சுப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து சொன் னதுதான் சென்ற மாதத்தில் அரசியல் ஹாட் டாபிக். ராகுல்காந்தியிடம் வாழ்த் துப் பெற்றுவிட்டோம் என்று விஜயகாந்த் அசட் டையாக இருந்துவிட வில்லை. இதைத் தொடர்ந்து நடந்த தே.மு.தி.க. தலைமை செயற்குழுக்கூட்டத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் கண்டிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இனிய அதிர்ச்சி
எந்தக் கட்சியோடு கூட் டணி வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை விஜய காந்திடம் அளிக்கும் தீர்மான மும் அன்று நிறைவேற்றப் பட்டது. விஜயகாந்தின் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய அதிர்ச்சி கொடுப்பது முதல் தடவை யல்ல. மூன்று வருடங்களுக்கு முன்பே இது நடந்துவிட்டது.
பிறந்த நாளன்று விஜயகாந்த் வீட்டிற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். பாசத்தோடு விஜயகாந்துக்கு ஸ்வீட்டை ஊட்டிவிட்டார். அவர் பண்ருட்டி ராமச் சந்திரனிடம் பாதி ஸ்வீட் கொடுத்தவுடன் ‘எல்லாத்தி லேயும் இதேபோல பாதிப் பாதி கொடுப்பீங்களா” என்று கேட்டார் பண்ருட்டியார். அவர் கேட்டது சட்டமன்றத் தொகுதிகளை.
சமீபத்தில் விஜயகாந்த் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்துப் பேசி விட்டார் என்று சில செய்தி கள் உலவுகின்றன. தி.மு.க. தலைமையோடு தொடர்பு இருக்கிறது என்று சில செய்தி கள். இப்படி பலவிதமான ஊகங் களுக்கு இடம் கொடுத்திருக் கும் விஜயகாந்த் யாரோடு கூட்டணி சேரப் போகிறார் என்பதுதான் சமீபத்திய சஸ்பென்ஸ்.
ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ள நிலையில், விஜயகாந்த் சவுகரியமாக இருக்கிறார் என்பதுபோல ஒரு தோற்றம் மீடியாவில் உலவுகிறது. ஆனால் அது உண்மைத் தோற்றம் அல்ல. அவரைப் பொறுத்தவரை எந்தப் பக்கம் போனாலும் இடிக்கிறது என்பதுதான் உண்மை.
கிராமப்புறங்களில் சொல்லப்படும் ஒரு விடுகதையைப் போல இருக்கிறது அவருடைய நிலைமை. புலி, ஆடு, புல்லுக் கட்டு என்பதுதான் அந்த விடுகதை.
ஒரு விவசாயி ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் போக வேண்டும். அவரோடு ஒரு புலியும், ஒரு ஆடும், ஒரு புல்லுக்கட்டும் இருக்கிறது. மூன்றையும் அவர் அக்கரை க்குப் படகில் அழைத்துப் போக வேண்டும். படகு அவரைத் தாங்கும். இன் னொன்றை ஏற்றலாம். அவ் வளவுதான். அதற்குமேல் ஏற் றினால் படகு கவிழ்ந்துவிடும்.
புல்லுக்கட்டை எடுத்துக் கொண்டு படகில் போனால் போய் வருவதற்குள் ஆடு, புலியின் வயிற்றில் அடக்க மாகிவிடும். புலியை அழைத் துக்கொண்டு போனால் அதற்குள் ஆடு புல்லுக்கட்டை ஜீரணம் செய்துவிடும். ஆட்டை அழைத்துக் கொண்டு அந்தக்கரையில் விட்டுவிட்டு வந்தால், அடுத்த பயணத்தில் பிரச்னை உண்டாகும். இப்ப டிப்போகும் அந்த விடுகதை.
அதே நிலைதான் தே.மு. தி.க. தலைவர் விஜய காந்திற்கு! தேர்தலில் கரன்சி தான் முக்கியம் என்று நினைத்து காங்கிரசோடு கூட்டணி வைத்தால், ஈழப் படுகொலை என்ற பாவ மூட்டையை இவரும் சுமக்க வேண்டும். வலுவான அமைப்புகள் கொண்ட கட்சி என்ற முறையில் தி.மு.க.வோடு உடன்பாடு செய்துகொண் டால் ஏற்கனவே பேசிய பேச் சுக்கள் அவரை வழிமறிக்கும்.
விமர்சனம்
‘அரசியல்வாதியாக நான் மாறியபிறகு தெரிந்துகொண்ட முதல் விஷயம் ஜனநாயக நாட்டின் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூட முடிய வில்லை என்பதே! அரசியல் நாகரிகம் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும் அடிக்கொரு தரம் பேசும் கருணாநிதியின் ஆட்சியில், மாற்றுக் கட்சியினர் பேனர் வைப்பதற்குகூட பிரச்னைகள் தரப்படுகின்றன என்றால், எந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கருணாநிதி மீது குற்றம் சாட்டினார் விஜயகாந்த்.
5 மாதங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ்ப் புத்தா ண்டு தை மாதம் துவங்கும் என்று அறிவித்த கரு ணாநிதி அரசின் ஆணையை விஜயகாந்த் கண்டித்துப் பேசி னார். கருணாநிதியின் பேச்சால் தான் சேது சமுத்திரத் திட்டம் குளறுபடியானது என்றும் குற்றம் சாட்டினார்.
பின்னர், அ.தி.மு.க.வோடு தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்டு கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டி யிட்ட தே.மு.தி.க. சட்ட மன்றத்தில் பிரதான எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தை பெற் றது. வெற்றிபெற்ற தொகுதிகள் 29.
தனித் தொகுதி செல்வாக்கு
தனித் தொகுதிகளைப் பொறுத்தவரை 46 தொகுதி களில் அ.தி.மு.க. 28 இடங் களிலும், தே.மு.தி.க. 5 இடங் களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 8 இடங்களிலும், புதிய தமி ழகம் 2 இடங்களிலும், இந் தியக் குடியரசுக் கட்சி 1 தொகுதியிலும் வெற்றிபெற்றன. தி.மு.க.வுக்குக் கிடைத்த தனித் தொகுதிகள் 2 தான். அந்த அணியில் இருந்த விடு தலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தே.மு.தி.க.வுக்கு தாழ்த்தப் பட்ட மக்களிடம் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இருந்தாலும், நடக்கப் போவது நாடாளுமன்றத் தேர்தல். டில்லியில் யார் பிரதமராகப் போகிறார் என்றுதான் மக்களின் வாக்கு முடிவு செய்யும். தனியாக நின்று தே.மு.தி.க. இதில் சாதிக்கப் போவது எதுவும் இல்லை.
புலியா, ஆடா, புல்லுக் கட்டா என்று தேர்வு செய் வதில்தான் விஜயகாந்தின் சாமர்த்தியம் வெளிப்படப் போகிறது. சில மாதங்களில் அது தெரிந்துவிடும். ஆனா லும், கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே கட்சித் தொண்டர்களின் விருப்பப் படி கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


0 comments:
Post a Comment