Wednesday, 4 December 2013

எல்லோரையும் கவர்ந்துவிட்டது 'சென்னை மெயில்' : டைரக்டர் கங்கை அமரன்

இளந்துறவி
============
'சென்னை மெயில்' கண் கவர் வண்ணத்திலும் நிகரற்ற தரத்திலும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது என்கிறார் டைரக்டரும் இசையமைப் பாளருமான கங்கை அமரன்.

இதுகுறித்து அவர் சென்னை மெயிலுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

டைரக்டர், இசையமைப் பாளர், பாடலாசிரியர், பாடகர், கதை வசனகர்த்தா - இதில் உங்களுக்கு மனநிறை வைத் தந்தது எது?

'கங்கை அமரன்' என்பதில் முழுமையான மனநிறைவை உணர்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த படம்?

'சம்சாரம்'

பிடித்தப் பாடல்?

'சம்சாரம்' படத்தில் வரும், 'அம்மா பசிக்குதே... அப்பா பசிக்குதே...' என்கிற பாடல் தான்.

கங்கை அமரனை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் நானாகவே இருக்க வேண்டும். எல்லோரிடமும் இயல்பாக பழகும் தன்மையை இறைவன் எனக்கு தொடர்ந்து அருள வேண்டும்.

உங்களது ஆன்மிக ஆர்வம் நிறைவாக நிறைவேறியதாக உணர்கிறீர்களா?

முழுமையாக நிறைவேறி விட்டதாக கூற முடியாது. நிறைவேற வேண்டியது இன் னும் நிறைய இருக்கிறது.

நீங்கள் இயக்கிய 'கர காட்டக்காரன்' இன்றுவரை யிலும் மக்களால் ரசிக்கப் படுகிறதே... என்ன காரணம்?

மக்கள்தான் காரணம். அவர்களது ரசனையைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அந்த படத்தை நானே இப்போதும் அடிக்கடி பார்ப்பதுண்டு. அப்போது, இந்தப் படம் நம்மால் எடுக்கப்பட்டதுதானா என்று கூட வியந்துபோய் இருக்கி றேன். நான் எடுத்த படங்களில் நன்றாக வந்த படம் இது.

இன்றைய இளைஞர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

வாழ்க்கையை நேசியுங்கள். உங்களுக்காக நீங்களாகவே வாழுங்கள். உங்களால் முடி யும். உங்களைப் பார்த்து மற்ற வர்கள் வாழும்படியாக வாழுங்கள்.

'சென்னை மெயில்' பத்திரிகை பற்றி?

கண்ணைக்கவரும் வண் ணத்திலும், எல்லோரும் வியக் கும்  தரத்திலும் 'சென்னை மெயில்' வெளிவருவதைப் பார்த்து மகிழ்கிறேன். 'ஜெட் ஏர்வே'யில் சென்னை மெயில் விநியோகிக்கப்படுவது அறிந்து இன்னும் மகிழ்கிறேன். அனைவரையும் கவர்ந்த மெயில், இந்த சென்னை மெயில். வாழ்த்துக்கள்!

0 comments:

Post a Comment