Saturday, 9 November 2013

ஆதரவற்றோருக்கான புதுமை கலைவிழா: காமராஜர் அரங்கில் கோலாகல கொண்டாட்டம்!


 தொழிலதிபரும் சமூக ஆர் வலருமான டாக்டர் ஏ.அசோகன்& டாக்டர் சித்ர லேகா அசோகன் ஆகியோர் இணைந்து நடத்திய ஆதர வற்றக் குழந்தைகளுக்கான புதுமை கலை விழா சென்னை காமராஜர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆதர வற்றக் குழந்தைகள் இந்த விழாவில் தங்களது திற மையை வெளிப்படுத்தினர்.

கலைநிகழ்ச்சி

ஆதரவற்றக் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள காமராஜர் அரங் கில் 'யுனிக் கல்ச்சுரல் பொனான்ஸா' என்ற பெயரில் பிரம்மாண்ட புதுமை கலைவிழா நடை பெற்றது. தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான டாக்டர் ஏ.அசோகன்& டாக்டர் சித்ர லேகா அசோகன் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த விழாவில் சென்னை, திருவள் ளூர், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆதரவற்றோர் இல்லங் கள் மற்றும் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

'அம்மாவும் நீயே... அப்பா வும் நீயே...' எனும், கல் மனதையும் கரைக்கும் பாட லில் தொடங்கி, 'சொயிங்... சொயிங்...' எனும், உற்சாகம் துள்ளவைக்கும் சினிமா பாடல் வரையில், கலக்கலாக ஆடியும் பாடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர் மாணவ-மாணவிகள். மனவளர்ச்சி குன்றிய மற்றும் பெற்றோர் செய்த தவறால் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி கைவிடப்பட்ட மாணவ- மாணவிகளின் நடனம் பார் வையாளர்களின் மனதை உருகவைத்தது.

இதுதான் மகிழ்ச்சி

விழாவில் டாக்டர் ஏ.அசோகன் பேசியதாவது:

ஆதரவற்றக் குழந்தைகளை எல்லாம் ஒரே இடத்துக்கு அழைத்துவந்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்த வேண்டும் என்கிற என்னுடைய எண் ணத்தின் வெளிப்பாடே இந்த நிகழ்ச்சி. பெற்றோர், உறவினர் இல்லாமல் வளரும் இந்தப் பிள்ளைகளின் வாழ்வில் இப் போது வேண்டுமானால் போதிய சந்தோஷம் இல்லா மல் இருக்கலாம். ஆனால், எப்போதும் அவர்களின் வாழ்வு இப்படியே இருந்து விடாது. நாளை, இவர்களும் பணக்காரர் ஆவார்கள். சந் தோஷம் இவர்களையும் தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, டாக்டர் சித்ர லேகா அசோகன் வரவேற்று பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:

வறுமை இல்லாத இந்தியா

ஒவ்வொருவரது வாழ்க்கை யிலும் ஒரு குறிக்கோள் இருக் கும். எங்களது வாழ்க்கையில் குறிக்கோள் என்பது, வறுமை இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் எங்களது சிறிய பங்கும் இருக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், வறுமைதான் அனைத்து குற்றங்களுக்கும் மூலக் காரணம். அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்தது, ஆதரவற்றோர் இல்லங்களை! காரணம், வருங்கால சமு தாயம் இன்றைய சிறுவர்கள் கையில்தான் இருக்கிறது.

வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமான ஒன்றா என்கிற கேள்வி இங்கே எழலாம். முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை. முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை. முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை. இந்த தன்ன ம்பிக்கையே எங்கள் மூலதனம். கடந்த பல வருடங்களாக தகுதியான ஆதரவற்றோர் இல்லங்களை தேர்ந்தெடுத்து எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். கடந்த 7 வருடங்களாக, ஆண்டுக்கு ஒருமுறை வறுமை ஒழிப்புக் காக ஆதரவற்றோர் இல்லங்களின் சிறுவர்களை ஒரே இடத்தில் திரட்டி, அவர்களது கலை உணர்வுகளை வெளிக் கொண்டுவந்து, அவர்களுக்கு தேவையான அறிவுரையும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துகிறோம். இதை, அமைதியான முறையில் நடத்திவந்தோம். இந்தமுறை பெரிய அளவில் செய்வதன் நோக்கமே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சமூக சேவகர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். வெளி நாட்டினர் சிலரும் இந்த விழாவில் பங்கேற்று மகிழ்ந்தது கூடுதல் சிறப்பு.

விழாவை கிழக்கு தாம்பரம் கேந்திர வித்யாலயா பள்ளி -2 ஆசிரியையும், ஜனாதிபதி விருது பெற்றவரும், சமூக சேவகருமான ஆர்.ராஜம் மாள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். கேந்திர வித்யா லயா ஆசிரியைகள் காயத்ரி, பத்மா பாலகுமார் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் சேவை

மேலும், தாம்பரம் கேந்திரிய வித்யாலயா-2 பள்ளியின் சாரண&சாரணியர், என்.சி.சி.,  மாணவ - மாணவிகள் 150 பேர் மற்றும் அடையாறு சி.எல்.ஆர்.ஐ. கே.வி. சாரண- சாரணியர் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சேவை செய்தனர்.  மற்றும், நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மெஜிஷியன் பிரவீன், கண்கவர் மேஜிக் ஷோ செய்து காண்பித்து, குழந்தைகளை குதூகலப்படுத்தினார்.

விழாவின் நிறைவில், வந்திருந்த அனைவருக்கும் மாலைநேர சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பசுமை புரட்சியை வலியுறுத்தும் வகையில், அனைவருக்கும் மரக்கன்றுகளும் தரப்பட்டன.

பரிசு

அதோடு, கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ &மாணவிகளுக்கும் சான்றிதழ் களும், என்சைக்ளோபீடியா புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டன என்பது குறிப் பிடத்தக்கது.

0 comments:

Post a Comment