எஸ்.எம்.ஆனந்த்
'நீங்கள் இதுவரை எவ் வளவு சேவை செய்திருக்கிறீர்கள்' என்று கேட்டால், 'அது என் வேலை இல்லை' என்று சொல்வோர்தான் இன்று அதிகம். இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில், ஆதரவற்றக் குழந்தைகளுக்கு சேவை செய்வதை ஒரு வேலையாக மட்டுமின்றி, தன்னுடைய கடமையாகவே கருதி செய்துவருகிறார் டாக்டர் ஏ.அசோகன்.
தொழிலதிபரும் சமூக ஆர்வலரும் மிகச்சிறந்த கொடையாளியுமான இவர், தன்னுடைய சொந்த சம்பாத்தியத் தில் இந்த உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடல் கடந்து பல வெளிநாடு களிலும் தொடர்கிறது இவரது சேவைப் பயணம்.
கிண்டியில் உள்ள தனது அலுவலகத்தில் டாக்டர் ஏ.அசோகன் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
உங்களைப் பற்றி..?
கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள தக்கலைதான் என் சொந்த ஊர். மனைவி டாக் டர் எஸ்.கே.சித்ரலேகா தேவி.
சேவை எண்ணம் வந்தது எப்படி?
7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா சென்றிருந்தேன். அங்குள்ள தாஜ் வெஸ்ட் பெங்கால் ஓட்டலில் தங்கி யிருந்தேன். காலையில் 'வாக்கிங்' சென்றபோது, அங்குள்ள குடிசைப் பகுதி வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது, அங்கிருந்த சிறுவர் கள் சிலர் ஒருவரையொருவர் அடித்து, சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். ஏன் என்று விசாரித்தபோது, 2, 3 நாட்களாக அவர்கள் சரிவர சாப்பிடாமல் இருந்ததும், தற்போது யாரோ தந்த ரொட்டித் துண்டுக்காக சண்டைப் போட்டுக்கொண்ட தும் தெரிந்தது. உடனே நான் அவர்களுக்கு 10 பிரெட் பாக்கெட்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு தான் ஆதரவற்றக் குழந்தை களுக்கு உதவிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அன்று தொடங்கி இன்று வரையிலும், மாதம்தோறும் தகுதியான ஆதரவற்றோர் இல்லங்களை கண்டறிந்து, அங்குள்ள குழந்தைகளின் உணவு, ஆடை, கல்வி ஆகிய வற்றக்கு உதவி வருகிறேன்.
நீங்கள் செய்த முதல், உதவி?
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள 'உதவும் உள்ளங்கள்' இல்லத்துக்குத்தான் முதன் முதலாக உதவி செய்தேன். இன்று வரையிலும் அந்த உதவி தொடர்கிறது.
உங்கள் சேவைக்கு துணை நிற்பது?
என் மனைவி டாக்டர் எஸ்.கே.சித்ரலேகாதேவி தான். 'தாராளமா உதவி பண்ணுங்க; அதேநேரம், தகுதியான இல்லங்களைக் கண்டறிந்து உதவி பண்ணுங்க' ன்னு அவங்க சொன்னாங்க. எனக்கு எப்படி அடுத்தவர் களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண் டும் என்கிற மனப்பான்மை இருக்கிறதோ, அதே மனப் பான்மை அவரிடமும் இருக் கிறது. அதனால்தான், என் னால் தொடர்ந்து உதவி களைச் செய்துவர முடிகிறது.
கடல் கடந்தும் உதவுகிறீர்களாமே?
