டாக்டர் ரூபி ஆர்.மனோகரன்
உலகின் முதல் மின்சார பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்று எல்லோருக்கும் தெரி யும். உலகின் முதல் மின்சார பல்பு எரிந்தபோது, ஒட்டு மொத்த உலகமே எடிசனை கொண்டாடியது. அவரது கண்டுபிடிப்பால்தான் இன்று உலகம் ஒளிர்ந்துகொண்டிருக் கிறது.
இப்படி, தன்னுடைய கண்டுபிடிப்பால் உலகப் புகழ் பெற்ற எடிசன், உலகின் முதல் பல்பை ஒளிரவைக்க சந்தித்த சோதனைகள் நூறு அல்ல; ஆயிரக்கணக்கில்! ஆயிரக் கணக்கான முறை பல்பை ஒளிரவைக்க முயற்சி செய்தும் உடனடியாக பலன் கிடைக்க வில்லை. அதனால், இரவு- பகல் பார்க்காமல் உழைத்தார், சாப்பாட்டை மறந்தார், ஆய்வுக்கூட சோதனையே கதியென்று கிடந்தார். அந்த விடாமுயற்சிக்கு கிடைத்த பலனால்தான், உலகின் முதல் மின்சார பல்பை அவரால் ஒளிரவைக்க முடிந்தது.
'ஆயிரக்கணக்கான தோல்விகளுக்குப் பிறகும், மனம்தளராமல் இயங்கி, எப்படி உங்களால் இந்த வெற்றியை நிகழ்த்த முடிந்தது' என்று எடிசனிடம் கேட்ட போது, 'அவையெல்லாம் தோல்விகள் என்று யார் சொன்னது?' என்று திருப்பிக் கேட்டார்.
அதோடு, 'ஒவ்வொரு தோல்வியின்போதும், அந்த சோதனையை எப்படி செய்யக்கூடாது என்று தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு படிப்பினையை எனக்கு கற்றுத் தந்தது. அதனால்தான் என்னால் வெற்றிபெற முடிந் தது...' என்று, தனது வெற்றி யின் ரகசியத்தை மனம்திறந்து சொன்னார் எடிசன்.
தோல்விகளை, நமக்கான நல்ல பாடங்களாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதையே நினைத்துநினைத்து வருந்திக்கொண்டிருந்தால், வெற்றியின் இலக்கு நம்மை விட்டு வெகுதூரம் விலகிக் கொண்டே போகும். தோல்வி யிலும் நல்ல பாடம் கற்றுக் கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
பில்டர்களும், கட்டிட கட்டு மானப் பணிகளில் தாங்கள் தெரியாமல் செய்யும் தவறு களை கண்டறிந்து, அவை அனைத்தையும் களைந்து விட்டால்... அவர் சக்சஸ் பில்டர்தான்!
நாம் எல்லோரும் உடல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். அதே முக்கியத்துவத்தை, நாம் வாழ்நாள் முழுவதும் வசிக்கக்கூடிய வீட்டுக்கும் தரவேண்டும். இதைத்தான், நம்முடைய வாடிக்கையாளர் களும் எதிர்பார்க்கிறார்கள். வீடு கட்டும்போது, அதை பார்த்துபார்த்து கட்ட வேண்டும் என்பார்கள். சிமெண்ட் கலவையில் தொடங்கி, சுவற்றில் ஆணி அடிப்பது வரையில் எல்லா விஷயங்களையும் அக்கறை யோடு கவனிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல் வார்கள். நாம் பார்த்துபார்த்து வீடு கட்டினால்தான், அந்த வீடு அழகாக இருக்கும்.
அதோடு, நம் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும் இடமாகவும் அது திகழும். அதனால், வாடிக்கையாளர்களின் விருப்பப்படி ஒவ்வொரு பில்டர்களும் கட்டிடங்களை எழுப்ப வேண்டும்.
