கேள்வி: வாதம், பித்தம், கப தேகம் என்று சொல்கிறார்களே... அப்படியென்றால் என்ன? விரிவாக விளக்குங்களேன். (எஸ்.சந்தியா, சோமங்கலம்)
பதில் : மனிதனுடைய உடல் வாகு, வாத தேகம், பித்த தேகம், கப தேகம் ஆகியவற் றால் ஆனது. இந்த ஒவ்வொரு தேகத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. மனிதர்களில் பெரும்பாலானோர் இருவித உடல்வாகு கொண்டவர் களாக இருப்பர். உதாரணம்: வாத-பித்த தேகம், பித்த-கப தேகம் அல்லது வாத-கப தேகம்.
வாத தேகம் கொண்டவர் களின் உடல் அமைப்பு எப்படி இருக்கும் என்று முதலில் சொல்கிறேன். இவர்களின் உடல் இலகுவான தன்மை கொண்டிருக்கும். மெலிந்த உருவத்தோடு காணப்படுவர். பேச்சில் வறட்சி, தளர்ச்சி தெரியும். கண்கள் சிறியது. ஆழ்ந்த உறக்கம் வரும். தூங்கும்போது வாய், கண்கள் சற்றே திறந்திருக்கும். தூங்கும் போது பற்களை அடிக்கடி கடித்துக்கொள்வர். உடலில் வறட்சித் தன்மை, காலில் வெடிப்பு அதிகம் இருக்கும்.
இவர்களின் -குரல், கீச்சென்று அழுகுரல் மாதிரி இருக்கும். அதிகம் வியர்க்காது. தலைமுடி சுருண்டு, சொர சொரப்பாக காணப்படும். நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இவர்களின் உணவு பழக்க வழக்கம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நண்பர்கள் குறைவு. அப் படியே நண்பர்கள் இருந்தா லும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பர். பேச்சில் தடுமாற்றம், கடுமை இருக்கும். நடக்கும்போது சத்தத்துடன் நடப்பர். நாட்டியம், இசை ஆகியவற்றை ரசிப்பர். பொறாமை குணம், பிறருக்கு இம்சை அளித்தல் ஆகிய குணங்களை கொண்டிருப்பர்.காபி, சாக்லெட், சர்க்கரை பண்டங்கள் மீது பிரியம் உண்டு.
வாத தேகம் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சற்றே வலி அதிகமாக இருக்கும். செயல் களில் திறன் இல் லாத தன்மை கொண்டிருப்பர். வாயுவின் வேகத் தன்மையால் இந்த உடல்வாகு கொண்டவர்கள் எந்தக் காரியத்தையும் சீக்கி ரமாக தொடங்கிவிடுவார்கள். மனதில் மாறிமாறி ஒருவித விருப்பு&வெறுப்பு, தளர்ச்சி, பொறாமை தோன்றிக் கொண்டே இருக்கும். வார்த் தைகளை விரைவாக கிரகித் துக்கொள்வர். ஆனால், சீக்கிரம் மறந்துவிடுவர்.
கடவுள் பக்தி இவர்களிடம் குறைவு. நல்லவை நடக்கும் போது கடவுளை புகழ்வர். கெட்டவை நடந்தால் திட்டு வர். எந்த வழியிலும் சந்தோ ஷம் தேடுபவராக இருப்பர். சூதாட்டத்தில் விருப்பம் உண்டு. ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் திறன் இருக் காது.
குளிர்ந்த காற்று, குளிர்ச் சியான பிரதேசம் இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதிக குளிர்ச்சியால் உடல்வலி, விரைப்பு, கை&கால்களில் வெடிப்பு ஆகிய பிரச்னை களுக்கு ஆளாகுவர். மலச் சிக் கல் இருக்கும். மற்றவர்களை போன்று வலி தாங்கும் சக்தி இவர்களிடம் இருக்காது.
விருப்பமானவை : வெப்ப மான காலநிலையை வாத தேகத்தினர் மிகவும் விரும்பு வர். தாம்பத்திய உறவைப் பற்றி பலவித எண்ணம், கற்பனைகள் கொண்டிருப்பர். நிலையற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற கனவுகளைக் காண்பர். சீரான வாழ்க்கை மேற்கொள்ள முடியாததால், இவர்களின் தினசரி நடவடிக் கைகள் ஒழுங்காக அமையாது. தங்களை சுற்றி உள்ளோரை அலைக்கழித்து விடுவர். ஒவ் வொன்றையும் மாற்றிக் கொண்டிருக்கும் இயல்பு கொண்ட இவர்கள், சத்வம், ரஜஷ், தமஸ் ஆகிய மூன்று வகை குணங்களில், தங்களது நிலையற்றத் தன்மையால் ரஜோ குணத்தை பிரதானமாக கொண்டிருப்பர். நாய், ஒட்ட கம், கழுகு, எலி, நரி ஆகியவை வாதத் தன்மை கொண்ட விலங்குகள்.
வாத தேகத்தினர் எந்த மாதிரியான உணவு வகை களை உட்கொள்ள வேண் டும்? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? இவர் களுக்கு வரும் நோய்களை முன்கூட்டியே எப்படி தடுப்பது?
அடுத்த இதழில் பார்க்கலாம்...


0 comments:
Post a Comment