Friday, 11 October 2013

பாராளுமன்றத் தேர்தல்: வைகோவின் நிலை என்ன?


சுப்பு
பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.  எந்தக் கட்சி, எந்த அணியில் என்பது பற்றிய ஆரூடங்கள் வேகமாக கணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் கட்சியாக இல்லாவிட்டாலும் முக்கியக் கட்சியாக இருக்கும் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக்கழகம், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, எந்த அளவுக்கு ம.தி.மு.க-வுக்கு உதவும், எந்த அளவுக்கு பா.ஜ.க-வுக்கு உதவும் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். அதற்கு முன், வைகோ-வின் வளர்ச்சி குறித்து பார்க்கலாம்.

இவர்தான் வைகோ

திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் வைகோ.  பிறந்த தேதி 22.05.1944.  பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தார்.  பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்.  மாணவ பருவத்திலேயே தி.மு.க. ஆதரவாளராகச் செயல்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக 1970-&ல் வைகோ தேர்ந்தெடுக்கப்பட் டார்.  திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கியின் தலைவரானது 1972-ல்.  தி.மு.க-வின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கொள்கைப் பரப்புச் செயலாளராக 1977&ல் நியமிக்கப்பட்டார்.  1983-ல் தலைமை நிலைய தேர்தல் குழுவின் செயலாளராக ஆனார்.

தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ மூன்றுமுறை (1978 - 1996) செயல்பட்டார்.  1998-ல் மக்களவை உறுப்பினராக, மறு மலர்ச்சி திராவிடக் கழகப் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.  மீண்டும் ம.தி.மு.க. சார்பில், 1999 தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.

தி.மு.க. என்ற நேர்க்கோட் டில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த வைகோவுக்கு 1989-ல் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அதற்குக் கார ணம், ஈழப் பிரச்னை.  1989, மார்ச் மாதம் வைகோ, கட்சி யின் முன்அனுமதி பெறாமல், இலங்கை சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்றார் அப்போதைய முதல்-அமைச்சர்  கருணாநிதி.

வைகோவால் கருணாநிதி க்கு இன்னொரு சிக்கலும் உருவானது.  கட்சித் தேர்தலில் தணிக்கைக் குழுவுக்கு சிலரை நிற்க வைத்து வெற்றிபெறச் செய்தார் வைகோ.  தணிக்கைக் குழு சார்பில், சில சங்கடமான கேள்விகள் கேட்கப் பட்டன. வெளி உலகத்துக்குத் தெரியாதபடி வளர்ந்த இந்தப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஒரு கடிதம். தமிழக அரசின் தலைமைச் செயலா ளரிடம் இருந்துவந்த அந்தக் கடிதத்தினை கருணாநிதி பத்திரிகையாளர்கள் பார்வை க்கு வைத்தார். இது நடந்தது 31.10.1993-ல். வைகோவின் ஆதாயத்துக்காக, கருணா நிதியைக் கொலை செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிடு வதாக கூறியது அந்தக் கடிதம்.

இதற்குப் பிறகு கருணாநிதி யின் அறிக்கையும், வைகோவின் கண்ணீர் அறிக்கையும் செய்தித்தாள்களில் முன்பக்கத்தைப் பிடித்துக் கொண் டன.  வைகோ தி.மு.க.வை விட்டு நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தி.மு.க. தொண்டர்கள் இடையே உணர்ச்சிமயமான கருத்து மோதலும் பிளவும் உண்டானது.  வைகோவுக்கு ஆதரவாக சிலர் தீக்குளித்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

11.11.1993 அன்று வைகோ வை கட்சியில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 6.5.1994 அன்று வைகோ, தனது ஆதரவாளர்களைக் கூட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கினார்.

அடுத்து வந்தது, 1996 தேர்தல். இதில் மார்க்சிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ம.தி. மு.க-வுக்கு சட்டமன்றத் திலோ, பாராளுமன்றத்திலோ ஒரு இடம் கூடக் கிடைக்க வில்லை.

பிறகு, பா.ஜ.க-வை உள் ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது.  இந்த அணிக்கு தலைமை தாங்கியது அ.தி.மு.க. அப்போது, ம.தி. மு.க. சார்பில் 3 பேர் பாரா ளுமன்றத்துக்குத் தேர்வு செய் யப்பட்டனர்.  அடுத்து வந்த தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை (1999) தி.மு.க. எடுத்தது.  இந்த அணியில் போட்டியிட்ட ம.தி.மு.க-&வுக்கு நான்கு இடங்கள் கிடைத்தன.

பிறகு, 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணி யில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு 6 சட்டமன்ற உறுப் பினர்கள் கிடைத்தனர்.  2009-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் மட்டும் வெற்றிபெற்றார்.  2011 சட்ட மன்றத் தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்துவிட்டது.

தொடர்ந்து பல தேர்தல் களில் தனது முத்திரையைப் பதிக்க முடியாமல் போன ம.தி.மு.க., இப்போதும் புத் துணர்ச்சியோடு செயல்பட்டுக் கொண்டிருப் பது ஓர் அரசியல் அதிசயம் தான். மக்களிடையே இருக்கும் செல்வாக்கை இதுவரை நிரூபிக்காவிட்டாலும், வைகோ ஓர் அரசியல் சக்தியாகப் பேசப்படுவது உண்மைதான்.

எந்தக் கட்சியிலும் கொள்கையை மக்களிடையே கொண்டு செல்வதற்கான சாதனம் தொண்டர்கள்தான்.  தன்னைச் சுற்றியுள்ள தொண்டர் கூட்டத்தை வணக்கத் திற்குரியதாகக் கருதுவதே தலைமைப் பண்பு.  வைகோ விடம் அது இருக்கிறது. கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர் கள் விரும்புவதும் அவருக்குத் தெரியும். அந்த விருப்பத்தை அவர் நிச்சயம் நிறைவேற்று வார் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில், மோடிக்கு ஆதரவு தெரிவித்து, பாரதீய ஜனதா அணியில் அவர் கூட்டணி சேரலாம் என்று கூறப்படுகிறது.

தொண்டர்கள் செல்வாக்கு உடைய வைகோ, மக்கள் செல்வாக்கும் உடையவர் என்பது மோடி அணியில் சேரும்போது நிரூபிக்கப்படலாம்.

0 comments:

Post a Comment