கட்டிடங்கள் எழுப்பும் போது, கொஞ்சம் அக்கறை யோடு செயல்பட்டால் தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடலாம். இந்த அக்கறையை, கட்டுமான பணிக்கான நிலத்தை தேர்வு செய்யும்போதே செயல்படுத்த ஆரம்பித்துவிட வேண்டும்.
வாங்கிய நிலத்தை முறை யாக பயன்படுத்தாமல் வீணடிப்பதும் நமக்கு செலவு தான். வாங்கிய நிலத்தின் முழு பகுதியும் கட்டுமானத்துக்கு பயன்பட்டால்தான் அது பில்டருக்கு ஆதாயம். அதுதான், வாடிக்கையாளரு க்கும் பயன்தரும். அதனால், நிலத்தை முழுமையான கட்டு மான பணிக்கு பயன்படுத்தும் வகையில் பிளான் போட வேண்டும். இதற்கு ஸ்ட்ரக் சுரல் இன்ஜினீயரிங் சிறப்பாக இருக்க வேண்டும்.
பலருக்கு ஒரு 'காலத்திற்கு' எத்தனை கம்பிகள் வைக்க வேண்டும் என்பதுகூட தெரிவதில்லை. கம்பி வளைப் பவரை வைத்து காலம் போடுவது தவறான செயல். இதற்கென்றே இருக்கும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்களை கலந்தாலோசித்து, முடிவெடுப்பது நல்லது. இவர்கள், சதுர அடிக்கு ஒரு ரூபாயில் இருந்து 1.50 ரூபாய் வரை வாங்குகிறார்கள். இவர் களைக்கொண்டு காலத்தை சரியாக அமைத்தால், கட்டு மானப் பொருட்களை கணிச மாக சேமிக்கலாம்.
கான்கிரீட் போடும் இடத் தில், கான்கிரீட் வீணாகாமல் பார்த்தாலும் கணிசமான அளவுக்கு பணத்தை மிச்சப் படுத்தலாம். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள், தங்கள் இஷ்டத்துக்கு கான்கிரீட்டை கொட்டி வீணாக்குவதை கண் காணித்து தடுப்பதும் அவசியம்.
ஒரு கட்டிடத்தில் தேவைக்கு அதிகமாக கம்பி வைப்பதோ, தேவைக்கு அதிகமாக சிமெண்ட் போடுவதோ எந்த பயனையும் தராது. இப்படி செய்வதால், நம்முடைய கட்டுமானச் செலவுகள்தான் கூடிக்கொண்டே போகும் என்பதை ஒவ்வொரு பில்ட ரும் அறிந்திருப்பது அவசியம்.
இன்னும் சிலர் இருக்கிறார் கள்; கட்டிடத்தை கட்டிய பிறகு, இதை அப்படி மாற்றியிருக்கலாமே என்று, திடீரென்று முடிவெடுத்து, கட்டுமானத்தை இடித்து மாற்றுவார்கள். இதுவும் வீணான செலவுதான். அத னால், ப்ளான் செய்யும்போதே நல்ல ஆர்க்கிடெக்டாக வைத்து ப்ளான் செய்தால், கட்டிடத்தை இடித்து, மறுபடியும் கட்டவேண்டிய நிலைமை வராது.
ஆர்க்கிடெக்ட் என்றதும், நிறைய செலவு ஆகுமோ என்று யாரும் பயப்பட தேவையில்லை. அதிக செலவு வைக்காத சிறிய ஆர்க்கி டெக்டுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை வைத்தும் ப்ளான் செய்யலாம்.
முன்பு, லோடு பியரிங் ஸ்ட்ரக்சர்ஸ் முறை வழக்கத் தில் இருந்தது. இப்போது, காலம் ஸ்ட்ரக்சர்ஸ்தான் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது, கட்டுமானச் செலவை கணிச மாக குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடு கட்டுவோம்...


0 comments:
Post a Comment