தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வருகிற 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் ஓட்டு களை அள்ள தீவிர முயற்சி களை மேற்கொண்டு வரு கிறார்கள். இதனால், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் வலம் வருகின்ற னர், அரசியல் கட்சியினர்.
பாராளுமன்ற தேர்தல்
நாடு முழுவதற்குமான லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறாவது கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 லோக் சபா தொகுதிகளுக்கும், புதுச் சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ கத்தைப் பொறுத்தவரை, மார்ச் 29-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 7-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப் பட்டன. அப்போது, 58 பெண்கள் உள்பட 350 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. ஏப்ரல் 9-ந் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 61 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் கள் பட்டியல் இறுதி செய்யப் பட்டது. அதன்படி, 55 பெண்கள், 789 ஆண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம் 845 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். புதுச்சேரி லோக் சபா தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.
தீவிர பிரசாரம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிர சாரம் மேற்கொண்டு வருகின் றனர். தமிழகத்தில் பலமுனை போட்டி நிலவினாலும், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க.வின் புறக் கணிப்பால், தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் காங் கிரஸ் கட்சியால் ஓரளவுக்கு ஓட்டுகள் பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அலை
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின் றன. அதே மோடி அலை தமிழகத்தில் வீசினாலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க. அலையே இன்னும் முழுமை யான பலத்தோடு வீசுகிறது. அதனால், மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளில் மெஜாரிட்டியான தொகுதி களில் அ.தி.மு.க. வேட்பாளர் கள் வெற்றிபெறும் வாய்ப்பு தற்போது உள்ளது. இரண்டா வது இடத்தில் தி.மு.க.வும், இதற்கு அடுத்த இடத்திலேயே பாரதீய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியும் உள்ளது.
ஏப்ரல் 22-ந் தேதி மாலை 6 மணியுடன் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதுவரை எடுக்கப் பட்ட கருத்துக்கணிப்புகள் ஒருவிதமான முடிவை சொன் னாலும், தேர்தல் நடைபெறும் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், அனைத்துக் கட்சிகளும் பிர சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. கோடை வெயிலின் உக்கிரத்தையும் பொருட் படுத்தாமல் அனைத்துக் கட்சி யினரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 24&ந் தேதி, ஒவ்வொரு Ôபூத்Õகளிலும் கணிசமான ஓட்டுகளை தங்களது கட்சிக்கு விழச் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க., பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.
மக்கள் விரும்பும் மாற்றம்
ஆனாலும், தேர்தல் களத் தில் உள்ள வேட் பாளர்களின் தலையெழுத்து என்னவோ மக்களின் கைகளில்தான் உள் ளது. வாக்குப்பதிவு இயந்திரங் களில் உள்ள பட்டன்களில் அவர்களது கை எந்தக் கட்சி யின் சின்னத்தை அழுத்தப் போகிறதோ, அப்போதுதான் வெற்றிபெறப் போவது யார் என்பது உறுதியாகும்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆதரவு அலை அதிகம் இருப்பது போல, இந்தியா முழுவதிலும் மோடி அலையே வீசுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதிகப்படியான ஊழல்களையும், விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றத்தை யும் சந்தித்து நொந்துபோய் இருக்கும் மக்கள், இந்த தேர்த லில் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில், மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி பெற்ற எதிர் பாராத அமோக ஆதரவே இதற்கு சாட்சி.
மாநில கட்சிகள் ஆதிக்கம்
தேசிய அளவில் பாரதீய ஜனதா அணிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படும் அதேநேரத்தில், தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள் ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகள் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாரதீய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில், அதிகாரம் பொருந்திய மாநில கட்சி களின் ஆதரவு இந்த இரு கட்சிகளில் எந்தக் கட்சிக்கு கிடைக்கிறதோ, அந்தக் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு பலவிதங்களில் இருந்தாலும், அதற்கான விடை என்ன என்பது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ந் தேதி தெரிந்துவிடும்.
சிந்தித்து வாக்களியுங்கள்..!
தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 'வேட்பாளர்கள் தரும் பிரியாணிக்கும், பணத்துக்கும் உங்கள் வாக்கை விற்று விடாதீர்கள்; சிந்தித்து வாக்களியுங்கள்' என்று தேர்தல் கமிஷன் வாக்காளர்களை அறிவுறுத்தி உள்ளது. அதனால் மக்களே... நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள். வாக்களிப்பது என்பது உங்களது ஜனநாயக உரிமை - கடமை. அந்தக் கடமையை கண்ணியத்தோடு நிறைவேற்றுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் வேட்பாளரால், உங்கள் தொகுதியும், நாடும் எந்த அளவுக்கு வளர்ச்சிபெறும் என்பதை கவனத்தில் கொண்டு வாக்களியுங்கள். உங்களின் வாக்கு, நம் தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடட்டும்.


0 comments:
Post a Comment