Saturday, 15 March 2014

'ஓட்டு போட பணம் வாங்காதீர்கள்!' - கமலஹாசன் விழிப்புணர்வு பிரசாரம்

க்களிடையே தேர்தல் தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகை யில், நடிகர் கமலஹாசன் பேசும் வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட இருப்பதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விழிப்புணர்வு பிரசாரம்

தேர்தலில் பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக் களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை பல வழிகளில் மேற்கொள்ள இருக்கிறோம். நடிகர், நடிகைகளின் பேட்டி கள் மூலமாகவும் மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.

நடிகர் கமலஹாசன் மக்களிடையே விழிப்புண ர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் வீடியோ காட்சியை, அரசு கேபிள் டி.வி. மற்றும் தொலைக்காட்சிகள், சினிமா தியேட்டர்களில் வெளியிட இருக்கி றாம்.

அந்த வீடியோ காட்சியில், 'வாக்காளர்களே... சுய சிந்தனையோடு யோசித்து வாக்களியுங்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து வாக்க ளியுங்கள். ஓட்டு போட யாரிடமும் பணம் வாங்காதீர் கள்' என்று விளக்கி கூறுகிறார் கமலஹாசன். இதை, பொது மக்கள் அனைவரும் ஒருவருக் கொருவர் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் எடுத்து சொல்லலாம்.

விஜயகாந்த் பிரசாரம்

மறைந்த தலைவர்களின் சிலைகளை சாக்கு பை போட்டு மூடிவைக்க வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், தனது பிரசாரத்தில் ‘‘பணம் தந்தால் வாங்கி கொண்டு ஓட்டு போடுங்கள் என்று பேசியதாக கூறுகிறீர் கள். இதுபற்றி புகார் எதுவும் வந்தால் அவரது பேச்சுக்கள் ஆய்வு செய்யப்படும்.

ஆனால், லஞ்சத்தை ஒழிக்க முடியாத சூழ்நிலையில் பணம் தந்தால் வாங்கி கொள்ளுங்கள் என்றுதான் அவரது பேச்சு இருப்பதாக தெரிகிறது. அதை, அரசியல் உள்நோக்கத்தோடு பேசியதாக கருதவில்லை. நான் பணம் தருகிறேன், எனக்கு ஓட்டு போடுங்கள் என்று விஜயகாந்த் பேச வில்லை. எனவே இது குற்றமாக தெரியவில்லை. இருந்தாலும், புகாராக வந் தால் அவர் பேசிய பேச்சின் முழு விவரமும் ஆராயப்படும்.

வியாபாரிகளிடம் சோதனை


வியாபாரிகளிடம் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. வாகன சோதனையின்போது, அந்தக் காட்சி வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப் படுகிறது.

எனவே அங்கு லஞ்சம் பெறுவது போன்ற முறைகேடு நடந்தால், அந்த ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு செல்லும் போது, அதற்கு கணக்கு காட்டுவது கட்டாயம்தான். தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப் படுகிறது.

அரசியல்வாதிகள் வங்கிகள் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

யாரும் தேடி வராத பணம்!

கடந்த சட்டசபை தேர்தலின்போது திருச்சியில் ரூ.5 கோடி சிக்கியது. இதுபோல், மொத்தம் ரூ.36 கோடி பிடிபட்டது. இந்த பணம் அனைத்தும் வருமான வரித்துறையிடம் ஒப்படைக் கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பணத்தை கேட்டு யாரும் வரவில்லை.

அதுபோல, இப்போதும் பணம் பிடிபடுகிறது. இது வரை ரூ.6 கோடி பிடிபட்டுள் ளது. இந்த பணத்துக்கான சரியான ஆவணங்களை காட்டி கேட்க யாரும் முன்வர வில்லை. இதுவும் வருமான வரித்துறையிடம்தான் உள்ளது.

வியாபாரிகள் கூறுவது போல் சிறிய தொகை கொண்டு செல்பவர்கள் பிடி படவில்லை. ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், மியான்மர் நாட்டு பணம் ஆகியவை பிடிபட்டுள் ளது. எனவே வியாபாரிகளோ, விவசாயிகளோ பாதிக்கப் படுவதாக கூற இயலாது. எந்த பணமாக இருந்தாலும், அதற்கு ஒரு கணக்கு இருக்கத் தான் செய்யும். அதற்கான விளக்கம் கூறுங்கள் என்று தான் கேட்கிறோம்.

பாதுகாப்பு

வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் வாக்குப் பதிவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்பு வந்தாலே போது மானது. அவர்கள், இரவி லேயே வந்து தங்க வேண்டிய அவசியம் இல்லை. வாக்குப் பதிவு நடைபெறும் 2 மணி நேரத்துக்கு முன்பாக வந்தால், பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

விருப்பம் இல்லையா?

தேர்தல் பணிகளில் ஈடுபட மாட்டோம் என அரசு ஊழியர்கள் யாரும் கூறினால் அதற்கு சரியான காரணம் வேண்டும். தேர்தல் பாது காப்பு பணியில் தமிழ் நாட்டில் ஒரு லட்சம் போலீ சாருடன் வெளிமாநில போலீ சாரும் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறினார்.

0 comments:

Post a Comment