Tuesday, 17 September 2013

2 கப் 'டீ'யும், குழந்தை பாக்கியமும்!


ருத்துவ உலகில் அவ்வப்போது நடத்தப்படும் ஆராய்ச்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்டு. அந்தவகையில், கடந்த வாரம் வெளியான ஆய்வு ஒன்றில், தினமும் 2 கப் டீ குடித்து வந்தால் ஒரு பெண் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்ந்த மற்றும் சூடான பானங்களை குடிப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு கள் பற்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்படி விவரம் தெரியவந்துள்ளது.

இதுபற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், 'எங்கள் ஆய்வில் இரண்டு விதமான முடிவுகள் கிடைத்துள்ளன. ஒன்று... சர்க்கரை குறைந்த அல்லது உணவு கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் பானங்களை தினமும் 2 கப் வீதம் ஒரு பெண் குடித்து வந்தால், அவர் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். இரண்டு... உடல் நலத்துக்காக நாம் பருகும் டீ, நம் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் 2 கப் சூடான டீ குடித்துவந்தால் பெண்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே, குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் ரசாயன பொருள்கள் கலந்த மற்ற பானங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ஒரு கப் டீ குடிப்பது நல்லது' என்று தெரிவித்தார்கள்.

என்ன... நீங்களும் ஒரு கப், ஸாரி... 2 கப் டீக்கு தயாராகிவிட்டீர்களா?

0 comments:

Post a Comment