Saturday, 2 November 2013

எம்.பி. தேர்தலுக்காக பா.ம.க. புது வியூகம்: ராமதாஸ் கணக்கு சரியாகுமா?

  
சுப்பு

நாம் வாழ்கின்ற இந்த பூமி உருண்டையாக இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வ மாக நிரூபித்தது யார் என்று கேட்டால், சிலர் கொலம்பஸ் என்று சொல்வார்கள்.  இன்னும் சிலரோ, 'இல்லை... அது மெகல்லன் என்ற மாலுமி' என்று சொல்வர்.

இந்த சர்ச்சை எப்படி இருந் தாலும் அரசியல்ரீதியாக இந்தக் கேள்வியைக் கேட் டால் அதற்கு விடை ஒன்று தான். தமிழக அரசியலில் உலகம் உருண்டை என்பதை நடைமுறைப்படுத்தியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராம தாஸ்தான்.  33 வருடங்களுக்கு முன் தொடங்கியதன் அரசியல் பயணத்தில் அவர் அணி பல கண்டு, ஆர்ப்பாட் டம் பல கண்டு, மீண்டும் புறப் பட்ட இடத்திற்கே வந்திருக் கிறார்.

இந்தியாவின் விடுதலைப் போரில் அளப்பரிய தியாகங் கள் புரிந்தவர்கள் வன்னியர் கள். கொடுங்கோலன் நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் கடலூர்  அஞ்சலை அம்மாள் என்ற பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்களு க்கு அலர்ஜியாக இருந்தது.  இருந்தாலும், வன்னியர்களின் பங்களிப்பு, அரசியலில் மதிக்கப்படவில்லை என்ற குறை அவர்களுக்கு இருந்தது.  வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகம் பற்றி எல்லோருக்கும் தெரியும்.  கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?

வன்னியர்களின் உரிமையை நிலைநிறுத்த, 1980, ஜனவரியில் வன்னியர் சங் கத்தை உருவாக்கினார் மருத் துவர் ராமதாஸ். பல்வேறு பரிசோதனைகளுக்குப்பிறகு வன்னியர்களுக்காகக் குரல் கொடுக்கும் விதமாகவும், வன்னியர்களின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இப்போது அரசியல் வியூகம் அமைத்துள்ளார் அவர்.

பா.ம.க&வின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ள அமைப்புகளோடு சேர்ந்து சமூக ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரியில் ஜி.கே. மணி, அரக்கோணத்தில் வேலு, ஆரணியில் ஏ.கே.மூர்த்தி, சேலத்தில் அருள், புதுவையில் அனந்தராமன் என்று வேட் பாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.  அன்புமணி போட்டியிடப்போகும் தொகுதி சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.

‘திராவிடக் கட்சிகளும் வேண்டாம், தேசியக் கட்சி களும் வேண்டாம்' என்று மருத்துவர் சொன்னபோது, அதை மற்ற கட்சியினர் சீரிய ஸாக எடுத்துக்கொள்ள வில்லை.  எப்படியும் பா.ம.க. ஏதாவது ஒரு அணியில் சேர்ந்துவிடும் என்று நினைத் தனர். அதைப் பொய்யாக்கி விட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டது பா.ம.க.  

இன்றைய சூழலில், கருத்துக் கணிப்புகளும், அரசியல் நோக்கர்களும் பா.ம.க-வுக்கு அதிக மார்க் தருவதாக இல்லை. ஆனால், அரசியலும், தேர்தலும் நேர்கோட்டில் பயணிப்பது அல்ல.  மனிதப் போக்குகளை கணிதப் போக் குகளாக மாற்றமுடியாது.  பா.ம.க-வை மதிப்பிடுவதற்கு முன், அதன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ம.க&வின் பலமும், பல வீனமும் ஒரே விஷயம்.  அது சாதிச் சார்பு. ஆட்டத்தில் ருந்து அகற்ற முடியாதபடி பா.ம.க&வைக் காபந்து செய்வது சாதி உணர்வு.  ஆனால், இறுதிச்சுற்றுவரை போகவிடாமல் தடுப்பதும் சாதி உணர்வுதான்.

