Saturday, 21 September 2013

அமெரிக்க அழகி ஆனார் இந்தியாவின் நீனா


ந்திய வம்சாவளிப் பெண்ணான நீனா, மிஸ் அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அழகிப் போட்டி

2014&ம் ஆண்டுக்கான மிஸ் அமெரிக்கா அழகியை தேர்வு செய்யும் போட்டி அமெரிக் காவின் நியூஜெர்சி மாகாணத் தில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. அமெரிக் காவின் பல்வேறு மாகாணங் களைச் சேர்ந்த 53 அழகிகள் போட்டியில் கலந்துகொண்ட னர்.  நீச்சல் உடை அணி வகுப்பு, நடனம், பாடல், அறிவுத்திறன்... என்று நடத் தப்பட்ட இந்தப் போட்டியின் நிறைவில், நியூயார்க்கில் வசித்து வரும் நீனா தவுலூரி, 2014-ம் ஆண்டுக்கான மிஸ் அமெரிக்கா அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

24 வயதான நீனா, இந்திய வம்சாவளிப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென் றதன் மூலம் 50 ஆயிரம் டாலர் மதிப்பிலான பரிசுத் தொகை யும் நீனாவுக்கு கிடைத்தது.

முன்னதாக நடந்த இறுதிப் போட்டியில் அழகாக நடன மாடி பார்வையாளர்களை கவர்ந்தார் நீனா. அதோடு, இறுதிச்சுற்றில் நடுவர்கள் கேட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக பதில் அளித்தார். 'உங்களின் கண்களைப் பார்க்கும்போது, அது நீங்கள் ஓர் ஆசியப் பெண் என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறது. அதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றச்சொன்னால் என்ன செய்வீர்கள்' என்று நடுவர்கள் கேட்டபோது, 'நீங் கள் எப்படி இயல்பாக இருக் கிறீர்களோ, அதில் நம்பிக்கை வையுங்கள். அது போதும். என்னைப் பொருத்தவரை, பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் எனக்குத் தேவையில்லை' என்றார் நீனா.

டாக்டர் நீனா

நீனாவின் தந்தை அமெரிக்காவில் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். தந்தையைப் போலவே நீனாவும் மூளை சார் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று டாக்டராக இருக்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

0 comments:

Post a Comment