Saturday, 2 November 2013

ஓடியாடி விளையாடினால் பல் பலமாகும்: பிரபல பல் டாக்டர் திருப்பதி பேட்டி


எஸ்.எம்.ஆனந்த்

ற்களின் பாதுகாப்புக்கு சூரியஒளியும் நல்லது. அதனால், குழந்தைகளை ஓடியாடி விளையாட அனு மதிக்க வேண்டும் என்கிறார், சேலையூர் ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவனையின் தலை வரும், பிரபல பல் மருத்து வருமான ஜி.திருப்பதி.

அவர் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

ஒரு குழந்தை முதன்முதலாக எப்போது பல் துலக்க ஆரம் பிக்க வேண்டும்?

ஒரு குழந்தை பிறந்து 8 மாதம் ஆனவுடன் முதன் முதலாக பல் முளைக்க ஆரம்பிக்கும். இந்த முதல் பற்களுக்கு 'பால் பற்கள்' என்று பெயர். பால் பற்கள் உருவாகுவதற்கு முன்பே, அதாவது... குழந்தை பிறந்து 6 மாத காலம் ஆன நிலையி லேயே அந்தக் குழந்தை பல் துலக்குவது அவசியம். 6 மாதக் குழந்தை பல் துலக் குவது முடியாத காரியம் என்பதால் குழந்தையின் பெற்றோர்தான் அதைச் செய்ய வேண்டும். சுத்தமான பஞ்சை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து, குழந்தையின் பல் ஈறுகளில் மசாஜ் செய்துவிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை இப்படிச் செய்வது நல்லது.

'டூத் பேஸ்ட்' கொண்டு ஒரு குழந்தை எப்போது பல் துலக்க வேண்டும்?


ஒன்றரை வயதில் ஒரு குழந்தைக்கு ஓரளவு பற்கள் முளைத்துவிடும். பால் பற்கள் மொத்தம் 20. மேல் தாடையில் பத்து, கீழ்த் தாடையில் பத்து என இந்த பற்கள் வளரும். இவை முழுவதுமாக முளை த்துவிடும் 2 - 21/2 வயதில், குழந்தைகளுக்கு என்று உள்ள பேஸ்ட் கொண்டு ஒரு குழந்தை பல் துலக்க வேண் டும். இந்த சிறு வயதில் குழந்தைகள் நாம் சொல்வதை செய்ய மாட்டார்கள். அத னால், நாமே இப்படித்தான் பல் துலக்க வேண்டும், இப்ப டித்தான் தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும்.

தாய்ப்பால் பற்களின் வளர்ச்சிக்கும் உதவுமா?

கண்டிப்பாக. தாய்ப்பாலில் இல்லாத சத்துக்களே இல்லை. அதனால், அதை கண்டிப்பாக குழந்தைக்குத் தரவேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையின் பற்கள் அதிக ஆரோக்கியத்துடன் திகழும்.

அப்படியானால், புட்டிப் பால் பாதுகாப்பானது இல்லையா?


புட்டிப்பாலோடு ஒப்பிடும் போது மிகமிக ஆரோக்கிய மானது தாய்ப்பால்தான். சில தாய்மார்கள் குழந்தைக்கு புட்டிப்பால் தரும்போது பெரிய தவறு ஒன்றை, தங்களை அறியாமலேயே தொடர்ந்து செய்வார்கள். குழந்தை தூங்கிக்கொண்டிரு க்கும்போதே, அதன் வாயில் பால் உள்ள புட்டியை திணித்து குடிக்கச் செய் வார்கள். குழந்தையும் தூங்கிக் கொண்டே பாலை குடித்து விடும். புட்டிப்பாட்டிலின் ரப்பர் குழந்தை வாயிலேயே வெகுநேரத்துக்கு அப்படியே இருக்கும். இரவு நேரங்களில் நீண்டநேரம் குழந்தைகள் புட்டிப்பாட்டிலின் ரப்பரை வாயில் சூப்பிக்கொண்டு தூங்குவார்கள். இது நல்ல தல்ல. ஒரு குழந்தை இப்ப டியான நிலைக்கு தொடர்ந்து ஆளாகிவந்தால், பாலில் உள்ள சர்க்கரையின் தன்மை யால் குழந்தையின் பல் பாது காப்பு குறைந்துவிடும். குழந்தை பருவத்திலேயே சொத்தைப் பல் உருவாகு வதற்கு வாய்ப்பாகிவிடும்.

புட்டிப்பாலை பாதுகாப் பாகத் தர என்ன செய்ய வேண்டும்?

குழந்தை பால் குடித்து முடித்ததும் சுத்தமான பஞ்சை தண்ணீரில் நனைத்து, குழந் தையின் பற்களிலும் ஈறு களிலும் ஒற்றி, பால் கறையை சுத்தம் செய்துவிட வேண்டும். 2 முதல் 3 வயது வரையிலான காலத்தில் குழந்தையின் பற்கள் விஷயத்தில் நாம் கவன மாக இருந்தால், சொத்தைப் பல் வருவதை எளிதில் தவிர்த்துவிடலாம்.

இப்போதைய குழந்தை களின் பல் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

இன்று குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், சாக்லெட், பிஸ்கட் அதிகம் வாங்கிக்கொடுக்கி றார்கள். மேற்படி பொருட் களில் உள்ள சர்க்கரை, குழந்தையின் பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அவற்றை அள வோடு சாப்பிட வைப்பது நல்லது. மற்றபடி, இன்றைய குழந்தைகளை அதன் பெற் றோர் வீதிகளில் ஓடி விளை யாட விடுவதில்லை. இப்படிச் செய்வது, குழந்தையின் உட லுக்கு மட்டுமின்றி, பற்களு க்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிவிடுகிறது. அதாவது, ஒரு குழந்தை தெருவில் மற்ற பிள்ளை களோடு சேர்ந்து ஓடியாடி விளையாடும்போது, குழந்தை யின் உடலில் சூரியஒளி நன்கு படும். அவ்வாறு சூரியஒளி உடலில் பட்டால், சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி குழந்தைக்கு எளிதாக கிடைத்துவிடும். இந்த வைட்டமின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவக்கூடி யது என்பதை பெற்றோர்கள் புரிந்துகொண்டு, குழந்தையை ஓடியாடி விளையாட அனு மதிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஜி.திருப்பதி கூறினார்.

(டாக்டர் ஆலோசனை தொடரும்...)

0 comments:

Post a Comment