Saturday, 2 November 2013

பிறரை சந்தோஷப்படுத்துவதே உண்மையான மகிழ்ச்சி: டாக்டர் அசோகன் பேச்சு


டுத்தவர்களை மகிழ்ச் சிப்படுத்தி, அதனால் காணும் சந்தோஷமே உண் மையான சந்தோஷம் என்று டாக்டர் ஏ.அசோகன் பேசினார்.

கலைநிகழ்ச்சி

ஆதரவற்றக் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங் கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட கலைநிகழ்ச்சி நடந்தது. சென்னை, திருவள் ளூர், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லங் கள் மற்றும் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ& மாணவிகள் இதில் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

'அம்மாவும் நீயே... அப்பா வும் நீயே...' எனும், கல் மனதையும் கரைக்கும் பாட லில் தொடங்கி, 'சொயிங்... சொயிங்..' எனும், உற்சாகம் துள்ளவைக்கும் சினிமா பாடல் வரையில், கலக்கலாக ஆடியும் பாடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர் மாணவ&மாணவிகள். மனவளர்ச்சி குன்றிய மற்றும் பெற்றோர் செய்த தவறால் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி கைவிடப்பட்ட மாணவ- மாணவிகளின் நடனம் பார் வையாளர்களின் மனதை உருகவைத்தது.

இந்தியா மட்டுமின்றி பல் வேறு வெளிநாடுகளிலும் ஆதரவற்ற ஏழைக் குழந்தை களை கண்டறிந்து, அவர் களுக்கு பல்வேறு வழிகளில் உதவிவரும் டாக்டர் ஏ.அசோ கன், டாக்டர் சித்ரலேகா அசோகன் தம்பதியர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் டாக்டர் ஏ.அசோகன் பேசிய தாவது:

இதுதான் மகிழ்ச்சி

7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அந்த ஓட்ட லுக்குப் பக்கத்தில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி இருந் தது. திடீரென்று அங்குள்ள சிறுவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சண்டையிட்டனர். ஒரு வேளை சாப்பாட்டுக்காகத் தான் இந்தச் சண்டை என் பதை அறிந்தபோது என் மனம் துடித்துப் போனது.

அப்போதுதான், நம்மால் முடிந்த உதவிகளை ஏழைக் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்று முடிவு செய் தேன். அந்த உதவியை இப் போதும் செய்து கொண்டிருக் கிறேன். ஆதரவற்றோர் யார் என்பதை கண்டறிவ தோடு, அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதையும் அறிந்து உதவி வருகிறேன்.

ஆதரவற்றக் குழந்தைகளை எல்லாம் ஒரே இடத்துக்கு அழைத்துவந்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்கிற என்னுடைய எண் ணத்தின் வெளிப்பாடே இந்த நிகழ்ச்சி. பெற்றோர், உறவினர் இல்லாமல் வளரும் இந்தப் பிள்ளைகள் வாழ்வில் இப் போது வேண்டுமானால் போதிய சந்தோஷம் இல்லா மல் இருக்கலாம். ஆனால், எப்போதும் அவர்களின் வாழ்வு இப்படியே இருந்து விடாது. நாளை இவர்களும் பணக்காரர் ஆவார்கள். சந் தோஷம் இவர்களையும் தேடி வரும். நாம் ஒவ்வொருவரும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். இந்த பூமிக்கு வந்தபோது நாம் அதைக் கொண்டுவரவில்லை. போகும்போதும் கொண்டு செல்லப் போவதில்லை. அதனால், நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய் வோம். அவர்களை மகிழ்ச்சிப் படுத்தி, அந்த மகிழ்ச்சியில் நாம் மகிழ்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, டாக்டர் சித்ர லேகா அசோகன் பேசும் போது, 'வறுமையால்தான் பல குற்றங்கள் நடைபெறுகி ன்றன. அதனால், அதை கண்டிப்பாக ஒழித்தே ஆக வேண்டும்' என்றார்.

பங்கேற்றவர்கள்

விழாவில் சிறப்பு விருந்தினர் களாக கண் அறுவை சிகிச்சை நிபுணர் சாய்பாபா கவுடா, ஐ.டி.எப். நிறுவனர் ஏஆர்.கே.பிள்ளை, அருண் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ண வேணி அருணாச்சலம், மாலா மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவை கிழக்கு தாம்பரம் கேந்திர வித்யாலயா பள்ளி -2 ஆசிரியை ஆர்.ராஜம்மா தொகுத்து வழங்கினார்.


0 comments:

Post a Comment