ஆமாம். நான், தொழில் விஷயமாக மாதத்தில் பாதி நாட்கள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய ஆள். அதனால் என்னுடைய சேவையும் தமிழகத்தைத் தாண்டி வெளிநாடுகளிலும் தொடர்கிறது. இலங்கை, மலே சியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஜாம்பியா உள்பட 26 நாடுகளில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி இருக் கிறேன். இன்னமும் உதவிக் கொண்டு இருக்கிறேன். அண்மையில் ஜாம்பியாவில் நடந்த உதவிகள் வழங்கும் விழாவில் அந்த நாட்டின் அதிபர் மைக்கேல் பங்கேற் றார். 'அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண் ணம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்' என்று அறிவுரை சொன்னதோடு, 'பிறருக்கு நாம் மனப்பூர்வமாக செய்யும் உதவி அந்தக் கடவுளே செய் வது மாதிரி' என்று சொன்னார். அவர் சொன்னது நிஜம்தான். நம்மால் முடிந்த உதவிகளை ஆதரவற்ற பிறரு க்கு நிச்சயம் செய்ய வேண்டும்.
நீங்கள் செய்த மறக்க முடியாத உதவி?
2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் உள்ள முஸ்லிம் இல்லம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு தங்கியிருந்த அத்தனை குழந் தைகளுமே முஸ்லிம்கள்தான். அவர்களில் ஒரு சிறுவன், நான் கையில் வைத்திருந்த மொபைல் ஸ்கிரீனில் இருந்த விநாயகர் படத்தை அடிக்கடி கவனிப்பதாக இருந்தான். 'உனக்கு இவர் யார் என்று தெரியுமா' என்று நான் அவனிடம் கேட்க, 'இவர் லார்டு கணேசா' என்றான். அங்கிருந்த பிற குழந்தை களிடம் விநாயகர் படத்தை காண்பித்து கேட்க, அவர் களும் விநாயகர் என்று சொன் னார்கள். அவர்களது பதில் எனக்கு ஆச்சரியமாக இருந் தது. தொடர்ந்து, அங்குள்ள குழந்தைகளுக்கு என்னுடைய வழக்கமான உதவிகளை செய்துவிட்டு திரும்பினேன்.
மேற்படி சம்பவம் கற்றுத் தரும் பாடம் என்ன?
எல்லா மதத்தினரும் ஒன்று தான். ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்றால், இந்து ரத்தமா, முஸ்லிம் ரத்தமா, கிறிஸ்தவன் ரத்தமா என்று யாரும் பார்ப்ப தில்லை. ரத்தத்தின் 'குரூப்' பைதான் பார்ப்பார்கள். அதேபோல, உதவிகளையும் சாதி, மதம் பார்க்காமல் செய்ய வேண்டும்.
உங்கள் உதவியைப் பெற தகுதியானவர்கள் யார்?
அம்மா- அப்பா இல்லாத குழந்தைகள், வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் யாராக இருந் தாலும் அவர்களுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக் கிறேன். ஆதரவற்றோர் இல்ல ங்களுக்கும் உதவுகிறேன். இன்று ஆதரவற்றோர் இல்லங் கள் நிறைய இருக்கின்றன. இவர்கள் என்னுடைய உதவியை நாடினால், முதலில் அவர்கள் நடத்தும் இல்லம் பற்றி அக்கம், பக்கத்தில் விசாரிப்பேன். உண்மையி லேயே அந்த இல்லம் சேவை மனப்பான்மையுடன்தான் நடத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்தபிறகே, அந்த இல்லத்துக்கு பொருள் உதவி செய்வேன். தகுதியான இல்ல ங்களுக்கு உதவி செய்வதை என் கடமையாகவே நினைக்கிறேன்.
இந்த சேவையில் என்ன திருப்தி காண்கிறீர்கள்?
ஆதரவற்றக் குழந்தைகளுக்கு செய்யும் உதவி, அந்தக் கடவுளுக்கே செய்யும் உதவி போன்றது என்பதுதான் என் கருத்து. அந்த வகையில் மன திருப்தி அடைகிறேன். பொது வாக, ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கண்டிப்பாக தேவை. இந்த வாழ்வாதாரங்கள் இல் லாமல் எந்தவொரு மனிதனும் வாழ முடியாது. தவிர, நாம் இந்த உலகத்துக்கு வந்தபோது எதையும் கொண்டுவர வில்லை. போகும்போதும், எதையும் கொண்டுசெல்ல முடியாது. உண்மை அப்படி இருக்கும்போது, நம்மால் முடிந்த உதவிகளை அடுத்த வர்களுக்கு செய்வதே நல்லது.
