'பிரியாணிக்காகவும், பணத்துக்காகவும் ஆசைப் பட்டு, உங்களின் மதிப்புமிக்க வாக்கை விற்றுவிடாதீர்கள்' என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல்
புதிய பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில், கட்சிகள் இடையே கூட்டணி உறுதி செய்யப்படாததால், பெரும்பாலான கட்சிகள் யாரையும் அவசரப்பட்டு விமர்சிக்காமல் அடக்கி வாசித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை 39 லோக்சபா தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத் தப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறுகையில், 'தமிழகத் தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக் கையை ஏற்று, அவ்வாறே தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந் துரை செய்துள்ளோம். அத னால், தமிழகத்தில் ஒரேகட்ட மாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேர்மையான முறையில் நடைபெறவும் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதியில், வேட் பாளர்களின் எண்ணிக்கை 15&க்கும் மேல் இருந்தால், 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலும் உள்ள கடைசி பட்டன் 'நோட்டோ' பட்டனாக இருக்கும். அதாவது, எந்த வேட்பாளரு க்கும் வாக்களிக்க விருப்ப மில்லாதவர்கள் இந்த நோட்டோ பட்டனை அழுத்தலாம்.
தேர்தல் நேரங்களில் வாக் களர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதும், அதை வாக்காளர்கள் பெற்றுக்கொண்டு வாக்களிப் பதும் தவறு என்பதை அறி வுறுத்தும் வகையில் விழிப்பு ணர்வு பிரசாரம் மேற்கொள்ள வும் தேர்தல் கமிஷன் முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓட்டை விற்காதீர்கள்
ஓட்டுக்கு பணம் பெறு வதற்கு எதிராக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். சினிமா, பேனர் போன்ற வற்றின் மூலம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். ஒரு வாக்காளர் தன்னுடைய ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டால், தொகுதிக்கு சாலை வேண்டும், வேறு வசதிகள் வேண்டும் என்று எம்.பி-யிடம் உரிமையோடு கேட்க முடியாது. ஓட்டுக் குத்தான் பணம் கொடுத்து விட்டேனே என்று அவர் மறுத்துவிடுவார்.
அதனால், 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி வளர்ச்சி அடையாமல் போய்விடும் என்று கூறி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். வாக்காளர்கள் யாரும் தயவுசெய்து, ஆயிரம் ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் ஓட்டை விற்க வேண்டாம். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜெயில்!
ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவதை வீடியோ படம் அல்லது புகைப்படம் படம் பிடித்து அனுப்பும் வசதிகளை இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளோம். எனவே, அவற்றை இந்த குற்றத்திற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். முன்பு ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு ஆதாரங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. தற்போது படங்கள் மூலமாக ஆதாரங்கள் பெறப்படும்.

0 comments:
Post a Comment