Saturday, 21 September 2013

இந்திய சினிமாவுக்கு வயது 100


ந்திய சினிமாவுக்கு 100 வயதாகிவிட்டது. இதன் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க சிறப்பாக நடைபெற்று வருகின் றன. இந்த நேரத்தில், நம் இந்திய சினிமா கடந்து வந்த கடினமான பாதையை நாம் இங்கே சற்று புரட்டிப் பார்ப் போம்.

இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம்: 'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படும் தாதா சாஹேப் பால்கே எடுத்த ராஜா ஹரிச்சந்திரா இந்தி யாவின் முதல் முழு நீள சினிமா என்கிற சிறப்பை பெற் றது. 1913 மே 3-ம் தேதி வெளி யான இந்தப் படத்தில் நடித்த அனைவருமே ஆண்கள். அந்தக் காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு பெண்கள் முன் வரவில்லை. அதனால் பால்கே, ஆண் நடிகர்களை பெண் வேடமிடச் செய்து நடிக்க வைத்தார்.

முதல் பெண் நடிகைகள்: 1914-ல் தாதா சாஹேப் பால்கேயின் இரண்டாவது படமான 'மோகினி பஸ்மசூர்' வெளியானது. இதில் பெண் களான துர்காபாயும், அவரது மகள் கமலாபாய் கோகலேயும் நடித்தனர். இந்திய சினிமாவில் முதன் முதலாக நடித்த பெண் கலைஞர்கள் இவர்களே!

முதல் வெற்றி சினிமா: தாதா சாஹேப் பால்கே இயக்கிய லங்கா தகன் 1921&ல் வெளியானது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முதலில் வசூலில் வெற்றி கண்ட படம் இது. அன்றைய பாம்பேயின் கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா  அரங் கில் வெளியிடப்பட்ட இந்தப் படம் 23 வாரங்கள் ஓடியது.

முதல் சரித்திரப் படம்: 1923-ல் வெளியான சிங்கா காத் எனும் திரைப்படம்தான் இந்தியாவின் முதல் முழு நீள வரலாற்றுத் திரைப்படம். இந்தப் படம் சக்ரவர்த்தி வீர சிவாஜியின் போர்ப்படை பற்றிய ஒரு சம்பவத்தை அடிப் படையாகக் கொண்டு எடுக் கப்பட்டிருந்தது.
முதல் பேசும்படம்: இந்தி யாவில் வெளியான முதல் பேசும் படம் ஆலம் ஆரா. 1931 மார்ச் 14-ம் தேதி வெளி யான இந்தப் படம்  124 நிமிடங்கள் ஓடக்கூடியது.

முதல் தமிழ் பேசும் படம்: தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ். இதை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி. 1931 அக்டோபர் 31-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் வசனங்கள் தமிழி லும், பாடல்கள் தெலுங்கிலும் அமைந்திருந்தன. ரூ.8 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ரூ.75 ஆயிரம் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத் துக்கான படச்சுருள் கொண்ட படப்பெட்டி சென்னைக்கு கொண்டுவரப்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து படச் சுருளுக்கு பூஜை செய்தனர்.

முதல் வண்ணப்படம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் கிசான் கன்யா. இது 1936-ல் வெளியானது. 1933&ல் மராட்டிய மொழியில் வெளி யான சைரந்த்ரி என்ற படத் தில் சில வண்ணக் காட்சிகளை ஜெர்மனிக்கு கொண்டு சென்று சேர்த்தார்கள் என் றாலும், கிசான் கன்யா படத் தில் இடம்பெற்ற வண்ணக் காட்சிகள் அனைத்தும் இந்தி யாவிலேயே சேர்க்கப் பட்டவை. அதனாலேயே அந்தப் படம் இந்தியாவின் முதல் வண்ணப் படம் என்ற பெருமையைத் தட்டிச்சென் றது.

முதல் முத்த காட்சி: இந்திய சினிமா வரலாற்றில் முதல் முத்தக்காட்சி பதிவானது 'எ த்ரோ ஆப் டைஸ்' என்ற படத்தில்தான். இதில் நடித்த சாருராயும் சீதாதேவியும் முதன்முதலாக வெள்ளித் திரையில் முத்தமிட்டுக் கொண்டனர்.

1933-ல் வெளியான கர்மா என்ற படத்தில் நிஜ வாழ்வில் தம்பதியரான ஹிமான்ஷு ராயும் தேவிகா ராணியும் தொடர்ந்து 4 நிமிடங்களுக்கு முத்தமிட்டுக்கொண்டனர்.

முதல் கவர்ச்சி நடிகை: பதிபக்தி  என்ற சினிமா 1922-ல் வெளியானது. இதில் சினோரின்னா மனெல்லி என்ற இத்தாலி நடிகை நடித் தார். இவர் உடலை ஒட்டிய மெல்லிய ஆடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடன மாடினார். விமர்சனங்கள் எழுந்ததால் இந்தக் காட்சி உடனடியாக மறுதணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டது.

- இப்படி கடின பாதையில் பயணித்து, பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ள இந்திய சினிமாவில், அதிர்ஷ்டம் இருந்தால் யார் வேண்டு மானாலும் கதாநாயகன், கதாநாயகி ஆகலாம்.

0 comments:

Post a Comment