ஆனால், இன்று அடுத்தவர்களை ஏமாற்றுவோர் அதிகரித்து வருகிறார்களே...
சுயநலம்தான் இதற்குக் காரணம். அதேநேரம், கெட்ட வழிகளில் பணத்தை விரையம் செய்கிறார்கள். ஒருமுறை எனது நண்பரான, சென்னையில் வசிக்கும் பல் மருத்துவரின் கிளினிக்குக்குச் சென்றிருந்தேன். பக்கத்தில் மதுக்கடை ஒன்று இருந்தது. நான் நண்பரின் கிளினிக் சென்றிருந்த சமயம், காந்திஜெயந்திக்கு முந்தையநாள். காந்திஜெயந்தி க்கு அரசு விடுமுறையோடு, மதுக்கடைகளும் திறந்திருக் காது என்பதால்தான், அங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து வேதனைப் பட்டேன். ஒருபுறம் மதுக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருக்க... இன்னொருபுறம், புகைப் பிடிக்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகி றது. குடி குடியைக் கெடுக்கும், புகை உடலுக்குப் பகை என்று அரசாங்கம் விளம்பரம் மட்டும் செய்தால் போதாது; மதுவையும், சிகரெட் உள் ளிட்ட புகையிலை வகை களையும் அடியோடு தடை செய்ய வேண்டும். அப்படி தடை செய்யாதபட்சத்தில், இவற்றை ஒழிக்கவே முடியாது. இந்த கெட்டப் பழக்கங்களில் மக்கள் மூழ்கிக் கிடக்கும் வரையில், ஏமாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை யும் தடுத்து நிறுத்த முடியாது. எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.
சரி, உதவும் மனப்பான்மை வளர ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
நமக்கு இறைவன் தந்திருப் பது ஒரு பிறப்புதான் என்கிற எண்ணம் ஒருவரிடம் இருந் தாலே போதும். உதவும் மனப் பான்மை தானாகவே வந்து விடும். நாமெல்லாம் ஒருவரது கணக்குவழக்கை கண் காணிக்க ஃபைல் போட்டு வைத்திருப்பது போன்று, நம் ஒவ்வொருவருக்கும் அந்த இறைவனும் ஒரு ஃபைல் போட்டுவைத்திருக்கிறான். நாம் செய்யக்கூடிய பாவம், புண்ணியம் எல்லாம் அந்த ஃபைலில் வரவு வைக்கப்படும். இன்று, 12 வயது பையனுக்குக் கூட சர்க்கரை நோய் உள்ளது. இதற்கும், இறைவன் நமக்காக போட்டிருக்கும் ஃபைலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால், நமக்கு இந்த ஒரு பிறப்பு மட்டும்தான்; இனி எந்தப் பிறவியும் கிடையாது என்கிற எண்ணத்தை உணர் ந்து, நம்மால் முடிந்த உதவி களைச் செய்ய முன்வர வேண்டும்.
இன்று பிறருக்கு உதவு பவர்கள் மிகவும் குறைவு. இந்த சிறிய உதவியாலேயே, நாட்டில் வறுமை ஒழிந்து விடுமா?
ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். அதுபோல், எல்லோரும் பிறருக்கு முடிந்த வரையிலான உதவிகளைச் செய்ய வேண் டும். இப்படி எல்லோரும் உதவ ஆரம்பித்துவிட்டால் வறுமையும் ஓடிவிடும்.
மக்களுக்கு ஏதேனும் செய்தி?
தயவுசெய்து அடுத்தவர் களுக்கு உதவுங்கள். நீங்கள் உதவினால், உங்களுக்கு இறைவனும் இறங்கிவந்து உதவுவான். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்வித்து, அதனால் இன்பம் காணுங்கள். அந்த இன்பம்தான்- மகிழ்ச்சிதான் உண்மையானது, பரிசுத்தமானது. அது தான், என்றும் நிரந்தரமானது.