இந்தச் சாதி உணர்வு இதுவரை சாதித்தது என்ன?

வன்னியர் சங்கத்தின் சார் பில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது (1986), மத்தியில் இரண்டு சதவீத ஒதுக்கீடும், மாநிலத்தில் இருபது சதவீத ஒதுக்கீடும் வேண்டும் என்ற கோரிக்கை யோடு ஒருநாள் சாலை மறியல் நடத்தப்பட்டது.

கடுமையாக நோய்வாய்ப் பட்டு, எம்.ஜி.ஆர். சிகிச்சைக் காக அமெரிக்காவுக்கு அழை த்துச் செல்லப்பட்ட போது (1987), வன்னியர் சங்கத்தின் சார்பில் 7 நாள் தொடர் சாலைமறியல் நடைபெற்றது. வன்னியர் சங்கத்தின் புஜ பலம் அப்போது வேலை செய் தது.  மரங்கள் வெட்டி சாய்க் கப்பட்டு, சாலைப் போக்கு வரத்து தடைபட்டது.  அரசு இயந்திரம் செயலிழந்தது.  போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய எம்.ஜி.ஆர்., அனைத்து சாதிச் சங்கங் களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.  இது, வன்னியர் சங்கத்தின் வெற்றி தான். எம்.ஜி.ஆர். மறைவு க்குப் பிறகு அ.தி.மு.க. இரண் டாக ஆனது.  விளைவு, தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு. கருணாநிதி முதல்- அமைச்சர் ஆனார்.  1989 ஜனவரியில் மு. கருணா நிதியைச் சந்தித்தார் ராம தாஸ். 1989, மார்ச் மாதத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோரு க்கும், சீர்மரபினருக்கும் சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அப்போது வன் னியர் உள்ளிட்ட 39 சமுதா யத்தினர் இருந்தனர்.  அந்த சமூகங்களோடு போட்டி போட்டு முன்னேற முடியாது என்பதற்காகத்தான் வன் னியர்கள் தனி ஒதுக்கீடு கேட்டு போராடினார்கள்.

நிலைமை இப்படி இருக்க, சீர்மரபினர் என்ற 68 சாதிகளை மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது கருணாநிதியின் வஞ்சகச் செயல் என்று பா.ம.க. கருதியது. 1989, ஜுலை மாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி உருவானது.

பாட்டாளி மக்கள் கட்சி யின் அரசியல் பயணத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் தனி புத்தகமே எழுதலாம்.  ஆனால், இட ஒதுக்கீடு என்ற பதாகையைத் தூக்கிப்பிடித்த திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கைக்காகப் போராடி, அரசியலில் தனக்காக ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டது பா.ம.க.  இது பா.ம.க.வின் பிளஸ் பாயின்ட்.

சமீப காலமாக இதில் இன் னொரு பாயின்ட் சேர்ந்து ள்ளது.  குடும்ப கௌரவத் தையும் சமூக ஒற்றுமையையும் குலைக்கும் வகையில் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு எதிராக ஒரு கருத்து வலுப் பெற்று வருகிறது, தமிழ் நாட்டில்! காதலர்களைப் பற்றி நாள் முழுவதும் பேசும் மீடியா, தகப்பன்மார்களின் தற்கொலையைக் கண்டு கொள்வதில்லை.  இதுபற்றிய கசப்புணர்வு, சமூகத்தில் பரவி யுள்ளது. இந்த வகையினரின் ஆதரவு பா.ம.க.வுக்குக் கிடைக்கலாம்.

ஆனால், நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல்.  டில்லி யாருக்கு? மோடிக்கா, ராகுல்காந்திக்கா, முலாயம் சிங், இடதுசாரிகள் இருக்கிற மூன்றாவது அணிக்கா, மம்தா பானர்ஜி தலைமையில் உரு வாகும் நான்காவது அணிக்கா என்ற விவாதம் சூடு பிடிக் கும்போது பா.ம.க&வின்மீது கவனம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் பா.ம.க.-வுக்குத் தன்னைத் தக்கவைக்கும் முயற்சி என் றால், அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம்.

subbupara@yahoo.co.in


0 comments:

Post a Comment