிலைத் தொடர்ந்து மோனோ ரயில்களும் சென் னை நகரில் இயக்கப்படும். இதன் மூலம் நகரின் போக்கு வரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும்.
சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்
அதேபோல், மோனோ ரயில் திட்டப் பணிகளால், அந்தத் திட்டம் செயல்படுத்தப் படும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மோனோ ரயில் இயக்கப்படும்போது அந்த இடங்களில் தற் போதைய ரியல் எஸ்டேட்டின் மதிப்பு இரட்டிப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
'செம்பாக்கம் அமோக வளர்ச்சி பெறும்'
மோனோ ரயில் திட்டப் பணிகளுக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து செம்பாக்கம் நகர்மன்ற தலைவர் சாந்தகுமார் கூறியதாவது:
மோனோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள தாலும், 150 அடியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள தாலும் தற்போது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோனோ ரயில் சேவை சென்னை நகருக்கு அவசியம் என்பதை உணர்ந்துதான் நமது முதல்&அமைச்சர் அம்மா அவர்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
வேளச்சேரி-வண்டலூர் இடையேயான மோனோ ரயில் திட்டத்தால், சென்னை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள செம்பாக்கம் நகராட்சியும் அமோக வளர்ச்சி பெறும். போக்கு வரத்து நெருக்கடியும் தீரும். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)