Saturday, 21 December 2013

ஐஸ்வரியம் அள்ளித்தரும் ஸ்ரீ சக்ர யந்திரம்

சேலையூரில் உள்ள நெல்லூர் அம்மன் கோவில் விழாவில் இன்று பக்தர் களுக்கு, ஐஸ்வரியம் அள்ளித் தரும் ஸ்ரீ சக்ர யந்திரம் தரப் பட உள்ளது.

மஹோத்ஸவ விழா

சென்னை சேலையூர் பாரதி நகர் பகுதியில் உள்ள நியூ பாலாஜி நகரில் நெல்லூர் அம்மன் மற்றும் சக்தி செல்வ விநாயகர் கோயில் அமைந்துள் ளது. இக்கோவிலில் மஹோத் ஸவ விழா கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி நடை பெற்று வருகிறது.

விழாவின் முதல்நாளான வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நெல்லூர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அன் றைய தினம் இரவு பக்தர் களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.

விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய ஐயப்பனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, லட் சார்ச்சனை நடைபெற்றது. மாலையில், விக்னேஸ்வர பூஜையும், கலச பிரதிஷ்டையும், ஸ்ரீ சண்டி பாராயணமும் நடைபெற்றது. இரவில், தெப்போற்ஸவம் நடை பெற்றது. அப்போது, நெல்லூர் அம்மன் பரிவார மூர்த்தி களுடன் கோவில் திருக்குளத் தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

ஸ்ரீ சக்ர யந்திரம்

விழாவின் மூன்றாம் நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு மகா சண்டி ஹோமமும், பிற்பகல் 12.30 மணிக்கு சண்டி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. இந்த சண்டி ஹோமத்தில், தங்கமுலாம் பூசப்பட்ட செம்பினால் ஆன, அஷ்ட ஐஸ்வரியம் தரும் 108 ஸ்ரீ சக்ர யந்திரங்கள் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்ரீ சக்ர யந்திரம் வேண்டுவோர், கோவிலில் ரூ.251 செலுத்தி முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து, பகல் 1 மணிக்கு சிறப்பு மகா அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்ன தானத்தை தொடர்ந்து இரவு 7 மணிக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு உஷா பாலாஜியின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற இருக்கிறது.

விழா ஏற்பாடுகளை நெல் லூர் அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ சக்தி செல்வ விநாயகர் கோயில் சமூல நல சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment