சேலையூரில் நடந்த சலங்கை பூஜை விழாவில் 12 மாணவிகள் முதன்முதலாக மேடை ஏறினர்.
சலங்கை பூஜை
சேலையூரில் இயங்கிவரும் 'நாட்டிய ரஞ்சனி' பரத நாட்டிய பள்ளி சார்பில் சங்கை பூஜை விழா நடந்தது. விழாவில் ரோஷ்ணி, அபித் பார்கவி, மாளவிகா, ஆர்த்தி, சரையு, திவ்யா, ஜெயஸ்ரீ, பத்மஸ்ரீ, விஷ்ணுவர்த்னி, கோபிகா, சூர்யப்ரியா, சுலஷ்மி ஆகிய 12 மாணவிகள் சலங்கை கட்டி முதல்முதலாக மேடை ஏறினர். அவர்களின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது.
விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக பாண்டிச்சேரி யோகா சென்டரின் தலைவர் தினகரன், கிழக்கு தாம்பரம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் தங்கம் நாராயணசுவாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பரதநாட்டிய குரு எஸ்.பிரபாவதி சதீஸ்குமார் விழாவை தொகுத்து வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது, 'எங்களின் 'நாட்டிய ரஞ்சனி' பரத நாட்டிய பள்ளி சார்பில் கலாக்ஷேத்ரா ஸ்டைலில் பரதநாட்டியம் கற்றுத் தருகி றோம். 5 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் துவங்கி, பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள எந்தவொரு பெண்களும் எங்கள் நாட்டியப் பள்ளியில் பரதம் பயிலலாம்' என்று கூறினார்.
'நாட்டிய ரஞ்சனி'யில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புவோர், 97910 22300 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:
Post a Comment